Aug 2, 2011

DEPARTURES-Japan[2008]இவன்தான் கலைஞன்.


காட்பாதர் பீவரில் இருந்து விலக ஒரு நல்ல படத்தை தேடினேன்.
இதோ நான் இருக்கிறேன் என்று முதல் ஆளாக வந்தது டிபார்ச்சர்ஸ்.
கோணங்கள் பிலிம் சொசைட்டியில் திரையிட்டபோது முதன் முதலாக பார்த்தேன்.
பதிவெழுத இரண்டாம் முறை பார்க்கும் போது இப்படம் இன்னும் அதிகமாக வசீகரித்தது.
என்னுள் இருந்த காட்பாதரை கரைத்துவிட்டது இப்படம் என்றால்... இது மிகை இல்லை.

இந்த ஜப்பான்காரனுங்க ரொம்ப மோசம்.
அந்த காலத்துல ஓசூ,குரோசுவா,கோபயாஷின்னு பெரிய பெரிய ஆளுங்க நல்ல நல்ல படம் எடுத்தாங்க.
அந்த பாதையிலதான் பயணிப்போம்ன்னு இந்த தலைமுறை இயக்குனர்களும் புறப்பட்டா எப்படி?
ஜப்பான் முன்னோடிகளின் நேரடி வாரிசாக உதித்துள்ளார் Yojro Takita.

இப்படத்தின் நாயகன் செலோ என்ற வயலின் வகை வாத்தியத்தில்
வைத்தியநாதன்.

இவன் வாசிக்கும் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கூட்டம் வராததால் குழுவை கலைத்து விடுகிறார்.[கூட்டம் எல்லாம் முத்து படம் பாக்க போயிருச்சா?]

வேலை இல்லாத கொடுமையால் சொந்த ஊருக்கே திரும்பி வருகிறான்.
சொந்த ஊரில் இவனுக்கு கிடைக்கும் வேலை...???
உங்களுக்கு ஒரு சவால்....
உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள்.
என்ன வேலையாக இருக்கும் என்று யோசியுங்கள்.
ரூம் போட்டு யோசித்தாலும் நம்மால் கண்டு பிடிக்க முடியாது.
இவனுக்கு கிடைத்த புதிய வேலை ...மேக்கப் போடுவது.
இது என்ன பெரிய வேலை...?
இதற்க்கா இவ்வளவு பில்டப்புன்னு அடிக்க வாராதீங்க சாமிகளா....

இவன் மேக்கப் போடுவது பிணங்களுக்கு....!!!

உயிரற்ற முகத்தை ஒவியமாக்குகிறார்கள் ஜப்பானியர்கள்.
கலையின் உச்சமாக எனக்கு தெரிந்தது.
ஒரு தாய் தனது குழந்தையை குளிக்க வைத்து.... தலை துவட்டி....பவுடர் பூசி.... பொட்டிட்டு... கொஞ்சுவாளே ...அதே நேர்த்தி இவர்கள் செய்யும் பணியில் இருக்கிறது.
சவக்களையை போக்கி உயிர் கொடுக்கும் கலையில் இவர்கள் மாமன்னர்கள்.

நம்மூர்ல கல்யாண வீட்டுல நம்ம பொண்ணுங்களை மேக்கப் போட்டு பொணமாக்குறாங்க.

மரண பயத்தை மரணிக்க வைக்கிறது இக்கலை.
மரணத்தை நேசிக்க ...எதிர் கொள்ள நம்மை தயார் படுத்துகிறது .

மேலை நாடுகளில் இருந்து கண்ட கருமாந்திரங்களை காப்பியடிக்கிறோம்.
இக்கலையை காப்பியடிக்கலாம் தப்பில்லை.

ஒரு படத்தின் அத்தனை தொழில் நுட்பங்களும் என்னை மயக்கியது...
கிம் கி டுக்கின் ஸ்பிரிங் ...சம்மர்...ஃபால்ஸ்...விண்டர்.
அதற்க்குப்பிறகு இந்தப்படம்தான்.

இப்படத்தை பார்த்து ஆஸ்கார் மட்டுமல்ல...உலகமே பேச்சு மூச்சில்லாமல் விருதுகளை வாரி வழங்கிவிட்டது.   

21 comments:

 1. நல்ல பகிர்வு..இந்தப்படத்தை நான் பார்த்துவிட்டேன் இருந்தாலும் உங்கள் விமர்சனத்தை படித்த பின்னர் திரும்பவும் பார்க்கவேண்டும்போல் உள்ளது

  ReplyDelete
 2. ஆவலை தூண்டுகிறது உங்களின் விமர்சனம்....பார்த்துடுவோம் ...

  ReplyDelete
 3. நண்பரே!
  வருகைக்கும்... பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 4. wow ...gr8 presentation ...gr8 knowledge
  keep it up friend...congrats

  ReplyDelete
 5. பிணங்களுக்கு மேக்கப் போடுவது. பொதுவாக கிம் கி டுக்கின் படங்களில் தான் இதுபோன்ற கருக்கள் எடுத்தாளப்படும். ஜப்பானிலும் நல்ல இயக்குனர்கள் இருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டிருக்கீங்க. இதுபோன்ற படு வித்தியாசமான தீம்கள், இங்கேயும் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, மொக்கைப் படமாக எடுத்துத் தள்ளுகிறார்களே

  ReplyDelete
 6. @கோவை நேரம்
  நண்பரே!இப்படம் ஒரு இமையம்.
  நான் ஒரே ஒரு கல்லின் ஒரே ஒரு பக்கத்தை மட்டும் தொட்டிருக்கிறேன்.
  படம் பார்த்து அதன் விஸ்வ ரூப தரிசனத்தை கண்டுணருங்கள்.

  ReplyDelete
 7. @ரியாஸ் அகமது

  பாராட்டுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 8. கருந்தேள் கண்ணாயிரம்

  //படு வித்தியாசமான தீம்கள், இங்கேயும் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, மொக்கைப் படமாக எடுத்துத் தள்ளுகிறார்களே//

  கண்மணி குணசேகரன் சிறுகதை தொகுப்பு தமிழினி வெளியீடாக கிடைக்கிறது.
  அதில் உள்ள பல சிறுகதைகள் அற்ப்புதமான உலகசினிமாவுக்கான கருக்கள்.
  ஆனால் நம் இயக்குனர்கள் ஐ யாம் சாம் டிவிடியை தமிழாக்கம் செய்கிறார்கள்.

  ReplyDelete
 9. கலக்கிடிங்க மாஸ்டர்

  சனிகிழமை கடை லீவுங்கள மாஸ்டர் (நைட் 8.30)

  ReplyDelete
 10. நல்ல ஆழமான விமர்சனம்..எங்களையும் காட் ஃபாதர் ஃபீவரில் இருந்து வெளிகொண்டு வந்தது.

  ReplyDelete
 11. @செங்கோவி
  //நல்ல ஆழமான விமர்சனம்..எங்களையும் காட் ஃபாதர் ஃபீவரில் இருந்து வெளிகொண்டு வந்தது.//

  சேம் பிளட்...சேம் பீலிங்

  ReplyDelete
 12. நல்ல ஒரு படத்த அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நீங்க சொல்வது போல் நம்மூரில் மணப்பெண்னுக்கு போடும் மேக்கப்பை பார்தால் இங்க பிணங்களுக்கு போடும் மேக்கப் எவ்வளவோ மேல்....!?

  காட்டான் குழ போட்டான்....

  ReplyDelete
 13. Wow the award list is more than the review size.. nice writing.. will love to see this film..

  http://filmbulb.blogspot.com

  ReplyDelete
 14. நல்ல விமர்சனம்யா....தேடிப்பாக்குறேன் கெடைக்குதான்னு இங்க...பகிர்வுக்கு நன்றிய்யா!

  ReplyDelete
 15. வணக்கம் அண்ணாச்சி, டிப்பாச்சர் பற்றிய தங்களின் விவரணப் பதிவு, மீண்டும் ஒரு தரம் எனக்கு இந்தப் படத்தினை பார்க்க வேண்டும் எனும் உணர்வினைத் தருகிறது.

  ReplyDelete
 16. செமயான விமர்சனம் சார்

  ReplyDelete
 17. @காட்டான்
  //நல்ல ஒரு படத்த அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நீங்க சொல்வது போல் நம்மூரில் மணப்பெண்னுக்கு போடும் மேக்கப்பை பார்தால் இங்க பிணங்களுக்கு போடும் மேக்கப் எவ்வளவோ மேல்....!?//

  நண்பரே!நீங்கள் சொல்வது 100/100 நிஜம்.

  ReplyDelete
 18. @ரவி
  @விக்கியுலகம்
  @நிரூபன்
  @சி.பி.செந்தில்குமார்
  நண்பர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 19. தலைவரே,
  நல்ல அறிமுகம் ,பார்க்க முயற்சிக்கிறேன்.
  இதே போல funeral home doctor தொழிலை செய்பவரை பற்றிய படம் ஒன்றை பார்த்தேன்
  http://en.wikipedia.org/wiki/After.Life
  லியாம் நீசன் தான் அந்த சவ அடக்க மண்டபத்தை நடத்தும் காண்ட்ராக்டர்,டாக்டர்,மேக்கப்மேன் எல்லாம் படம் டீடெய்லாக இவர்களது தொழிலை சித்தரிக்கிறது,அமெரிக்காவில் இறந்து போன குடும்பத்தார் இறுதி ஊர்வலத்தில் ஓபென் காஃபின் வைப்பதையே தேர்வு செய்கின்றனர்.அதற்கு இக்கலைஞர்கள் எப்படி மெனக்கெடுகின்றனர் என்று ஒருவருக்கு படம் பார்க்கையில் புரிகிறது.

  ReplyDelete
 20. vanakkam
  i am a regular reader but
  this is my maiden comment on your webpage (Because)
  this is one of my favourite movies. spellbound is the right word for this film i am very much pleased with the film and its content in all departments. almost a year ago i saw this film at a film society club in chennai. i was astonished what a presentation almost comparatively speaking equally good to "spring summer fall winter and spring" of kim ki duk. somekind of zen meditation way of film making.
  by the way "Konangal" film society ?! i have not heard this earlier in chennai whether it is based in chennai. pl give me more info on that so that we the real interested world cinema followers can come and join and enjoy the screenings. i am sundar g chennai 9445953980.

  ReplyDelete
 21. thala !! Thts a very good movie !! really the movie deserves those awards!!

  மரண பயத்தை மரணிக்க வைக்கிறது இக்கலை.
  மரணத்தை நேசிக்க ...எதிர் கொள்ள நம்மை தயார் படுத்துகிறது -- Kavithai bosss!! :)

  Death is truly a Gateway !! :) dialogue from the movie!!

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.