Aug 7, 2011

The Sicilian Girl-2001[Italy] பழிக்கு பழி


ரோட்டில் அரிவாளை தூக்கி கொண்டு துரத்துகிறது ஒரு கூட்டம்.
உயிரை காப்பாற்ற புயல் வேகத்தில் ஒடி வருகிறான்.
ஜெட் வேகத்தில் ஒருவன் பறந்து வந்து அனைவரையும் சிதறடிக்கிறான்.
ஹரி படங்களில் மட்டுமே தொடர்ந்து நாம் பார்க்கும் காட்சி இது.
அட...தடுக்க வேண்டாம்.
நடந்த கொலையை பார்த்தும் சாட்சி சொல்ல தயாரில்லாத தொடை நடுங்கி கூட்டம்தான் உலகத்தில் அதிகம்.
நானும் இந்தக்கூட்டத்தில் உறுப்பினன்தான் என்பதை வெட்கத்துடன் கூறிக்கொள்கிறேன்.
இப்படி பயந்து வாழும் வாழ்க்கை சிஸ்டத்தின் மீதே காறி உமிழ்கிறாள் இப்படத்தின் நாயகி.

ரீட்டா ஆட்ரியா மாபியா குடும்பத்தில் பிறந்து மாபியா கும்பலை ஒழிக்க தன்னுயிரையே தந்த வீரப்பெண்மணி.
இத்தாலியிலேயே சிசிலி பகுதி மாபியாக்கள்தான் உலகப்பிரசித்தம்.
1974ல் பிறந்து 1992ல் மறைந்த ரீட்டா இன்றும் வீர மங்கையாக இத்தாலியில் போற்றப்படுகிறார்.
                                  ஒரிஜினல் ரீட்டா அட்ரியா புகைப்படம்

ரீட்டாவின் வாழ்க்கை வரலாற்றை அழகான ஒவியமாக்கி நம்மை மயக்கியவர் இயக்குனர் Marco Amenta

உண்மை சம்பவத்தை படமாக்கும் போது...
பொதுவாக திரைப்படங்களில்...
ஆமைத்தன்மை வந்து விடும்.
இந்தப்பட்ம் விதி விலக்கு.
இயக்குனரின் திறமையால் இப்படம் ஹாலிவுட் திரைப்படம் போல் பறக்கிறது.

வன்முறையை வாழ்க்கையாக கொண்ட சிசிலி தீவில்...
அழகிய சிற்றூரில் பிறந்து....
 தந்தையால் வளர்க்கப்படுகிறாள் ரீட்டா.
தந்தை அந்த ஏரியாவுக்கே மார்லன் பிராண்டோ.
தாய் சொல்லை தட்டி... தந்தையோடு பயணப்பட்டு அவரது கரங்களின் வழியாகத்தான் இந்த உலகை காண்கிறாள் ரீட்டா.

ஊரின் நன்மைக்காக ஒரு கொடியவனை தந்தை போட்டுத்தள்ளுகிறார்.
விசாரிக்க வந்த நீதிமானுக்கு, ஊர்மக்கள்.... மவுனத்தை ஆகச்சிறந்த பதிலாக தருகிறார்கள்.
அவர் மேல் சாணி அடித்து ரீட்டா அவரை எச்சரிக்கிறாள்.
சின்னஞ்சிறு குழந்தையின் வாயில் வரும் வார்த்தைகள்....
அப்பப்பா...படத்தில் வரும் பவர்புஃல் காட்சி இது.

வல்லவன் நல்லவனாக இருப்பதில் உள்ள ஆபத்து...
 ரீட்டாவின் 11 வயதில் அவளது தந்தைக்கு நேரிடுகிறது.
ரத்த வெள்ளத்தில் துடிக்கும் தந்தையை காப்பாற்ற கதறும் போது
அத்தனை கதவுகளும் சாத்திக்கொள்கின்றன.

தந்தையின் சாவுக்கு பழிக்குப்பழி..ரத்ததுக்கு ரத்தம் ...என்றே வாழ்கிறாள்.
ஊரில் ந்டக்கும் அத்தனை அட்டூழியங்களையும் தனது டைரியில் தேதி வாரியாக பதிவு செய்கிறாள்.
17வது வயதில் தனது சகோதரனையும் அதே கும்பலிடம் பறி கொடுக்கிறாள்.
நரசிம்ம அவதாரம் எடுத்தால் சாவதற்க்கு எதிரி இரண்யன் இல்லை என்பதை உணர்ந்து நீதிமானிடம் அடைக்கலம் அடைகிறாள்.


தன் மீது சாணி அடித்த கைக்கு கை கொடுக்கிறார் நீதிமான்.
அத்தனை தாதாக்களையும் ,அவர்களுக்கு துணை போன அரசியல்வாதிகளையும் சேர்த்து உள்ளே தள்ளுகிறார்.
2 ஜியில் திகார் ஜெயில் நிரம்புவது போல் இத்தாலி சிறைகள் அத்தனையும் ஹவுஸ்புல்.
தாதாக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் உள்ள ராம்ஜெத்மலானிக்களும் கபில்சிபல்களும் நீதிமன்றத்தில் திரள்கின்றனர்.
ஜாம்பவன்களின் வாதத்தை சத்தியம் என்னும் பழைய ஆயுதத்தால் அடித்து நொறுக்குகிறாள் ரீட்டா.

நீதி தேவதையே ரீட்டா வடிவெடுத்து பிறந்து விட்டாள் என்ற பூரிப்பில் அவளை கட்டி அணைக்கிறார்.அது அவளது தந்தையின் அரவணைப்பல்லவா!!!

இறுதியாக நீதிமானை காரில் பாம் வைத்து கொல்கின்றனர் மாபியாக்கள்.
இதற்க்கு பதிலடியாக ரீட்டா தனது தற்கொலையின் மூலம் அத்தனை மாபியாக்களுக்கும் தண்டனை வழங்குகிறாள்.
எப்படி???!!! எனத்தெரிய ஆவலாயிருக்கிறதா?
சிம்பிள்...படம் பாருங்கள்.

இந்தப்படத்தை பெண் பதிவர்கள் பார்த்து..... தங்கள் பார்வையில்
இப்படத்தை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
டிவிடி கிடைக்கவில்லையென்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்...
நீங்கள் உலகின் எந்தப்பகுதியில் வசித்தாலும் எனது செலவில் அனுப்பவதை பாக்கியமாக கருதுவேன்.

விருதுகள் பட்டியல்[நன்றி:IMDB]

Bastia Italian Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2010WonAudience AwardMarco Amenta
Youth Jury PrizeMarco Amenta
NominatedGrand Jury PrizeMarco Amenta
David di Donatello Awards
YearResultAwardCategory/Recipient(s)
2009NominatedDavidBest New Director (Migliore Regista Esordiente)
Marco Amenta
David of the YouthMarco Amenta
Italian National Syndicate of Film Journalists
YearResultAwardCategory/Recipient(s)
2009NominatedSilver RibbonBest New Director (Migliore Regista Esordiente)
Marco Amenta21 comments:

 1. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்! நிச்சயமாகப் பார்க்கவேண்டும்! டவுன்லோட் பண்ண முயற்சிக்கிறேன்! நன்றி பாஸ்!

  ReplyDelete
 2. மிக நல்ல அறிமுகம் தலைவரே,நிச்சயம் பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. மற்றுமொரு நல்ல படத்தை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்..பார்க்கிறேன்.

  ReplyDelete
 4. கண்ணியம்மான விமர்சனம் ....

  இத்தாலி படத்துக்கு இந்திய வக்கீலை உவமையாக்கி
  வியக்க வைத்தீர் சபாஷ் ..
  நன்றி

  ReplyDelete
 5. @ஜீ

  வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

  ReplyDelete
 6. You took Hari, Jethmalani and Sibal to Italy to meet the Don. Good.. Will see the film if i get a chance..

  ReplyDelete
 7. நிச்சயம் பார்க்க வேண்டிய அக்‌ஷன் படமாக சிலிக்கன் Girl இருக்கும் என்பது உங்கள் விமர்சனம் மூலமாகத் தெரிகிறது.
  நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாகப் பார்க்கிறேன் அண்ணாச்சி.

  ReplyDelete
 8. அருமையான படைப்பு நண்பா

  ReplyDelete
 9. அசத்தலான குட் கவிதை அக்கா

  ReplyDelete
 10. இத்தாலி படத்திற்கு இந்தியபாணி விமர்சனம்...!!?? அது சரி  மாப்பிள  நீ என்ன செய்வாய்..??

  ReplyDelete
 11. பார்க்கணும் தலைவரே ..

  ReplyDelete
 12. @கீதப்பிரியன்
  @செங்கோவி
  @ரியாஸ் அகமது
  @ரவி
  @நிரூபன்
  @கற்றது தமிழ் துஷ்யந்தன்
  @காட்டான்
  @கோவை நேரம்
  நண்பர்கள் அனைவரது வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 13. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்!

  ReplyDelete
 14. @மாலதி
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி.
  இப்படத்துக்கு நீங்கள் விமர்சனம் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
  செய்வீர்களா?

  ReplyDelete
 15. >>இந்தப்படத்தை பெண் பதிவர்கள் பார்த்து..... தங்கள் பார்வையில்
  இப்படத்தை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  இதை எழுத சரியான ஆள் கடம்பவன் குயில் எங்க அண்ணி & கல்பனா.

  ReplyDelete
 16. @சி.பி.செந்தில் குமார்
  >>இந்தப்படத்தை பெண் பதிவர்கள் பார்த்து..... தங்கள் பார்வையில்
  இப்படத்தை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.<<<

  //இதை எழுத சரியான ஆள் கடம்பவன் குயில் எங்க அண்ணி & கல்பனா.//

  வணக்கம் சிபி..உங்கள் தேர்வு நிச்சயம் சரியானதாக இருக்கும்.உதவிக்கு நன்றி.

  ReplyDelete
 17. Yenmel néenga yellorum vaithirukira nambikaiku mikka nandri. Aanal yennudaiya thurathirstam yaaraalum eeduseiya mudiyatha oru uravai parikoduthu meelave mudiyaatha thukkathil thaviththukkondirukiren. Yen mananilai sariyaanavudan anaivaraiyum santhikkiren. Thankal viruppathai niraivetra mudiyathatharku mannikkavum.

  ReplyDelete
 18. நிச்சயம் இந்தப் படத்தைத் தேடிப் பார்க்கவே வேணும் !

  ReplyDelete
 19. @கடம்பவன குயில்
  சகோதரி...சீக்கிரம் நீங்கள் துன்பத்திலிருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்.
  நாங்கள் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 20. @ஹேமா

  சகோ...இப்படத்தை பார்த்து விட்டு மற்ற சகோதரிகளுக்கும் பரிந்துரைக்கவும்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.