Mar 8, 2013

வசந்த மாளிகை - ரசிகர்களின் கொண்டாட்டமும்... டிஜிட்டல் ஏமாற்றமும்.


நண்பர்களே...
வசந்த மாளிகை டிஜிட்டலில் வெளியிடப்பட்டதை அறிந்து,
என்னுள் உறங்கி கிடந்த  ‘சிம்மக்குரலோன் சிவாஜி ரசிகன்’ சிலிர்த்தெழுந்து விட்டான்.
 ‘கடமை வீரன் கந்தசாமியாக’  காலைக்காட்சியே சென்று விட்டேன்.








கோவை மாநகரத்திலுள்ள சிவாஜி ரசிகர்கள் பெருவாரியாக திரண்டிருந்தனர்.
அர்ச்சனா தியேட்டரை அலங்கரித்த,
நடிகர் திலகத்தின் வண்ண வண்ண பிளக்ஸ் பேனர்கள், வாழைத்தோரணங்கள், மலர் மாலைகள் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு சவால் விடுத்தன.
அதிரடி அட்ராக்‌ஷனாக ஒரு பாண்ட் கோஷ்டி ’என்னடி ராக்கம்மாவை’
அதிர வைத்துக்கொண்டிருந்தது..
ரசிகர் கூட்டம்  ‘நாஸ்டால்ஜியாவில்’ ஆடிக்கொண்டிருந்தது.
ஒன்றிரண்டு பேர் மட்டும், டாஸ்மார்க் உபயத்தால் ஆடிக்கொண்டிருந்தார்கள்.


கையகல பேட்ஜ்களை ஒரு ரசிகர் வாரி வழங்கி கொண்டிருந்தார்.
வந்திருந்த ரசிகர்கள் பட்டாளம் அனைவருமே நாற்பது, ஐம்பது, அறுபதை தாண்டியவர்கள்.
விஜய், அஜீத் பட ரசிகர்கள் ரேஞ்சுக்கு, வயதை தொலைத்து விட்டு இளமை கொண்டாட்டம் போட்டார்கள்.

 ‘டிஜிடல் ரெஸ்டோரேஷன்’ என்ற பம்மாத்து வேலை கர்ணனலிருந்து வசந்தமாளிகைக்கும் பரவியிருக்கிறது.
கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள்
பகல் கொள்ளை வியாபாரிகள்.


நான் ஏழாவது படிக்கும் போது,
வசந்தமாளிகையை  சென்னை சாந்தி தியேட்டரில் இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.
ஈஸ்ட்மென் கலரில் அப்போது  ‘ஜொலித்தது...
இப்போதும் என் கண்களில் தேங்கி இருக்கிறது.
இப்போது டிஜிட்டலில், பாதி ஜொலிப்பு கூட தேறவில்லை.


‘மயக்கமென்ன’ பாடலையும்...
‘யாருக்காக’ பாடலையும்... மட்டுமே பட்டி பார்த்து டிங்கரிங் செய்துள்ளார்கள்.
அதுவே பரிதாபமாகத்தான் பல்லிளிக்கிறது.

சிவாஜி ரசிகன் என்ற பெருமிதம் நினைவில் நிரம்பி வழிய...
12 வயது பாலகனாக உரு மாறி...
மறைந்த எனது தாயும் தந்தையும் என்னருகில் அமர்ந்திருக்க படம் பார்த்தேன்.

‘ஓ மானிட ஜாதியே’ என சிவாஜி திரையில் தோன்றும் காட்சியில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து  எழுப்பிய ஓசையில் அடியேனுடையதும் அடக்கம்.
மெலோ டிராமா காட்சிகளில் இப்போதும் நடிகர் திலகம் என்னை உருக வைத்தார்.

நாகேஷ்-வி.கே.ராமசாமி-ரமாப்பிரபா நகைச்சுவை கூத்துக்கள்,
ஆபாச அபத்தங்களாக இப்போது நெருடுகிறது.

திரைக்கதை ‘அரிஸ்டாட்டில்’ பாணியில் மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது.
 பிளாக் & ஒயிட் ‘தேவதாஸ்’ கதையையே...
ஈஸ்ட்மென் கலரில் வசந்த மாளிகையாக்கியிருக்கிறார்கள்.
வசந்த மாளிகையை காலத்திற்கேற்றார் போல் நவீனப்படுத்தி,
கமல்-ஸ்ரீதேவி நடிப்பில்  'வாழ்வே மாயம்’ ஆக்கப்பட்டது.
அனைத்துமே வெள்ளி விழா படங்கள்.

இப்போதும் இக்கதையை கல்லா கட்டலாம்.
கட்டாயத்தேவை ...
முந்தையவர்களைப்போல...குளோசப்பில் நடிக்கத்தெரிந்த நடிப்புக்கலைஞர்கள்.
அது வரை காத்திருக்கட்டும் இத்திரைக்கதை.

தமிழ்நாட்டில் பல ஊர்களில் வெள்ளி விழா கொண்டாடியது.
இலங்கையில் வசந்த மாளிகை வருடக்கணக்கில் ஓடி சாதனை படைத்தது.
அப்போது இலங்கை தமிழ்ச்சேவை ஒலிபரப்பில்,
‘வசந்தமாளிகை சிறப்பு நிகழ்ச்சிகள்’... கே.எஸ்.ராஜாவின் இனிய குரலில் ஒலிபரப்பாகியது என்னுள் இப்போதும் அழிக்க முடியாமல் பதிவாகியிருக்கிறது.

கே.வி.மகாதேவனின் இன்னிசையில் கவியரசரின் வரிகள்...
சிவாஜியையும் வாணிஸ்ரீயையும் நேரடி ஒளிபரப்புகிறது.

நாயகன் [முன்னாள் குடிகாரன்] : அன்னத்தை தொட்ட கைகளினால்
மதுக்கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்.

நாயகி [ குடிகார நாயகனை திருத்தியவள் ] : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விடமாட்டேன்.
இப்பாடலில் இருக்கும் முரண்சுவையை ரசிக்க மூன்றாம் வகுப்பு படித்திருந்தால் போதும்.

கதையோடு ஒட்டிப்பிறந்த பாடல்களை...
இனி இந்த நாட்டில்...
இந்த ஊரில்...
என்று காண்போமோ .

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

12 comments:

  1. /// குளோசப்பில் நடிக்கத்தெரிந்த நடிப்புக்கலைஞர்கள் ///

    சரியாக மிகச்சரியாகச் சொன்னீர்கள்...

    (முடிவில் இரண்டு படங்கள் வரவில்லை)

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே !

      படங்கள் சில...சரியாக ஓப்பன் ஆவதில்லை.
      காரணம் புரியவில்லை.

      Delete
  2. naanum ulagappadangalai paarpavanthaan. athai mootaikattivittu sivaaji rasiganaaga padam paarka vanediya avasiyam illai. nenjai nimirthi sivvaji rasigan endrea padam paarkalam. kaalangal kadanthum indrum avar padangalai peruvaariyaanavargal rasippathu thamizhukku perumai.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      நான் சிவாஜி ரசிகனாக படம் பார்க்கச்சென்றேன் என்பதை குறிப்பிடவே
      அவ்வாசகத்தை எழுதினேன்.
      நீங்கள் சுட்டிக்காட்டிய பிறகுதான்...என் வார்த்தை வேறு கோணத்தில் ‘கனோட்டேஷன்’ ஆகியிருப்பதை உணர முடிந்தது.
      அவ்வரியை நீக்கி விடுகிறேன்.
      தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

      நான் இது வரை பார்த்த உலக சினிமாக்களில்...
      சிவாஜியை மிஞ்சியை நடிகனை இது வரை பார்க்கவில்லை.
      நான் இன்று வரை சிவாஜிக்கு மட்டுமே ரசிகன்.

      Delete
  3. உ.சி.ர... நானும் எனது மாமனாரும் கர்ணன் படம் பார்த்தது போலவே வசந்த மாளிகை ரசிகர் மன்ற காட்சி பார்க்க இருக்கின்றோம்... ஆல்பட் திரையரங்கம்... சென்று விட்டு வந்து எழுதுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. பிரபா...
      உங்கள் கண்களுக்கு ‘வசந்த மாளிகை’ எவ்வாறு காட்சியளித்தது என்பதை அறிய ஆவலாயிருக்கிறேன்.

      Delete
  4. வசந்த மாளிகை இதுவரை திரையரங்கில் பார்த்ததில்லை.. பார்க்க வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. பார்த்து விட்டு பதிவெழுதுங்கள் நண்பரே.

      Delete
  5. //நான் இது வரை பார்த்த உலக சினிமாக்களில்...
    சிவாஜியை மிஞ்சியை நடிகனை இது வரை பார்க்கவில்லை.// அது!

    ReplyDelete
  6. யாழ்ப்பாணத்தில் வெலிங்டன், லிடோ ஆகியதிரை அரங்குகளில் வசந்தமாளிகை ஓடியது. ஒரே ஒரு படப்பெட்டியை அரை மணி நேர இடைவெளியில் இரண்டு தியேட்டர்களிலும் போட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி நண்பரே.

      Delete

Note: Only a member of this blog may post a comment.