Dec 27, 2012

2012 சிறந்த ஒளிப்பதிவாளர் யார்?


நண்பர்களே...
கடையை  ‘தனித்தனியே’ கூறு போட்டு கூவிக்கூவி விற்று விட்டேன்.
இறை அருளால் எனது எதிர்பார்ப்பை விட அதிக விலைக்குப்போனது.
அடுத்து இந்த ‘முன்னாள் திருட்டு டிவிடியின்’ பயணம் கோலிவுட்டை நோக்கித்தான்.
அங்கேதான் எனக்கான சிம்மாசனம் காத்திருக்கிறது.
இனி பதிவிற்கு செல்வோம்.

ஒரு திரைப்படத்தை முதலில் கண்ணால் பார்ப்பது ஒளிப்பதிவாளரே.
அவர் பதிவு செய்த பிம்பங்களின் வழியாகத்தான் நாம் ஒரு படைப்பை அணுக முடியும்.

ஒளிப்பதிவு பற்றி  'விக்கிப்பீடியாவில்' உள்ள ரத்தின சுருக்கம்...

In 1919, in Hollywood, the new motion picture capital of the world, 
one of the first (and still existing) trade societies was formed:
the American Society of Cinematographers (ASC), 
which stood to recognize the cinematographer's contribution to the art and science of motion picture making. 
Similar trade associations have been established in other countries, too.
The ASC defines cinematography as:
a creative and interpretive process that culminates in the authorship of an original work of art rather than the simple recording of a physical event. 
Cinematography is not a subcategory of photography. 
Rather, photography is but one craft that the cinematographer uses in addition to other physical, organizational, managerial, interpretive and image-manipulating techniques to effect one coherent process.[6]


ஏ.ஏஸ்.ஸியால்  தேர்வு செய்யப்பட்டு அதன் பெருமை மிகு உறுப்பினராகி இந்திய ஒளிப்பதிவுக்கு பெருமை சேர்த்தவர்
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

இயக்குனருக்கு அடுத்தபடியாக சினிமாவில் மிக முக்கியமான பொறுப்பு ஒளிப்பதிவாளருக்கே.
ஏனென்றால் எடிட்டிங்,இசை, ஏன் நடிகர் கூட இல்லாமல் ஒரு படத்தை உருவாக்க முடியும்.
கடல் அலையும், ஒரு சிறு தக்கையும் நடித்த படம்...
நடிகர்கள் இல்லாத உலகசினிமாவுக்கு சாட்சியாக இருக்கிறது.

எடிட்டிங்கே தேவைப்படாத ...
ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட  ‘ரஷ்யன் ஆர்க்’ என்ற திரைக்காவியம் இருக்கிறது.
Russian Ark \ 2002 \ russia \ Directed by Alexander Sokurov.


*********************************************************************************
‘ரஷ்யன் ஆர்க்’ பற்றி நண்பர் ராஜ் சமீபத்தில் பதிவெழுதி இருக்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ' Tilman Buttner '
உலகின் தலை சிறந்த ரஷ்ய மியூசியமான ‘ஹெர்மிடேஜ் மியூசியத்தில்’ படமாக்கப்பட்டது.
2000 நடிகர்கள்.
‘ஸ்டடி கேம்’ காமிரா மூலம்  ‘ஒரே நாளில் ஒரே ஷாட்டில்’ படமாக்கினார்
' Tillman Buttner '.

300 வருட ரஷ்ய சரித்திரத்தை, ‘கேப்ஸ்யூலாக்கி’ தந்திருக்கிறார்
இயக்குனர் அலக்ஸாண்டர் சுக்ரோவ்.

 ‘ஹெர்மிடேஜ் மியூசியத்தில்’ ஒரே ஒரு நாள் மட்டும்தான்  சூட்டிங்கிற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
எனவே ஆறு மாதம் ஒத்திகை பார்க்கப்பட்டது.
திட்டமிடலுக்கு இப்படம் மிகப்பெரிய உதாரணம்.

*********************************************************************************

 ‘சிறந்த’ எனத்தேர்வு செய்வதில் வணிகப்படங்களை கணக்கில் எடுக்கக்கூடாது.
2012ல் உலகசினிமா என்ற திசையை நோக்கிப்பயணித்ததில்,
சிறப்பாக இருந்தது  இரண்டு படங்கள்தான்.
1 வழக்கு எண் 18 \ 9
2 நீர்ப்பறவை

இந்த இரண்டு படங்களிலுமே, ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தாலும்...
நீர்ப்பறவை ஒரு படி மேலே பறந்தது.பனிப்பிரதேசத்தையும், கடல் பிரதேசத்தையும் படம் பிடிப்பது மிகச்சிரமமான ஒன்று.
 ‘லைட் ரிப்ளக்-ஷன்’ இந்தப்பகுதிகளில் அதிகமாக இருக்கும்.
எனவே  ‘ஓவர் எக்ஸ்போஷரை’ கண்ட்ரோல் செய்து படம் படிப்பது ஒளிப்பதிவாளருக்கு கடினமான சவாலாகும்.
நீர்ப்பறவையில் சவாலை சமாளித்து சாதனை செய்திருந்தார் ஒளிப்பதிவாளர்.‘நீர்ப்பறவை’ சூட்டிங் செய்யப்பட்ட . ‘மணப்பாடு’ என்ற கிராமம்
எனது கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது.
எனவே அந்தப்பிரதேசம் எனக்கு அத்துப்படி.
அப்பிரதேசத்தை கதைக்களனுக்கு பொருத்தமாக்கி ஒவ்வொரு பிரேமிலும் ஜொலிக்க வைத்தார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்.


இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியெத்தை 
தேர்வு செய்வதில் மகிழ்கிறேன்.

நண்பர் ராஜ் எழுதிய ‘ரஷ்யன் ஆர்க்’ பற்றிய பதிவிற்கு இங்கே செல்லவும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

6 comments:

 1. neerparavai s great photograpic film. . I agree with u. . Are u from manappad area? Where ur native sir. .

  ReplyDelete
  Replies
  1. எனது கிராமத்தின் பெயர் ‘சீர்காட்சி’.
   திருச்செந்தூருக்கும் உடன்குடிக்கும் நடுவில் உள்ளது.

   Delete
 2. SORRY TO SAY YOUR CHOOSEN IS WRONG; ON NEER PARAVAI, PHOTOGRAPHY DOSENT SUITE WITH STORY ,

  IT ESTABLISHED ONLY BALA'S VIEW.

  HAVE YOU NOT SEEN KUMKI SUKUMR, WATCH IT AND DECIDE

  ReplyDelete
  Replies
  1. கும்கி வணிகப்படம்.
   எனவே சுகுமாரை கணக்கில் கொள்ளவேயில்லை.

   Delete
 3. YOUR CHOICE IS WRONG , BALA'S PHOTOGRAPHY IS NOT SUITE WITH STORY WAY

  ALL FILM CRITICIZERS SAID IT WAS RICH PATTERN. THAT STORY PLATFORM IS

  A STRUGGLING PEOPLE LIFE ;

  JUST YOU SAY SIR WHICH CHARACTER POINT OF VIEW IS THAT?

  AND WATCH KUMKI AGAIN , CHECK SUKAMR PHOTOGRAPHY.......

  ReplyDelete
  Replies
  1. பாலு கதைக்கேற்ப முடிந்தவரை உழைத்துள்ளார்.

   படத்தை டி.ஐ. பண்ணும்போது தேவையற்ற ‘அழகுணர்ச்சியை’ ஏற்படுத்தி உள்ளனர்.
   அது ஒளிப்பதிவாளரின் குற்றமல்ல.

   கும்கியை இரண்டு முறை பார்த்தது சுகுமாருக்காகவே.
   உலகசினிமாவில் பணியாற்றும் போது மட்டுமே அவரை கவுரவப்படுத்தலாம்.

   Delete

Note: Only a member of this blog may post a comment.