Dec 8, 2012

துப்பாக்கி - ஆண் குறியீடு...தொப்புள் - பெண் குறியீடு.\ 18 +

நண்பர்களே...
கனவில் அரசன்,அரசி வந்தால் பெற்றோரைக்குறிக்கும்.
இளவரசன், இளவரசி வந்தால் கனவு காண்பவனையே குறிக்கும்.
நீண்ட பொருட்களான குச்சி, மரம், குடை ஆகியவை ஆண்குறி குறீயீடாகும்.
அதே போல் கூரிய ஆயுதங்களான கத்தி, வாள், ஈட்டி போன்றவையும் ஆண்குறியையே குறிக்கும்.
பெட்டி, பேழை, அடுக்களை, அடுப்பு ஆகியவை பெண்ணின் கர்ப்பப்பையின் குறியீடுகளாகும்.
கப்பல், கடலில் செல்லும் அனைத்து ரக ஊர்திகள் ஆகியவை பெண்குறி அல்லது கர்ப்பப்பை குறியீடுகளாகும்.
பொதுவாக கனவில் அறை [ Room ]  வந்தால் பெண் அல்லது பெண்ணின் கர்ப்பப்பை ஆகியவற்றை குறிக்கும்.
அறைக்குள் அடிக்கடி சென்று வருவது போல் கனவு கண்டால் மறுபிறப்பு எண்ணத்தை குறிக்கும்.
மாடிப்படி, ஏணி போன்றவற்றில் ஏறுவதும் இறங்குவதுமாக கனவு வந்தால்  ‘புணர்ச்சி செயலை’ குறிக்கும்.


கனவில் சமந்தா, ஹன்சிகா வந்தால், 1990க்கு பிறகு பிறந்தவர் நீங்கள்.
உங்கள் கனவில் தவமணி தேவி வர வாய்ப்பில்லை.
அவரை கனவில் கண்டவர்கள் எல்லோரும் ‘டிக்கெட்’ வாங்கியிருப்பார்கள்.
தமிழ் சினிமாவில் முதல் கவர்ச்சிக்கன்னி அவர்தான்.


முதல் பாராவில் குறிப்பிட்டவை அனைத்து கருத்துக்களும் எனது சரக்கல்ல.
உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு [ Sigmund Freud ] சொந்தமானது.
சிக்மண்ட் ஃப்ராய்ட் [ 1856 - 1939 ],
யூத இனத்தில் பிறந்தாலும் அதை பெருமையாக கருதாதவர்.
அன்று ஆஸ்திரியா என்றும் இன்று செக் குடியரசு என்றழைக்கப்படும் நாட்டில் பிறந்தவர்.
சிக்மண்ட் ஃப்ராய்ட் பற்றி மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவுக்கு செல்லவும்.


அறிவியலின் ஒவ்வொரு துறைக்கும் தனித்த கோட்பாடுகள் உள்ளன.
இயற்கை அறிவியலுக்கு... டார்வினியமும்,
சமூக அறிவியலுகு... மார்க்சியமும்,
இயற்பியலுக்கு... நியூட்டன் விதிகளும்,ஐன்ஸ்டின் கோட்பாடுகளும்,
உளவியலுக்கு... ஃப்ராய்டியமும்
ஆணிவேராக கருதப்படுகின்றன.
நவீன அறிவியலின் ஐந்து தூண்கள் என்று
1 நியூட்டன்,
2 மார்க்ஸ்,
3 டார்வின்,
4 ஐன்ஸ்டின்,
5 ஃப்ராய்ட் ஆகியோரைக்குறிப்பிடுவர்.
அவர்களின் அணுகுமுறைகளும், கோட்பாடுகளும்...
இன்றும் அறிவியல் உலகை இயக்கி வருகின்றன.

ஃப்ராய்டை தெரிந்து கொள்ளாமல் உலக சினிமாக்களை முழுமையாக
உள் வாங்க முடியாது.
முக்கியமாக ஃப்ராய்டின் கோட்பாடுகள் தெரிந்தால்தான் ஹேராம் திரைப்படத்தை முழுமையாக உள்வாங்க முடியும்.
ஃப்ராய்ட் பற்றி தெரிந்து கொள்ள தமிழில் மிகச்சிறப்பான நூல் இருக்கிறது.
            சிக்மண்ட் ஃப்ராய்ட்
                                உளப்பகுப்பாய்வு அறிவியல்
எழுதியவர் : தி.கு.இரவிச்சந்திரன்
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்
25, தெற்கு சிவன் கோயில் தெரு,
கோடம்பாக்கம்,
சென்னை - 600024,
போன் : 044 24815474,
விலை : 320-00

இந்நூலை முழுமையாக உள்வாங்கிக்கொள்வதன் மூலமாக ஃப்ராய்டிய விளக்கங்களை புரிந்து கொள்ளலாம்.
ஃப்ராய்டியத்தை கடப்பதற்கு இந்நூல் ஒரு ஓளிகாட்டி.
படிக்க பொறுமையும், துணிவும் தேவை.
காரணம் படிப்போரையே நோயாளி என சுட்டிக்காட்டும்.
அக்குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க உள்ளம் பல வழிகளை மேற்கொள்ளும்.
ஃப்ராய்ட் எதிரியாகி விடுவார்.

இந்நூலின் சுவரஸ்யமான பகுதிகளில் ஒரு சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

# கனவில் ‘மிகச்சிறிய’ பொருட்கள் வந்தால் அவை அந்நபரின் பாலுறுப்பைக்குறிக்கும்.
குறிப்பாக குழந்தை கனவில் வந்தால் பாலுறுப்பைக்குறிக்கும்.
குழந்தையுடன் விளையாடுதல் அல்லது குழந்தையை அடித்தல் போலக்கனவு கண்டால்  ‘சுய இன்பத்தை’ குறிக்கும்.

# வானூர்தி ஆண்குறிக்குறியீட்டுக்கு சிறந்த சான்றாகும்.
அதன் அமைப்பு மட்டுமல்லாது செயலிலும் ஆண்குறியை ஒத்திருக்கிறது.
துப்பாக்கி, பீரங்கி ஆண்குறிக்குறியீடுகளே.
கீழிருந்து மேல்நோக்கிச்செல்லும் ஏவுகணை ஆண்குறியின் விறைப்போடு தொடர்புடைய குறியீடாகும்.
சுருங்கி விரியும் குடை, பலூன் போன்றவை ஆண்குறிக்குறியீடுகளாகும்.
மின் விளக்கு, பேனா, பென்சில் [ பேப்பர் = பெண் குறியீடு ]  போன்றவையும்...
ஆடைகளில் கோட், டை போன்றவையும் ஆண்குறியை குறிப்பிடுவதாகும்.

# எண்  ‘3’ ஆண்குறியின் சிறப்புக்குறியீடாக ஃப்ராய்ட் காண்கிறார்.
ஆண்குறியையும் இரண்டு விரைகளையும் கொண்டு இக்குறியீடாக்கம் நிகழ்கிறது.
உருவ ஒப்புமையும் இதில் அடங்கியுள்ளது.
மேல் நோக்கி எழும் நெருப்பு, கடல் அலை கூட ஆண்குறிக்குறியீடாகும்.

# சுரங்கம்,கால்வாய், வாய்க்கால்,பாட்டில்,பை, கப்பல், பெட்டி, பூ, ஷூ
[ கால் = ஆண் குறி ] போன்றவை பெண்குறிக்குறியீடாகும்.
வாய், கண், காது, தொப்புள் போன்றவை பெண் குறியோடு தொடர்புடைய உறுப்புகளாகும்.

# பொதுவாக கனவுக்குறியீடுகள் எண்ணிலடங்காதவை.
சில முக்கியமான குறியீடுகளை மட்டும் ஃப்ராய்ட் குறிப்பிட்டுள்ளார்.
இவை கனவில் மட்டுமல்லாமல் தொன்மம், நாட்டுப்புறவியல், கதைகள், ஓவியங்கள், விளையாட்டுக்கள், இலக்கியங்கள், இசை, திரைப்படங்கள் என அனைத்திலும் வெளிப்படும்.
அவற்றை இனம் கண்டு கொள்ள உளப்பகுப்பாய்வு அணுகு முறையால் மட்டுமே முடியும்.
உளப்பகுப்பாய்வு அணுகு முறைப்படி அணுகினால்தான் ஒரு படிமத்தில் பொதிந்துள்ள உண்மையான குறியீட்டை அறிந்து கொள்ள முடியும்.

# 'வாழ்வுக்கே ஒரு குறிக்கோள் உண்டு’ என்று கூறும் ஃப்ராய்ட் அனைவரின் வாழ்வுக்கும் சாவுதான் குறிக்கோள் என்கிறார்.
சாவை நோக்கியே அகநிலை பயணிக்கிறது.
[ இந்த கருத்தாக்கத்தைதான் ஹேராம் படத்தில் கமல் பயன்படுத்தியதை போன பதிவில் பார்த்தோம்.]

தொப்புளில் ஆம்லெட் போடுவது, பம்பரம் விடுவது எந்த வகை குறியீடு என்பதை ஓய்வாக இருக்கும்போது சிந்தித்து வையுங்கள்.
வாழ்க்கைக்கு உதவும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

7 comments:

 1. இந்த ஆராய்ச்சி எதுக்காகன்னு புரியலையே?

  ReplyDelete
  Replies
  1. சின்னப்பசங்களுக்கு புரியாதுன்னுதான் தலைப்பிலேயே ‘18+’ ன்னு
   எச்சரிச்சேன்.

   Delete
 2. 'ஆளவந்தான்' ஆராய்ச்சி ஆரம்பிரிச்சிடோய்

  ReplyDelete
  Replies
  1. ஆளவந்தான், ஃப்ராய்டின் கோட்பாடுகளை உள்ளடக்கிய திரைக்கதைதான்.
   அதனால்தான் கோவையில் மனோதத்துவ டாகடர்கள் மாநாட்டில் திரையிட்டார்கள்.

   Delete
 3. நல்ல ஆராய்ச்சி....

  கஸ்டமருக்கு ஆப்பு; டாட்டா டோகோமோ டாப்
  http://multistarwilu.blogspot.in/2012/12/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டை, ஃப்ராய்டுக்கு சமர்ப்பிக்கிறேன்.

   Delete
 4. அடுத்த முறை தமிழ்ச்செடி (இரண்டு மாதம் கழித்து) உங்களைப் போன்றவர்களிடம் ஒரு தலைப்பு கொடுத்த பேசச் சொல்ல வேண்டும். நிறைய படிக்க உங்கள் தளத்தில் விசயங்கள் உள்ளது.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.