Jul 16, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை... குற்றவாளியாக்கிய காவியம்-Part 2

கோவை ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் சப்-டைட்டில் இல்லாமல் பார்த்த கமினோவை...நண்பரின் உதவியால் சப்-டைட்டிலோடு திரும்ப...திரும்ப...பார்த்து வருகிறேன்.
காரணம்...கருத்துப்பிழை வந்து விடக்கூடாது என்ற பயத்தால்..

நரை,திரை,பிணி,மூப்பு,சாக்காடு இவற்றை ஆராய்ச்சி செய்தார்... சித்தார்த்தன் என்ற ராஜகுமாரன்.
ஞானம் பிறந்தது.
புத்தரானார்.
புத்தமதம் கிடைத்தது.
புத்தமதம் மனிதநேயத்தை வளர்ப்பதாக அசோக சக்ரவர்த்தியால் பரப்பப்பட்டது.
புத்தமதத்தை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு மனிதநேயத்தோடு நடந்ததா?
முள்ளிவாய்க்கால் சாட்சி சொல்லும்.

எல்லா மதங்களும் ஒரே அணிதான்.
எல்லா மக்களும் ஒரே அணிதான்...ஆனால் எதிர் அணியில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வலியை ஏற்றுக்கொள்வதே கிருத்துவை அடையும் வழி என வலியுறுத்துகிறது மதம்.
மதத்தோடு... மருத்துவமும்... கை கோர்த்து கொண்ட  ‘முரண்பாட்டை’ கமினோவில் எடுத்துக்காட்டியிருக்கிறார் இயக்குனர்.

“மகளே...வலியை தந்த கர்த்தருக்கு நன்றி சொல்” எனக்கூறும்,
அதீத நம்பிக்கைகொண்ட கிருத்துவ தீவிரவாதியாக, தாயும்...
மதமோ...மருத்துவமோ...என் மகளை குணப்படுத்தினால் சரி...என சராசரி மனிதனாக தந்தையும்...இரு வேறு துருவங்களாக இயங்குவதை இப்படத்தில் காணமுடியும்.

மருத்துவமனையிலிருந்து கமீனோவும்,பொற்றோரும்...நூரியிடம் போனில் பேசுவதற்கு கூட ...கிறித்துவ தீவிரவாத அமைப்பு முன் கூட்டியே திட்டமிடுகிறது...கண்காணிக்கிறது....என்பதை காட்சி ரீதியாகவும்,
வசன ரீதீயாகவும் இயக்குனர் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளார்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருகிறார்கள்.
தாயால்,கமீனோவின் அறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.
தேவாலயத்தின்....இருண்ட பகுதி போல் இருக்கிறது.
கமீனோ மாற்றியமைக்கப்பட்ட அறையை விரும்பவில்லை என்பதை...அவளது கனவுக்காட்சி விளக்குகிறது.

அவளது நேசத்திற்குரிய எலி வருகிறது.
ஜன்னல் வழியே தாவிக்குதித்து பறந்து போகிறது.
அருகிலேயே டிஸ்னி வோர்ல்ட் காட்சியளிக்கிறது.
அறையில் கட்டிலில் குதித்து கும்மாளமிடுகிறாள் கமீனோ.
அவளது அறை பழையபடி கலர்புல்லாக காட்சியளிக்கிறது.
அறை முழுக்க சிறகுகள் பஞ்சு போல் பறக்கின்றன.


தாயார் வருகிறார்.
பின்னணி இசை ஆக்ரோஷமாக மாறுகிறது.
காமிரா கோணங்களால் தாயார்...  ராட்ஷச உயரமாக காட்டப்படுகிறார்.                   கமீனோ :  “நான் நல்லாயிட்டேன்.டான்ஸ் கிளாஸ் போகப்போறேன்.”                                   தாயார் : “ நோ...உன்னால் முடியாது. அங்கே பார்.”                                                     சுட்டி காட்டிய இடத்தில் சக்கர நாற்காலி இருக்கிறது.
கமீனோ தடுமாறி விழுகிறாள்.
எழ முயல்கிறாள்.
மீண்டும்...மீண்டும்...மீண்டும்....மீண்டும் விழுகிறாள்.


மீண்டும்....
புதிய மருத்துவமனை...புதிய பரிசோதனைகள்.... 
‘ஸ்கேன்’நர்ஸ் கொடூரமாக நடந்து கொள்கிறாள்.
டூட்டி நர்ஸ் கருணையுடன் நடந்து கொள்கிறாள்.
கமீனோ : “ உங்களைப்போல் எல்லோரும் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.”
‘புரிந்து கொண்ட’டூட்டி நர்ஸ்:  “ஸ்கேன் நர்ஸ் அப்படித்தான்...
ரூடாக நடந்து கொள்வாள்.
அவள் கணவன் பிரிந்து சென்றதால் அப்படி ஆகி விட்டாள்.”

மீண்டும் ஸ்கேன்...
கமீனோ : [அழுது கொண்டே] “என்னை மன்னியுங்கள்.
எனக்கு நோய்வாய்ப்பட்ட அனுபவமில்லை.
அதனால் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை.
ஸாரி...உங்களுக்காக கர்த்தரிடம் ஜெபிப்பேன் "
பாறை இளகியது.
ஸ்கேன் நர்ஸ் : [கமினோவின் கன்னத்தை தடவியவாறு] “ நீ ஒரு தேவதை”

கமீனோவின் பிராத்தனை பலிக்கிறது.
 ‘ஸ்கேன் நர்ஸ்’ கணவன் வந்து சேர்ந்து விடுகிறான்.
கல்மிஷம் இல்லாத கருணை உள்ளம்...பிறருக்காக  ஜெபித்தால்...
கடவுள் செவி சாய்ப்பார் என்பது குறியீடாக்கப்பட்டுள்ளது.

கமீனோவின் அக்கா நூரியை...தங்கையை மருத்துவமனக்கு சென்று பார்ப்பதை... தள்ளிப்போடும் கிருத்துவ தீவிர வாத அமைப்பு, மாதம் தோறும் அத்தை வீட்டுக்கு மட்டும் சென்று வர அனுமதிக்கிறதே!
ஏன்?
விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
நூரியின் கூடவே வரும் அந்த அமைப்பின் உறுப்பினரிடம் கத்தையாக பணத்தை ஒரு கவரில் போட்டு கொடுக்கிறார் அத்தை.
அவரும் மூளைச்சலவை செய்யப்பட்டவரே!
இந்தக்காட்சி...  ‘மாமேதை’கார்ல் மார்க்ஸின் வரிகளை ஞாபகப்படுத்துகிறது.
 “சர்ச், தனது வழிபாடு மற்றும் கோட்பாடு முறைகளில்...பெரும்  மாற்றத்தை கொண்டு வர...கேள்வி எழுப்பப்பட்டால் கூட...பொறுத்துக்கொள்ளும்.
ஆனால்,அவர்களுக்கு வருகின்ற வருமானத்தை குறைக்கின்ற வகையில்...சிறு மாற்றத்தை கொண்டு வர... கேள்வி எழுப்பப்பட்டால், பொறுத்துக்கொள்ளாது.”

ஸ்பைனல் கேன்சர்...மருத்துவ சிகிச்சைக்கு அடங்காமல்...கமீனோவை மேலும்...மேலும் சிதைப்பதை,அடுத்த பதிவில் காண்போம்.     

16 comments:

  1. கடவுள் என்ற பெயரில் ஒரு குழந்தையின் சந்தோசம் பறிக்கபடுகிறது இவனுங்க எந்த முயற்சியும் செய்யாமல் கடவுள் காப்பாற்றுவார் என நினைப்பது முட்டாள் தனம்...அடுத்த பாகம் போடுங்கள் படித்து விட்டு டவுன்லோட் போட்டு விடுகிறேன்....

    ReplyDelete
  2. அடுத்த பாகம் தயாராகி கொண்டு இருக்க்கிறது...நண்பரே!

    ReplyDelete
  3. அழுக வெச்சிட்டீங்க. போன பதிவிலயே பின்னூட்டமிடனும்னு நெனைச்சேன்.மனசு சரியில்லை. இன்னைக்கு ஒரு மாதிரி யாரோ சொந்தக்கார புள்ள மேலுக்கு முடியாத மாதிரி ஒரு உணர்வு :-(

    ReplyDelete
  4. எனக்கும் அதே உணர்வுதான் நண்பரே!
    கமீனோவை மகளாகவே நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. படிக்கும் போதே கண்ணீர் துளிகள். உங்கள் உரைநடை நல்லா இருக்கு நண்பரே

    ReplyDelete
    Replies
    1. கருணை இருக்கும் இடத்தில்தான்...கண்ணீர் சுரக்கும்.

      Delete
  6. அந்த ஸ்கேன் நர்ஸ் - கமீனோ சீன் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. உடனே பார்க்கணும் போலிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. இந்தக்காட்சியை வைத்து..முக்கியமான செய்தி சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
      கடவுளை மறுக்கவில்லை.
      கடவுளின் பெயரால் செய்யப்படுகின்ற தீவிரவாதத்தை மட்டுமே கண்டித்து இருக்கிறார் இயக்குனர்.

      சீக்கிரம் பார்த்து விடுங்கள் நண்பா...

      Delete
  7. dear wcf
    when i informed this festival earlier, i defintely expected 2 films in your reivew. i waited for both thats why the delay
    1. friend of mine 2. camino. both deserves a standing ovation but for me camino is still better. a classic movie experience. unable to resist to write the comments after full camino (camino part 3) thats why i am writing it.
    really enjoyed the quote by karl marx. (ha ha ha...) and full deserving credits for that guy/girl? helping you to download those fantastic movies.
    you are definitlely lucky to watch the movie without subtitles. i think it was a blessing in disguise and a definite movie to sow the seeds in your mind to watch without subtitles first and then with subtitles later. good thought so that we all can enjoy the visual experience.
    will check again the list of screened good films. i remember "Chameleon" (whether screened or not i do not know) vaguely a double cross movie suitable for tamil directors piracy.
    thanks for widespreading this fantastic movie. expecting the untold part (as you promised in part 1) in your version.
    anbudan
    sundar g chennai rasanai.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர் சுந்தர் ஜிக்கு.
      கோவையில் இப்படி ஒரு விழா நடக்கிறது என சென்னையிலிருந்து போன் செய்த தங்கள் அன்பிற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
      அனைத்து படங்களையும் பார்த்தேன்.
      கமிலியான் திரையிடப்பட்டது.
      நிச்சயம் அப்படம் தமிழில் செய்யப்படும்.

      இரண்டு பகுதிகளில் முடிக்க எண்ணியிருந்தேன்.
      கமீனோ விடவில்லை.
      கனவுக்காட்சியின் குறியீடுகளின் விளக்கம், இனி வரும் காட்சிகளில்தான் இயக்குனரால் சொல்லப்படுகிறது.

      டவுண்லோடு பண்ணி உதவுவது...65 வயது வாலிபன்.
      சினிமாதான் இவரை இன்றும் துடிப்போடு வைத்திருக்கிறது.
      ஒரே ஒருநாள் மட்டும் தவிற்க முடியாத காரணத்தால் விழாவிற்கு அவரால் வர முடியவில்லை.

      நம்மை இணைத்த விழாக்குழுவிற்கு என்றென்றும் நன்றி.

      Delete
  8. உங்கள் விமர்சன நடை உண்மையாகவே சொல்கிறேன் என்னை கூட கொஞ்சம் உருக வைத்தது.. வலியை அழகாக எழுத்தில் காட்டுகிறீர்கள் ஆனால் நண்பா உங்கள் எழுத்தே இப்படி இருக்கும் போது கடவுளை இதற்குள் இழுப்பது தேவை தானோ என்று தோன்றுகிறது.. (தலைப்பில்)
    அடுத்த பதிவிற்காக வெயிட் பண்ணுகிறேன் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி நண்பரே.
      படத்தில் இருக்கும் வலியை ஐந்து சதவீதம்தான் எழுத்தில் கொண்டு வர முடிந்தது.
      அதற்கே நீங்கள் துடித்திருப்பது, தங்கள் இளகிய மனதே.

      கமீனோ விஷயத்தில் கடவுளே குற்றவாளிதான்....என நான் சொல்லவில்லை...இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

      Delete
  9. dear wcf,
    பாராட்டுக்கு நன்றி நண்பரே.
    // படத்தில் இருக்கும் வலியை ஐந்து சதவீதம்தான் எழுத்தில் கொண்டு வர முடிந்தது. // a true comment for those who had really enjoyed the movie. hats off to the director

    // அதற்கே நீங்கள் துடித்திருப்பது, தங்கள் இளகிய மனதே.// those who had that experience shall deliver the above great comment.

    // கமீனோ விஷயத்தில் கடவுளே குற்றவாளிதான்....என நான் சொல்லவில்லை...இயக்குனர் சொல்லி இருக்கிறார்.// that's what a director's right (urimai) thaan ninaipathai thariyamagavum thelivagavum kaatchipaduththa mudivathuve directorgalin guts. illavittal editor / censor cuts enbathe ingulla nilai. anyhow camino is out and out a director's special movie.

    65 vayathu ilaignarai santhikka aaval. hi hi hi
    anbudan
    sundar g rasanai chennai

    Delete

    ReplyDelete
    Replies
    1. கோவை வாருங்கள்...நண்பரே!
      அந்த வாலிபரை சந்திக்கலாம்.

      Delete
  10. dear wcf
    thangalukku lucky (yuva--- luckylook) theriyumendral avarathu alter-ego gaandu gajendranai therinthirukkum
    appadiye
    wcf n alter-ego 65 vayathu ilaignan ena ninaikkiraen am i correct ??
    anyhow wish to see you soon. chennai vanthal theiryapaduthavum. vice versa.
    anbudan
    sundar g rasanai chennai

    ReplyDelete
  11. நண்பரே...
    லக்கி எனக்கு நேரடி அறிமுகம் கிடையாது.
    பதிவுலக பழக்கம் மட்டுமே.

    எனது நண்பர் சினிமாவை தீவிரமாக நேசிப்பவர்.
    அவர் நண்பராக கிடைத்தது...வரமே!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.