Jul 11, 2012

Beauty And The Paparazzo\2010 [Portugal] நடிகையின் காதல்


கோவை ஐரோப்பிய திரைப்படதிருவிழாவில், இரண்டவது நாளில்...
 இரண்டு படம் திரையிடப்பட்டது.
முதல் படம் Beauty And The Paparazzo .
ரொமண்டிக் காமெடி வகையைச்சேர்ந்த இப்படத்தை
இயக்கியவர் Antonio-Pedro Vasconcelos.

மரியானா போர்ச்சுக்கல்... கொண்டாடும் டி.வி நடிகை.
எனவே அவளுக்கு கிடைக்கும் பணம்,புகழ், தொல்லை எல்லாமே அபரிமிதம்.

மரியானாவுக்கு நேரெதிராக ஜோவா.
திறமையான போட்டாகிராபர்.
ஆனால் பணம்,புகழ்,தொல்லை எல்லாமே குறைவு.
வயிற்றுப்பாட்டுக்கு...மரியானாவை துரத்தும் பப்பாராஸி ஆகி விட்ட
வாயுள்ள ஜீவன்.
இரு துருவங்களும் காதல் என்ற புள்ளியில் சங்கமிப்பதை சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.
படத்தில் வரும் பெரும்பான்மையான காட்சிகள் நமது இந்தியப்படங்களில் ஏற்கெனவே பார்த்து ரசித்திருந்தாலும்...இப்படத்தையும் ரசிக்க முடிந்தது.
ஏழை-பணக்காரக்காதலை எத்தனை முறை வேண்டுமானாலும் ரசித்தோம்...ரசிக்கிறோம்....ரசிப்போம்.

தனக்கு கிடைத்த ‘அபரிமிதங்களிலிருந்து’ வெளியேற துடிக்கிறாள் மரியானா.
அதன் வடிகாலாக...தன்னை துரத்தி படமெடுக்கும் பப்பாரஸி எனதெரியாமலே ஜோவாவை காதலிக்கிறாள் மரியானா.
 ரெஸ்ட்டாரண்ட்டில் வேலை பார்ப்பதாக சொன்ன தற்காலிகப்பொய்யை நிரூபிக்க ஜோவாவின் திருவிளையாடல்கள் அனைத்தும் ஜாலி ஜாங்கிரிகள்.[சென்னை சரவணபவன் சூடான ஜாங்கிரி என்னுடைய ஆல் டைம் பேவரைட்]

தெருவில் கண்டெடுத்த கருப்பு வெல்வெட்டுக்கு...
 'டியுஸ் டே'[Tues Day] என செல்லப்பெயரிட்டு காதலின் அடையாளமாக வளர்க்கிறார்கள்.
பப்பராசி குட்டு வெளிப்பட்டு... ஜோடி பிரியும்போது...
 சேர்த்து வைக்கிறார்... நன்றியுள்ள 'டியுஸ் டே'.

அக்மார்க் அரிஸ்டாட்டில் பார்மில் சொல்லப்பட்ட இக்கதையை  ‘ஒ.கே ஒ.கே’ ராஜேசோ... ‘கலகலப்பு’ சுந்தர் சியோ பார்த்தால் கல்லா கட்டி விடுவார்கள்.

டிரைலர் காண...

10 comments:

 1. யெப்பா..ஒரு வழியா வந்துட்டேன்..நிறைய பதிவுகளை அதிலும் முக்கியமா ஹேராம் தொடரை மிஸ் பண்ணதில் வருத்தமளிக்கிறது..எப்படியும் படித்திடுவேன்.
  ஒரு காதல் கலந்த காமெடி படம்..எதை எழுதுனுமோ அதை ரொம்ப கச்சிதமா பண்ணிருக்கீங்க அண்ணா...நம்ம இந்தியன் சினிமா ஸ்டைலுனு வேற சொல்லிருக்கீங்க..பார்க்கனும் ஆசையா இருக்கு..டவுன்லோடு லிங்க் கிடைக்குதானு பார்க்குறேன்..நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நீண்ட நாட்களுக்கு பிறகு,தம்பியின் வருகை மகிழ்வளிக்கிறது.

   Delete
 2. விமர்சனத்திற்கு நன்றி
  தகவல்கள் அருமை..... பகிர்வுக்கு நன்றி...
  http://dohatalkies.blogspot.com/2012/07/good-bad-and-ugly.html

  ReplyDelete
 3. படம் நல்லா இருக்கும் போலவே பார்த்துவிட வேண்டியது தான்...தங்களுக்கும் நன்றி அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. ஜாலியா இருக்கும் தம்பி..பாத்திருங்க...

   Delete
 4. நல்ல டைமிங்.. நானும் ரொமான்டிக் காமெடிப் படங்களைத்தான் சில நாட்களாக வலை வீசித் தேடிக் கொண்டிருக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. ரொமண்டிக் காமெடிக்கு இந்தப்படம் பெஸ்ட் சாய்ஸ்.

   Delete
 5. ரொமாண்டிக் காமெடி நம்ம டைப் படமாச்சே? சீக்கிரம் எடுத்துப் பார்த்திட வேண்டியது தான். ஆன்லைன்ல பார்க்க முடியுமான்னு தேடிப் பார்க்கணும். இது போல ஜாலியான படங்களை அறிமுகப்படுத்துங்க :) :)

  ReplyDelete
  Replies
  1. ரொமண்டிக் காமெடியை ரசிக்கிற வயசுதானே...அனுபவிங்க...
   கம் செப்டம்பர்,ரோமன் ஹாலிடே,சம்மர் ஆப் 42 பாருங்க.

   Delete

Note: Only a member of this blog may post a comment.