Jan 21, 2012

மிஷ்கினுக்கு என் மேல் வந்த கோபம்



சென்னை புத்தகக்கண்காட்சியில் இடம் பெற்றது பாக்கியமாகக்கருதினேன் ஜனவரி 5ம்தேதி வரை.
ஜனவரி 17ம்தேதி கண்காட்சி முடியும் போது அந்த எண்ணம் கரைந்து விட்டது.
இந்த கண்காட்சி அனுபவம் ஆயுசுக்கும் போதும்.

என் ஸ்டாலுக்கு வந்து என்னை கவரவப்படுத்திய பிரபல பதிவர்கள் ஜாக்கி சேகர்,பட்டர்பிளை சூர்யா,ரசனை சுந்தர்ஜீ,கொழந்த சரவணன்... அனைவருக்கும் நன்றி.
என்னையும் என் ஸ்டாலையும் படம் பிடித்து ஸ்பெஷல் பதிவு போட்டு நாறடித்த பதிவர்களுக்கு மிக்க நன்றி.
நாறடித்த நல்லவர்களுக்கு ஒரு வார்த்தை...
இயேசுபிரான் ஒரு விலைமாதை கல்லெறிந்தவர்களிடம் கூறுவாரே...அந்த பைபிள் வசனம்தான் எனது பதில்.

மிஷன் இம்பாசிபிள்4 போன்ற புதிய மசாலா படங்களின் டிவிடி விற்றிருந்தால் மேலும் ஒரு லட்சம் லாபம் கிடைத்திருக்கும்.
மாறாக பை சைக்கிள் தீவ்ஸ்,ரோஷமான்,பதேர் பஞ்சலி விற்று கிடைத்த 50000 ரூபாய் லாபம்... கோடி ரூபாயாக இனிக்கிறது.
ரெட் பலூனையும்,விண்ட் மைக்ரேசனையும் சொல்லி சொல்லி நூற்றுக்கணக்கான டிவிடி விற்றேன்.
அவற்றை குடும்பத்தோடு பார்த்தவ்ர்கள் என்னை பாராட்டி மகிழ்வதுதான் எனக்கு கிடைத்த வரம்.

இந்த கண்காட்சியில் ஒரிஜினல் காப்பி ரைட் டிவிடியும் வைத்திருந்தேன்.
599 ரூபாய் கொடுத்து அவதார் வாங்கியது ஒரே ஒருவர்தான்.
50 ரூபாய்க்கு அவதார் வாங்கியவர்கள் 60 பேர்.
599 ரூபாய் கொடுத்து சில்ட்ரன் ஆப் ஹெவன் ஒருவர் கூட வாங்கவில்லை.
50 ரூபாய் கொடுத்து அதே படத்தை 120 பேர் சந்தோஷமாக வாங்கிச்சென்றுள்ளனர்.

மெலினா,ஹோட்டல் ருவாண்டா,மோட்டார் சைக்கிள் டைரி,மீராநாயரின் மிசிசிபி மசாலா,தீபா மேத்தாவின் ஃபயர்,சத்யஜித்ரேவின் சில படங்கள்
99 ரூபாய்க்கு  ஒரிஜினல் டிவிடி வந்து விட்டது.
 அதைத்தான் திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் விற்கப்போகிறேன்.
இந்தப்படங்கள் 50 ரூபாய்க்கு வந்து விட்டால் இன்னும் அதிகம் விற்க்கும்.
இந்தவிலைக்கு இந்தக்கம்பெனி இறங்கி வந்து விற்றதுக்கு அடியேனும் ஒரு காரணம்.
அந்தக்கம்பெனியிடம் நான் கொடுத்த பிராமிஸ் இதுதான்.
 “50 ரூபாய்க்கு உலக சினிமா விற்றால் ஒவ்வொரு டைட்டிலுக்கும் ஆயிரம் டிவிடி நானே வாங்கி விற்க்கிறேன்”.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த விலைக்கு விற்க கீழே இறங்கி சத்தியமாக வராது.
அவர்கள் 599 ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் இந்திய மக்களை
கொள்ளையடிக்கத்தான் விரும்புவர்.
ஒரிஜினல் டிவிடி என்ற பெயரில் கோடிக்கணக்கான இந்திய ரூபாய்கள் அமெரிக்காவுக்கு போகாமல் தடுப்பது என்னைப்போன்ற வியாபாரிகளே.
நியாயமாக பார்த்தால்.... அந்நிய செலாவணி சேமித்து கொடுக்கும் எங்களை ரிசர்வ் வங்கி மனசார பாராட்டவேண்டும்.

எனது ஸ்டாலுக்கு வந்து வாங்கி சந்தோஷப்பட்டட விஐபிக்கள் பலர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,இயக்குனர் விக்கிரமன்,
இயக்குனர் ரமணா,டாக்டர் ருத்ரன் ஆகியோர் என்னை அங்கீகரித்த நல் உள்ளங்கள்.
இயக்குனர் ரமணா தொண்டையில் புற்று நோய் வந்து அறுவை சிகிச்சை செய்து பேச முடியாமல் அவஸ்தைப்படுகிறார்.
அவர் மீண்டும் தனது குரலைப்பெற என்னோடு நீங்களும் பிரார்த்தியுங்கள்.

இயக்குனர் மிஷ்கின் ஸ்டாலுக்குள் வந்த உடனே எழுந்து நின்று வரவேற்றேன்.
புத்தகக்கண்காட்சியில் பைரேட்டட் டிவிடி நீ எப்படி விற்க்கலாம்?என கோபப்பட்டு உடனே வெளியேறி விட்டான்.
இதை பார்த்து கொண்டிருந்த மற்றோரு கஸ்டமர்...
 “ இந்த வார்த்தையை இவன் சொல்லக்கூடாது.
கிகுஜிரோவை திருட்டுத்தனமாக காப்பியடித்த இவன் உங்கள் மேல் கோவப்பட்டது நியாயமே இல்லை”.என என்னை சாமாதானப்படுத்தினார்.
என் ஸ்டாலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கிகுஜிரோ டிவிடியை பார்த்ததும் இதுதான் நந்தலாலா என்கின்றனர்.
ஐ யாம் சாமை பார்த்து இதுதான் தெய்வத்திருமகள் என்கின்றனர்.
இப்படி நாடறிந்த படங்களை காப்பியடிப்பதற்க்கு பதில் நல்ல தமிழ்க்கதைகளை வாங்கி படமாக்குங்கள்.
நாடே போற்றும்.

சாகித்ய அகடமி பரிசு பெற்ற காவல் கோட்டம் நாவலின் ஒரு பகுதியை.... அரவான் என்ற திரைப்படமாக இயக்குனர் வசந்த பாலன் உருவாக்கி உள்ளார் என்ற நல்ல செய்தியை உங்களிடம் பகிர்வதுதான் ...
2012ல் ஆகச்சிறந்த ச்ந்தோஷம்.

13 comments:

  1. // இயக்குனர் மிஷ்கின் ஸ்டாலுக்குள் வந்த உடனே எழுந்து நின்று வரவேற்றேன். புத்தகக்கண்காட்சியில் பைரேட்டட் டிவிடி நீ எப்படி விற்க்கலாம்?என கோபப்பட்டு உடனே வெளியேறி விட்டான். //
    கண்ணாடி போட்டால் அவன் என்ன பெரிய அப்பாடக்கரா??? நீங்க நடத்துங்கண்ணே ...

    ReplyDelete
  2. ஓ அது உங்க ஸ்டால் தானா... தெரியாம போச்சே...

    மேட்டர் என்னன்னா நீங்க 50 ரூபாய்க்கு விற்ற டிவிடிக்கள் சென்னையில் 15 அல்லது 20 ரூபாயிலேயே கிடைக்கும்... உங்களிடம் டிவிடி வாங்கிய சென்னைவாசிகளுக்கு அது தெரியாமல் போனதில் மகிழ்ச்சி...

    ReplyDelete
  3. << ஹாலிவுட் ரசிகன்
    கண்ணாடி போட்டால் அவன் என்ன பெரிய அப்பாடக்கரா??? நீங்க நடத்துங்கண்ணே >>> ..

    @@ அப்படியே கரைக்டா சொல்லிட்டீங்க நண்பரே..@@@

    நானும் ரொம்ப நாளா மனசுல நெனைச்சிட்டு வரேன் அண்ணே..இந்த மிஷ்கின் அப்படி என்ன படம் பன்னிட்டாரு.ஏதோ இருக்கிற தமிழ் சினிமால நல்ல சினிமா என்றால் என்னவென்று கொஞ்சம் எட்டிப்பார்க்குறாரு..அது அதலயும் காப்பி..அதுக்கு இன்னொரு பேரு இன்ஸ்பிரஷன் இவங்க மாதிரி பெரியவங்களுக்கு.
    பல வெளிநாட்டு படங்களை அல்வா போல கைவசம் வச்சிருக்கும் உங்க கிட்ட எல்லாரும் இவரு போன்றவர்களால ஒன்னும் பண்ண முடியாது.உங்க ஸ்டாலை பார்க்கனுமுன்னு ஆசையா இருக்கு..??

    ReplyDelete
  4. தவறாக நினைக்க வேண்டாம்..
    அப்படியே நேரம் இருந்தா ஹிட்ச்காக் படம் ஒன்று எழுதிருக்கேன்..வந்து அப்பப்ப தவறு ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க அண்ணே..உங்களை போன்றவர்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் மிக முக்கியம்.
    நன்றி.

    ReplyDelete
  5. என்ன கோபம் மிஸ்கினுக்கு , ஒருவேளை உலக சினிமா பாக்காம சொந்தமா யோசிச்சு படம் எடுத்தா இப்படித்தான் கோபம் வருமோ ayyo ayyo

    ReplyDelete
  6. அது ஒண்ணும் இல்ல.நீங்க விக்கிறதெல்லாம் வாங்கிப் பார்த்து ஜனங்க கரெக்டா எங்கேருந்து இவர் சுடறாருன்னு கண்டுபிடிச்சிடறாங்களேன்னு காண்டு! 1980 களிலே இவர் இருந்திருந்தா ரொம்ப பெரிய டைரக்டரா ஆயிருப்பார் போல!

    ReplyDelete
  7. வந்தேன். ஆனா...அது உங்க ஸ்டால்னு தெரியாது.

    ReplyDelete
  8. மிஷிகின் மேட்டர் லூஸ்ல விடுங்க...சினிமாத்துறையே ஒரு organised sector கிடையாது. தடியெடுத்தவன் தண்டல்காரன். இதுல எளியவனிடம் தர்மம் உபதேசிப்பாங்க!

    ReplyDelete
  9. மிஷ்கின் வெளியேறினது ஒலக காமெடி :-) . ... .அந்தாள் கிடக்குறாரு விடுங்க. அப்புறம், யாருங்க உங்க கடையை படம் எடுத்து போட்ட பிரபல பதிவர்கள்? புடிச்சி கிளிச்சி விடுங்க ... திருட்டு டிவிடில படத்தை ரகசியமா பார்த்துபுட்டு அப்பால உங்க கடையை வேற கேலி பண்ணுரானுங்களா அவனுங்க :-)

    ReplyDelete
  10. நீங்க ஆங்கிலப் படங்களை சாமானியர்களுக்கு அறிமுகப் படுத்துனா தன் அடுத்த படத்தின் கதை தெரிஞ்சுடுமேன்னு கவலைப் பட்டிருப்பார்.. விடுங்க ஃப்ரெண்ட்..

    ReplyDelete
  11. aama, neenga nalla ulaga cinema va, makkala paaka vaechrareenga.. appuram avar maathiri aaluga ellam, eppadi padam edukarathu.. ponga sir neenga romba mosam.. :)

    ReplyDelete
  12. I think you are totally over looking Mishkin's point.
    And there is no way you can justify selling pirated DVDs.

    Mishkin by all means was right in what he said.
    And you only come off as snoty by your comments on Mishkin / Nandalala...

    ReplyDelete
  13. And just found out..
    You are moderating the comments and approving only the ones supporting you..

    It is high time you grow up and "BE A MAN"..!

    As much as I loved reading your blog, I have totally lost the respect I had for you..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.