Jun 29, 2011

உலகசினிமா பார்க்க ஆங்கிலம் தேவை இல்லை.

உலகசினிமா பார்க்க ஆங்கிலத்தில் மிகுந்த புலமை தேவை என்ற பொதுப்புத்தி நிலவி வருகிறது.
ஹாலிவுட் மசாலா படங்களை பார்க்க வேண்டுமென்றால் ஆங்கில அறிவு தேவைப்படலாம்.
உலகசினிமா பார்க்க ஆங்கில அறிவு அறவே தேவையில்லை.
இதற்க்கு முழு உதாரணம் நான்தான்.
நான் ஆங்கிலப்பாடத்தில் 35 மதிப்பெண் ஆசிரியர்கள் தயவில்தான் பெற்று ஜஸ்ட் பாஸாகியிருக்கிறேன்.
இப்படிப்பட்ட நானே சினிமாவின் மேல் உள்ள ஆர்வத்தால் இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட படங்கள் பார்த்து விட்டேன்.
இன்றும் நான் ஆங்கிலத்தில் அறைகுறைதான்.
ஆனால் சினிமா மொழி பழகிவிட்டேன்.

சினிமா மொழி நல்ல உலகசினிமாக்களை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தாலே ந்மக்கு பழகிவிடும்.
சினிமா மொழி பழகிவிட்டால் உலகின் எந்த உலகசினிமாவையும் உள் வாங்க முடியும்.


கோணங்கள் பிலிம் சொசைட்டி சேரிப்பகுதிகளில் பை சைக்கிள் தீப்,சில்ட்ரன் ஆப் ஹெவன் போன்ற படங்களை தொடர்ந்து பலபகுதிகளில் திரையிட்டு வருகிறார்கள்.
படம் முடிந்த பிறகு நடக்கும் கலந்துரையாடலில் படத்தை அந்த மக்கள் அழகாக உள் வாங்கியது மிகத்தெளிவாக வெளிப்படும்.
ஆங்கிலம் படித்த மேதாவிகளை விட அந்த மக்கள் அந்தப்படத்தை அழகாக அலசுவர்.
என்னை கேட்டால் உலகசினிமா பார்க்க ஆங்கிலம் அறவே தேவையில்லை என்று ஆணித்தரமாக சொல்வேன்.

ஒவியத்தை பார்த்து ரசிக்க மொழி தேவையா?
நல்ல சினிமா.... ஒவியம் போலவே உங்களோடு பேசும்.

உலகசினிமா பாருங்கள்.... வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கும்.

24 comments:

 1. //ஒவியத்தை பார்த்து ரசிக்க மொழி தேவையா?
  நல்ல சினிமா.... ஒவியம் போலவே உங்களோடு பேசும்.//
  நல்ல கருத்து

  இன்று என் பதிவில்
  கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

  ReplyDelete
 2. காத்திரமான கட்டுரைப் பகிர்வு, நிச்சயமாக உலக சினிமா பார்க்க ஆங்கிலம் தேவை இல்லைத் தான்...

  புரிந்துணர்வென்ற ஒன்றே, புரிதல்களை மேம்படுத்த அவசியமாகின்றது.

  ReplyDelete
 3. மாப்ள உண்மை தான்யா...நடப்பதை உள்வாங்கி கொள்ளும் சிறிய முயற்சி இருந்தாலே போதும்...நானும் உம்ம போலத்தான் ஹிஹி!

  ReplyDelete
 4. @மதுரன்
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 5. @நிரூபன்
  //புரிந்துணர்வென்ற ஒன்றே, புரிதல்களை மேம்படுத்த அவசியமாகின்றது.//

  என் கருத்துக்கு தோள் கொடுத்து தூக்கி நிறுத்திய உங்கள் தமிழை வணங்குகிறேன்.

  ReplyDelete
 6. @விக்கியுலகம்
  //மாப்ள உண்மை தான்யா...நடப்பதை உள்வாங்கி கொள்ளும் சிறிய முயற்சி இருந்தாலே போதும்...நானும் உம்ம போலத்தான் ஹிஹி!//

  வா..நண்பா...நீயும் நானும் சேம் பிளட்...

  எம்.ஜி.யார் ரசிகன் உலகசினிமா ரசிகனா மாறிட்டாரு.அவருடைய முயற்சிதான் காரணம்.

  ReplyDelete
 7. /// ஒவியத்தை பார்த்து ரசிக்க மொழி தேவையா?
  நல்ல சினிமா.... ஒவியம் போலவே உங்களோடு பேசும்./// உண்மை தான் நண்பா ...ரசனைக்கு மொழி தேவையில்லை ...

  ReplyDelete
 8. மொழி, இன.மத வேறுபாடுகள் கடந்தது கலை!
  இருபதாம் நூற்றாண்டின் மிக அற்புதமான விஞ்ஞானக் கண்டுபிடிப்பு,கலை - சினிமா! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை!

  ReplyDelete
 9. @கந்தசாமி
  நண்பரே!கருத்துக்கு வலுவூட்டியமைக்கு நன்றி.

  ReplyDelete
 10. ஜீ
  //மொழி, இன.மத வேறுபாடுகள் கடந்தது கலை!
  இருபதாம் நூற்றாண்டின் மிக அற்புதமான விஞ்ஞானக் கண்டுபிடிப்பு,கலை - சினிமா!//
  ஜீ...
  மிக அழகாகச்சொன்னீர்கள்.
  நல்ல சினிமா...நல்ல புத்தகத்தை விட வலிமையானது.
  படைப்பாளியின் கையில்தான் அது வீணையாகவோ...விறகாகவோ உருவெடுக்கிறது.

  ReplyDelete
 11. nalla karuththaana pakirvu
  try pannuran nanpaa
  vaalththukkal

  ReplyDelete
 12. 1 ப்ளாஷ்பேக் + 1 விவாதம் + 1 அறிவுரை கலந்த பதிவாக இருக்கிறதே..
  சொல்லவந்ததை சுருக்கமாக சொன்னாலும் தெளிவாக சொல்லிட்டீங்க!!

  ReplyDelete
 13. ஆங்கில அறிவை வளர்க்க உலக சினிமா ஒரு நல்ல கருவி என்பதை மறுக்க முடியாது .அதுபோல ஆங்கில ஊடகங்களும் உதவுகின்றன ....

  ReplyDelete
 14. தலைவரே மிகவும் உண்மை,கோணங்கள் செய்யும் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  ReplyDelete
 15. @விடிவெள்ளி
  நன்றி சகோ...நீங்கள் உலக சினிமா புதிதாக பார்க்கவிருப்பதால்
  சில்ட்ரன் ஆப் ஹெவன்,
  லைப் இஸ் பியுட்டிபுல்,
  சினிமா பாரடைஸ்ஸோ,
  பியானிஸ்ட்,
  மெலினா,
  பதேர் பஞ்சலி,
  மேக தக்க தாரா...
  இந்த வரிசையில் பார்க்க துவங்குங்கள்.இதன் பிறகு உலக சினிமா உங்களை விடாது.

  ReplyDelete
 16. @JZ
  வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 17. @கீதப்பிரியன்
  வணக்கம் நண்பரே...வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 18. @கூடல்பாலா
  //ஆங்கில அறிவை வளர்க்க உலக சினிமா ஒரு நல்ல கருவி என்பதை மறுக்க முடியாது //

  நண்பரே...உலகசினிமா பார்ப்பதால் உலகமே நம் மூளைக்குள் இறங்கிவிடும்.
  எங்கோ தொலைதூர நாட்டு மக்களின் வாழ்வியல்,அரசியல்,பொருளாதாரம் எல்லாமே அறிய முடிகிறது.
  அடிஷனல் போனசாக ஆங்கில அறிவும் வளர்கிறது.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 19. உங்கள் கருத்துக்கு நேர் மாறாக உலக சினிமா பலவற்றை சப்டைட்டில் உடன் பார்த்து ஆங்கிலம் கற்று கொண்டேன்

  ReplyDelete
 20. @லக்கி லிமட்
  //உங்கள் கருத்துக்கு நேர் மாறாக உலக சினிமா பலவற்றை சப்டைட்டில் உடன் பார்த்து ஆங்கிலம் கற்று கொண்டேன்//
  நண்பரே!
  ஆங்கிலம் தெரியாமல் உலக சினிமா பார்க்க தயங்குபவர்களை...
  ஊக்குவித்து....
  ஆங்கிலமொழியறிவு என்ற தடையை கடந்து உலகசினிமாவுக்குள் வாருங்கள்...
  என அழைப்பு விடுத்திருக்கிறேன்.

  உலகசினிமா பார்க்கும்போது ரசனையுடன்... ஆங்கில மொழியறிவும் வளர்வது நல்லதுதானே!

  ReplyDelete
 21. கலைக்கு மொழி தேவையில்லை .ரசனை கொண்ட எல்லோரும் ரசிக்கலாம்..அருமையான பதிவு.

  ReplyDelete
 22. @கோவை நேரம்
  வாருங்கள் நண்பரே!
  பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 23. நண்பர்களே நம்ம பக்கம் !!மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்!!
  நீங்களும் யோசித்து பாருங்களேன்

  ReplyDelete
 24. புரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்தால் போதும்.. புரிதல் சாத்தியம்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.