Jun 7, 2011

Conviction-English[2010] பாசமலர்

தமிழ் சினிமாவில் மீண்டும் மீண்டும் படமாக்கப்படும் செண்டிமெண்ட்களில் முதன்மையானது அண்ணன் தங்கை.இதன் அடிப்படையில் வந்த முதன்மையான படம் பாசமலர்.சிவாஜி சாவித்திரி நடிப்பில் இப்படத்தில் கலங்காதவர் இருக்க முடியாது.இப்படம் தந்த உணர்ச்சி கொந்தளிப்பு சற்றும் குறையாத அனுபவமாக இருந்தது கன்விக்சன்.அபூர்வமாக ஹாலிவுட்டில் இது போன்ற நல்ல படம் வரும்.உண்மை சம்பவத்தை படமாக்கி இயக்கியவர் டோனி கோல்ட்வின்

ஹாலிவுட் சாவித்திரியாக வருபவர் ஹிலாரி சாங்.இந்த நடிப்பு ராட்சசி ஏற்க்கெனவே பாய்ஸ் டோண்ட் கிரை,மில்லியன் டாலர் பேபி படத்தில் நம்மை கலங்கடித்தவர்.தனது தேர்ந்த நடிப்பால் இப்படத்திலும் நம்மை  கட்டிப்போடுகிறார்.இவருக்கு சற்றும் குறையாமல் ஈடு கொடுத்து நம்மை வெல்கிறார் அண்ணனாக வரும் சாம் ராக்வெல்.இவரது அனாயசமான  நடிப்பு நமது ரகுவரனை ஞாபகப்படுத்தியது.இந்த இருவரது நடிப்புதான் படமே.
யான் பெற்ற இன்பத்தை பெற உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
இப்படத்தில் வரும் கதை உண்மைச்சம்பவம் என்பதிலேயே ஒரு கனம் மனதில் ஏறிவிடுகிறது.கென்னியை ஒரு பெண்ணை கொலை செய்த குற்றத்திற்க்காக கைது செய்து வலுவான சாட்சியங்களை தயார் செய்து ஜெயிலில் தள்ளுகிறாள் ஒரு போலிஸ்காரி.
தனது சகோதரனை வெளியே கொண்டு வர திறமையான வக்கீலை வைத்து வாதாடியும் தோற்றுப்போகிறாள் சகோதரி பெட்டி.
சாட்சியங்கள் வலுவாக இருந்தால் ராம்ஜெத்மலானி வாதாடினால் கூட ஜாமீன் கிடைக்காது.

தனது சகோதரனை வெளியே கொண்டு வர எல்லா முயற்சிகளும் தோற்றுப்போன நிலையில்  தானே வக்கீலாக முடிவெடுக்கிறாள்.
வக்கீல் படிப்பை ஒரு தவமாக மேற் கொள்கிறாள்.ப்தினெட்டு ஆண்டுகள் போராடிய பின்னர் வெற்றி பெறுகிறாள்.இப்போராட்டத்தில் இழந்தது அநேகம்.
பாசமலர்கள் இணையும் இறுதிகாட்சி ந்ம் மனதில் கல்வெட்டாய் பதியும்
.சகோதரி பெட்டி இது போன்ற அப்பாவிகளை  ஜெயிலில் இருந்து விடுவிப்பதையே ஒரு இயக்கமாக கொண்டு வாழ்ந்து வருகிறார் இன்றும்.

அண்ணன் தங்கை பாசத்துக்கு தமிழில் பாசமலர்,முள்ளும் மலரும்,கிழக்கு சீமையிலே என சொல்லிக்கொண்டே போகலாம்.ஹாலிவுட்டில் ஒன்றே ஒன்றுதான்.
அது கன்விக்சன்.

12 comments:

 1. //தனது சகோதரனை வெளியே கொண்டு வர எல்லா முயற்சிகளும் தோற்றுப்போன நிலையில் தானே வக்கீலாக முடிவெடுக்கிறாள்.//

  இதைத்தான் கலைஞர் ஏற்கனவே பாடாத தேனிக்கள் படத்தில் சிவகுமார், ராதிகா'வை வைத்து எடுத்து விட்டாரே?

  கிங் விஸ்வா
  சல்மான் கானின் ரெடி (2011) - திரைவிமர்சனம்!!

  ReplyDelete
 2. Betty Anne Waters வாழ்க்கை நூலாக வெளி வந்தது.அதன் அடிப்படையில் மலையாளத்தில் இப்படம் உருவாகி பின்னர் தமிழில் எடுக்கப்பட்டிருக்கலாம்.பாடாத தேனீக்கள் மலையாள ரீ மேக்.இயக்கம் வி.எம்.சி.ஹனீபா என நினைவு.வரவுக்கும் கருத்துக்கும் நன்றி விஸ்வா.

  ReplyDelete
 3. ஹிலாரி ஸ்வாங்க், எனக்குப் பிடிக்கும். ஆனால் இப்படம் இன்னும் கேள்வியே படவில்லை. செண்டிமெண்ட் மூடு வரும்போது இதைப் பார்க்கிறேன். நான் கவனித்த ஒரு விஷயம் என்னவெனில், உண்மைச் சம்பவங்கள், அங்கே உடனே வெளிவந்து விடுகின்றன. இதுபற்றி எழுதப்பட்டுள்ள புத்தகங்கள், பெருமளவில் விற்றும்விடுகின்றன. உடனேயே ஒரு படமும் எடுக்கப்பட்டுவிடுகிறது. இந்த வகையில் எடுக்கப்படும் படங்கள், நமக்கெல்லாம் boost ஊட்டக்கூடிய வகையிலும் இருக்கின்றன. இதனால், வாழ்க்கையில் தோல்வி அடைந்தாலும், கட்டாயம் அதனைத் தாண்டி வெளியே வரலாம் என்பது நன்றாக மனதில் பதிந்து விடுகிறது. இது எவ்வளவு நல்ல விஷயம்? நம்மூரில் இப்போது தான் இந்த உண்மைச் சம்பவ அவேர்னஸ் மெதுவாக வந்துகொண்டிருக்கிறது. இந்த வகையில் எடுக்கப்படும் படங்கள், எப்போதும் எனக்குப் பிடித்தமானவை.

  ReplyDelete
 4. நீங்க சொல்லித்தான் இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்படுகின்றேன்..
  போஸ்டரில், இந்தப் படம் பொஸ்டன் திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.. வேறெந்த திரைப்பட விழாவிலும் இதை நாமினேஷனாக கூட காணக்கிடைக்கவில்லையே!!
  (படம் கமர்ஷியலாக தோல்வின்னு வேற விக்கிபீடியா சொல்லுது..)

  என்னமோ போங்க.. வாசிச்சதிலிருந்து எப்படியாவது தேடி படத்தை பார்த்துடனும் போல இருக்கு..

  ReplyDelete
 5. நம்மூரில் ஆட்டோ சங்கர்,வீரப்பன் போன்றவர்கள் கதையைத்தான் மசாலா சேர்த்து வியாபாரமாக்கி கல்லா கட்டுவார்கள்.அண்ணாவைப்பற்றியே படமெடுக்கவில்லை அவரது தம்பிகள்..ரத்தங்கள்.முத்துராமலிங்கத்தேவர் வரலாறு திரிக்கப்படாமல் நேர்மையாக படமாக்கப்பட்டிருந்தால் இன்று அவரை தெய்வமாக வழிபடும் கொடுமை நடந்திருக்காது.எம்.ஜி.யார் பற்றியே படமெடுக்கவில்யே.88 வயதிலும் சுயநலப்பேயாக நடமாடும் தாத்தாவைப்பற்றி படமெடுக்க முடியுமா?சொல்லிக்கொண்டே போகலாம்...வருகைக்கு நன்றி ராஜேஷ்.

  ReplyDelete
 6. நண்பர் JZ... இப்படம் நடிப்புக்காக மட்டும் பல்வேறு திரைப்படவிழாக்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சிலவற்றில் மட்டுமே பரிசு கிடைத்துள்ளது.உங்கள் முகவரியை எனது மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்.குரியரில் அனுப்பி வைக்கிறேன்....எனது அன்புப்பரிசாக...[90039 17667]

  ReplyDelete
 7. வீரப்பன ஹீரோவா இங்க ஒரு கூட்டம் உருவாக்கிட்டு இருக்குதே....அத பத்தி உங்க கருத்து என்ன....

  ReplyDelete
 8. சாதாரண சந்தன கடத்தல்காரன்...முக்கிய பிரமுகர்களை கடத்தி பணம் பார்த்தது....பிறகு தமிழ்ப்போராளிகள் நட்பால் ஒரு போராளியாக மாறியது இவையனைத்தும் நடுநிலையோடு திரைக்கதை அமைத்து... திறமையான இயக்குனர் படமாக்கினால் அற்புதமான உலகசினிமா தமிழில் நமக்கு கிடைக்கும்.வீரப்பனை புத்தனாக ஒரு கோஷ்டியும்,பொறுக்கியாக ஒரு கோஷ்டியும் சித்தரித்து வருகிறது.பொறுக்கியாக இருந்து போராளியாக மாறிய யதார்த்தத்தை நம்புகிறவன் நான்.

  ReplyDelete
 9. உங்க ப்ளாக் க்கு புதுசு .உங்களோட விமர்சன நடை சூப்பர்,

  ReplyDelete
 10. //குரியரில் அனுப்பி வைக்கிறேன்....எனது அன்புப்பரிசாக.//
  ஆகா ரொம்ப நல்லவரா இருக்கீங்களே!!
  பரவால்லை நண்பா.. நான் டவுன்லோட் போட்டுர்றேன்..

  ReplyDelete
 11. Mother of Mine (2005) (Swedish/Finnish) பற்றி எழுதுங்களேன்.

  IMDB link: http://www.imdb.com/title/tt0343221/

  ReplyDelete
 12. nanba the day of the earth stood still parunga.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.