Jan 3, 2011

தமிழ்சினிமாவை காயப்படுத்தாதீர்


நான் பிளாக் எழுத ஆரம்பித்ததே மிகமிகச்சமீபம்.ஆனால் பால்குடிப்பருவத்தில் இருந்தே தமிழ்சினிமாவை ருசிக்க ஆரம்பித்து விட்டேன்.சென்னை சாந்தி தியேட்டரில் திருவிளையாடல் ரீலிஸ்.என் தாயார் மடியில் இருந்து பார்த்த முதல் படம்.அதனால்தான் என்னவோ தாய்ப்பாலையும் தமிழ்சினிமாவையும் ஒன்றாகத்தான் மதிக்கிறேன்.உலகசினிமா உயரத்துக்கு தமிழ்சினிமா வளர வேண்டும் என்பதே என் ஆசை.... மோகம்....வெறி....கேன்ஸ்&ஆஸ்கார் அரங்கில் என் காலத்திலேயே தமிழ்சினிமா மகுடம் சூட்டப்படும்.எத்தனையோ நிஜமாகிப்போன என் கனவுகளில் இதுவும் இடம் பெறும்.
சரி...விசயத்துக்கு வருகிறேன்.பிரபலங்களின் தமிழ்சினிமா ரீலிசாகும்போது வலைப்பூக்களில் விமர்சனம் என்ற பெயரில் விஷம்தான் வீசப்படுகிறது.தன்னை மேதாவியாக காட்டும் மோடி வித்தை நடத்தப்படுகிறது.தமிழ்சினிமாவுக்கு திறமையான...நேர்மையான...விமர்சகன் இன்று வரை பிறக்கவேயில்லை.விமர்சகன் சினிமாவின் அனைத்து உட்கூறுகளையும் அறிந்த வித்தகனாய் இருத்தல் அவசியம்.ஒன்று கூடத்தெரியாமல் எல்லாம் தெரிந்த ஏகாம்பரர்கள்தான் இந்த விமர்சகர்கள்.ஒவ்வொரு விமர்சனமும் தமிழ்சினிமாவை உயரத்தூக்கும் தரம் இருக்கவேண்டும்.எந்திரன்,நந்தலாலா,ம.அம்புவுக்கு வந்த அனைத்து விமர்சனக்கணைகளும் விஷம் ஊறியவைதான்.ஒரு தரமான ஹாலிவுட் படத்துக்கு விமர்சனம் எழுதுங்கள்.அப்புறம் உலகின் டாப் 10 விமர்சகர்களின் விமர்சனத்தை படியுங்கள்.அப்போது தெரியும் உங்களுக்கு.... விமர்சனக்கலையில் எல்.கே.ஜி என்று....விமர்சனக்கலையை கற்றுக்கொண்டு வாருங்கள்.வாழ்த்துகிறேன்.

13 comments:

 1. பிடிக்காத விஷயங்களை எழுதாமல் தவிர்த்து பிடித்த விஷயங்களை மட்டும் எழுதினால் இந்தப் பிரச்சனை வராது...

  ReplyDelete
 2. பிடித்தவர்..பிடிக்காதவர்..என்ற பாகுபாடின்றி நடுநிலையாக விமர்சனம் வரும்போது குறையே வராது.பின்னூட்டத்திற்க்கு நன்றி பிரபாகரன்.

  ReplyDelete
 3. என்னுடைய கருத்து என்னவென்றால், ஒரு தரமான (உலக சினிமாக்களில் இருந்து காப்பியடிக்கப்படாத ) தமிழ்ப்படம் எடுக்கப்படட்டும்.. அதன்பின் தரமான விமர்சனங்களும் எழுதப்படும் என்பதுதான். உதாரணம் - அங்காடித்தெரு. அருமையான படம். ஆனால், எந்திரன், ம. அம்பு ஆகிய இரண்டுமே - குறிப்பாக எந்திரன் - ஒரு டோட்டல் crap முயற்சி என்பது என்னுடைய கருத்து. இவர்களெல்லாம் முதலில் உலக சினிமா விழாக்களில் தமிழ்ப்படங்களின் பெருமையை நிலைநாட்டும் வண்ணம் அருமையான ஒரு படம் எடுக்கட்டும்.. அதன்பின் நல்ல விமர்சனங்களும் கட்டாயம் வரும்..காப்பியடிப்பவர்களுக்கு, அவர்களை விமர்சிக்கும் விமர்சனம் தான் வரும் என்பது என் கருத்து

  ReplyDelete
 4. //தமிழ்சினிமாவுக்கு திறமையான...நேர்மையான...விமர்சகன் இன்று வரை பிறக்கவேயில்லை//

  இதேபோல், தமிழ்சினிமாவில் காப்பியடிக்காத, நேர்மையான இயக்குநரும் இதுவரை பிறக்கவில்லை. பிறக்கட்டும். அதன்பின், நல்ல விமர்சனங்கள் எழுதலாம்..

  //ஒவ்வொரு விமர்சனமும் தமிழ்சினிமாவை உயரத்தூக்கும் தரம் இருக்கவேண்டும்//

  நீங்களுமா இப்படிப் பேசுகிறீர்கள்? உலகசினிமா பற்றி எதுவுமே தெரியாத சராசரி ரசிகன் தான் இப்படிப் பேசுவான். எத்தனை உலகப் படங்கள் பார்த்திருக்கிறீர்கள்.. அட்டைக்காப்பி படங்களை எப்படி உயரத்தூக்குவது ? ஏன் உணர்ச்சிவசப்பட்டு இந்தப் பதிவு? நானும் தமிழ் சினிமாவின் ரசிகன் தான்.. ஆனால், என்னால், நடந்துகொண்டிருக்கும் காப்பிகளை மறந்துவிட்டு, ’தமிழ்சினிமாவைக் கேவலப்படுத்துகிறார்கள் இந்த விமர்சகர்கள்’ என்றெல்லாம் சொல்ல முடியாது.. ஒரிஜினல் படம் எடுத்தால், கட்டாயம் பாராட்டு வரும் என்பதே என் நிலைப்பாடு..

  அதேபோல்

  //பிடித்தவர்..பிடிக்காதவர்..என்ற பாகுபாடின்றி நடுநிலையாக விமர்சனம் வரும்போது குறையே வராது//

  இதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? நடுநிலையாக இருப்பதால்தான், இவர்கள் அடிக்கும் காப்பிகள் பற்றி வெளியே எல்லோருக்கும் சொல்கிறேன். அதைவிட்டுவிட்டு, குறையே இல்லாத விமர்சனம் என்றால், டோட்டலாக ஜிங்சக் அடித்தால் தான் முடியும்.. அது, என்னால் முடியாது. அதற்கு வேறு பலர் இருக்கிறார்கள் :-)

  ReplyDelete
 5. சார், என்னைப் பொறுத்தவரை வலைப்பூக்களில் எழுதப்படும் பலவற்றை விமர்சனம் என்று சொல்வதே தவறு (குறிப்பாக நான்). ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ ஆகலாம், ஆனால் சினிமா பற்றி எழுதுபவரெல்லாம் விமர்சகர் ஆகமுடியாது. என்னைப் பொறுத்தவரையில் நமக்குப் பிடித்த படங்களை அறிமுகம் செய்யலாம், அவ்வளவுதான். அதைப்பற்றி விமர்சனம் செய்யும் அளவுக்கு பலருக்கும் தகுதியில்லை என்றுதான் தோன்றுகிறது.

  ReplyDelete
 6. நண்பர் கருந்தேளுக்கு நன்றி.நான் திரைமணத்தில் இடம் பெறும் அத்தனை விமர்சனங்களையும் படித்ததில் வநத ஆவேசம்தான் என் எழுத்து.எனக்கு மிகவும் பிடித்த நீங்கள் காயப்படுவீர்கள் என தெரிந்தே கத்திகளை வீசினேன்.நீங்கள் குறிப்பிட்டதுபோல் அவை காப்பிகளே.காப்பி என்று துகிலுரிக்கும்போது அதில் உள்ள நல்ல விசயங்களை குறிப்பிடாமல் அம்மணமாக்கிவிட்டீர்கள்.நீங்கள் குறிப்பிட்ட காப்பி படங்களில் நல்லவைகள் குறைவாகவும் அல்லவை நிறைவாகவும் இருப்பதை நானறிவேன்.இவை அனைத்துமே வணிகப்படங்கள்.இதில் ஒரிஜினலாக எதுவுமே இருக்காது.ஒரே குறிக்கோள்.... போட்ட பணம் வட்டியுடன் குட்டி போட்டு வரவேண்டும்.நான் வீசும் கத்தி போகிற திசையில் உங்களை தெரிந்தே காயப்படுத்தினேன்.மன்னிக்க.வீரத்தின் மறுபக்கம் மன்னிப்பு.

  ReplyDelete
 7. வணிகப்படமாக இருந்தாலுமே, மைக்கேல் மதன காம ராஜன் எப்படி இருந்தது? விக்ரம் எப்படி? சத்யா எப்படி? (சத்யாவில் இது ரீமேக் என்பதை ஒப்புக்கொள்ளும் நேர்மை கமலுக்கு இருந்தது).. ஆனால், இப்போது ம. அம்பு எப்படி இருக்கிறது? வணிகப்படங்களே தேய்ந்து போன கதையாக அல்லவா இது இருக்கிறது? என்னால் ம. அம்பில் உட்காரவே முடியவில்லை :).. அது ஏன்? இதுதான் என் பாயிண்ட்...

  ம. அம்பாவது ஓகே.. எந்திரன் - ஒரு செகண்ட் கூட அமர் அமுடியாத ஒரு குப்பை.. வணிகப்படங்களும் நன்றாக ரசிக்கும்படி எடுக்கலாம் அல்லவா? அது இவர்களால் முடியாமல் போய், நம்மை ஏன் சோதிக்க வேண்டும்?

  அதேபோல், ம. அம்பில் உள்ள நல்ல விஷயங்களையும் நான் எழுதத்தான் செய்திருக்கிறேன்.. அம்மணமாக்கவில்லை. ஜட்டியுடன் தான் விட்டிருக்கிறேன் :-)

  எனிவே, என் கருத்து மாறாது.. :-) இன்னும் இருபது வருடம் கழித்துக்கூட காப்பிகளை எதிர்த்துக்கொண்டு தான் இருப்பேன் :-) .. அது யாராக இருந்தாலும் சரி..

  //வீரத்தின் மறுபக்கம் மன்னிப்பு//

  :-)

  ReplyDelete
 8. நன்றி மோகன்.வலைப்பூக்களில் திட்டி வரும் விமர்சனத்தை விட பாராட்டி வரும் விமர்சனங்கள் மெகா எரிச்சல். ஒரே விசில் சத்தம்தான்.கருந்தேள் நல்ல விமர்சகராகப்பிறக்க கருப்பையில் உருவாகிவிட்டார்.சுகப்பிரசவமாக மருந்து கொடுத்தேன்.நாட்டு மருந்து...எனவே கசக்கும்.

  ReplyDelete
 9. என்னை காப்பாற்ற யாருமேயில்லையாயாயாயாயா

  ReplyDelete
 10. Neenga enna solunga Ivanungala thiruthava mudiyathu.. Free & Illegal torrent downloads should be banned or else google should charge for blogs…

  ReplyDelete
 11. உங்கள் கருத்தில் நான் மாறுபடுகிறேன்.தமிழில் விமர்சனம் எழுதுபவர்களில் நம்பர் ஒன்றாகவும் உலகத்தரமாகவும் கருந்தேள் விமர்சனம் அமையும்.இது கனவல்ல நிஜம்.

  ReplyDelete
 12. In my opinion, Madhan is a very good critic for TC.

  ReplyDelete
 13. In my opinion, Madhan is a very good critic for TC.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.