Jan 24, 2011

The Shop on Main Street -இனத்தை கருவருத்தல்

இப்படத்தை ஏற்க்கெனவே டிவிடியில் பார்த்திருந்தாலும் கோணங்கள் பிலிம் சொசைட்டியில் நேற்று அகன்ற திரையில் பார்த்தபோது புது அனுபவமாக இருந்தது.அரங்கம் வேறு ஹவுஸ்புல்.மிகமிக சந்தோஷமாக இருந்தது.ஆனால் படத்தின் முடிவு??????????
1965ல் இப்படத்தை இயக்கி சிறந்த வெளிநாட்டுப்படத்திற்க்கான ஆஸ்கார் பரிசை அள்ளியிருக்கிறார்கள் Jan Kadar&Elmar Klos

இப்படத்தின் கதை அமைப்பு தமிழக மீனவர்களை சிங்களப்பேய்கள் வதைப்பது போல் வலிக்கும்.வலிக்கவில்லையென்றால் உங்கள் பெயர் கலைஞர்.
இரண்டாம் உலகப்போரில்.... இன்று ஸ்லோவாக்கியாவாக இருக்கும்.... அன்றைய செக்கோஸ்லோவாக்கியாவில் நடந்த இனப்பேரழிவை படம் போட்டு காட்டுகிறது கதை.
நகரமா..கிராமமா..என இனம் பிரிக்க முடியாத அழகிய இடம்.யூதர்களை ஒழித்து அனைத்தும் ஆர்ய மயமாக்கும் படலம்.திட்டம் போட்டு சட்டமாக்கிவிட்டார்கள் யூதர்கள் சொத்தை ஸ்வாகா பண்ண.ஆர்யர்கள் அல்லவா...ஆக்கிரமிப்பதில் டாக்டரேட் வாங்கியவர்களாயிற்றே!எல்லா இனத்திலும் நல்லவர்கள் உண்டே!அப்படி ஒருவன்தான் நம் நாயகன் டோனிபிரட்கோ.ஆர்யனாக இருந்தாலும் மிக மிக நல்லவன்.அவனுக்கு பரிசாக மெயின் ரோட்டில் ஒரு யூதருடைய கடையை வழங்குகிறான் அவனது சகலை[லோக்கல் போலிஸ் உயர் அதிகாரி...சுருக்கமாக நாஜி அடிமை]
உரிமை வழங்கப்பட்ட கடிதத்துடன் வருகிறான் டோனி.... கடைக்கு....கடையின் உரிமையாளர் முதிய விதவை ரோஸலியா.டெய்லரிங்கிற்க்கு தேவையான ஊசி,நூல்,பட்டன் விற்க்கும் கடை.டோனி கடிதத்தை காட்டி கரடியாக கத்துகிறான்.மூதாட்டிக்கு பார்வை வீக்...கேட்க்கும் திறன் அதைவிட வீக்....கடைக்கு வந்த கஸ்டமராக டீரீட் செய்கிறாள் பாட்டி.இந்த காமெடியிலிருந்து காப்பாற்ற வருகிறார் ஒரு ஆரியர்ஆனால் மனிதகுல மாணிக்கம்.பாட்டியின் குடும்ப நண்பர்.பாட்டியிடம் டோனியை கடை வேலைக்கு வந்த உதவியாளனாக அறிமுகம் செய்து வைக்கிறார்.பாட்டிக்கு பரம திருப்தி.பாட்டி இருவருக்கும் டீ கொண்டு வர உள்ளே போகிறாள்.கடையின் நிலமையை காட்டுகிறார் நண்பர்.சரக்கேயில்லை.காலிப்பெருங்காய டப்பா...சகலை ஏமாற்றி விட்டதாக கொதிக்கிறான் டோனி.சமரசம் செய்கிறார் நண்பர்.
பாட்டியிடம் வேலை செய்வது போல் நடி.....
வருமானத்துக்கு யூதர்கள் நல நிதியிலிருந்து வாராவாரம் கணிசமான தொகை தருவதாக வாக்களிக்கிறார்.மனிதாபத்துடன் ஏற்றுக்கொள்கிறான் டோனி.இதற்க்கப்புறம் வருகின்ற காட்சிகளெல்லாம் அன்பேவா காமடிதான்.
யூதர்களை விட யூதர்களுக்கு உதவும் ஆரியர்களுக்கு தண்டனை அதிகம்.நண்பரை கடித்து குதறுகின்றன சிங்கள வெறிநாய்கள்.... ஸாரி....நாஜி நாய்கள்.டோனி இக்காட்சியை பார்த்து பதறுகிறான்.....பயப்படுகிறான்....
யூதப்பாட்டியை காப்பாற்றினானா?
காட்டிக்கொடுத்தானா?
இதுதான் கிளைமாக்ஸ்.
ஆனால் ஒன்று இந்த டோனி கலைஞர் மாதிரி புத்திசாலியில்லை.அண்ணாசமாதியில் உண்ணாவிரதம் இருக்கத்தெரியவில்லை.

10 comments:

 1. நண்பரே நல்ல படமாக இருக்கிறது,அவசியம் பார்த்துவிடுகிறேன்,நன்றி

  ReplyDelete
 2. நன்றி கீதப்பிரியன்.ஒரு விஷயத்தை கூற மறந்துவிட்டேன்.டோனி ஒரு நாய் வளர்ப்பான்.அன்பே மதமாய் அவன் வாழ்வதின் அடையாளம்.மனைவி முதற்க்கொண்டு அனைவரும் பணமே பிரதானமாய் அவனை சுற்றி இயங்குகின்றனர்.அந்த யூத மூதாட்டியிடம்தான் மாசிலா அன்பை பெறுகிறான்.

  ReplyDelete
 3. படம் பார்த்துவிட்டு பகிர்கிறேன்

  ReplyDelete
 4. //இப்படத்தின் கதை அமைப்பு தமிழக மீனவர்களை சிங்களப்பேய்கள் வதைப்பது போல் வலிக்கும்.வலிக்கவில்லையென்றால் உங்கள் பெயர் கலைஞர்//

  மிருகங்களுக்கு அது புரியாது தான்.

  ReplyDelete
 5. வாருங்கள் அருமை நண்பர் இலுமி அவர்களே!
  துள்ளல் நடையில் உங்கள் பதிவைக்காண ஆசை....சீக்கிரம் ப்ளீஸ்...

  ReplyDelete
 6. சீக்கிரம் பாருங்கள் நண்பர் மைதீன்

  ReplyDelete
 7. அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தால் சண்டை நிறுத்தம் ஆகும் என ஏன் சதாம் உசேனுக்கும்,பின் லேடனுக்கும் புரியவில்லை.

  ஓ..ஒ.. அவர்கள் எல்லாம் அண்ணாவின் பல்கலைக்கழகத்தில் படிக்காதவர்கள் என்பது இப்போது புரிகிறது.

  ReplyDelete
 8. அண்ணா,பெரியார் என்று இனி ஜல்லியடிக்க முடியாது.வரும் தேர்தலில் நல்ல தீர்ப்பு மக்கள் எழுதுவார்கள்.

  ReplyDelete
 9. ya sure..judgment will come...!
  kindly visit my blog http://jebamail.blogspot.com

  ReplyDelete
 10. உங்களின் தளம் எனக்கு பிடித்தமானவைகளைக் கொண்டிருக்கிறது..தொடர்ந்து நல்ல சினிமாக்களை அறிமுகப்படுத்துங்கள். நன்றி..

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.