1977 லிருந்து என்னுடைய ஒட்டு உதய சூரியனுக்குத்தான்.
முதன்முறையாக கலைஞரின் மேல் வந்த எனது கோபத்தை இரட்டை இலைக்கு போட்டு எனது கோபத்தை தணித்து கொண்டேன்.
இரட்டை இலைக்கு ஒட்டு போட்ட உரிமையில் கேட்கிறேன்...
தாயே...
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...
பத்து மாநகராட்சியை தங்கள் காலடியில் சமர்ப்பித்த தமிழக மக்களுக்கு பரிசாகத்தாருங்கள்....
பத்தும் பத்தாயிரம் ஆண்டுகள் உங்கள் புகழைச்சொல்லிக்கொண்டே இருக்கும்
எங்கள் வேலு நாச்சியாரே!
உலகின்... டாப் 10 நூலகங்கள் எது? என கூகுளில் கேட்டால் ...
நீங்கள் உருவாக்கிய பத்து நூலகங்களைத்தான் அது காட்ட வேண்டும்.
உங்களால் முடியும்....உங்களால் மட்டும்தான் முடியும்.
நண்பர்களே!
நமது முதல்வர் அம்மாவிற்க்கு வேண்டுகோள் விடுத்து பின்னூட்டமிடுங்கள்.
அதை நான் இந்தப்பதிவிலேயே உடனுக்குடன் இணைத்து விடுகிறேன்.
தயவு செய்து விமர்சித்து பின்னூட்டம் இட வேண்டாம்.
மிக நாகரீகமாக ...நயமாக...பணிவாக ...பண்பாக உங்கள் பின்னூட்டம் அமையட்டும்.
முதல் கருத்தாக... சுந்தர்ஜீ கூறியது....
please let it be a USEFUL LIBRARY lot of hospitals are there outnumbering libraries moreover it was built and meant for library so let it be a USEFUL LIBRARY to all.
please do not convert it into a multi speciality hospital instead facilities can be improved at GH, stanley and even in rural villages which has zero medical facilities. anti-snake venom, anti-rabies and other life saving medicines are required at many of the out of reach hilly rural villages of gullible people please do something which will be helpful for them. chennai is already a MECCA OF MEDICAL MIRACLES so please please no more hospitals but improve their standard, pathetic condition, good maintenance of all drugs and environment and the workers there.
LET IT BE A USEFUL LIBRARY.
ANBUDAN
SUNDAR G ( RASANAI )
********************************************************************************************
சூர்யஜீவா கூறியது....
இந்த போராட்டம் குறித்து எனக்கு மாற்று கருத்து இருந்தாலும், பெருவாரியான மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த போராட்டத்தில் என்னையும் இணைத்துக் கொண்டுள்ளேன்... மேலே இணைப்பு கொடுத்திருக்கிறேன்... இந்த இணைப்பில் அம்மையாருக்கு உங்கள் கோரிக்கையை வைக்க வழி வகுத்து உள்ளார்கள்... போராடுவோம்.. இன்குலாப் ஜிந்தாபாத்
*********************************************************************************************
நிரூபன் கூறியது....
நல்லதோர் வேண்டுகோள், ஒருமித்த மக்கள் பலத்தின் மூலமும், மக்களின் வேண்டுகோள் மூலமும் ஜெயலலிதாவின் மனதில் இக் கோரிக்கையையினை நிறைவேற்றும் எண்ணத்தினைக் கொண்டு வர முடியும் என நினைக்கிறேன்.
***********************************************************************************************
அபிமன்யூ கூறியது
நல்ல ஒரு தொடக்கம் நண்பரே.. இதை முழுமனதோடு வரவேற்கிறேன். நானும் உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன். கண்டிப்பாக நூலகம் மாற்றபடாது என்று நம்புவோம்.
*************************************************************************************************
arivin kuttai kalaithu vida vendam. | ||||
| ||||
அப்பா ஒருவழியா நீதிமன்றம் தடை போட்டுட்டாங்க.. | ||||
I Just remember this "Prevention is better than cure" Hospital is a place to cure the patients. Library is a place where Doctors and healthy people are created. So, Im not saying that a Hospital is not essential but the library is more essential. Future healthy people will be from present learning. let them learn... | ||||
பீர்பால் பெரிய கோட்டை அழிக்காமல் அதன் பக்கத்தில் அதை விட பெரிய கோடை போட்டு பெரிய கோட்டை சின்னத்தாக்கிய மாதிரி அம்மாவும் செய்வார்கள் என்று நம்புவோம்.நூலகமும்,குழந்தைகள் மருத்துவமனையும் ஊர் தோறும் அமையட்டும்!அம்மாவின் புகழ் நிலைக்கட்டும்!! | ||||
தங்கள் கருத்து நிச்சயமாக சிந்திக்க தகுந்தது. நம் முதல் அமைச்சரும் மக்கள் விருப்பத்தை புரிந்து கொள்வார். நூலகம் மூடியவர் என்று ஒரு போதும் சரித்திரத்தில் இடம் பிடிக்க விரும்ப மாட்டார். நானும் பணிவன்பாக கேட்டு கொள்கின்றேன். நூலகம் சென்னையில் மட்டுமல்ல மாவட்டங்கள் தோறும் திறக்கப்பட வேண்டும். அது போன்றே நாட்டின் செல்வங்களான குழந்தைகள் பாதுகாக்கப் பட மருத்துவ ம்னைகளும் சிறந்த வசதியுடன் சுகாதாரத்துடன் கிராமங்கள் தோறும் திறக்க அம்மா ஆட்சியில் வழி திறக்க வேண்டும். நன்றி வணக்கம்! | ||||