Nov 2, 2011

Nobody Knows-2004[Japanese] பசியை பகிர்ந்துண்ணும் குழந்தைகள்


மிக மெல்லிய இதயம் படைத்தவர்கள் இந்தப்படம் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
காரணம்....
 இது ஹாரர் படமா?
இல்லை ....அதை விட பயங்கரமானது.

கோணங்கள் பிலிம் சொசைட்டியில் படம் திரையிடும் போது பட முடிவில் கலந்துரையாடல் நடைபெறும்.
இந்தப்படத்திற்க்கு கலந்துரையாடல் நடைபெறவில்லை.
பேசும் நிலையில் யாரும் இல்லாமல்.... கனத்த இதயத்துடன் கலைந்து சென்றோம்.
ஜப்பானில் 1988ம் வருடம் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் 2004ல் Hirokazu Koreeda எழுதி இயக்கிய துன்பியல் கவிதைதான் Nobody Knows.

12 வயது அகிராவும், அவனது தாயும் புது வீட்டுக்கு குடி வருகிறார்கள்....
சாமான் செட்டெல்லாம் இற்க்கி வைத்து விட்டு பேக்கர்ஸ்&மூவர்ஸ் சென்றவுடன் முதலில் பெரிய சூட்கேசை திறந்தால் 5 வயது யூகி, “அப்பா...என்ன ஒரு புழுக்கம்”என ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்குவது போல் வெளியே வருகிறாள்.

மற்றொரு பெரிய சூட்கேஸிலிருந்து ஷிகுரு என்ற பம்ப்ளிமாஸ் குண்டன், “ஹாய்”என அன்பே வா எம்ஜியார் போல் குதித்து வருகிறான்.
படத்தில் நம்மை குதூகலிக்க வைப்பது இந்த குட்டிப்பிசாசுதான்.
11 வயது க்யாகோ ரயிலில் வந்து....
 செகண்ட் ஷோ பார்த்து விட்டு திருட்டுத்தனமாக ஹாஸ்டலுக்கு வந்து சேருவதைப்போல வந்து சேருகிறாள்.

இவர்களெல்லாம் யார்?
எதற்க்கு இந்த திருட்டுத்தனம்?
என்ற கேள்விகள் விஸ்வரூபமெடுக்கின்றன.
இவர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளே!
ஆனால் தகப்பன் மட்டும் வெவ்வேறு!!!!!!!
இந்த ஜப்பான் குந்தியை ஏமாற்றுவது.... கடலை மிட்டாய் வாங்குவதை விட எளிதானது ஆண்களுக்கு.

பிள்ளைகள் ஒருவரைக்கூட இவள் பள்ளிக்கு அனுப்புவதில்லை.
தாய் :  “பெரிய மேதைகள் பள்ளிக்கே போனதில்லை”
அகிரா : “அதில் ஒரு ஆளைச்சொல்லு?”
 தாய் :  “காமராஜர்”
இவளது சமாளிபிகேசன் அனைத்துமே மதன் ஜோக்ஸ் அல்லது சிபியின் ‘அட்ரா சக்க’ ஜோக்ஸ்.
ஆனால் நாலு சுவற்றுக்குள் ஒரு மிடில் கிளாஸ் சொர்க்கத்தை அமைத்து தருகிறாள்.

தற்ப்போது ஒரு பாய் பிரண்டை பிடித்துள்ளதாகவும்...
 அவன் பெரிய வீட்டில் நம்மை ஒன்றாக வாழ வைப்பான் என நம்பிக்கையுடன் கூறுகிறாள்.
பிள்ளைகளோடு சேர்ந்து நாமும் அலறுகிறோம்....மறுபடியுமா?????

ஒரு நாள் கொஞ்சம் பணத்தை வைத்து விட்டு தாய் மாயமாகிறாள்.
கிறிஸ்துமசுக்குள் வந்து விடுகிறேன் எனக்குறிப்பு எழுதி வைத்து விட்டுப்போனவள் படத்தின் இறுதி வரை வரவேயில்லை... சண்டாளி.
படம் பார்க்கும்போது நீங்கள் அவளை இன்னும் மோசமாக திட்டுவீர்கள்.

அகிரா அந்தக்குழந்தைகளுக்கு தாயாக.... தந்தையாக.... நண்பனாக மாறுகிறான்.


யூகிக்கு பிறந்த நாள் என்பதால் ஸ்பெசலாக அவளை மட்டும் வெளியே அழைத்து செல்கிறான்.
அப்போது தலைக்கு மேலே மிக உயரமான பாலத்தில் ரயில் போல ஒன்று போகிறது.
யூகி: அது என்ன?
அகிரா:அதுதான் மோனோ ரயில்.அது ஏர்போர்ட்டுக்கு போகிறது.
யூகி:நாமும் அதுல போலாமா?
அகிரா:கட்டாயம் ஒரு நாள் உன்னை அழைத்துச்செல்கிறேன்.

ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் மோனோரயில் பறப்பதை காமிராமேன் வெகு அழகாக படம் பிடித்திருப்பார்.
[சென்னை ஏழைகளுக்கும் மோனோ ரயில் வரப்போகிறதாம்]

 காமெடிக்குண்டன் ஷிகுருவின் ஒரே லட்சியம் பால்கனிக்கு போய்...
 உலகத்தை பார்ப்பது...
ஒரு விளையாட்டு சாமானை பால்கனியில் எறிந்து விட்டு...
 அதை எடுப்பது போல் நைசாக பால்கனிக்குள் அடியெடுத்து வைக்கிறான்.
அவன் முகத்தில்தான் எத்தனை மலர்ச்சி...தமிழ் ஈழம் கிடைத்தது போல்!!!!!!!!

கையிலிருக்கும் பணம் காலியாக
வீட்டில் வாட்டர் கட்..
கரண்ட் கட்...
கேஸ் கட்....
கடைசியாக சாப்பாடும் கட்.
குண்டன் மட்டும் பபுல்கம் மெல்வது போல் வாயை அரைக்கிறான்.
துப்புடா... என அகிரா ஆணையிட வெள்ளையாக கொழகொழவென்று துப்புகிறான்.
“என்னடா இது?”
“பேப்பர்”

இந்தக்காட்சி என்னை எனது பால்ய பருவத்திற்க்கு தூக்கியெறிந்து விட்டது.
நான் எனது ஏழாவது வகுப்பு பெரியம்மா வீட்டில் இருந்து படித்தேன்.
அப்போது அவர்கள் வீட்டில் பகிர்ந்துண்ண வறுமையைத்தவிற வேறொன்றும் இல்லை.
காலையிலிருந்தே ஒன்றும் சாப்பிடவில்லை.
பெரியம்மா...அவரது பிள்ளைகள் மூவர்...ஆக ஐவரும் உண்ணா விரதம்.
 மாலையில் பசி பொறுக்க முடியாமல் சமையல் அறையை உருட்டினேன்.
அரிசிப்பானையில் ஐந்தாறு அரிசி கிடைத்தது.
வழித்தெடுத்து வாயில் போட்டு அரைத்தேன்.
பெரியம்மா பார்த்து விட்டார்கள்.
 “என்னடா வாயில்?”
 “அரிசி பெரியம்மா”என வாயை ஆவெனக்காட்டினேன்.
என்னைக்கட்டிப்பிடித்து அழுத பெரியம்மாவின் கண்ணீர் இன்றும் சுடுகிறது.

இனி வறுமை டான்ஸ் ஆடிய ஜப்பான் அப்பார்ட்மெண்ட் போவோம்

ஏற்க்கெனவே பசியால் பாதி உயிர் போயிருக்க....
ஸ்டூலில் இருந்து தவறி விழுந்து மீதி உயிரை துறக்கிறாள் யூகி.

என்ன செய்தான் அகிரா?
மிச்சமிருக்கும் குற்றுயிர்கள் என்னவானார்கள்?
படம் பாருங்கள்....குறிப்பாக தாய்மார்கள்.

[எனக்கு பிடித்த]
சூர்யா பிடித்து...
ரமணா,கஜினி பார்த்து.... முருகதாசையும் பிடித்ததால்....
ஏழாம் அறிவு பார்த்து ஏமாந்தவர்களே....
பிராயச்சித்தமாக இப்படத்தை பாருங்கள்.

இப்படம் பெற்ற விருதுகள்:
Yūya Yagira won the award for Best Actor at the 2004 Cannes Film Festival.[17] He was the first Japanese actor to win this category at theCannes Film Festival.[18] The film had also won the "Best One" award for Japanese film at the 78th Kinema Junpo Ten Best awards. [19]Additionally, at the same awards, You won the best supporting actress and Yūya Yagira won the best new actor award.[19]
At the 47th Hochi Film AwardNobody Knows won the best film award.[4] Director Hirokazu Koreeda also won the "Best Director" award.[4]

தகவல் உபயம்
விக்கிப்பீடீயா.
நன்றி.

17 comments:

 1. சிறப்பான விமர்சனம்..அருமையான எழுத்துக்கள் அண்ணா...விரைவில் பார்க்க வேண்டும்.நன்றி

  ReplyDelete
 2. அருமையாகச் சொல்லியிருக்கீங்க பாஸ்! நிச்சயம் பார்க்கிறேன்!
  இதே பெயரில் இன்னொரு (வேற்றுநாட்டு) படமும் கேள்விப்பட்டதாக ஞாபகம்!

  ReplyDelete
 3. @குமரன்
  இந்தப்படத்தை குடும்பத்தோடு பார்த்து நெகிழலாம்.... வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி...தம்பி

  ReplyDelete
 4. @ஜீ
  //இதே பெயரில் இன்னொரு (வேற்றுநாட்டு) படமும் கேள்விப்பட்டதாக ஞாபகம்!//

  இந்தப்பெயரில் வேறு படங்கள் இல்லை என விக்கிப்பீடீயா கூறுகிறது.
  பாராட்டுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 5. விமர்சனம் படிக்கும் போதே மனம் கனக்கிறது .பார்க்கும் போது எப்படியோ ..?

  ReplyDelete
 6. இந்தப் படத்தை மறக்கவே முடியாது. இதைப் பாக்கசொன்னதே நீங்கதான். ஒண்ணரை வருஷத்துக்கு முன்னால. என்னை ரொம்பப் பாதிச்ச படங்கள்ல இதுவும் ஒண்ணு. தொடருங்கள் உங்கள் சேவையை :-) .

  ReplyDelete
 7. @கோவை நேரம்

  //விமர்சனம் படிக்கும் போதே மனம் கனக்கிறது .பார்க்கும் போது எப்படியோ ..?//


  நண்பரே!படம் பாருங்கள்...சுகமான சுமையாக இருக்கும்.

  ReplyDelete
 8. @கருந்தேள் கண்ணாயிரம்

  நண்பரே!நம் உயிரை உருக்குலைக்கும் படங்களில் இப்படம் தனித்துவமாக இருக்கும்.
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 9. Dear WCF
  this film is still in my DUE list waiting for an apt occassion to see. i have heard its credits but yet to see the film. nice review trying to see this " DONT MISS MOVING MOVIE "
  hope JEE is mentioning the korean film of the same plot " TREELESS MOUNTAIN " ( IE., NAME DIFFERS BUT ALMOST THE SAME PLOT ) OR may be " NOT ONE LESS " by Zhang yimou i am not sure.
  anyhow thanks for the review and the reminder for me
  anbudan
  sundar g ( rasanai )

  ReplyDelete
 10. @www.rasanai.blogspot.com
  சுந்தர்ஜீ...நாட் ஒண் லெஸ் நான் பார்த்து பதிவும் இட்டுள்ளேன்.
  அந்தப்படம் நோபடி நோஸ் கதைக்களம் இல்லை.
  அது வேறு தளம்.
  ட்ரீ லெஸ் மவுண்டன் பார்க்கவில்லை.
  கேள்விப்படவும் இல்லை.
  வாய்ப்பு கிடைக்கும் போது பார்த்து விடுகிறேன்.
  உடனே நோபடி நோஸ் பார்த்து விடுங்கள்.
  உங்களால் மறக்க முடியாத படங்கள் லிஸ்டில் இப்படம் கட்டாயம் இணைந்து விடும்.

  ReplyDelete
 11. ஒருதடவ இந்த படம் கெடச்சும், ஏதோவொரு மொக்க படம்ன்னு நெனச்சு விட்டதற்காக இப்ப ரொம்ப ரொம்ப வருந்துகிறேன்.........

  இந்த மாதிரி எதுனா படத்த சொல்வீங்க...நேர்ல பாக்கலாம்ன்னா, ஸ்டாலுக்கு வந்து கேட்ட போதெல்லாம்.....சார்...வெயில் தாங்க முடியாம ஊருக்கே போயிட்டாருன்னே சொன்னாங்க போங்க...
  வீட்டுல ஏசி யா ???

  ReplyDelete
 12. @கொழந்த

  //இந்த மாதிரி எதுனா படத்த சொல்வீங்க...நேர்ல பாக்கலாம்ன்னா, ஸ்டாலுக்கு வந்து கேட்ட போதெல்லாம்.....சார்...வெயில் தாங்க முடியாம ஊருக்கே போயிட்டாருன்னே சொன்னாங்க போங்க...
  வீட்டுல ஏசி யா ???//
  ஸாரி கொழந்த...பல காரணங்களால் நான் வேலுர் புத்தக கண்காட்சியை தவிற்த்தேன்.
  முக்கிய காரணம் வெயில்தான்... ஒத்துக்கொள்கிறேன்.
  கோவை ஊரே ஏசி செய்யப்பட்டுள்ளதால்... தனியாக வீட்டில் எதற்க்கு ஏசி?.

  ReplyDelete
 13. @கொழந்த
  //ஒருதடவ இந்த படம் கெடச்சும், ஏதோவொரு மொக்க படம்ன்னு நெனச்சு விட்டதற்காக இப்ப ரொம்ப ரொம்ப வருந்துகிறேன்.........//
  கொரீதா...அகிராவும் ஒசுவும் சேர்ந்த கலவை.இப்படம் வெளியான பிறகு இது போன்ற பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக ஜப்பானில் புதிய சட்டம் இயற்றப்பட்டதாக கோணங்கள் திரையிடலில் பேசினார்கள்.

  ஏழாம் அறிவு பார்த்து விட்டீர்களா?
  நீங்கள் தமிழனாக தொடர வேண்டுமென்றால் பார்த்து விடுங்கள்.
  இல்லையென்றால் இனப்பிரஷ்டம் செய்து நாடு கடத்துவோம்.

  ReplyDelete
 14. Dear WCF
  yeah definitely i will try to watch and enjoy "nobody knows". Thanks for the encouragement to not to miss the movie

  Just To identify the Title by JEE i had mentioned " Not one less" because the title ONLY similar ( nobody knows ---- not one less ) i am not referring the plot here but i referred the plot in treeless mountain but not the title there. thelivaga kuzhappiullena ??

  nobody knows title match : not one less
  more or less plot match : treeless mountain
  may be the treatment in screenplay differ.
  thavaru iruppin mannikkavum.

  if possible try to find and watch "THE OTHER BANK" georgia film watch the superb acting by the squint eyed boy nice film not to be missed.
  anbudan
  sundar g ( rasanai ) library pathivukku comment pottachu anaal antha neram net disconnect aagiyathu enavey en pinoottam varavittal inform seyyavum thirumba commentugiraen. nandri for your efforts to restore the library.

  ReplyDelete
 15. @@இந்தப்பெயரில் வேறு படங்கள் இல்லை என விக்கிப்பீடீயா கூறுகிறது.
  பாராட்டுக்கு நன்றி நண்பரே!

  there is another (Korean) movie with the same name
  http://en.wikipedia.org/wiki/Nobody_Knows_(1970_film)

  ReplyDelete
 16. namma ooru suvar illatha sithiram mathiri irukuma

  ReplyDelete
 17. When reading this, I remember the movie Hearty Paw...

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.