May 7, 2013

இளையராஜா


‘கலைகளின் கூட்டுப்பரிமாணத்தின் குழந்தை’ என்று திரைப்படக்கலை வர்ணிக்கப்படுகிறது.

ஒரு திரைப்படத்தை பார்வையாளனாக, மாணவனாக தீவிர வாசிப்புக்கு உட்படுத்தும்போது,
மற்ற கலைகளின் தன்மைகளை கடந்து உன்னதமான வெளிப்பாடாக இருப்பது,
திரைப்படத்தின் உயிராக உள் இழையும் இசையே. 

இசையற்ற திரைப்படத்தை நம்மால் கற்பனை செய்து பார்க்க இயலாது.
ஏனெனில் மவுனப்படங்களின் காலத்திலேயே பின்னணி இசைதான் நடிகனின் முகபாவத்தை கடந்த உணர்வினை நமக்குச் சொன்னது.
சாப்ளின் படங்களில் இழையும் வயலின் மூலம் நகைச்சுவையின் உள்ளார்ந்த சோகத்தை நம்மால் உணர முடிந்தது.

வசனமேயில்லாமல் வெறும் முகங்களின் அண்மைக்காட்சிகளைக்கொண்டே
நிகழும் ஒரு நிமிடக்காட்சியை ஒரு இசை அமைப்பாளர் தனது மேதமை மூலம் அழகான உயிர்ப்புள்ள காட்சியாக மாற்றி விடமுடியும்.
தட்டையான இரண்டு பரிமாணம் கொண்ட திரைப்பிம்பத்துக்கு,
உணர்வு ரீதியான முப்பரிமாணம் தருவது இசையே.
எனவே இசையை  ‘மூன்றாவது பரிமாணம்’ என்று சொல்லலாம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இசையை உருவாக்குகிற ஒரு இசைக்கலைஞன் திரைப்படம் விமர்சிக்கப்படும்போது எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறான்.
 ‘பாடல்கள் இனிமை, பின்னணி இசை பரவாயில்லை’ என்பதோடு ஒரு இசைக்கலைஞனின் அங்கீகாரம் முடிந்து விடுகிறது.
இது மூன்றாம்தரமான, படத்தின் இரண்டரை மணி நேரமும் தனது சப்தங்களால் கிளுகிளுப்பூட்டுகிற ஒரு இசையமைப்பாளருக்கு பொருந்தலாம்.
தனது ஆழ்ந்த இசைப்புலமை மூலம் திரைப்பட மொழியை உள் வாங்கிக்கொண்டு திரையில் பொம்மைகளாக அசைகிற பிம்பங்களை
உயிர்ப்புள்ள மனிதர்களாக மாற்றும் இசைக்கலைஞனுக்கு இது எப்படி பொருந்தும் ?
போதுமானதாகும் ?

அவ்வாறான தகுதியுடைய தற்கால தமிழ் சினிமாவின் இசைக்கலைஞர் என
இளையராஜாவைச்சொல்லலாம்.


நண்பர்களே...
நீங்கள் படித்த கட்டுரை ஒளிப்பதிவாளர் செழியன் கைவண்ணத்தில் உருவானது.
இளையராஜாவின் இசையில், அவரது அறியப்படாத முகத்தை ஆய்வு செய்து
செழியன் எழுதியதை மினி தொடராக தருகிறேன்.

நூல்: பேசும்படம் [கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்]
எழுதியவர் : செழியன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.   

May 6, 2013

திரைக்கதை ரெடி!


நண்பர்களே...நீண்ட இடைவெளிக்குப்பிறகு பதிவுலகம் வந்திருக்கிறேன்.
காரணம் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

டிசம்பர் 31 அன்று டிவிடி கடையை சாத்தியதில், எதிர்காலத்தை பற்றிய திட்டமிடல் இருந்தது.
வெற்றிகரமாக ஒரு திரைக்கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டேன்.
ஜனவரி1 துவங்கிய பணியை,
ஏப்ரல் 14க்குள் வெற்றிகரமாக முடித்து விட்டேன்.

என்னுடைய இந்த திரைக்கதைக்கு,  நிச்சயமாக ‘ஸ்கிரிப்ட் டாக்டர்’ தேவைப்படாது.
எதிர் காலத்தில், மற்றொரு திரைக்கதைக்கு... ஒரு வேளை தேவைப்பட்டால் திரு.கமல்ஹாசனிடம்தான் செல்வேன்.
இந்தியாவிலேயே அவருக்கு இணையான ‘ஸ்கிரிப்ட் டாக்டர்’ கிடையாது.
 ‘ஸ்கிரிப்ட் டாக்டர்’  என்ற தகுதி...நிச்சயம் ஒரு  ‘மொழி பெயர்ப்பாளருக்கு’ இருக்காது.

புதுமுகங்கள்தான் இத்திரைக்கதைக்கு தேவை.
இருந்தாலும் திரைக்கதை,
இப்படத்திற்கான பட்ஜட்... இரண்டு கோடி என தீர்மானித்திருக்கிறது.
ஒரு உத்தம தயாரிப்பாளருக்காக இத்திரைக்கதை காத்திருக்கிறது.
நிச்சயம் இத்திரைக்கதை வசூலை வாரி வழங்கும்.
காரணம் முழுக்க வணிக ரீதியில் இத்திரைக்கதையை வடிவமைத்து உள்ளேன்.
உருவாக்கத்தில் உலகசினிமாவின் தரம் நிச்சயம் இருக்கும்.


நடிகர்கள் பிருத்திவிராஜ், பிரசன்னா போல் அழகும் திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற கதாநாயகன் தேவை.
தகுதியானவர்கள் தொடர்பு கொள்க.


ஒரு காதல் பாடலை மாண்டேஜில் உருவாக்க எண்ணியுள்ளேன்.
நண்பர்கள் ஐடியா தந்து உதவலாம்.
பாலுமகேந்திரா, மகேந்திரன் பாணியில் புதிய களத்தில் இருக்கவேண்டும்.
‘கிளிஷேவை’ முற்றிலும் தவிற்க எண்ணியுள்ளேன்.
என்னுடைய காதல் அனுபவங்கள் இன்று கதைக்குதவாது.
மை டியர் யூத்ஸ்...உதவுங்கள்.... ப்ளீஸ்.
[ பின்னணியாக,
இளையராஜாவின் ‘காதல் ஓவியம்...பாடும் காவியம்’
ஏ.ஆர். ரஹ்மானின் ‘என்னவளே...அடி என்னவளே...போன்ற பாடலை கற்பனை செய்து கொள்க.]

ஐடியா உபயதாரர்கள் தொடர்பு கொள்ள...
sppbhaskaran@yahoo.co.in

இரண்டு கோடியுடன் எனது தயாரிப்பாளர் எங்கோ இருக்கிறார்.
நான் அவரை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.
முயற்சி திருவினையாகும்.

விரைவில்... நல்ல செய்தியோடு வர வாழ்த்துங்கள்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.