Sep 19, 2011

எங்கேயும் எப்போதும்-பதற வைக்கும் படம்


2011ல் தமிழ் சினிமா மிகவும் மோசமான பாதையில்
 பயணித்துக்கொண்டிருந்த போது
ஒரு விபத்தாக வந்திருக்கிறது எங்கேயும் எப்போதும்.
அதுவும் ஒரு விபத்தை களமாக அமைத்து.
இந்த முயற்ச்சி பாராட்டப்படவேண்டிய முயற்ச்சி.
மனிதாபிமானத்தை வலுவாக வேறூன்றச்செய்யும் தரமான தமிழ் படம்
 இது என்பதில் தமிழனான எனக்கு சற்று கர்வம் கலந்த பெருமை.

பைனல் டெஸ்டினேசன் பார்ட் 1,2,3,4,5 என ஹாலிவுட் மசாலாப்படம் மனிதாபிமானத்தை கொன்று காசு பார்க்கும் அவலத்தை கண்டு பொறுமிக்கொண்டிருந்தேன்.
சமீபத்திய வரவான பைனல் டெஸ்டினேசன் பார்ட்5 த்ரீடியில் பார்க்கும் கொடுமைக்கு ஆளானேன்.
என் பக்கத்தில் ஒருவன் தனது காதலியுடன் வந்திருந்தான்.
அந்தப்படத்தில் மனிதர்களை விதவிதமாக கொத்துக்கறி போடுவதை சத்தம் போட்டு சிரித்து ரசித்து மகிழ்ந்தான்.
நிச்சயம் அந்தப்பயல் 100% சைக்கோ.
அந்தப்பெண்ணுக்கு அந்தக்காதல் தோற்று அந்த சைக்கோவிடம் இருந்து விடுதலை கிடைக்க நாமெல்லாம் கூட்டு பிரார்த்தனை செய்வோம்.

எ.எ தயாரித்த முருகதாசுக்கு முதல் வணக்கம்.
குரு தந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திய சிஷ்யன் சரவணனுக்கும் முதல்மரியாதை.
இரண்டு பஸ்கள் நேரடியாக மோதி விபத்துக்குள்ளாகிறது.
அதில் பயணிக்கும் பயணிகளின் கதியை...அவஸ்தையை மிக விஸ்தாரமாக காட்டி கலவரப்படுத்துகிறது படம்.
பாடல் படமாக்கப்பட்ட விதத்தில் ‘மகேந்திர’ஜாலம் தெரிகிறது.

படத்தில் வரும் காதல் காட்சிகள் புத்தம்புதுசாய் இருக்கிறது.
அஞ்சலி என்ற அதிசயப்பிசாசு என்னாமாய் ஜாலம் காட்டுகிறது!!!!!!!!!!!!!.

ஜெய் இப்படத்தில் அற்ப்புதமாக நடித்து முந்தைய பட பாவங்களுக்கு பரிகாரம் தேடி உள்ளார்.
ஒட்டு மொத்த டீமே அசத்தி உள்ளார்கள்.
இப்படத்திற்க்கு நியாயமான வெற்றியை தமிழ் ரசிகர்கள் வழங்க வேண்டும்.
இதுதான் என்னுடைய இப்போதைய உடனடிக்கவலை.
இல்லையென்றால் மங்காத்தா பார்ட் 2,முனிபார்ட் 3 போன்ற மசாலாக்கள்தான் கதியென்றாகிவிடும்.
இப்படத்தின் மிகப்பெரிய குறை ....
இரண்டாம் முறை பார்க்க முடியாது.
அந்த விபத்துக்காட்சிகளை இரண்டாம் முறை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.ஆனால் இரண்டாம் முறை பார்க்க வேண்டும் என்ற தவிப்பு அலையாய் அடிக்கிறது. 

31 comments:

 1. அஞ்சலி என்ற அதிசயப்பிசாசு என்னாமாய் ஜாலம் காட்டுகிறது!! இப்படத்திற்க்கு நியாயமான வெற்றியை தமிழ் ரசிகர்கள் வழங்க வேண்டும்.
  இதுதான் என்னுடைய இப்போதைய உடனடிக்கவலை.
  இல்லையென்றால் மங்காத்தா பார்ட் 2,முனிபார்ட் 3 போன்ற மசாலாக்கள்தான் கதியென்றாகிவிடும்.
  -அருமையான வரிகள். உணர்ந்ததை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். உடனே படத்தைப் பார்த்து விடுகிறேன். நன்றி.

  ReplyDelete
 2. வணக்கம் அண்ணாச்சி,
  நலமா?

  மனிதாபிமானத்தை வலுவாக்கும் கருத்துக்கள் நிரம்பிய படம் என்று அறிமுகத்திலே மனங்களில் ஒரு ஈர்ப்பினைத் தந்திருக்கிறீங்க.

  சுருக்கமான விமர்சனம் அருமை.

  நான் இந்தப் படத்தினை வெகு விரைவில் பார்க்க முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
 3. @கணேஷ்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

  ReplyDelete
 4. @நிரூபன்
  மதுரை ,வேலூர்,திருச்சி என தொடர்ந்து புத்தகக்கண்காட்சியில் பங்கு பெறுவதால் பதிவுலகம் பக்கமே வரமுடியவில்லை நண்பரே!

  இந்தப்படத்தை விரைவில் பார்த்து பதிவெழுதி ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 5. //பைனல் டெஸ்டினேசன் பார்ட் 1,2,3,4,5 என ஹாலிவுட் மசாலாப்படம் மனிதாபிமானத்தை கொன்று காசு பார்க்கும் அவலத்தை கண்டு பொறுமிக்கொண்டிருந்தேன்.//

  உண்மை தான் சார்..நானும் அந்தப் படத்தின் வெற்றி பார்த்து நொந்துபோனேன்.

  ReplyDelete
 6. இன்றுதான் இப்படம் பார்த்தேன். நீங்கள் சொல்லுவதுப் போல..அஞ்சலி நம்மை வசியம் செய்கிறார். ஜெய் சிறப்பாக நடித்து முந்தைய பாவங்களைக் கழுவிக் கொள்கிறார். இருவருக்கும் வாழ்த்துக்கள். படம் பற்றிய உங்களுடைய கருத்துதான் என்னுடையதும்.

  ReplyDelete
 7. நான் இன்னும் படம் பார்க்கவில்லை.
  பார்த்துட்டு கருத்து சொல்றேனுங்க..

  ReplyDelete
 8. நீங்க மட்டுமில்ல. இன்னும் பலரும் சொல்றதைப் பார்த்தா, நல்ல படம்னு தெரியுது. ஆனாலும் இதைப் பார்க்க ஒரு தயக்கம். இதுல My sassy girl படத்தோட பாதிப்பு இருக்காமே. கொஞ்ச நாள் போவட்டும். அப்புறம் முடிவு செய்யுறேன்.

  ReplyDelete
 9. @செங்கோவி
  வணக்கம் நண்பரே!
  ஏற்க்கெனவே நாமெல்லாம் மனிதத்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.
  நாம் இரக்கப்பட மெகா விபத்து தேவைப்படுகிறது.

  கொடூர விபத்தை ரசிக்க கற்று கொடுக்கிறது பைனல் டெஸ்டினேசன் சீரிஸ்.

  ReplyDelete
 10. excellent film i watched two times ur blog super

  ReplyDelete
 11. @விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்க்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  விஜய்...உங்கள் பார்வையில் இப்படம் பற்றி பதிவு எழுதுங்கள்.ப்ளீஸ்...

  ReplyDelete
 12. @இந்திரா
  //நான் இன்னும் படம் பார்க்கவில்லை.
  பார்த்துட்டு கருத்து சொல்றேனுங்க..//
  சீக்கிரம் பாருங்க...நல்ல படத்தை தியேட்டர்காரனுங்க சீக்கிரம் தூக்கிருவானுங்க...

  ReplyDelete
 13. @கருந்தேள்

  //நீங்க மட்டுமில்ல. இன்னும் பலரும் சொல்றதைப் பார்த்தா, நல்ல படம்னு தெரியுது. ஆனாலும் இதைப் பார்க்க ஒரு தயக்கம். இதுல My sassy girl படத்தோட பாதிப்பு இருக்காமே. கொஞ்ச நாள் போவட்டும். அப்புறம் முடிவு செய்யுறேன்.//

  மை சேசி கேர்ள் நான் பார்க்கவில்லை.
  கதை கேட்டிருக்கிறேன்.
  இதற்க்கும் அதற்க்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்காது.
  இது 100% நம் கதை.
  என்னை மிகவும் கவர்ந்த அம்சமே இப்படத்தின் ஒரிஜினாலிடிதான்.
  மிஸ் பண்ணாம மிசஸ்ஸோட போய் பாருங்க....

  ReplyDelete
 14. @ரமேஷ்

  //excellent film i watched two times ur blog super//
  என்னது!!!!!!!!!!
  படத்தை இரண்டு தடவை பார்த்தீங்களா!!!!!!!!!
  கொடுத்து வச்ச ஆளு!
  எனக்கும் மறுபடி பாக்க ஆசைதான்.
  ஆனா விபத்துக்காட்சியை நெனச்சாலே குலை நடுங்குது...சாமி...

  ReplyDelete
 15. நான் ரிலீஸ் அன்னிக்கே பார்த்தேன், ரெண்டு மூணு நாளா அந்த படத்தோட பாதிப்பு இருந்துச்சு..

  ReplyDelete
 16. @ராஜன்
  மனிதம் தங்கி இருக்கும் மனத்தில் இப்படம் ஆழமாக சென்று தங்கி விடும்.
  இனி எந்த விபத்து பற்றிய செய்தி படித்தாலும் இப்படம் மனதில் மறு ஒளிபரப்பாகும்.

  வருகைக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 17. நானு வந்துட்டேன்

  ReplyDelete
 18. #படத்தில் வரும் காதல் காட்சிகள் புத்தம்புதுசாய் இருக்கிறது.
  அஞ்சலி என்ற அதிசயப்பிசாசு என்னாமாய் ஜாலம் காட்டுகிறது!!!!!!!!!!!!!.#

  அளவான , அருமையான விமர்சனம் ...

  #பைனல் டெஸ்டினேசன் பார்ட் 1,2,3,4,5 என ஹாலிவுட் மசாலாப்படம் மனிதாபிமானத்தை கொன்று காசு பார்க்கும் அவலத்தை கண்டு பொறுமிக்கொண்டிருந்தேன்#

  சினிமா பலதரப்பட்ட ரசனைகளின் கலவை...உங்களுக்கு இது போன்ற க்ரைம்
  த்ரில்லர் படங்கள் மீது அப்படியென்ன கோபமோ ?

  ReplyDelete
 19. @அனந்து
  #பைனல் டெஸ்டினேசன் பார்ட் 1,2,3,4,5 என ஹாலிவுட் மசாலாப்படம் மனிதாபிமானத்தை கொன்று காசு பார்க்கும் அவலத்தை கண்டு பொறுமிக்கொண்டிருந்தேன்#

  //சினிமா பலதரப்பட்ட ரசனைகளின் கலவை...உங்களுக்கு இது போன்ற க்ரைம்
  த்ரில்லர் படங்கள் மீது அப்படியென்ன கோபமோ ?//

  திரில்லர் படங்களின் பிதாமகன் ஹிட்ச்காக்
  படங்களை பார்த்து வளர்ந்தவன்.
  திரில்லர் என்ற பெயரில் வரும் இது போன்ற குப்பைகள் அறவே பிடிக்காது.

  ReplyDelete
 20. @இளையசிங்கம்
  @அனந்து
  அழைப்புக்கு மதிப்பளித்து வருகை புரிந்து பாராட்டியமைக்கு நன்றி.

  ReplyDelete
 21. Thangal ezhuththu nadai migavum rasikka vaikkirathu nanbare.. vaazhthukkal...

  ReplyDelete
 22. மாப்பிள அருமையான விமர்சனம்.. இதுவரை நீங்கள் குறிப்பிட்ட ஆங்கில படங்கள் சிலவற்றைத்தான் பார்க்க முடிந்தது.. ஆனா இந்த படம் கட்டாயம் பார்பேன் உங்கள் விமர்சனத்தால்.!!!!!!)).

  ReplyDelete
 23. @முத்துசிவா
  நண்பரே!தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் என் மனம் மகிழ்ந்த நன்றி.

  ReplyDelete
 24. @காட்டான்
  நண்பா...தமிழ் மக்களை போதை மயக்கத்தில் வீழ்த்தும் திரைப்படங்களே வந்து கொண்டிருக்கையில் சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்தும் மிகப்பெரிய பங்கை ஆற்றியிருக்கிறது இப்படம்.
  தவறாமல் பார்த்து விடு மக்கா...

  ReplyDelete
 25. HI FRIEND,

  THIS IS THE FIRST TIME THAT I AM VISTING YOUR PAGE. YOUR WRITING STYLE IS SO GOOD. KEEP IT UP.

  AND, THANK U FOR VISITED MY PAGE AND GIVEN YOUR SWEET COMMENTS.

  I AM ALSO VERY INTRESTED IN READING BOOKS ESPECIALLY SUJATHA SIR.

  PLS LET ME KNOW YOUR MOBILE NUMBER.

  9842807060 IS MINE.

  ReplyDelete
 26. @மனோ
  நண்பா!
  தங்கள் முதல் வரவுக்கும்...பாராட்டுக்கும் நன்றி.
  சுஜாதா ரசிகரா நீங்கள்!!!.
  அதான்...உங்கள் எழுத்தில் அவர் இருக்கிறார்.
  என் மொபைல் நம்பர் 9003917667

  ReplyDelete
 27. விமர்சனம் நல்லாயிருந்தது...
  கட்டாயம் பார்பேன்... ரெவெரி

  ReplyDelete
 28. Nice Writing Style Boss.. Keep Posting...!!!

  ReplyDelete
 29. நல்ல விமர்சனத்திற்கு நன்றி .இந்த மாதிரியான படங்கள் குறிஞ்சி பூ பூப்பது போல..நான் மதுரையில் பார்த்தேன்.அந்த விபத்து காட்சியில் என்னையும் அறியாமல் கண் கலங்கினேன்..

  ReplyDelete
 30. மங்காத்தா பார்ட் 2,முனிபார்ட் 3...
  Adding to the list மன்மதன் அன்பு பார்ட் 2

  ReplyDelete
 31. Quotes from latest movies and more
  Movie Jit - Best Movie Dialogue Forever
  www.moviejit.com

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.