Dec 5, 2013

பெற்றால்தான் பிள்ளையா?

நண்பர்களே...
கோவோ திரைப்பட திருவிழாவில்   ‘போட்டி பிரிவில் கலந்து கொண்டு’
ஒட்டு மொத்த ரசிகர்களின் ஆதரவையும்...கரகோஷத்தையும் அள்ளிய படம் ‘லைக் பாதர், லைக் சன்’.


இந்தப்படத்திற்கு கோவா திரைப்பட திருவிழாவில் ஒரு விருது கூட வழங்க மாட்டார்கள் என மிகச்சரியாக கணித்தேன்.
ஊரறிந்த பார்ப்பானுக்கு எதுக்கு பூணுல்?
கொரீதாவிற்கு எதற்கு கீரீடம்?

Like Father, Like Son | 2013 | Japan | Directed by : Hirozu Koreeda.  


இயக்குனர் கொரிதாவின் மற்றொரு  ‘முன்னாள் மாஸ்டர்பீஸ்’,
‘நோபடி நோஸ்’ படத்துக்கு ஏற்கெனவே நான் பதிவெழுதி உள்ளேன்.
 ‘இந்நாள் மாஸ்டர்பீஸ்’ அந்தப்படத்தை விஞ்சி நிற்கிறது.
தன் படத்தை தானே தாண்டும் ’தாண்டவராயன்’ கொரீதா!.

கதை அப்படியே நம்ம ஊர் ‘பார் மகளே பார்’ கதைதான்.
கொரீதா சொல்லிய விதத்தில்  ‘பீம்சிங் படம்’ உலக சினிமாவாகி விட்டது.
ஒரு பணக்கார தம்பதிக்கும்...நடுத்தர வர்க்கத்து தம்பதிக்கும் பிறந்த குழந்தைகள் மருத்துமனையில்  ‘மாற்றப்பட்டு’ மாறி வளர்கின்றன.
ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வரும் போது,
வரும் பிரச்சினைகளை நயமாக...நாசூக்காக...நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கொரீதா.

இந்தக்கதையை காட்சிக்கு காட்சி  ‘நெஞ்சை நக்க’ வைத்து நாறடித்து விடுவார்கள் ‘நம்ம ஊரு தங்க மீன்கள்’.
குழந்தைகள் உலகத்தையும்...பெரியவர்கள் உலகத்தையும் எத்தனை எதார்த்தமாக சித்தரிக்கிறார் கொரிதா.
குழந்தைகளை மருத்துவமனையில் மாற்றிய நர்சை கூட வில்லியாக்காமல் ‘ஹேராம் கமல் போல்’...
‘ஓநாயின் பார்வையில்’ பார்த்து அதற்குரிய நியாயத்தையும் கற்பிக்கிறார் இயக்குனர் கொரீதா.


பணக்காரன் ‘கடமை...கண்ணியம்...கட்டுப்பாடு’ என கடைந்து...குடைந்து... குழந்தையை    ‘சாப்ட்வேராக்குகிறான்’.
‘சாப்ட்வேர்கள்’ சிந்திக்காது.

[ சாப்ட்வேர்கள் = திராவிடக்கட்சி தொண்டர்கள் ]

பணக்காரன், வாழ்க்கையை பளபளப்பாக்குவது பணமே என எண்ணி ‘எந்திரனாகிறான்’.
நடுத்தரன், வாழ்க்கையை வளமாக்குவது  ‘அபரிமிதமான அன்பே’ என வாழ்ந்து ‘மனிதனாகிறான்’.


மசாலா படங்களை  ‘மல்லு கட்டி’ ரசிக்கும் ரசிகர்களை கூட,
இந்தப்படம் வசீகரிக்கும் வல்லமை வாய்ந்தது.

உதாரணமாக இரு குடும்பங்களும் ஒரு நதிக்கரையில் கூடுவார்கள். 
குறியீடுகளுக்கு கோனார் நோட்ஸ் போடும் ‘தற்குறிகளை’ தலை குனிய வைக்க இந்த புகைப்படங்களே போதும்.

குழந்தை குட்டியோடு பார்த்து குதுகலிக்க அருமையான படம் மக்களே...
மிஸ் பண்ணிடாதீங்க!
பணம் இருப்பவர்கள் ஜப்பானுக்கு பறந்து போயாவது பார்த்து விடுங்கள்.
பணம் முக்கியமில்லை...இந்தப்படம் அவ்வளவு முக்கியம்.

பெற்ற விருதுகள்...[ தகவல் உபயம் IMDB ]

Asia Pacific Screen Awards 2013

Nominated
Asia Pacific Screen Award
Best Film
Kaoru Matsuzaki (producer)
Hijiri Taguchi (producer) 
Achievement in Directing
Hirokazu Koreeda 

Cannes Film Festival 2013

Won
Jury Prize
Hirokazu Koreeda 
Won
Prize of the Ecumenical Jury - Special Mention
Hirokazu Koreeda
Tied with Miele (2013).
Nominated
Palme d'Or
Hirokazu Koreeda 

London Film Festival 2013

Won
Best Film
Hirokazu Koreeda 

Oslo Films from the South Festival 2013

Nominated
Films from the South Award
Best Feature
Hirokazu Koreeda (director) 

San Sebastián International Film Festival 2013

Won
Waki.TV Audience Award
Hirokazu Koreeda 

கேரள திரைப்பட திருவிழாவுக்கு செல்கிறேன்.
பார்க்கும் படமெல்லாம் ‘லைக் பாதர். லைக் சன்’ போல் அமைய வாழ்த்துங்கள்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.   

6 comments:

 1. ஒரு படத்திற்கு விமர்சனம் செய்யும் போது எத்தனை தமிழ்ப் படங்கள் ஞாபகம் வருகிறது...!

  வாங்க ஜப்பானுக்கு போகலாம்...!

  ReplyDelete
  Replies
  1. ‘தமிழ் படங்களில்’ பால் குடித்து வளர்ந்த பிள்ளையல்லவா நான்!.

   Delete
 2. பார்க்கணும் போல இருக்கு!!

  ReplyDelete
 3. "தமிழ் படங்களில்’ பால் குடித்து வளர்ந்த பிள்ளையல்லவா நான்"
  நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். பாலா, சுண்ணாம்பா, கள்ளா?"

  ReplyDelete
  Replies
  1. டேய் பச்சோந்தி...நீ வெள்ளை யானையில் ஏறி வந்தவன் என்று எனக்குத்தெரியும்.
   போடா...போடா...போய் உன் தலைவனை கோவை ‘விஷ புரம் வட்ட விழாவுக்கு’ வரச்சொல்லு!! மாலை மரியாதையோடு வரவேற்க ‘தமிழர் படை’ காத்து இருக்கு.

   Delete

Note: Only a member of this blog may post a comment.