Dec 24, 2013

லேவ் டியாஸ் - 11 மணி நேரம் ஓடும் ‘திரைப்பட காவியத்தின்’ நாயகன் !


நண்பர்களே...
கோவா திரைப்பட விழாவில்,
நான் பார்த்து வியந்த இயக்குனர் ‘லேவ் டியாஸ்’ [ Lav diaz ] .
 ‘கோவா திரைப்பட திருவிழா அட்டவணை’,
 ‘பிலிப்பைன்சை’ சேர்ந்த படைப்பாளி ‘லேவ் டியாஸ்’ இயக்கிய
‘நோர்டே த எண்ட் ஆப் ஹிஸ்டரி’ என்ற படம்...
‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ [ Master Strokes ] என்ற பிரிவில் திரையிடப்படுவதாக அறிவித்தது.

Norte, The End of History [ Norte, Hangganan Ng Kasaysayan ] | Phillippines | 2013 | 250 min | Directed by : Lav Diaz. 


படத்தின் நேரம்  ‘250 நிமிடம்’ என்றதும் சற்று பயந்தேன்.
 ‘இந்த நேரத்திற்குள் இரணடு படங்கள் பார்த்து விடலாம்’ என  ‘கனியிருப்ப காய்களை கவர’ சபலப்பட்டேன்.
அருகில் இருந்த என் நண்பன் எச்சரித்தான்.
“ அய்யய்யோ...இவர் மாஸ்டர்...
இவரோட எல்லா படமும் 7 மணி நேரத்துக்கு மேல ஓடும்.
ஒரு படத்துக்காக, ஒரு  குடுமபத்தோட வாழ்க்கையை 12 வருடம் ‘லைவா’  ஷூட் பண்ணி,
எடிட் பண்ணி... 11 மணி நேரம் ஓடக்கூடிய  காவியமா கொடுத்தவர்.
நான் இவரோட படம் எல்லாமே பார்த்து இருக்கேன்.
எல்லாமே ‘பிளாக்&ஒயிட்தான்’...
இந்தப்படம்  ‘கலர்ல’ எடுத்து இருக்கார்...
கட்டாயம் இந்தப்படத்துக்கு போறோம்” என கட்டளையிட்டான்.

ஏகப்பட எதிர்பார்ப்போடு சென்ற என்னை ஏமாற்றியது ‘தலைமுறைகள்’.
இந்தப்படமும் ஏமாற்றியது...ஆனால்  ‘என் இனிய ஏமாற்றம்’.
நான் எட்டி பார்க்காத எரிமலையாய்...
கற்பனை செய்யாத களஞ்சியமாய் இருந்தது படம்.


நண்பர்களே....இந்தப்படம் பார்த்ததும் நான் எடுத்த முடிவு...
‘இப்படிப்பட்ட ஒரு படைப்பை படைக்க வேண்டும்.
முடியாவிட்டால் இது போன்ற படங்களை பார்த்துக்கொண்டே செத்து விட வேண்டும்’.

சாதாரண  ‘டிஜிடல் ஹேண்டி கேமராவில்தான்’ இந்தப்படத்தை எடுத்து இருக்கிறார்.
ஆனால் ஒவ்வோரு ஷாட்டையும், ‘வான்கோ  ஓவியம்’ போல் வரைந்து இருக்கிறார்.


எல்லா சவுண்டையும்,  ‘லைவா ரெகார்ட்’ பண்ணி...
உபயோகப்படுத்தி இருக்கிறார்.
அதனால்தான் படம் அத்தனை உயிர்ப்புடன் இருக்கிறது.

நடிகர்களை  ‘நடிக்கவே’ விடவில்லை.
வாழ வைத்து இருக்கிறார்.


காட்சி ரீதியாகவும்...வசன ரீதியாகவும் அவர் சித்தரிக்கும் ‘குறியீடுகள்’ அனைத்தும் அழகானவை...அற்புதமானவை...அர்த்தமானவை.
அவைகளுக்கு  ‘கோனார் நோட்ஸ்’ தேவைப்படவில்லை.


ஒரு காட்சியில்,
பார்வையாளர்களுக்கு விளங்கி விட்ட விஷயத்தை...
‘பார்வையாளர்களை முட்டாள்கள்’ எனக்கருதி...
மற்றொரு காட்சியில் மீண்டும் அந்த விஷயத்தை வசனத்தில் விளக்கும்
‘அபத்த விளக்கெண்ணையை’ இப்படத்தில் நீங்கள் எங்கும் காண முடியாது.


காட்சிகள் ‘திருக்குறளாய்’ இருக்கும்...
‘நாலடியாராய்’ இருக்கும்...
ஏன் ‘பெரிய புராணமாய்’  பெருசா கூட இருக்கும்.
ஆனா, ஒரு காட்சி கூட துவள வைக்காது...
துடிக்க வைக்கும்.
 ‘எனர்ஜியை’ ஏத்திகிட்டே இருக்கும்.

 ‘கண்களால்’ கதையை சொன்ன பிறகு,
‘கையெடுத்து கும்பிட்டு’ பார்வையாளனை உதைக்கும் ‘உடல் மொழி’ இருக்கவே இருக்காது  ‘லேவ் டியாஸ்’ படத்தில்.

லேவ் டியாசின் படைப்புகள் பற்றிய விபரம்...
[தகவல் உபயம் : விக்கிப்பீடீயா ]

Filmography[edit]

YearOriginal TitleEnglish TitleNotes
1998Serafin Geronimo: Kriminal ng Barrio ConcepcionThe Criminal of Barrio Concepcion
1999Burger Boys
Hubad sa Ilalim ng BuwanNaked Under the Moon
2001Batang West SideWest Side KidNETPAC Award - Cinemanila International Film Festival
2002Hesus, RebolusyunaryoJesus, Revolutionary
2004Ebolusyon ng Isang Pamilyang PilipinoEvolution of a Filipino Family
2006Heremias (Book One: The Legend of the Lizard Princess)
2007Kagadanan Sa Banwaan Ning Mga EngkantoDeath in the Land of EncantosNETPAC Award - Jeonju International Film Festival
2008MelancholiaOrizzonti Grand Prize at the 65th Venice International Film Festival
2009Walang Alaala ang mga Paru-ParoButterflies Have No Memories
2011Babae ng HanginWoman of the Wind
Siglo ng PagluluwalCentury of BirthingGrand Jury Prize - Cinemanila International Film Festival
Elehiya sa Dumalaw Mula sa HimagsikanElegy to the Visitor from the Revolution
2012Florentina Hubaldo, CTENETPAC Award - Jeonju International Film Festival
2013Norte, Hangganan ng KasaysayanNorte, the End of Historyentered in the Un Certain Regard section of 2013 Cannes Film Festival
will be shown in the Masters section of 2013 Toronto International Film Festival
part of the main slate of 2013 New York Film Festival

என் தலைமுறையில், ‘வீடு’ கட்டி வாழ்ந்தவர்,
இந்த ‘தலைமுறைக்கு...
‘காலாவதியான கணக்கை’ கற்பிக்கும் ‘முன்னாள்’ வாத்தியார் பாதங்களில்  இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

‘லேவ் டியாசின்’ திரைப்படத்திலுள்ள சிறப்பம்சங்களை,
அடுத்தப்பதிவிலும் தொடர்கிறேன்.

படத்தின் முன்னோட்டத்தை காணொளியில் காண்க...
No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.