May 2, 2012

கமல் வீட்டை விற்று விட்டார்கள்.


கமலை பற்றி... சகலகலாவல்லவன் என்ற தொடரை நான் தயாரித்தேன்.
அந்த தொடரில் பரமக்குடியில்... கமல் பிறந்த வீட்டை காட்ட விரும்பினேன்.
கமலிடம் அனுமதி கேட்டேன்.
உரிமையாளர் அனுமதிப்பாரா எனத்தெரியாதே? என்றார்.
எப்போதும் போல் கமல் பேசுவது புரியாமல் முழித்தேன்.
அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதில் ஒரு கலக்கம் தெரிந்தது.
பறி கொடுத்த ஏக்கம் தெரிந்தது.
நான் அவர் கண்களை உற்று நோக்குவது தெரிந்ததும் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
எப்போதுமே கமல் திருக்குறள் மாதிரிதான் பேசுவார்.
நாம்தான் உரை எழுத வேண்டும்.

கமல் பேசியதற்க்கு விளக்கம் சாருஹாசனிடம் கிடைத்தது.
அந்த வீட்டை விற்று விட்டதாகவும்....பரமக்குடி போய் கமலின் தாய் மாமனை சந்தித்தால் அவர் உதவுவார் என்றார்.

பரமக்குடி சென்று கமலின் கடைசி தாய் மாமனை சந்தித்து விபரம் சொன்னோம்.
கமலுக்கு மொத்தம் ஏழு தாய் மாமன்கள்.
அதில் ஒருவர் கமலை விட அழகாக இருப்பார்.
நான் சந்தித்தது கடைசி மாமன்.
இவர்... சின்ன வயதில் கமலை தூக்கிகொண்டு மதுரை வீரன் படத்தை நூறு தடவைக்கு மேல் பார்த்திருக்கிறார்.
பரமக்குடி சண்டியர்.
சிலம்பத்தில் சூரன்.
கமலின் வீரம்... இவரிடம் பெற்ற கடன்தான்.

கமல் பிறந்த வீடு.... என்று ஒரு மினி அரண்மனையை காட்டினார்.
மிரண்டு போய் விட்டேன்.
முன் வாசலில் தெரு...பின் வாசலில் வைகை நதி.வெள்ளக்காலங்களில் வைகை சமையலறைக்கே வந்து விடுமாம்.
கமல் வீட்டின் விஸ்தீரணத்தின் எளிய உதாரணம் இது.
வீட்டின் முன் வாசல்... சென்னை கடற்க்கரை சாலையில் ஆரம்பித்தால்...  வங்காள விரி குடா அலை தொடும் தூரத்தில் பின் வாசல் உள்ளது.

கமலின் தாத்தா காலத்தில் ஒரு வேளைக்கு 25 கிலோ அரிசி சமைத்திருக்கிறார்கள்.
அத்தனை உறவுகள்....வேலையாட்கள்...தருமங்கள்.

பிறந்த வீட்டை இழந்து நிற்க்கும் வலியை....
பூர்வீக மண்ணில்...
இன்று ஒரு பிடி கூட இல்லாமல் தவிக்கும் என்னால் இன்றும் உணர முடியும்.

15 comments:

 1. interesting information. ஏன் அவரால் அதை வாங்க இயலவில்லையா என்ன? கலைஞனுக்கு கடந்தகாலம் மிகுந்த துயரம் அளிக்ககூடியது.அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும்...

  ReplyDelete
  Replies
  1. அந்த வீடு ஏன் விற்கப்பட்டது என்பதை யாருமே சொல்ல விருப்பப்படவில்லை.
   அனைவரிடமும் அந்த வலி இருந்தது.
   நான் 1995ல்பரமக்குடி போகும் போது அந்த வீடு பாதி இடிக்கப்பட்டு புதிய பில்டிங் உருவாகி இருந்தது.
   இப்போது மிச்சமும் இடிக்கப்பட்டு இருக்கும்.

   Delete
  2. அந்த வீடு விற்கப்பட்டதின் வலியை என்னால் உணர முடிந்தது.
   காரணம் தெரிய விரும்பவில்லை.

   Delete
 2. இதுவரை நான் அறியாத விஷயம் நன்றி மாப்ள

  ReplyDelete
 3. Replies
  1. கமல் பற்றிய பதிவு என்றாலே...பிரசாத்தின் பின்னூட்டம் இருக்கும்.

   Delete
 4. பிறந்த வீட்டை இழந்து நிற்க்கும் வலியை....
  பூர்வீக மண்ணில்...
  இன்று ஒரு பிடி கூட இல்லாமல் தவிக்கும் என்னால் இன்றும் உணர முடியும்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரிக்கும்...இழப்பின் வலி இருப்பதை உணர முடிகிறது.

   Delete
 5. கமல் பத்தின தெரியாத விஷயம் ...உங்கள பத்தியும் தெரியாத விஷயம் ஒண்ணு..நீங்க புரொடியூசர் என்பதும்...

  ReplyDelete
  Replies
  1. தயாரிப்பு பணியில் இருந்ததால்தான்... கோடம்பாக்கத்து ரகசியங்களை அறிய முடிந்தது.

   Delete
 6. //எப்போதுமே கமல் திருக்குறள் மாதிரிதான் பேசுவார்.
  நாம்தான் உரை எழுத வேண்டும்.// Correct.. வழக்கமாக நடிகர்களிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டால் நீட்டி மழுப்புவார்கள்.. ஆனால் கமலிடம் ஒரு முறை கேட்டதற்கு No, I'm sensible என்று முடித்து விட்டார்..

  ReplyDelete
  Replies
  1. அரசியல் தெரியும்.அதனால்தான் தமிழ்நாடு அரசியல் என்றாலே ஒடி விடுவார்.
   கே.பி.அடிக்கடி சொல்வது...கமல் எதிலும் சிக்க மாட்டான்.

   Delete
 7. கொஞ்சம் லேட்டா வந்துருக்கேனு நினைக்கிறேன்..கமல் என்ற நடிகனை முன்பெல்லாம் சுத்தமா பிடிக்காது (அப்ப சின்ன வயசு)..சுப்பு - சப்புனு ஸ்டைல் காட்டி நடிக்கிற நடிகர்கள தலையால தூக்கி வச்சி கொண்டாடியது எல்லாம் ஒரு காலம்.

  கடந்த இரண்டு வருடங்களாக, அவரது படங்களை உள்ளார உணர்ந்துபார்க்கும் போது கமல் ஹாசன் என்னும் நடிகனை உணர்கிறேன்.அவர் மீது புது மரியாதை பிறந்தது.அவரை பற்றிய இந்த தகவல்கள் எல்லாம் நான் கேள்வியேப்பட்டது இல்ல..உங்களுக்கு தெரிந்த சினிமா விஷயங்களை பிளஸ் அந்தரங்களை பார்க்கும் போது வியப்பா இருக்கு.நீங்க தயாரிப்பு துறையினில் இருந்துருக்கீங்க என்பதே எனக்கு இப்பதான் தெரியும் அண்ணா.

  மேலும் தொடருங்கள்..வருகிறேன்..மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் சினிமாவில் கமல் அளவுக்கு சினிமா நேசிப்பவர்கள் யாருமே கிடையாது.
   தனது வீட்டில் சினிமா சம்பந்தப்பட்ட புத்தகக்கள்,டிவிடி இதைத்தான் சேர்த்து வருகிறார்.
   நிலங்கள் வாங்கிப்போடுவது...கல்யாண மண்டபங்களாக கட்டித்தள்ளுவது...போன்ற விஷயங்களில் அக்கறையே இல்லாதவர்.இந்த ஒரு விஷயத்துக்காகத்தான் கமலிடம் எனக்கு தனிப்பிரியம்.

   Delete

Note: Only a member of this blog may post a comment.