Oct 20, 2010

Not one less-டீச்சரம்மா


ஜாங் யீமூ வர்த்தக சினிமாவின் மாபெரும் இயக்குனர்.பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட் உருவாக்குவதே இவரது வேலை.உ.ம் ஹீரோ[ஜெட்லீ]அதே சமயத்தில் ரியலிஸ்டிக் பாணியில் பயணம் செய்து அவார்டுகளையும் வசூலையும் வாரிக்குவிப்பது உப வேலை.நியோ ரியலிஸ்டிக் பாணியில் எடுக்கப்பட்ட படம் நாட் ஒண் லெஸ்.அனைத்து நடிகர்களுமே தொழில் முறை நடிகர்கள் அல்ல.அனைவருமே கிராமத்து விதைகள்.அவர்களது ஒரிஜினல் பெயர்களே படத்திலும் பயன்படுத்தப்பட்டது.
1990களில் பயணிக்கிறது கதை.அழகிய மலைக்கிராமம்....ஓராசிரியர் பள்ளி....ஆசிரியர் ஒரு மாதவிடுமுறையில் செல்லநினைக்கிறார்.


13 வயது வீ மின்சி தற்காலிக டீச்சராக நியமிக்கிறார்.ஓரே ஒரு நிபந்தனை “பள்ளியில் ஒரு மாணவன் குறையக்கூடாது”.வீ மின்சி ஒரு வளர்ந்த குழந்தை .பள்ளி மாணவர்களை விட இவளது அறிவு கம்மி.ஒரு வழியாக வகுப்பை ஒப்பேற்றிக்கொண்டு இருக்கிறாள்.சுட்டி மாணவன் ஒருவன் தப்பி அருகில் உள்ள நகரத்துக்கு வேலைக்காக செல்கிறான்.நகரத்துக்குச்சென்று அவனை மீட்பதே கிளைமாக்ஸ்.

எல்லா காட்சிகளிலுமே நகைச்சுவை நியாயமாக இருக்கிறது.ஆனாலும் ஒரு சோகத்தை ஒளித்து வைத்திருக்கிறது.மாணவர்களும் டீச்சரும் கோக் குடிக்கும் காட்சி...பானைச்சோற்றில் ஒரு பதம்.ஆளுக்கு ஒரு சொட்டுதான் கிடைக்கிறது.ஆனாலும் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய திருப்தி அந்த முகங்களில்.. கிராமங்கள் மீது ஊடகமும் கார்ப்பரேட் கம்பனிகளும் இணைந்து தொடுக்கும் வன்முறை.... இக்காட்சி நம் முகத்தில் அறைந்து சொல்கிறது.

இயற்க்கை ஒளி மட்டும் பயன்படுத்தி காட்சிகளை ஒவியமாக்கியவர் Hou Yong .பெரும்பான்மை காட்சிகளில் ஒளிந்து கொண்டு தேவைப்படும்போது மட்டும் வெளிவந்து இசையால் நம்மை கட்டிப்போடுகிறார் சீனத்து இளையராஜா Sam Bao
உலகசினிமாவில் ஜாங் யீமூ முத்திரை பதித்த மற்ற படங்கள்
The Road Home
Raise the Red Lantern
To Live
Riding alone for thousend miles
இந்தப்படங்களையும் பார்த்துவிட்டு வாருங்கள்...எனது அகில உலக
ஜாங் யீமூ ரசிக மன்றத்தில் உறுப்பினராக சேர்த்து கொள்கிறேன்.தலைவர் பதவி கோவையில் ராஜா என்பவர் பறித்துக்கொண்டு போய்விட்டார்.

11 comments:

 1. நல்லதொரு பகிர்வு நண்பரே. நன்றி.

  ReplyDelete
 2. சார், ரொம்ப Interesting-ஆ இருக்கும்போல இருக்கே...

  பாக்கவேண்டியதே இன்னும் நிறைய Pending. முடிச்சுட்டு வந்தர்றென்.

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம்.the road home பார்த்துவிட்டேன் மற்ற படங்களை பார்க்க வேண்டும்.நன்றி

  ReplyDelete
 4. பின்னூட்டமிட்ட நண்பர்கள் மரா,மோகன்,மைதீன்,லேகா அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 5. மிக அருமையான பகிர்வு தலைவரே.விரைவில் பார்க்கிறேன்

  ReplyDelete
 6. சூப்பராக இருக்கும்போல பார்க்க முயற்சிக்கிறேன்!

  ReplyDelete
 7. ஹைய்யா... இந்தப் படத்தை எனக்குக் கோவையில் பாஸ்கரன் என்று ஒருவர் கொடுத்து, பார்க்கச்சொன்னார் :-) .. அவரை உங்களுக்குத் தெரியுமா? :-) நல்ல படம்.. நல்ல அறிமுகம்.. :-)கேரக்டர் பற்றிய உங்கள் கேள்விக்கு, கொஞ்ச நேரத்தில் பின்னூட்டம் போடுகிறேன்

  ReplyDelete
 8. குறைமுருகன்10/20/2010 9:53 PM

  இந்தப் படத்தைத் தமிழில் எடுக்க ஆசை.. எங்கள் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டார்.. படத்தின் பெயர், ‘பெண் புலி’.. நானே ஈரோயினியாக மேக்கப் போட்டு நடிக்கலாம் என்று இருக்கிறேன்.. உங்கள் கடைக்கு எனது ‘நண்பர்கள்’ ஒரு ஆட்டோவில் வந்து இறங்குவார்கள்.. அவர்களிடம் டிவிடி தந்து விடவும் :-)

  ReplyDelete
 9. நன்றி எஸ்.கே.,கீ.பி.,க.தே

  ReplyDelete
 10. குறைமுருகா..தமிழில் இப்படம் எடுபடாது.நம் ஆட்சியில் கல்வி தனியார்மயமாக்கி விட்டோம்.எங்கள் குழந்தைகள் மொட்டை வெயிலில் சூ,சாக்ஸ்,டை என்று வெள்ளக்காரகுஞ்சுகள் போல் பவனி வருகின்றன

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.