Oct 23, 2010

Katyn-2007 மரணக்காடுஊசியிலைக்காடு கேள்விப்பட்டு இருப்பீர்கள்.மரணக்காடு???????????
Katyn என்ற இடத்தில் 22,000 பேர்களை விதைத்து ராணுவத்தினர் உருவாக்கியது.

ஒரு பெண்ணை ஏககாலத்தில் இரண்டு பேர் கற்பழித்தால்......இதே நிலைதான் இரண்டாம் உலகப்போரில் போலந்து பெற்றது.ஒருபுறம் ஜெர்மனி..மறுபுறம் சோவியத் ரஸ்யா.
இருநாடுகளுக்கிடையே சிக்கி சீரழிந்ததை படம் பிடித்து காட்டியிருக்கிறார் அந்திரே வாஜ்டா.

1940ல் அன்னா காத்திருக்கிறாள் சோவியத் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட கணவனுக்காக.....

அன்னாவின் மாமியாரும் காத்திருக்கிறார் ஜெர்மன் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட கணவனுக்காக.....
காத்திருத்தல்தான் உண்மையான மரணதண்டனை என்கிறார் அ.முத்துலிங்கம் 'அங்கே இப்ப என்ன நேரம்?' நூலில்...[தமிழினி வெளியிடு]
ஜெர்மானியர்கள் தங்களது ஆக்கிரமிப்பு பகுதிகளில் இப்படுகொலைகளை நிகழ்த்தியது சோவியத்துதான் என்று ஆவணப்படத்தை காட்டி பிரச்சாரம் செய்கிறது.சோவியத்தும் ஒரு ஆவணப்படத்தைக்காட்டி பிரச்சாரம் செய்கிறது.

உண்மையை.... அன்னாவின் கணவனது ரத்ததில் குளித்த டைரி..... படம் பிடித்து காட்டுகிறது.
இப்படுகொலையின் அலறலை....சிதிலத்தை.....ஆவணப்படித்தியிருக்கிறது Pawel Edelman ஒளிப்பதிவு....பக்கபலமாக Krzysztof Pendereeki பின்னணி இசை.இறந்தவர்களின் இறுதிக்கதறல் இசையில் கலந்திருப்பதை இதயம் உள்ளவர்கள் மட்டுமே உணரமுடியும்.அந்த கதறலில் இயக்குனர் வாஜ்டாவின் தந்தையின் குரலும் கலந்து இருப்பதை நாம் தெரிந்து கொண்டால் சோகம் நேரடியாக....அதிரடியாக.... தாக்கும்.இதனால்தான் இவரது பெரும்பான்மை படங்களில் போரின் பேரழிவே மையக்கருவாக இருக்கும்.
படத்தினூடே வரும் குட்டிக்காதல் சிறுகதை அவலச்சுவையை அகப்படுத்துகிறது.
இப்படத்தை பார்த்துவிட்டு இடும் சிறப்பான பின்னூட்டத்திற்க்கு வாஜ்டாவின் டிரையாலஜி படங்களான
A Generation
Kanal
Ashes and Diamonds
டிவிடி பரிசாக குரியரில் அனுப்பி வைக்கிறேன்.
படம் பார்க்காதவர்களுக்கு கலைமாமணி ஜெயசித்ரா இயக்கத்தில் உருவான உலக்கசினிமா “நானே என்னுள் இல்லை”படத்தின் டிக்கெட் சிறப்பு பரிசாக வழங்கப்படும்.

10 comments:

 1. இந்த மாதிரி படமெல்லாம் பார்க்கிறது ரொம்ப கஷ்டங்க.. மனசு கனக்கும் 2 நாளைக்கு ஏதோ மாதிரி இருக்கும். இந்த பதிவே ஏதோ பண்ணுது.

  ReplyDelete
 2. அநேகமா எனக்கு நானே என்னுள் இல்லை டிக்கெட்தான் கிடைக்கும்!:-)

  ReplyDelete
 3. //படம் பார்க்காதவர்களுக்கு கலைமாமணி ஜெயசித்ரா இயக்கத்தில் உருவான உலக்கசினிமா “நானே என்னுள் இல்லை”படத்தின் டிக்கெட் சிறப்பு பரிசாக வழங்கப்படும்//

  எங்க தலைவர் அம்ரேஷ் கணேஷ்ச கிண்டல் பண்ணும் அளவிற்கு போயாச்சா...கோவைக்கு கிளம்பிகிட்டு இருக்கேன்...

  அந்த படத்த பார்க்கிறதா உத்தேசமே இல்லை/அதுனால தயவுசெய்து நானே என்னுள் இல்லை படத்தின் டிக்கெட்டை அனுப்பவும். முடிஞ்சால் ரெண்டு டிக்கெட்..இன்னைக்கும் பார்ப்பேன்..மறுபடியும் ஒருமுறை பார்ப்பேன்.

  தயவுசெய்து இங்கே பார்க்கவும்..
  http://www.mycineworld.com/2010/08/naane-ennul-illai-movie-stills.html

  ReplyDelete
 4. எஸ்.கே இப்படம் எந்த இடத்திலும் நம்மை கதற வைக்கும் மெலோடிராமா இல்லவே இல்லை.ஒரு கறை படிந்த வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறார்

  ReplyDelete
 5. Katyn படத்தை விட நா.எ.இ படம் உங்களை கவர்ந்திழுத்தது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை.உலக்கசினிமாவின் மகிமை அது.விரைவில் டிக்கட் அனுப்புகிறேன்.பக்கவிளைவுகளுக்கு பொறுப்பு ஏற்கமாட்டேன்.

  ReplyDelete
 6. முதல் முறையாக வந்து உள்ளேன்... நல்ல பதிவு... படம் பார்த்துவிட்டு வருகிறேன்

  ReplyDelete
 7. நன்றி மோகன்...தங்கள் வரவு நல்வரவு..

  ReplyDelete
 8. இன்றுதான் உங்கள் வலைப்பூவினை முதல்முறையாக பார்வையிடுகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

  ReplyDelete
 9. புதிய நண்பா பிரபாகரா வா...உலகசினிமாவை வலம் வருவோம்[இந்த வீரமான பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்]

  ReplyDelete
 10. செம அறிமுகம் தலைவரே ,இதை விரைவில் பார்த்து விடுகிறேன்

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.