Feb 7, 2015

விடுமுறை !


நண்பர்களே...
என் வாழ்க்கையின் மிக முக்கிய தருணத்தில் இருக்கிறேன்.
கடந்த 26ம் தேதி என் மகளின் நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றது.
வருகின்ற மே 29ம் தேதி சென்னையில் திருமணம்.
இணைய நண்பர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க இருக்கிறேன்.
வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்.

மே 29 வரை, பதிவுலகிலும், முகநூலிலும் இனி எழுதுவது சற்று கடினமே.
முடிந்த வரை எழுதுகிறேன்.
உங்கள் அன்பும், ஆசியும் என்னை திடமாக்கி வளமாக்கும் என உளமாற நம்புகிறேன்.
அன்புடன்,
உலகசினிமா ரசிகன்.

Jan 19, 2015

‘ஐ’.... ‘சை’ !.

 ‘ஐ’ திரைப்படத்தில், இயக்குனர் ஷங்கர் திருநங்கைகளை மிகக்கேவலமாக சித்தரித்து உள்ளார்.
அவரது ‘சமூக அக்கறை’ எப்போதுமே ‘கல்லா கட்டும்’ வித்தையாக மட்டுமே இருந்தது...இருக்கிறது...இருக்கும்.
பெண்களின் சதை திரட்சிகளை பிரம்மாண்டம் என்ற சாக்லேட் தடவி விற்கும் வியாபாரி,
சமுகத்திற்கு முன்னுதாரரணமாக விளங்கும் திருநங்கையை சித்தரித்த விதத்தில்...
அச்சமூக ரணத்தின் மீது அமிலத்தை ஊற்றி அபிஷேகம் செய்து இருக்கிறார்.

திருநங்கைகளை ஷங்கர் கேவலமாக சித்தரித்து இருப்பதற்கு,
சாட்டையடி கொடுத்து ஒரு பதிவு எழுதப்பட்டுள்ளது.
சாட்டை எடுப்பதற்கு இந்த பதிவருக்கு உரிமை இருக்கிறது.
அடி வாங்க, ஷங்கரிடம்  ‘பிரம்மாண்ட முதுகும்’ இருக்கிறது.

கீழ்க்கண்ட இணைப்பில் கட்டுரையை படித்து ‘ஷங்கரின்’ மேல்  ‘கல்லெறியுங்கள்’.
http://maattru.com/aiye-letter-to-shankar/