Oct 11, 2012

‘ கோவை நேரம் ’ ஜீவா முகத்தில் இருப்பது என்ன ?

நண்பர்களே...
நேற்று புதன் கிழமை.
பொன் கிடைத்தாலும்... புதன் கிடைக்காத நன்னாளில்...
கோவை பதிவர் குழுமம் மீண்டும் கூடியது.
கோவை மாநகரின் மத்தியில் திவ்யோதயா ஹாலில் மிகச்சிறப்பாக கூட்டம் கூட ஏற்பாடு செய்திருந்தார்  ‘கோவை நேரம்’ ஜீவா.
இப்போதே நன்றி சொல்லி விடுகிறேன் ஜீவாவுக்கு.
பின்னால் அதற்கு வாய்ப்பிருக்காது.

தங்களது அருமையான நேரத்தை... இக்கூட்டத்திற்கு வருகை தர ஒதுக்கிய அனைத்து நல்லிதயங்களுக்கு நன்றி.
தாமதமாக வந்தாலும்,
வந்தவுடன் சரவெடி போல் விழாவை கலகலப்பூட்டிய தோழி விஜிக்கும்,
நண்பர் சங்கவிக்கும் தனித்த நன்றி.

சின்ன பிளாஷ்பேக்...
 ‘கோவை நேரம்’ ஜீவா, செவ்வாய் கிழமை படு உற்சாகமாக என் கடைக்கு வந்தார்.
 “ வேலை நாளில் கூட்டம் வைத்திருக்கிறீர்களே...மக்கள் வருவார்களா? ” என என் சந்தேகத்தை கேள்வியாக்கினேன்.

 “ போன கூட்டம் ஞாயிற்றுக்கிழமை வைத்ததனால் நிறைய பேர் வரவில்லை.
இப்போதே முப்பது பேர் வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
நல்ல கூட்டம் வரும் ” என நம்பிக்கையுடன் அடித்து பேசினார்.

படு உற்சாகமாக, “அப்படின்னா... ஐம்பது பேருக்கு மேல் வருவார்கள் ” என
என் பங்குக்கு ஜீவாவை வாழ்த்தி அனுப்பி வைத்தேன்.

கடையில் அவசர வேலை குறுக்கே வந்து...நானே நாலு மணிக்குத்தான்
கிளம்ப முடிந்தது.
லேட்டா போனா சீட் கிடைக்காம நிற்க நேரிடும் என்ற பயத்தில் எனது ஸ்கூட்டியை முறுக்கினேன்.
டிராபிக் ஜாம் இல்லாமல் தப்பித்து,சரியாக நாலரை மணிக்கு திவ்யோதயா ஹாலில் நுழைந்தேன்.

ஜீவா மட்டும் தனியாக அமர்ந்து இருந்தார்.
இரண்டு பேர் மட்டுமே கலந்து கொண்ட பதிவர் கூட்டம் என தினத்தந்தியில் செய்தி வந்து விடுமே என பயந்து கொண்டு...ஹாலின் மறு பக்கத்தை நோக்கினேன்.
அப்பாடா...
பெண் பதிவர்கள்...ஆண் பதிவர்கள்...என மொத்தம் ஐந்து பேர் கொண்ட பெருங்கூட்டம் நம்பிக்கை தந்தது.

நான் நண்பர் கலாகுமரனிடம் கதைத்து கொண்டிருந்தேன்.
கவிஞர் கோவை சரளாவை... ஜீவா கலாய்த்து கொண்டிருந்தார்.
தற்செயலாக, ஜீவா முகத்தை உற்று நோக்கினேன்.
முகத்தில் ஏதோ ஒட்டியிருந்தது.
அது என்னவாயிருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டவாறே...
எனது பதிவுலக அனுபவங்களை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்தேன்.
மின்சார வாரியம் ஏற்படுத்திய புழுக்கத்தில்...நகைச்சுவை எடுபடவில்லை.

திருமதிகள் அகிலா,எழில்,சரளா  ‘குசுகுசுவென’ பேசியதற்கே...
அரங்க நிர்வாகி  ‘சத்தம் ஓவரா வருதுன்னு’ சத்தம் போட்டுட்டாரு.

வாராது வந்த மாமழை போல் புதிதாய் ஒரு பதிவர் வந்தார்.
கமல் மாதிரி அழகாக வேறு இருந்தார்.
விசாரித்ததில்  ‘கோவை கமல்’ என்ற பெயரில் பதிவெழுதுவதாக தெரிவித்தார்.

பின்னர், பேராசிரியர் கோவி,சஞ்சய் என ஒருவர் பின் ஒருவராக மொத்தம் பத்து பேர் திரண்டு விட்டோம்.
இதற்கு மேல் பெருங்கூட்டம் வந்தால் எப்படி சமாளிப்பது ?
கூட்டத்தை கலைக்க...கண்ணீர் புகைக்குண்டு வீச வேண்டி வருமோ... என கவலையுறத்தொடங்கினேன்.

அதை விட  ‘புதிய கவலை’ ஒன்று பிறந்தது.
பதிவர் பேராசிரியர் கோவி, பி.எஸ்.ஜி கலைக்கல்லூரியிலிருந்து துணையாக தனது மாணவனை பலிகிடாவாக கூட்டி வந்திருந்தார்.
அவனை உற்று நோக்கியதில், அவன் 48 மணி நேரத்திற்குள்  ‘ஏதாவது’ செய்ய வாய்ப்பிருப்பதை தெரிந்து கொண்டேன்.
 ‘இனி இப்படி ஒரு கூட்டத்திற்கு அழைத்து செல்ல மாட்டேன்’
என கோவி...அந்த மாணவனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்...
அந்த அப்பாவியின்  ‘ஏதாவது’  முடிவை... மாற்றும் உத்திரவாதமிருக்கிறது.
பேராசிரியர் கோவி, அவனை தடுத்து காப்பாற்றும் பொருட்டு... 
இப்பதிவை அவசரமாக இடுகிறேன்.

 மாலை 6.55க்கு...
‘காலை 9 மணி சூட்டிங்கிற்கு மாலை 6 மணிக்கு வரும்
'நடிகர் கார்த்திக்' போல’...
'பதிவர் சங்கவி' வந்தார்.
லேட்டாக வந்தவர்... லேகியம் சாப்பிட்டு வந்திருப்பார் போலும்....
மனுஷன் சிரிச்சுகிட்டே இருந்தார்.
 “அடுத்த முறை எனக்கும் ஒரு உருண்டை எடுத்து வரவும் நண்பரே...”
ஒரு வழியாக  ‘மிகவும் பிரம்மாண்டமான அந்த கூட்டத்தை’ முடித்து வைத்தார்.

விடை பெறும் போது ஜீவா முகத்தை மறுபடியும் உற்று பார்த்தேன்.
கொஞ்சமாக இருந்தது... 
முகம் முழுவதும் பரவியிருந்தது.

இப்போதும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஆனால் ஒன்றை கண்டு பிடித்தேன்.
அடுத்தப்பதிவர் கூட்டம் சிங்கப்பூரில் நடத்துவது என்று.
அப்போதுதான், கோவை பதிவர்கள் எளிதாக அனைவரும் வருவார்கள்.
.
கீழே இருக்கும் படத்திலிருப்பவர்... பதிவர் கூட்டம் ஏற்பாடு செய்தவர்தான்.


    

7 comments:

  1. கோவை பதிவர் குழுமம் மீண்டும் கூடியது.

    வாழ்த்துகள் !!

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு ‘கூட்டத்துக்கு’ வாழ்த்தா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
      ஜீவா கொல வெறியாயிருவாரு.

      Delete
  2. ராஜேஷ்குமார் நாவலில் கூட முடிவில் சொல்லிவிடுவார் சொல்ல வந்ததை நீங்க முடிவை சொல்லாம விட்டிருப்பதை பார்த்தல் பகுதி இரண்டு என்று தொடரும் எண்ணம்மா உங்களுக்கு ?அப்படி எதை பார்த்தீர்கள் நண்பர் ஜீவா முகத்தில் விரைவில் அடுத்த பதிலில் சொல்லிவிடுங்கள் ..............மேலும் நிகழ்வை பற்றிய சுவாரசியமான விடயத்தை பதிந்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வண்க்கம் கோவை கவிஞரே...
      எழுத்தில் புரியாமல் போய் விடும்
      அபாயம் இருக்கிறது என்றெண்ணி கடைசியில் படமே போட்டுள்ளேனே.

      எவ்வளவு அற்புதமாக...ஆர்வமாக ஜீவா ஏற்பாடு செய்திருந்தார்.
      அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பித்து இருக்க வேண்டாமா.

      Delete
    2. பதிவர் அண்ணே!! புதிய அறிமுகம் கோவை கமல் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தீர்கள்.. சரி.. பதிவர் ஜீவாவுடன் ஒரு ஆவியும் உங்கள் கடைக்கு வந்திருந்ததைப் பற்றியோ, பதிவர் கூட்டத்தில் அமர்ந்திருந்ததைப் பற்றியோ குறிப்பிடாதது ஏன் சகோ!! ஒய் திஸ் கொலவெறி ??

      Delete
    3. பதிவர் ஜீவாவின் நிலையை ஒரு படத்தின் மூலம் எளிமையாக விளக்கி விட்டீர்!!

      Delete
  3. ஹா..ஹா..மிகவும் சுவாரஸ்யமான எழுத்துக்கள்! தங்களின் சிலாகிப்பு என்னை சிலிர்ப்புக்கு உள்ளாக்கி விட்டது! அன்புக்கு மிக்க நன்றி!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.