Dec 9, 2011

Beautiful-[Malayalam] 2011 சோதனையை சாதனையாக்கு...


நீண்ட நாட்களாக எழுத முடியவில்லை.
காரணம் விதி ஹெட் ஸ்பிரட்டிங்&டேன்சிங்.
பராசக்தி சிவாஜி கணேசனைப்போல ஒடினேன்...ஒடினேன்...வாழ்க்கையின் ஒரத்திற்க்கே ஒடினேன்.
அந்த துலாபார துயரத்தை தனிப்பதிவாக்குகிறேன்.
துன்ப தொடர் ஒட்டத்திலும் மூன்று சினிமா பார்த்து விட்டேன்.
1 மயக்கமென்ன
2 போராளி
3 பியூட்டிஃபுல்
மூன்றுமே என் துன்பத்தை கடக்க உதவிய காரணிகளாக இருந்த போதிலும்...
மொத்தமாக என் துன்பத்தை துடைத்து போட்டது பியுட்டிஃபுல்.
இப்படத்திற்க்கு மூலம்
Divingbell and the butterfly [நான் இப்படத்திற்க்கு பதிவிட்டுள்ளேன்...காண்க]
My Left Foot [செழியன் ஆனந்த விகடனில் உலகசினிமா தொடரில் எழுதி உள்ளார்.] இருந்தாலும் அப்பட்டமாக காப்பியடிக்காமல்...சூரிய உதயத்தை பார்த்து ஒவியம் படைப்பது போல் காவியமாக்கி இருக்கிறார் இயக்குனர் வி.கே.பிரகாஷ்.

ஐம்பது நாட்களை கடந்து விட்ட போதிலும் திங்கள் கிழமை இரவுக்காட்சியை ஹவுஸ்புல்லாக்கி அழகு பார்க்கின்றனர் கேரள மக்கள்.

படத்தின் நாயகன் ஜெய சூர்யா.
பல நூறு கோடி சொத்துக்களை படுத்திருந்து அனுபவிக்கிறான்.
ஆம்....கழுத்துக்கு கீழே எந்த பாகமும் இயங்காது.
பிறவிக்கோளாறு.
தன் நிலைமைக்கு கழிவிரக்கம் கொள்ளாமல் வாழ்க்கையை ரசித்து ருசித்து சாப்பிடுகிறான்.
அவனைக்கண்டு காலன்,எமன்,தூதன் மூவருமே பயந்து நடுங்கி ஒடிக்கொண்டே இருக்கிறார்கள்.

படுத்துக்கொண்டே ஜெயசூர்யா அடிக்கும் சிரிப்பு சிக்ஸர்கள்
மொத்த தியேட்டரை அதிர வைக்கின்றன.
தனக்கு நர்சாக பணி புரிய...
இண்டர்வியூக்கு வரும் பெண்களை...
 தலையிலிருந்து மார்பு வரை மட்டுமே பார்க்கிறான்.
 பார்ப்பவரை திணற வைக்கும் கவர்ச்சியான பெண்ணின்...
வெளியே தெரியும் பிரா பட்டையை பார்த்து....
 “கருத்த பிரா போட்ட பெண் தவிர மற்றவர்கள் போகலாம்”

ஏமாந்து திரும்பும் பெண்களில் ஒருத்தியின் கமெண்ட் இது...
 “20,000 சம்பளம் கிடைக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா கருத்த பிரா வாங்கி வெளியே தெரியிற மாதிரி மாட்டியிருப்பேன்”
இக்காட்சிக்கு நரசிம்மராவ் கூட சிரித்திரிப்பார்.

இறந்து போன நண்பனின் குரலின் பிரதியாக ஒலிக்கும்... வருமானமற்ற...ஆனால் தன்மானமிக்க பாடகன்[நடிகர் அனுப் மேனன்] ஒருவனை பிரத்யேகமாக பாட பணிக்கிறான்.
பாடகன், ஜெயசூர்யாவின் கட்டற்ற அன்பில் கரைந்து போகிறான்.

கருத்த பிரா ஒடிப்போக... புதிய புயலாய் பாய்ந்து வருகிறாள் கதாநாயகி.... வேலைக்காரியாக....

அவளின் காதலை பெறுவதில் நண்பர்களுக்கிடையே போட்டி நடப்பது போல்... சொத்துக்காக... சொந்தங்கள் ஜெயசூர்யாவை தீர்த்து கட்ட போட்டி போடுகின்றனர்.
உணவில் விஷம் வைத்து கொல்லும் முயற்ச்சியில் சிக்கி உயிருக்கு போராடும் ஜெய சூர்யா தப்பித்தானா?
குற்றவாளி யார்?
என்று பறக்கும் திரைக்கதை...
இயக்குனருக்கு தியேட்டரில் ஸ்டேண்டிங் ஒயேஸ்
பாராட்டை பெற்று தருகிறது.

கட்டாயம் பார்க்கவேண்டிய கமர்சியல் கவிதை.

8 comments:

 1. என்ன அண்ணன கொஞ்ச நாளாவே காணவில்லை என்று மனதில் சொல்லிக்கொண்டே இருந்தேன்..ஒவ்வொரு முறை பிளாக் திறக்கும் பொழுதெல்லாம் உங்க பதிவை தேடுவேன்.

  ஆனா அண்ணன், மொத்ததுக்கும் சேர்த்து நல்ல விமர்சனம் கொடுத்துட்டீங்க.அதற்கு முதலில் நன்றி.
  மலையாளம் படங்களை நான் பார்ப்பது மிகவும் குறைவு (ஏதோ 1 அல்லது 2).அதற்கு பெரிய காரணமே மலையாளம் படங்களை பற்றி பெரியளவில் தெரியாததுதான்..இனிமேல் இந்த படத்தின் தலைப்பை கேட்டாலே உங்க ஞாபகம்தான் வருமென்று நினைக்கிறேன்.வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கிறேன்.மீண்டும் நன்றிகள் பல.
  தொடர்ந்து நிறைய விமர்சனங்கள் எழுத எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. எங்கேடா ரொம்ப நாளா ஆளைக் காணோமே என்று பார்த்தேன். ஆனால் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க.
  முழுக்கதையையும் போட்டு விடுங்களேன். இருக்கிற கொஞ்ச நஞ்ச முடியாவது மிஞ்சும்.

  ReplyDelete
 3. போன மாசம் 4 ம் தேதி போட்ட பதிவோட சரி .....ஊர் உலகத்திற்கு எங்கோ போய் விட்டீர்கள் என்று நினைத்தேன் .தற்போது எப்படி இருக்கிறீர்கள்.நலம் தானே...உடல் நலத்தை பார்த்துகொள்ளுங்கள்.அப்புறம் மத்த படத்தோட விமர்சனம் போட மாட்டீங்களா ..?

  ReplyDelete
 4. @குமரன்
  புத்தகக்கண்காட்சியில் பங்கு பெறுவதால் ஊரூராக ஒடிக்கொண்டிருக்கிறேன்.
  லேப்டாப் ஒன்றை வாங்கும் திட்டம்....
  நிறைவேறிவிட்டால் தொடர்ந்து எழுதலாம்.
  உங்கள் வாழ்த்துக்கள் லேப்டாப் கனவை நனவாக்கும்.நன்றி.

  ReplyDelete
 5. ஷர்மி சொன்னது....
  //எங்கேடா ரொம்ப நாளா ஆளைக் காணோமே என்று பார்த்தேன். ஆனால் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க. //

  சகோதரி...
  லேட்டுக்கு, மன்னிப்பு...
  பாராட்டுக்கு, நன்றி....

  //முழுக்கதையையும் போட்டு விடுங்களேன். இருக்கிற கொஞ்ச நஞ்ச முடியாவது மிஞ்சும்.//

  என்றாவது ஒருநாள் இந்த படங்களை பார்த்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் முழுக்கதையை தவிற்த்து விடுகிறேன்.
  படத்தில் உள்ள சுவாரஸ்யங்களை ஒளித்து வைத்தே எழுதுகிறேன்.

  இப்போது முடி கொட்டினாலும் படம் பார்க்கும்போது கிடைக்கும் பரவசத்தால் முடி துளிர்த்து விடும்.

  ReplyDelete
 6. நேரம்
  //போன மாசம் 4 ம் தேதி போட்ட பதிவோட சரி .....
  ஊர் உலகத்திற்கு எங்கோ போய் விட்டீர்கள் என்று நினைத்தேன் //
  நிஜம்தான்...பெங்களூரூ,எர்ணாக்குளம்,சென்னை என்று ஒடிக்கொண்டிருக்கிறேன்.

  //தற்போது எப்படி இருக்கிறீர்கள்.நலம் தானே...உடல் நலத்தை பார்த்துகொள்ளுங்கள்.அப்புறம் மத்த படத்தோட விமர்சனம் போட மாட்டீங்களா ..?//

  நலமாக இருக்கிறேன்.
  எழுதற மாதிரி மத்த படம் ஒண்ணும் சிக்கலையே...

  ReplyDelete
 7. dear sir

  your site is really great. But please dont limit this to Tamil. I wish you can provide this in English. I can not read Tamil. I am from Kerala. Your effort should not be limited with in Language...it should go around the world.

  george

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.