Mar 19, 2011

Mouchette-1967 கன்னித்தாய்

முஸே திரையில் வடிக்கப்பட்ட சிற்பம்.சிற்பி ராபர்ட் பிரஸ்ஸான்.திரை உலகின் சிறந்த பத்து மேதைகளுள் ஒருவராக கொண்டாடப்படுபவர்.ரஷ்யமேதை தார்க்காவ்ஸ்கி தனக்கு மிகவும் பிடித்த பத்து படங்களில் ஒன்றாக இப்படத்தை சிறப்பிக்கிறார்.இப்படத்தின் டிரெய்லரை உருவாக்கியவர் கோடார்டு என்ற திரைமேதை.

கோணங்கள் பிலிம் சொசைட்டியில் இப்படத்தை திரையிட்டபோது திகைத்துவிட்டேன்.ஒரு அட்சரம் புரியவில்லை.இப்படத்தை புரியாத தற்குறியாக இருக்கிறோமே என்று வெட்கப்பட்டேன்.ஆனாலும் இப்படம் என் உள்ளத்தை உலுக்கியது.
படம் பார்க்கும் ரசிகனிடம் ஆயிரம் கேள்விகள் எழுப்பியுள்ளார் பிரஸ்ஸான்.அது மட்டும் புரிந்தது.கேள்விகளுக்கு விடை தெரிய படத்தை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும்.படத்தை இரண்டாம் முறை டிவிடியில் பார்த்தேன்.லேசா படம் புரிந்த மாதிரி இருந்தது.டிவிடியில் பிரஸ்ஸான் பேட்டி இரண்டு இருந்தது. “என்னடா புரிந்து விட்டது உனக்கு...போடா ஞானசூன்யம்....”என்று காறி துப்பிவிட்டார் பேட்டியில்.


திரைக்கதை அமைப்பதில் சூரன் பிரஸ்ஸான்.சிறுவயதில் நாம் படித்த கதை இது.முருகன் ஆடு மேய்க்கும் சிறுவன் வேடத்தில் நாவல் மரத்தில் இருக்க....பசியுடன் வந்த அவ்வை பாட்டி நாவல் பழத்தை பறித்து போடும்படி கேட்கிறாள்.முருகன், “சுட்டபழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா?”என கேட்கிறான்.
பிரஸ்ஸான் இக்கதையை படமாக்கினால்.....
இதற்க்கப்புறம் படமாக்கமாட்டார்.ரசிகர்களாகிய நம்மை மீதி திரைக்கதையை எழுத வைப்பார்.முருகன் பழம் பறித்து போட்டதையும் மண்ணில் விழுந்த பழத்தை அவ்வை ஊதித்தின்பதையும் முருகன் “பழம் சுடுகிறதா?”எனக்கேட்டு அவ்வையின் கர்வத்தை அடக்கியதை நம்மை உணர்ந்து புரிந்து கொள்ள வைப்பது பிரஸ்ஸான் ஸ்டைல்.
முஸே என்ற பதின்வயதுப்பெண்ணை கொலை செய்கிறது சமூகம்.இதுதான் இப்படத்தின் ஒரு வரிக்கதை.
முஸேயின் முகத்தில் எப்போதும் நிரந்தர சோகம் இருக்கும்.சமூகம் ஏற்ப்படுத்திய இறுக்கம் இருக்கும்.ஆனாலும்..... அவ்வப்போது அவளது குழந்தைத்தன்மை எட்டிப்பார்க்கும்போது மட்டும் கோடி சூரியனாய் பிரகாசிக்கும்.
உதாரணத்திற்க்கு ஒரே ஒரு காட்சி.....
நாமெல்லாம் ஒதுங்கி கடந்து போகும் சாலை நடுவில் இருக்கும் மழை தேங்கிய நிலத்தில் ஜங்கென்று குதிப்பாள்.தெறிக்கும் சேற்றை சந்தனமாய் நினைத்து மகிழ்வாள்.

பள்ளியில் டீச்சர் காயப்படுதுகிறாள். “ஏய் முஸே” எனக்கூப்பிட்டு அவள் திரும்பி பார்க்கும்போது தங்கள் ஆண் குறியை காட்டி கேவலப்படுத்துகிறார்கள் சமவயது சிறுவன்கள்.பாரில் பார்ட் டைமாக வேலை செய்து சம்பாதித்த காசை பிடிங்கி குடித்து கும்மாளம் போடுகிறார்கள் தகப்பனும் சகோதரனும்.அடைக்கலம் தந்து காத்தவனே கற்பழிக்கிறான்.

அவளது ஒரே ஆதரவு மரணத்திற்க்காக காத்திருக்கும் நோயுற்ற தாயும் அவளது பச்சிளம் பாலகனும்.


தாய் மரணமடைய.... முக்காலமும் இல்லாமல் தவிக்கிறாள்.ஒரு குளத்தில் உருண்டு உருண்டு போய் விழுந்து உயிரை மாய்க்கிறாள் முஸே.

ஒடிப்போய் பொத்தென்று விழுந்து தற்க்கொலை செய்திருக்கலாம்...உருண்டு உருண்டு போய் உயிரை விட்டது ஏன்?

படம் பார்த்து விளக்குங்களேன் ப்ளீஸ்....

6 comments:

 1. நாள் பூரா சாப்ட்வேர் கம்பநீல குசு விடு வேண்டியது.நைட்டானா ஹால்ப் உட்டுகிட்டு ஆளாளுக்கு உலக சினிமான்னு சாகடிக்கிரீங்கலேடா!பொட்டசிங்க அதுக்கு மேல சாப்ட்வேர் கம்பநீல குசுவுட்டுட்டு நைட்டு வே பே கூட "ஜிங் சக்க" பண்ணி ப்ரோமோஷன் வாங்கிடுல்றாளுவ.பொட்டசிஎல்லாம் வூட்ல கெடக்கணும்.

  ReplyDelete
 2. தலைவரே நல்ல படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி பார்த்துவிட்டு என் எண்ணம் போல எழுதுகிறேன்.

  ReplyDelete
 3. அனானி...நீ செல்ல வேண்டிய இடம் மனநலமருத்துவமனை.திமுக தேர்தல் அறிக்கை உனக்கு சிறப்பிடம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது.//மதுரை &கோவையில் மனநல மருத்துவமனை தொடங்கப்படும்//ஆனால் நீ அது வரை காத்திருக்காதே.சட்டையை கிழிக்கும் முன் கீழ்பாக்கம் சென்று விடு.

  ReplyDelete
 4. நன்றி நண்பரே!நீங்கள் பார்த்து உங்கள் பாணியில் முஸேவை பதிவு செய்யுங்கள்.

  ReplyDelete
 5. நல்ல அறிமுகம்.பார்த்ததும் பகிர்கிறேன்.நன்றி!

  ReplyDelete
 6. கனிவான கருத்திற்க்கு நன்றி மைதீன்

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.