Jun 8, 2012

Hey Ram-பாடலும்...பாடமும்...[2000\ஹேராம்=008]


இந்திய திரைப்படங்களில் பாடல் காட்சிகள் தவிர்க்க முடியாத பாக்டீரியா.
இந்த வேதியியலை மாற்ற வேண்டும் என்ற ஆவலை...
 தனது மூன்று படங்களில்...செயல்படுத்தினார்.
1.கடமை...கண்ணியம்...கட்டுப்பாடு[தயாரிப்பு]
2.குருதிப்புனல்,
3.உன்னைப்போல் ஒருவன்

வர்த்தக சினிமாவில் கூட பாடல்கள் திரைக்கதையின் ஓட்டத்தை சிதைக்காமல் பார்த்துக்கொள்வார்.
ஹேராமில் பாடல்கள்... படத்தின் மையக்கருத்தை வலியுறுத்துவதாக அமைத்துள்ளார்.


இப்பாடலில் வாலியின் வரிகள் கமலுடன் கை கோர்ப்பதை பாருங்கள்....
ராமரானாலும்...
பாபரானாலும்...
ரூட்டு ஒண்ணுதான்...
கேட்டு ஒண்ணுதான்-சிநேகிதா!
என்ற வரிகளை அம்ஜத் பாடுவதில் அர்த்தம் விரிவடைகிறது.

ஆரியர் வழி வந்த ராமரும்....இஸ்லாமியர் வழி வந்த பாபரும்...
கைபர் கணவாய் வழியாக... இந்தியாவிற்க்குள் வந்த வந்தேறிகள்...
என்ற வரலாற்றை...
ரூட்டு ஒண்ணுதான் என்ற வரிகளுக்குள் பொதிந்து வைத்திருப்பதை கண்டு வியக்கலாம்.

பாபர் மஸ்ஜித் என்றும்...ராம ஜென்ம பூமியென்றும்....ஒரே இடத்திற்க்குள்  அடைந்து கிடப்பதை....கேட்டு ஒண்ணுதான் என மொழி பெயர்கிறார் வாலி.

இதற்க்கு பின்னால் வரும் அனைத்து வரிகளுக்கும் அர்த்தம்...
எல்.கே.ஜி குழந்தை கூட புரிந்து கொள்ளும்.

உள்ளதை சொல்வபவர்...சொன்னதை செய்பவர் நாமே...என்ற வரிகளை படமாக்கும் போது...பார், மேசை மேல் ஏற முடியாத
சிந்தி லால்வானியை...முஸ்லீம் அம்ஜத்தும்...அய்யங்கார் ராமும் தூக்கி விடுகின்றனர்.
இயலாதவர்களை... இயன்றவர்கள் தூக்கி விட வேண்டும் என்ற செய்தியாகத்தானே இருக்க முடியும!

அம்ஜத்தும்,ராமும் வாளை எடுத்துக்கொண்டு சண்டையிடும்போது... குழந்தைகள் கை தட்டி சிரிக்கிறார்கள்.
மதங்களுக்கிடையே சண்டையிடுவது சிறுபிள்ளைத்தனமானது என்ற உண்மையை உணர்கிறோம்.
ஒரு பொருட் பன் மொழியாக... மீண்டும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்.
மூவரும் த்ரீ மஸ்கட்டியர்ஸ் போல் கோமாளித்தனமாக சண்டைபோடுகிறார்கள்.
மதவாதிகள் போடும் சண்டை அத்தனையும்
கோமாளித்தனமானது என்பதை மீண்டும் உணர்கிறோம்.

சண்டைக்கு முடிவாக மூவரும் தோளிலிருக்கும் துண்டை கழட்டி ஒன்றாக கோர்த்து ரவுண்டு கட்டி ஆடுகிறார்கள்.
நட்பு ஒன்றால்தான் மத நல்லிணக்கத்தை அடைய முடியும் என்பதை ஆணித்தரமாக... ஆடியே.... காட்டுகிறார்.

பாடல் முடிந்த பிறகு மூவரும் தமது கடவுள் பெயரைச்சொல்லிக்கொண்டு நீச்சல் குளத்தில் குதிக்கின்றனர்.

அனைவரும் கடவுள்...நம்பிக்கைகளை வச்சுக்கங்க....
ஆனால்...அதை அவரவர்களுக்குள் வச்சுகிட்டு....
நட்பு என்ற வட்டத்துக்குள் வந்து விடுங்கள்..
அங்கே... களிப்பும் கொண்டாட்டம் மட்டுமே இருக்கும்.
இதுவே பாடலின் பைனல் பஞ்ச்.

இப்பாடலின் நடுவில்... அவ்வப்போது வீலர் என்ற வெள்ளைக்காரன் போட்டோ எடுப்பது போல் குறுக்கிடுகிறான்.
பாடல் தடைபடுகிறது.
இக்குறியீட்டை ஸ்கிரிப்டிலேயே எழுதியிருக்கிறார்.

இந்துவும்... முஸ்லீமும் ஒற்றுமையாக இருப்பது வெள்ளைக்காரனுக்கு பிடிக்காது.
அன்றும்...இன்றும்...என்றும்.
அந்த ஒற்றுமையை குலைப்பதில் அவன் என்றுமே மும்முரமாக இருந்தான் என்பதைத்தான்... குறியீடாக்கி உள்ளாரோ.

எனக்கு தெரிந்த ஒரு குறியீட்டை....
சொல்லாமல் பதுக்கி வைத்துள்ளேன்...கண்டு பிடியுங்கள்.
கண்டுபிடித்து விட்டால்... நீங்கள்தான் எம்.ஜி.யார்.
நான் என்.எஸ்.கே.

Jun 3, 2012

Hey Ram- குறியீடுகளின் களஞ்சியம் [2000/ஹேராம்=007]


ஹேராம் தொடரில் குறியீடு...குறியீடுன்னு... சொல்லிகிட்டே இருக்கானே...
அது என்ன?
சிலருக்கு... மட்டும் அந்த கேள்வி வரலாம்.
மன்னிக்கவும்...அவர்களுக்காக இந்த எளிய விளக்கம்.

சினிமா... குறியீடுகளால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கிறது.
குறியீடுகள்...
காட்சி
எழுத்து
பேச்சு
இசை
சப்தம்
இவை போன்றவைகளால் ஆனது.

குறியீடு என்றால்... ஆங்கிலத்தில்... செமியாட்டிக்ஸ்[Semiotics].
செமியாட்டிக்ஸ்.. வகைகளில் இரண்டை மட்டும் இப்போது பார்ப்போம்.

1..டினோட்டஷன் [Denotation]
கண்ணை மூடிக்கொண்டு ஒலிச்சித்திரம் கேட்டால்...மனக்கண்ணில் திரைப்படம் மட்டும் தெரிந்தால் டினோட்டேஷன்.
உதாரணம்...பராசக்தி,மனோகரா,வீரபாண்டிய கட்ட பொம்மன்.

2.கனோட்டேஷன் [Connotation ]
சிவாஜி படத்தில் ஸ்ரேயாவின் பாடல் காட்சி...


டினோட்டேஷன்காட்சியானது...ஸ்ரேயாவால்.....நமக்குள் கனோட்டேஷன் வகையில் இயங்குகிறது.
 கனோட்டேஷன்... இங்கே, செக்சுவல் கனோட்டேஷனாக.... நமது மூளையில் கொந்தளிக்கிறது.
ஸ்ரேயா எவ்வளவு காட்டப்படுகிறார்?...
மறைக்கப்பட்ட ஸ்மால் ஏரியாவில் இருப்பது என்ன?...
ஆடும் போது...கஞ்சத்தனமாக தைக்கப்பட்ட மார்பு கச்சை விலகி...
இன்னும் தெரியாதா?
என நம்ம மூளை ஜிவ்வென்று வேலை செய்யும்...
இப்படி... உங்கள் ஆழ் மனது அபிலாசைகளுக்கு செம தீனி போடுவார் இயக்குனர் சங்கர் .
இந்த தில்லாலங்கடியில் அவர் ஜித்தன்.

கமல் போன்ற மேதைகள் கனோட்டஷன் பிராசசை 
இண்டலக்சுவலாக... கையாள்வார்கள்.
நம்முள் சினர்ஜி [Synergy... 1+1=10] இயங்க வைத்து விடுவார்கள்.
திரையில் கண்ணால் பார்க்கும் ஒன்று...உங்கள் மூளையில் ஒன்றுக்கு பத்தாக நீங்கள் ஏற்க்கெனவே படித்த...பார்த்த...கேள்விப்பட்ட...என எல்லா ஏரியாவிலும் கனெக்ட் பண்ணும்.

உதாரணமாக... ஹேராமில்...
“ராமரானாலும்...பாபரானாலும்”....
பாடல் தொடக்கத்துக்கு போவோம்.



அம்ஜத்...பாடல் தொடங்கும் முன் இசைக்கலைஞர்களுக்கு...
என்ன மியூசிக் நோட்ஸ்?... என்பதை சைகையால் விளக்குகிறான்.
இந்த காட்சி அம்ஜத்... இசையிலும் வித்தகன் என ரிஜிஸ்டர் ஆகிறது.
ஏற்க்கெனவே சாகேத்ராம்... வீலர் பியோனோ வாசிக்கும் போது லால்வானி தோளில் பிங்கரிங் செய்த காட்சி கனெக்டாகி... இருவருமே இசை கற்றவர்கள் என கனெக்ட் ஆகிறது.
சென்னை கிரிஸ்டியன் காலேஜில் படித்தவர்கள்... என்ற டயலாக்கை... கனெக்ட் செய்கிறது.
கிறிஸ்டியன் காலேஜ்....வெள்ளைக்காரனால் நடத்தப்பட்டது கனெக்ட் ஆகிறது.
வெள்ளைக்காரன் தனக்கு அடிமை வேலை செய்ய இந்த இருவரையுமே மெக்காலே கல்வி திட்டத்தின் மூலமாக தயார் செய்திருப்பது கனெக்ட் ஆகிறது.
மெக்காலே திட்டத்தினால்... இந்தியர்களின் கலாச்சாரத்தையும்..
கல்வி முறையையும் உடைத்து...தனது கல்வித்திட்டத்தினால் மூளைச்சலவை செய்து..அடிமைகளாக்கி..1858லிருந்து 1947 வரை சுரண்டப்பட்டது... கனெக்ட் ஆகிறது.

நான் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு கொஞ்சம் படித்திருப்பதால்... இது  கனெக்ட் ஆகிறது.
படித்திராவிட்டால்...
அம்ஜத் ஏதோ மியுசிக் நோட்ஸ் வாசிக்க சொல்லி சைகை காண்பிக்கிறான் என்பது ரிஜிஸ்டர் ஆகும்.
சர்வர் சுந்தரத்தில்...
அவளுக்கென்ன...அழகிய முகம்.... அவளுக்கென்ன.... பாடலில்...
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி சைகை செய்வது கனெக்ட் ஆகும்.

மிகவும் படித்த மேதைகளுக்கு... இன்னும் கனெக்ட் பண்ணும்.
என் குருவி மூளைக்கு இவ்வளவுதான் எட்டியது.

பாடலுக்கு முன்னால் போட்ட... ஒரே ஒரு ஷாட் இவ்வளவு கனெக்ட் பண்ணுதே!
பாடல் எவ்வளவு கனெக்ட் பண்ணும்?
பாடலை திரும்ப ...திரும்ப பாருங்கள்...
அடுத்தப்பதிவில் ஷேர் பண்ணிக்கலாம்.

செமியாட்டிக்ஸ் பற்றி மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவுக்கு செல்லுங்கள்.http://en.wikipedia.org/wiki/Semiotics