Jun 7, 2011

Conviction-English[2010] பாசமலர்

தமிழ் சினிமாவில் மீண்டும் மீண்டும் படமாக்கப்படும் செண்டிமெண்ட்களில் முதன்மையானது அண்ணன் தங்கை.இதன் அடிப்படையில் வந்த முதன்மையான படம் பாசமலர்.சிவாஜி சாவித்திரி நடிப்பில் இப்படத்தில் கலங்காதவர் இருக்க முடியாது.இப்படம் தந்த உணர்ச்சி கொந்தளிப்பு சற்றும் குறையாத அனுபவமாக இருந்தது கன்விக்சன்.அபூர்வமாக ஹாலிவுட்டில் இது போன்ற நல்ல படம் வரும்.உண்மை சம்பவத்தை படமாக்கி இயக்கியவர் டோனி கோல்ட்வின்

ஹாலிவுட் சாவித்திரியாக வருபவர் ஹிலாரி சாங்.இந்த நடிப்பு ராட்சசி ஏற்க்கெனவே பாய்ஸ் டோண்ட் கிரை,மில்லியன் டாலர் பேபி படத்தில் நம்மை கலங்கடித்தவர்.தனது தேர்ந்த நடிப்பால் இப்படத்திலும் நம்மை  கட்டிப்போடுகிறார்.இவருக்கு சற்றும் குறையாமல் ஈடு கொடுத்து நம்மை வெல்கிறார் அண்ணனாக வரும் சாம் ராக்வெல்.இவரது அனாயசமான  நடிப்பு நமது ரகுவரனை ஞாபகப்படுத்தியது.இந்த இருவரது நடிப்புதான் படமே.
யான் பெற்ற இன்பத்தை பெற உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
இப்படத்தில் வரும் கதை உண்மைச்சம்பவம் என்பதிலேயே ஒரு கனம் மனதில் ஏறிவிடுகிறது.கென்னியை ஒரு பெண்ணை கொலை செய்த குற்றத்திற்க்காக கைது செய்து வலுவான சாட்சியங்களை தயார் செய்து ஜெயிலில் தள்ளுகிறாள் ஒரு போலிஸ்காரி.
தனது சகோதரனை வெளியே கொண்டு வர திறமையான வக்கீலை வைத்து வாதாடியும் தோற்றுப்போகிறாள் சகோதரி பெட்டி.
சாட்சியங்கள் வலுவாக இருந்தால் ராம்ஜெத்மலானி வாதாடினால் கூட ஜாமீன் கிடைக்காது.

தனது சகோதரனை வெளியே கொண்டு வர எல்லா முயற்சிகளும் தோற்றுப்போன நிலையில்  தானே வக்கீலாக முடிவெடுக்கிறாள்.
வக்கீல் படிப்பை ஒரு தவமாக மேற் கொள்கிறாள்.ப்தினெட்டு ஆண்டுகள் போராடிய பின்னர் வெற்றி பெறுகிறாள்.இப்போராட்டத்தில் இழந்தது அநேகம்.
பாசமலர்கள் இணையும் இறுதிகாட்சி ந்ம் மனதில் கல்வெட்டாய் பதியும்
.சகோதரி பெட்டி இது போன்ற அப்பாவிகளை  ஜெயிலில் இருந்து விடுவிப்பதையே ஒரு இயக்கமாக கொண்டு வாழ்ந்து வருகிறார் இன்றும்.

அண்ணன் தங்கை பாசத்துக்கு தமிழில் பாசமலர்,முள்ளும் மலரும்,கிழக்கு சீமையிலே என சொல்லிக்கொண்டே போகலாம்.ஹாலிவுட்டில் ஒன்றே ஒன்றுதான்.
அது கன்விக்சன்.

Jun 2, 2011

இடைவேளை

மே 20ம் தேதி ஒரு சிறு அறுவை சிகிச்சை.கழுத்தில் ஒரு கட்டியை டென்னிஸ் பால் சைசுக்கு செல்லமாக வளர்த்து வந்தேன்.என்னை மயக்கமடைய வைத்து எனக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக எடுத்து விட்டார் டாக்டர்.இப்போது பயாப்ஸி ரிப்போர்ட்டும் வந்து விட்டது.
எல்லாம் நார்மல்.
வீட்டுக்கு வந்ததும் என் மனைவி ஒரே ஒரு கண்டிசன் போட்டாள்.
“கம்ப்யூட்டர் பக்கம் போகக்கூடாது”
‘எப்போ போலாம்?’
 ‘10 நாள் அது கிட்டேயே போககூடாது’
‘சரி..தாயே...’
இந்த விடுமுறையில் தினமும் இரண்டு படம் பார்த்தேன்.
கொஞ்சம் தெம்பு வந்ததும் நண்பர்கள் வலைப்பக்கங்களை மேய்ந்து கமெண்ட் போட்டேன்.
இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக தேறி பார்த்து ரசித்த படங்களை பதிவிடுகிறேன்.
ஆப்பரேசன் தியேட்டருக்கு என்னை ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லும் போது ஒரு கேள்வி பிறந்தது.
அல்பசினோவை ஒரு படத்தில் முதல் காட்சியிலேயே ஸ்ட்ரெச்சரில்  கொண்டு செல்வார்கள். [பிரையன் டி பால்மா இயக்கத்தில் வந்தது]
அது என்ன படம்?
தெரிந்தால் சொல்லுங்கள்!