Sep 22, 2010

The divingbell and the butterfly-தன்னம்பிக்கையின் உச்சம்


பட்டர்ப்ளை என்ற பெயர் வந்தாலே பிரெஞ்ச் இயக்குனர்கள் கலக்கி விடுவார்கள் போல.....இப்படி ஒரு படத்தை எடுத்த இயக்குனர் Julian Schnabel க்கு முதலில் ஒரு பிரஞ்ச் கிஸ்.

விடாமுயற்ச்சியுடன்...தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதனின் உண்மைக்கதை.

42 வயதான Baubyக்கு தீடீரென்று ஸ்ட்ரோக் வந்து எல்லாமே செயல் இழந்து விடுகிறது....ஒன்றை தவிர....இடது கண் இமை மட்டும் துடிக்கிறது.இந்த நிலையில் தன்னுடைய சுயசரிதை எழுதி அதுதான் இந்தப்படம்..எப்படி எழுதினார்?????ஒரு நிமிசம் டைம் தருகிறேன்.கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் கலைஞரிடம் சொல்லி கலைமாமணி வாங்கி தருகிறேன்..மனிதமுயற்ச்சியின் உச்சத்தை தொட்டிருக்கிறார் இக்கதாநாயகன்..

மருத்துவ உதவியாளர் ஒவ்வொரு எழுத்தாகசொல்லிக்கொண்டு வரும்போது தேவையான எழுத்தில் இடது கண்ணை பிளிங்க் செய்வார்...இப்படி எழுத்துக்களை கோர்த்து வார்த்தைகளை உருவாக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த முயற்ச்சி விவரிப்பதற்க்கே எனக்கு தலை சுற்றுகிறது.

அடிப்படையில் இந்த இயக்குனர் ஒரு ஒவியர்..எனவே படத்தையும் ஒவியமாக வரைந்து தள்ளிவிட்டார்..இக்கதாநாயகனின் நிலை வைத்து நம்மை பிழிய பிழிய அழ வைத்து இருக்கலாம்..மாறாக கதாநாயகனுக்கு வரும் காதல்,காமம்,கோபம்,பாசம்,வெறுப்பு என்று அனைத்தையும் நம் மீதேபடரவிட்டது இயக்குனரின் வெற்றி..

படத்தின் ஆரம்பக்காட்ச்சிகளில் காமிராதான் கதாநாயகன்..இக்காட்ச்சிகளின் நேர்த்திக்கு ஒளிப்பவாளருக்கு அனுஸ்க்காவை வைத்து ஒரு உம்மா...

இந்தப்படத்தை தேர்வுசெய்து எழுத காரணம் இருக்கிறது.மதுரையில் இருந்து வந்து படுத்து விட்டேன்.பத்து நாள் பேதி.. எல்லாபார்ட்சும் தகறாறு பண்ணுகிறது.மனைவி டிவி,இண்டர்னெட்,ரீடிங் எல்லாவற்றுக்கும் தடை போட்டுவிட்டாள்..காஸ்ட் அவே பட டாம்ஹேங்க்ஸ் போல ஆகிவிட்டேன்..இன்னும் உபாதைகள் தீரவில்லை.கொஞ்சம் தெம்பு வந்ததும் முதல் முயற்ச்சியாக இப்படத்தை எழுதிவிட்டேன்...சற்று சிரமப்பட்டு...

ஆனால் எந்திரனுக்கு வரும் அதீத விளம்பரங்கள்,செய்திகள்,பில்டப்புகள் தரும் மரண அவஸ்தைக்கு மற்றதெல்லாம் ஜுஜுபி......
இந்தப்பதிவை என் இனிய மருத்துவர் டாக்டர் மனோகரனுக்கு காணிக்கையாக்குகிறேன்

Sep 15, 2010

மதுரை புத்தக்திருவிழா&கமல்

சிறுஇடைவெளிக்கு காரணம் மதுரை புத்தகதிருவிழா.
உலகசினிமாவுக்காக முதன்முறையாக எனக்கு ஸ்டால் தந்தார்கள்.
சற்று அலட்ச்சியமாகத்தான் சென்றேன்...
சால்ட் 30டிவிடி : பதேர்பஞ்சலி 5டிவிடி என்ற விகிதத்தில்.
மதுரை மக்கள் ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டார்கள்.
விற்றது சால்ட் 10 பதேர்பஞ்சலி 50.

மதுரையிலிருந்து 20 கிலோமீட்டர் தள்ளி ஒரு விவசாயி வந்தார்.
எங்கே புனுவல்?எங்கே தியோஎஞ்சலோபோலிச்?என்று என்னை மிரட்டிவிட்டார்.
என் ஸ்டாலுக்கு எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஸ்ணன்,ஜெயமோகன்,கலாப்ரியா,முத்துகிருஸ்ணன் ஆகியோர்வந்து வாங்கினார்கள்.
உலகசினிமா விற்பனை அபாரம்.
நன்றி மதுரை.....


இடைப்பட்டநாளில் கமல் பற்றி ஒரு உலகமகா யுத்தமே நடந்திருக்கிறது.
காட்பாதர்தான் தேவர்மகன்.
ஆனால் தரத்தில் காட்பாதருக்கு இணையானது.

அன்பேசிவத்தில் ஒரிஜினலை மிஞ்சியிருந்தார்.
ஒரிஜினலுக்கு ஏன் கிரிடிட் தரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு...
என் பதில் காப்பிரைட்தான் காரணம்.
ராயல்டி கொடுத்து மாளாது.
தமிழ்நாட்டையே எழுதிகேட்பார்கள் ஹாலிவுட் வியாபாரிகள்.

நூறாவது படமாக ராஜபார்வை எடுத்து ஹாமாம் வாங்க காசில்லாமல் தவித்தது சத்தியம்.
அவர் மட்டும் நடிக்காமல் இயக்கினால் அந்தப்படம் தமிழ்நாட்டுக்கு ஆஸ்கார்,கேன்ஸ் என்றுஅள்ளிக்கொண்டு வந்துவிடும்.

நடிப்புக்கு அவரது மெனக்கெடல் உலகில் எந்த நடிகனிடமும் கிடையாது.
உதாரணம் அபூர்வசகோதரர்கள்.
காலைமடக்கி இரும்புக்கம்பியால் கட்டி குள்ள அப்புவாக்கி நடித்து முடிந்தவுடன் சேரில் தூக்கி வைப்பார்கள்.
சூட்டிங் முடிந்து அனைவரும் சென்றுவிடுவார்கள்.
கமல் மட்டும் அசையாமல் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார் ரத்தஓட்டம் சீராவதற்க்கு.
கமலது அவஸ்தை காணச்சகியாமல் ஆச்சிமனோரமா கதறியேவிட்டார்.

நான் கமலின் திரைஉலகவாழ்வை சகலகலாவல்லவர் என்ற பெயரில் ராஜ் டிவியில் 52 வாரம் தொடராக தயாரித்து வெளியிட்டேன்.
என் வாழ்க்கையின் வசந்த காலம் அது.