Jul 22, 2010

Nazarin -Spanish \ வாழும் மகாத்மா



Nazarin[நாஸரின்]

இயக்கம் லுயி புனுவேல்

இவர் ஒரு மார்க்சியவாதி..நூறு சதவீத நாத்திகர்..இயக்குனர்களில் அக்மார்க் கலகக்காரர்.

முதல் இரண்டு படங்கள் சல்வெடார் டாலியுடன் இணைந்து பணியாற்றினார்.இவரது நாத்திக வெப்பம் தாங்காமல் டாலி வெளியேறினார்.இவரது எல்லா படங்களிலுமே சர்ரியலிசம் இருக்கும்.

இந்த முன்னுரையோடு இப்படத்தை அணுகுங்கள்.இந்த கவிதையின் உட்கூறுகள் பிடிபடும்.

இயேசுவை ஜெராக்ஸ் எடுத்து வாழும் இளம் பாதிரியார்தான் இப்படத்தின் நாயகன்.இருப்பதை கொடுத்து சிறப்புடன் வாழும் இலக்கணமாய் இருக்கிறார்.விளிம்புநிலை மக்களோடு வாழ்கிறார்.கொடுப்பதற்க்கு எதுவும் இல்லா சூழலில் அடைக்கலம் தேடி வருகிறாள் ஒரு பாலியல் தொழிலாளி.இங்கிருந்து துவங்குகிறது ஏழரைச்சனி.விரட்டி அடிக்கிறது திருச்சபையும் அதிகாரவர்க்கமும்.சமூகமும் இவரை சிலுவையில் தினமும் அறைகிறது .மனிதனாக இருப்பது அவ்வளவு எளிது இல்லை என்பதை உணர்த்தி விடை பெறுகிறது படம்.

இந்த மனித ஆத்மாவின் அழுத்தமான முகத்தை அற்புதமாக கேமரா பதிவு செய்துள்ளது.

அகத்தோற்றத்தில் நாத்திகத்தை பதிவு செய்த இப்படத்திற்க்கு வாடிகன் பரிசளித்தது .இதற்க்கு புனுவலின் பதில்.....Thank God.... நான் இன்னும் நாத்திகனாக இருக்கிறேன்..

நமக்கு இப்படி ஒரு சாமியார் இல்லையே என்ற ஏக்கம் எழுவதை தவிற்க்கமுடியவில்லை.நமக்கு வாய்த்தது எல்லாம் நித்தியானந்தாவாக இருக்கிறது.........ஹூம்.......

Jul 21, 2010

THE WHITE RIBBON - 2009 \ B / W வண்ணக்காவியம்


ஓய்ட் ரிப்பன் -2009 [ஜெர்மன்]
கதை,திரைக்கதை,இயக்கம் மைக்கேல் ஹெண்கே [Michael Haneke]
இப்படம் பிளாக்&ஒயிட்டில் எடுக்கப்பட்ட வண்ணக்காவியம்.
கீவ்லாஸ்கியின் ஒயிட், விஸ்காண்டியின் ஒயிட் னைட்ஸ்,ஜாபர் பனாகியின் ஒயிட் பலூன் வரிசையில் கொண்டாட வேண்டிய படம்...
வயதான ஆசிரியர் பிளாக்ஷ்பேக்கில் பயணிக்கிறது படம்.........
முதல் உலகப்போர் முந்தையகளத்தில் ஜெர்மானியர்களது அவஸ்தகளை அலசுகிறது.
அடுத்தடுத்து துன்பியல் சம்பவங்கள் கிராமத்தில் தொடர்ந்து நடைபெறுகின்றன..
ஏன்?எதற்கு?எப்படி என்று அலைபாயும் கதாபாத்திரங்களோடு நாமும் அலைபாய்கிறோம்.
எல்லா திருமணங்களும் உடனடியாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் தாமதித்தாவது வெறுத்துவிடும்..அவ்வெறுப்பின் விளிம்பில் இருக்கும் ஜமீண்தார் மனைவி....
உலகத்தையே மலக்குழியாக வெறுக்கும் இளைஞன்....
சட்டம் போட்டே ஒழுக்கத்தை நிலைநிறுத்த போராடும் பாதிரியார்...
நேர்மையான ஆசிரியரை தூய்மையாக காதலிக்கும் காதலி...
அக்காதலை நாகரிகமாக தள்ளிப்போடும் காதலியின் தகப்பனார்...
இப்படி நம் வாழ்வை அர்த்தப்படுத்தும் பாத்திரங்கள் அனேகம்....
ஆனந்தத்தை விட மகத்தானது துன்பம் என்பதை போதித்து விடைபெறுகிறது படம்..
இயக்குனரை , வாய்யா தமிழுக்கு.... என்று மனசு அடிச்சுக்குது....
வந்தா “ சிங்கம்” எடுக்க வைத்து விடுவார்கள் நம் கலை வியாபாரிகள்