Dec 2, 2013

தமிழ் சினிமா டைட்டிலுக்கு ‘மலையாள எழுத்தை’ பயன்படுத்தலாமா?

கோவா திரைப்பட திருவிழாவில் ‘தேசிய திரைப்பட ஆவணக்காப்பகம்’ 

கண்காட்சி அரங்கு அமைத்து இருந்தனர்.

இந்திய மொழிகளில் வந்த சிறந்த திரைப்படங்களின் போஸ்டரை 

காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

தமிழ் படங்களில் வேதம் புதிது, ஏழாவது மனிதன், நெஞ்சத்தை கிள்ளாதே

பெரியார் போன்ற படங்களின் போஸ்டர் ‘தமிழில்’ இருந்தது.



இயக்குனர் ஜான் ஆப்ரஹம் இயக்கி வெளி வந்த ‘அக்மார்க் தமிழ் படமான’ 


‘அக்ரஹாரத்தில் கழுதை’ பட போஸ்டர் ‘மலையாளைத்தில்’ இருந்தது.
தமிழ் எழுத்தை மலையாளத்தில் மாற்றி ‘ஜெயமோகன்’ வேலை பார்த்த 

புண்ணியவான் யாரோ?




மனிரத்னத்தின் ‘அஞ்சலி’ பட போஸ்டரும் ‘இந்தி’ பதிப்புக்கானது.




இந்தத்தவறை தேசிய ஆவணக்காப்பகம் தொடர இனியும் நாம் 

அனுமதிக்கக்கூடாது.

தேசிய திரைப்பட ஆவண காப்பகத்துக்கு இது குறித்து மின்னஞ்சல் அனுப்ப 

முடிவு செய்துள்ளேன்.

பதிவுலக நண்பர்கள், இப்பணியைச்செய்ய வேண்டி விரும்பி 

கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் குரல் ஒலிக்க வேண்டிய முகவரி :

National Film Archive of India,
P.O.Box No: 810,
Law College Road,
Pune - 411004.


nfaipune@gmail.com


Dec 1, 2013

கோவை டூ கோவா

நண்பர்களே...
கோவா திரைப்பட திருவிழாவில் 33 படங்களை மட்டுமே பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
ஒரு நாளைக்கு மூன்று திரைப்படங்களை மட்டுமே பார்க்க அனுமதிச்சீட்டு வழங்குகிறார்கள்.

துவக்க நாளான 20-11-1013 அன்று கோவா அரசின் சிறப்பு அழைப்பாளர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள்.
துவக்க நாள் படமாக ‘டான் ஜுவான்ஸ்’ திரையிடப்பட்டது.
உலக சினிமா இயக்குனர்களில் மிக முக்கியமான ஒருவரான ‘ஜிரி மன்ஸில்’ [Jiri Menzel ] இயக்கி இருந்தார்.
இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி ‘கோவா திரைப்பட திருவிழா’ பெருமை தேடிக்கொண்டது.


துவக்க விழாவை பார்க்க எனக்கு ஆர்வமேயில்லை.
ஆனால் துவக்க விழா படமான ‘டான் ஜூவான்ஸை’ எப்படியாவது பார்த்து விட வேண்டும் என திட்டமிட்டேன்.
துவக்க விழா நடைபெறும் அரங்கின் வாசலில் நின்று  ‘பிக்பாக்கெட்’ போல நோட்டமிட்டேன்.
சரியாக குறி வைத்து வலை வீசீனேன்.
 ‘மராத்திய மீன்’ சிக்கியது.
அவர் துவக்க விழாவுக்கு வரும் நடிகர்களை பார்க்க மட்டுமே வந்தவர்.
அவரிடம் இருக்கும் துவக்க விழா திரைப்படம் பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டை மிக்க மகிழ்ச்சியுடன் என்னிடம் கொடுத்தார்.
எனக்கு அனுமதிச்சீட்டு வழங்கிய  ‘மராத்திய கர்ணன்’,
ரஜினியை மிகவும் பாசத்துடன் விசாரித்தார்.
துவக்க விழாவில் கமல் கலந்து கொண்டது அவருக்கு ஏமாற்றம் அளித்திருக்கக்கூடும்.

கமல் கோவா திரைப்பட திருவிழா துவக்க விழாவில் கலந்து கொள்வது ‘நிகழ்ச்சி நிரலில்’ இல்லை.
ஆனால் அடுத்து நாள் கோவா பத்திரிக்கைச்செய்திகளில் கமலே முதன்மையாக இருந்தார்.
ஜிரி மன்ஸிலை புகழ்ந்து தள்ளியே தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார்.

துவக்க விழா திரைப்படத்தை துவக்கிப்பேச  ‘சுகாசினி’ வந்திருந்தார்.
சுருக்கமாக நான்கு வரிகள்தான் பேசினார்.
அவ்வளவு சுருக்கமான... மொக்கைப்பேச்சை உலகில் யாராலும் வழங்கி இருக்க முடியாது.

விழா நாயகர்  ‘இயக்குனர் ஜிரி மன்ஸிலின்’ ஜாலியான பேச்சு  அனைவரையும் வசீகரித்தது..
ஆனால் அவரது படம் ‘டான் ஜூவான்’ வசீகரிக்கவில்லை.
சிங்கத்துக்கு வயதாகி விட்டது.


ஜிரி மன்ஸில் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல் இதோ...
[உபயம்: விக்கிப்பீடீயா ]
YearEnglish titleOriginal titleNotes
1960Prefabricated HousesDomy z panelůSchool film
1963Our Mr. Foerster DiedUmřel nám pan FoersterSchool film
1965Concert '65Koncert 65Short documentary
1965Crime at the Girls SchoolZločin v dívčí školeSegment "Crime at the Girls School"
1966Pearls from the DeepPerličky na dněSegment "Smrt pana Baltazara" (The Death of Mr. Balthazar)
1966Closely Watched TrainsOstře sledované vlaky
1968Crime in a Music HallZločin v šantánu
1968Capricious SummerRozmarné léto
1969Larks on a StringSkřivánci na nitiBanned and not released until 1990
1974Altered LandscapesProměny krajinyShort documentary
1974Who Looks for Gold?Kdo hledá zlaté dno
1976Seclusion Near a ForestNa samotě u lesa
1978Those Wonderful Movie CranksBáječní muži s klikou
1980Cutting It ShortPostřižiny
1981Tři v tomTV theatre
1982KrasosmutněníTV film
Dr. Johann Faust, Praha II., Karlovo nám. 40TV theatre
1984The Snowdrop FestivalSlavnosti sněženek
1985My Sweet Little VillageVesničko má středisková
1986Chocolate CopDie Schokoladenschnüffler
1989End of Old TimesKonec starých časů
1981AudienceTV film
1991Beggar's OperaŽebrácká opera
1993Life and Extraordinary Adventures of Private Ivan ChonkinŽivot a neobyčejná dobrodružství vojáka Ivana Čonkina
1998Jacobowski a plukovníkTV film
2002Ten Minutes OlderSegment "One Moment"
2006I Served the King of EnglandObsluhoval jsem anglického krále
2013The Don Juans[7]Donšajni[8]
துவக்க நாளுக்கு முந்தைய நாளான 19-11-2013 அன்று,  ‘பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்புக்காட்சியில்’...
‘பன்றி’ என்ற மராத்திய திரைப்படம் பார்த்தேன்.
என்னா படம் அது!.
மிரட்டி விட்டார் அறிமுக இயக்குனர் நாகராஜ்.


FANDRY | Marathi | 2013 | Directed by : Nagaraj Manjule
இப்படத்தின் இயக்குனர் நாகராஜுக்கு இதுவே முதல் படம்.
இதற்கு முன்பு ஒரு குறும் படம் இயக்கி தேசிய விருதை பெற்று உள்ளார்.

கிராமத்தில் பன்றியை வளர்த்து மேய்க்கும் ஒரு தலித் குடும்பத்தின் வாழ்வியலை எந்த வித பாசாங்கும் இல்லாமல் அப்பட்டமாக பதிவு செய்து இருக்கிறார்.
‘கால்ச்சட்டை காதலை’ சொல்வது போல் மிகப்பெரிய தலித் அரசியலை பேசி இருக்கிறார் இயக்குனர்.

நகைச்சுவையை படம் முழுக்க விரவி நய வஞ்சக ஜாதி அரசியலை ‘நச்சென’ சொல்லி இருக்கிறார்.
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என சினிமாவின் அத்தனை துறைகளும் அற்புதமாக ஜொலிக்கிறது.

படத்தின் இறுதி காட்சியில் ‘உயர் ஜாதி வெறியனை’ பார்த்து...
‘தேவடியாப்பையா’ என தலித் சிறுவன் உக்கிரமாக உச்சரிக்கிறான்.
இதை விட பொருத்தமான வசனம் உலகிலேயே இருக்க முடியாது.

இந்தப்படம் மும்பை திரைப்பட விழாவில் ‘நடுவர்கள் சிறப்பு விருதை’ பெற்றுள்ளது.
ஜீ தொலைக்காட்சி குழுமம் இப்படத்தை நாடெங்கும் வரும் ஜனவரியில் திரையிட இருக்கிறது.
உலக சினிமா நேயர்கள் தவற விட்டு விடாதீர்கள்.




அடுத்தப்பதிவில் சந்திப்போம்.