
எனது ஆதர்ச இயக்குனர் மீண்டும் ஜெயித்திருக்கிறார் வழக்கமான மழலைப்பட்டாளங்களோடு.......
சில்ட்ரன் ஆப் ஹெவன்,கலர் ஆப் பாரடைஸ் வரிசையின் ஹாட்ரிக் இது.
குடும்பத்தோடு குதுகலிக்க....,குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க..... படம் எடுப்பதில் இணையாக மஜிதிக்கு இணையாக இந்த கிரகத்தில் யாருமே இல்லை .முன்னே ஒரு மகான் இருந்தார் ..அவர் பெயர் சாப்ளின்.
அழகிய கிராமத்து கவிதை ,நகரத்தின் நெருக்கடிகளில் குத்துப்பாட்டாகி, சீரழிவதை தன் பாணியில் நாகரீகமாக சொல்லியிருக்கிறார் மஜிதி .
ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...ஈரானில் நான்குக்கும் மேற்ப்பட்ட இடத்தில் சென்சார் என்ற விபத்தை தாண்ட வேண்டும்..கதையில்...காட்சியில்...கவர்மென்டை கொஞ்சம் காயப்படுத்தினால் போதும்..ஜெயிலில் போட்டு காயடித்து விடுவார்கள்..
சமீபத்திய உதாரணம் ஜாபர் பனாகி...
அழகிய கவிதை ஒன்றை காட்சியாக்கி அதன் உள் அர்த்தத்தில் சாட்டை எடுத்து சாடியிருப்பார் மஜிதி....இது அவரது ஸ்டைல்....
உதாரணம் இப்படத்திலேயே இருக்கிறது.
சாக்கடை குழியாக இருக்கும் ஒரு பாழடைந்த கிணற்றை சுத்தப்படுத்தி மினரல்வாட்டர் கிணறாக மாற்றி விடுவார்கள் இவரது
மழலைப்பட்டாளங்கள்..இந்தக்கிணற்றில் இ. ராஜாவின் இசையில் ஜானகி மாதிரி பாடுகிறது ஒரு சிட்டுக்குருவி....அடடா...என்ன ஒரு அழகு...இந்தக்காட்சி சாகும் வரை என்னுள் இருக்கும்..
இதன் உள்அர்த்தமாக எனக்குப்பட்டது....முன்னோர்களால் சாக்கடையாக்கப்பட்ட ஈரானை வருங்கால சந்ததியினர் சுத்தப்படுத்தி சிட்டுக்குருவி போல் பறக்கவிடுவார்கள்..அங்கு பழமை என்ற பெயரில் பயங்கரவாதம் இருக்காது . [உங்களுக்கு வேறு மாதிரி தோன்றலாம்.அதை எனக்கு எழுதுங்கள் ]
மஜிதி போன்ற இயக்குனர் வரும் வரை நாம் எந்திரன் பார்த்து சுகித்திருப்போம்.....