Jan 3, 2016

சென்னை திரைப்பட திருவிழா 2016.

நண்பர்களே...
சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை,
நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார்.
கீழ்க்கண்ட இணைப்பில் செல்க...

http://www.kovaiaavee.com/2015/12/recommendations-for-chennai-film.html

நண்பர் எழுத்தாளர் விஸ்வாமித்ரன் அவர்கள் ‘கேரள திரைப்பட திருவிழாவில்’ கலந்து கொண்டவர்.
அவரது பரிந்துரை இதோ...
https://web.facebook.com/notes/viswamithran-sivakumar/iffk-2015/10153727675679536

https://web.facebook.com/notes/viswamithran-sivakumar/iffk-2015/10153727675679536

https://web.facebook.com/notes/viswamithran-sivakumar/iffk-2015/10153727730444536
 
வாருங்கள்...
காவியங்களை காண்போம்.

Dec 12, 2015

படிக்கட்டுகள் = பகுதி 2



நண்பர்களே...
முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன்.


ஒரு விளம்பரப்படத்தில், இன்றும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் ‘மாடலாக’ வந்தார்.
ஒரு ‘சாப்ட்வேர் கம்பெனி’ மேலாளராக அவரை ‘காஸ்டிங்’ செய்து இருந்தேன்.
அதற்கேற்ற ‘ஆடையை’ அணியச்செய்தேன்.
‘கிளையண்டுக்கு’ அந்த ஆடை பிடிக்கவில்லை.
100 வருட பராம்பரியம் மிக்க நிறுவனத்தின் உரிமையாளர்,
‘கிளிவேஜ்’ தெரியும்படி...ஆடையை ‘கிழிக்கச்சொன்னார்’.
“ நம்ம விளம்பரப்படத்துக்கு ‘கிளிவேஜ்’ தேவையில்லை” என்பதை எடுத்துச்சொல்லி ‘கன்வின்ஸ்’ செய்தேன்.
ஷூட்டிங் தொடர்ந்தது.
மதிய இடைவேளையில் ‘கிளையண்டின்’ நண்பர் மூலம் இடைஞ்சல் வந்தது.
அவர் ‘உயர்நீதிமன்ற வழக்கறிஞர்’.
என்னுடைய ‘கான்செப்டுக்கு,
புதிதாக டயலாக் எழுதி வாசித்து...
“எப்படி இருக்கிறது” என்றார்.
“ நான் உங்களுக்கு பதிலாக உயர்நீதி மன்றத்தில் வாதாடியது போல் இருக்கிறது”என்றேன்.
ஒரே டயலாக்கில் ‘தெறிக்கவிட்டேன்’.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘கிளையண்ட்’,
‘கழிவறையில் உட்கார்ந்து கண நேரம் யோசித்த ஐடியாவை’ செப்பினார்.
“ எங்களது ‘ப்ராடக்ட்டை’ ஊற்றிக்குளித்தால் ‘உடம்பு வலி’ போகும்.
எனவே ‘மாடலை’ நிர்வாணமாக குளிப்பது போல் எடுங்கள்” என்றார்.
என்ன சொன்னாலும் கேட்காமல் அடம்பிடித்தார்.
என்ன செய்தேன்?
மேக்கப்ரூமில், கதவை சாத்திக்கொண்டு அழுதேன்.
கண்ணீரை துடைக்க அவகாசம் தேவை.
பொறுத்து இருங்கள்.