நண்பர்களே...
விஸ்வரூபம் பெற வேண்டிய நியாயமான வெற்றியை பெற்று விட்டது.
பெற்ற வயிறு குளிர்ந்து விட்டது...என்பதை சமீபத்திய கமலின் பேட்டியில் உணர முடிந்தது.
“இங்கிவனை யான் பெற என்ன தவம் செய்தோம்” என தமிழன்னை மகிழ்ந்து கொண்டிருக்கிறாள்.
இஸ்லாமிய சகோதரர்களிடம் கமல் உரிமையுடன் பிரியாணி கேட்டதில் உள்ள நியாயங்களை இனி பார்ப்போம்.
அதே நேரத்தில், கமல் அமெரிக்காவிற்கு படம் நெடுகிலும் ஆப்படித்த இடங்களையும் விளக்குகிறேன்.
ஏனென்றால் பதிவர்கள் சிலர் திட்டமிட்டு,
விஸ்வரூபம் அமெரிக்காவை தூக்கி பிடித்திருப்பதாக விஷமத்தனமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
[ 1 ] விஸ்வரூபம் படத்தை ‘தீமெட்டிக் ஆக்ஷன் திரில்லராக’ படைக்க ஆசைப்பட்ட படைப்பாளி கமல் தனது முதல் ஷாட்டை ‘தீமெட்டிக்காக’ புறாக்களில் ஆரம்பிக்கிறார்.
புறாக்கள் பறக்கும் கூண்டிலேயே, படத்தின் டைட்டில்களை தொடருகிறார்.
டைட்டில் இறுதியில், ஒரு இஸ்லாமியர் ஒரு புறாவை பிடிப்பார்.
அடுத்த ஷாட்டில் பறக்க விடுவார்.
புறா அமெரிக்க கொடியை நோக்கி பறக்கும்.
புறாக்கால்களில் ‘சீசியம்’ அடைக்கப்பட்ட குழல்களை கட்டி விட்டு, அமெரிக்க கண்காணிப்பு சாதனங்களை ஏமாற்றி...
மிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பை நிகழ்த்தப்போவதாக...
பிளாஷ்பேக்கில், ஒமர் கதாநாயகனிடம் விவரிக்கும் போதுதான்...
படத்தின் ஆரம்பக்காட்சிகளுக்கு விளக்கம் கிடைக்கும்.
[ 2 ] இப்படி படம் முழுக்க, கேள்வியை ஒரு இடத்திலும்...
விடையை மற்றொரு இடத்திலும் வைத்து கமல் படைத்துள்ளார்.
[ 3 ] புரியாதவர்கள் படத்தை பலமுறை பார்க்க வேண்டும்.
சில புண்ணாக்கு பதிவர்கள், விஸ்வரூபத்துக்கு விமர்சனம் எழுதுகிறேன் பேர்வழி என தங்கள் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.
[ 4 ] கோடம்பாக்க ஜாம்பவான்களே நடுங்கி...ஒடுங்கி கிடக்கிறார்கள்.
[ 5 ] ‘கமல் அமெரிக்க அடிவருடி’ என்ற குற்றச்சாட்டுக்கு வருவோம்.
ஆரம்பக்காட்சியில் அமெரிக்க கொடியை காட்டும் போது,
‘டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட் வைத்திருப்பார்.
காமிரா ‘செமி டாப் ஆங்கிளில்’ இருக்கும்.
நம்முடைய பார்வையில் அமெரிக்க கொடி கீழே இருக்கும்.
அமெரிக்க இயக்குனர்கள் பிற நாட்டுக்கொடியை,
இதே முறையில் ஷாட் வைத்து மட்டப்படுத்துவார்கள்.
பதிலடி கொடுத்து கமல் ஷாட் வைத்துள்ளார்.
இதெல்லாம் விளங்கி விடுமா ‘உண்மைத்தமிழனுக்கு’.
[ 6 ] கதாநாயகனை தமிழ் பேசும் இந்திய முஸ்லிமாக படைத்ததற்கு,
படைப்பாளி கமலுக்கு முதல் மரியாதை செலுத்த வேண்டும்.
அவன் பிராம்மணனாக மாறு வேடமிட்டு அமெரிக்காவில் தங்கும் போதும் ‘தொழுவதற்கு’ செல்லும் இஸ்லாமிய வழமை மாறாத தன்மையுடன் இருப்பதாக படைத்து அதன் மூலம் திரைக்கதை திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் படைப்பாளி கமல்.
[ 7 ] ஒமரின் ஆட்கள் கதாநாயகனையும்,அவனது மனைவியையும் கட்டி வைத்து உதைத்து விசாரிக்கும் போது முதலில் தனது பெயர் ‘தாபிக்’ எனக்கூறுவான்.
மேலும் மேலும் அடி விழவே...தனது பெயர் ‘நாசர்’ என மாற்றிக்கூறுவான்.
இந்த இரண்டு பெயர்களுக்கும் உரிய கதாபாத்திரங்கள்
‘ஆப்கானிஸ்தான் பிளாஷ்பேக்கில்’ வருவார்கள்.
[ 8 ] ஒமரின் ஆட்கள் விசாரிக்கும் போது...
கதாநாயகனான, இந்திய முஸ்லீம் உளவுத்துறை அதிகாரி...
தனக்கு பிடித்தமான தாபிக்-நாசர் என்ற இரண்டு பெயர்களையும்...
தனது புனை பெயராக பயன்படுத்துகிறான் என காட்சி அமைத்துள்ளார் படைப்பாளி கமல்.
[ குழலூதும் கண்ணனை பிடித்ததால்தான், ‘முத்தையா’ கண்ணதாசனாக பரிணாமம் பெற்றார்]
[ 9 ] ‘தாபிக்’ ...என்பவர் ஜிகாதி அல்ல என்றே ஒமர் அறிமுகப்படுத்துவார்.
தாபிக்,பண்புள்ள விவசாயி மற்றும் வியாபாரி என்றே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
‘நாசர்’ ...ஒமரின் மகனாக இருந்தாலும் தான் போராளியாக விரும்பவில்லை எனவும் டாக்டராவதே தனது லட்சியமாகக்கூறுவான்.
தாயிடம் விளையாடும் போது கூட அவன் டாக்டராக மாறி விளையாடுகிறான்.
[ 10 ] தாபிக், நாசர் இருவருமே, கதாநாயகனான- இந்திய உளவுத்துறை அதிகாரியின் நடவடிக்கையின் மூலமாகவே பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
இந்தக்குற்றவுணர்ச்சி கதாநாயகனுக்குள் ஊறிக்கிடப்பதை...
“ அழிக்க முடியாத பாவம் என் நெற்றியில எழுதியிருக்கு” என்ற வசனத்தின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் படைப்பாளி கமல்.
தாபிக், நாசர்...இந்த இரு காரெக்டர்களின் பெயரை,
கதாநாயகனான இந்திய முஸ்லிம் தனது புனை பெயராக பயன்படுத்துவதின் மூலமாக படைப்பாளி கமல் கூறும் 'REDEMPTION SEEKING' முயற்சி விளங்குகிறதா ?
[ 11 ] தாலிபனாக பிரதிபலிக்கப்படும் ஒமரின் ஆங்கில மொழி வெறுப்பு,
பெண்ணுரிமை மறுப்பு, பாட்டு...நடனம் போன்ற கலைகளின் மீது நாட்டமுடையோருக்கு வழங்கப்படும் தண்டனைகள்...
என படைப்பாளி கமல் மிகச்சரியான அளவில் இத்திரைக்கதையில்
‘ஆப்கன் மீது வெள்ளைக்காரர்களால் திணிக்கப்பட்ட விளைவுகளை’ பிரச்சனைகளாக தொட்டுக்காட்டி உள்ளார்.
[ 12 ] தாலிபன் பற்றி நீங்கள் இன்னும் விரிவாகத்தெரிந்து கொள்ள,
இரண்டு உலக சினிமாக்களை பரிந்துரைக்கிறேன்.
# ஒசாமா [ OSAMA \ 2003 \ Afghanistan \ Directed by Siddiq Barmak ]
# காந்தகார் [ KANDAHAR \ 2001 \ Iran \ Directed by Mohsen Makhmalbaf ]
[ 13 ] ஆப்கானிஸ்தான் கிராமத்தை,
படை விமானங்கள் குண்டு போட்டு சீரழித்திருப்பார்கள்.
சீரழிந்த மலைக்கிராமம் திரையில் காட்டப்படும் போது,
கழுகின் குரலை மட்டும் பின்னணி சப்தமாக ஒலிக்கச்செய்திருக்கிறார் படைப்பாளி கமல்.
கழுகு = அமெரிக்க தேசியப்பறவை = பிணம் தின்னும் குணம் கொண்ட பறவை.
.
கமலை, ‘அமெரிக்க அடி வருடி’ என அலறும் அறிவாளிகளே!
இதற்கு வேறு அர்த்தம் சொல்ல முடியுமா உங்களால் ?
[ 14 ] சரித்திரத்தின் பக்கங்களை உரசிக்கொண்டு பிறந்த வசனங்கள் இவை...
ஒமர் : அப்பன் இல்லாம வளர்ற பசங்க ரொம்ப உஷாரா இருப்பாங்க....
[ சிரித்து விட்டு ] சும்மா தமாஷ்.
விஸாம் : அப்பன் யாரென்றெ தெரியாத பசங்க...
அதை விட உஷாரா இருப்பாங்க...
[ இடைவெளி விட்டு ] தமாஷ்.
இந்த வசனத்துக்கு அர்த்தம் வேறொரு காட்சியில் கிடைக்கும்.
மூதாட்டி : பிரிட்டிஷ்காரன் வந்தான்....
ரஷ்யாக்காரன் வந்தான்....
அப்புறம் தாலிபான்...
அமெரிக்கா...
இப்ப நீ வந்திருக்க...
முன்னாடி வால் முளைத்த குரங்குகளா...
ஆப்கானிஸ்தானை சீரழித்தவர்களை...
மூதாட்டியின் வசனம் மூலமாக அம்பலப்படுத்துகிறார் படைப்பாளி கமல்.
அனைவருமே ஆப்கான் பெண்களை சீரழித்தவர்கள்தான்.
ஒமரின் தாயாரும் இப்படி சீரழிக்கப்பட்டவர்தான்.
ஒமரின் வயதை கணக்கிட்டு...
அக்காலக்கட்டத்தில் ஆப்கானில் நுழைந்தவர்களை கணக்கிட்டால்...
ஒமரின் தாயாரை சீரழித்தவர்கள் யாரெனெத்தெரியும்.
இந்த சரித்திர சோக விளைவுகளின் காரணகர்த்தாக்களை பற்றி என்றாவது
‘அமெரிக்க அடி வருடி’ பதிவாளர்கள் எழுதியிருக்கிறார்களா?
[ 15 ] “ அமெரிக்கர்கள் பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்” ...
என்ற வசனம் நிறைய பேரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வசனம் பேசப்பட்ட பிறகு அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தகர்த்தெறிவதை படமாக்கியிருப்பார் படைப்பாளி கமல்.
அமெரிக்கர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல...
முதலில் நம்மிடம் நம்பிக்கையை விதைப்பார்கள்...
செயல்பாட்டின் மூலமாக தகர்த்தெறிவார்கள்...
என்றே இக்காட்சியின் மூலமாக விளக்குகிறார் படைப்பாளி கமல்.
இப்படத்திற்கு முழுமையான விமர்சனம்,
‘விஸ்வரூபம்- இரண்டாம் பாகம்’ வெளி வந்த பிறகுதான் எழுதமுடியும்...
எழுத வேண்டும்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
//இதெல்லாம் விளங்கி விடுமா ‘உண்மைத்தமிழனுக்கு’.//
ReplyDeleteஅவருக்கு மட்டுமா தமிழ் பேப்பரில் எழுதினவருக்கும் கூட...
"முன்னாடி வால் முளைத்த குரங்குகளா" இத விட்டுடீங்களே
//அப்பன் யாரென்றெ தெரியாத பசங்க...
அதை விட உஷாரா இருப்பாங்க...//
என் நண்பர், திரு. கஃபூர் குவைதில் டாக்ஸி ஓட்டுபவர் இதையே விருந்தாளிக்கு பிறந்தவனுங்க என்று கூறுவார்.
\\\"முன்னாடி வால் முளைத்த குரங்குகளா" இத விட்டுடீங்களே \\\
Deleteநண்பரே இதன் அர்த்தம்... முன்னாடி வால் = ஆண் குறி.
உலகம் முழுக்க யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்களே.
வியட்நாம்,ஆப்கானிஸ்தான்,இராக் என அமெரிக்க ராணுவம் பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்டது கணக்கிலடங்காதது.
அதனால் எழுந்த தார்மீகக்கோபத்தை...மூதாட்டியாரின் வசனத்தின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ‘அமெரிக்க அடி வருடியென பட்டம் சூட்டப்பெற்ற’ கமல்.
>>>> //அப்பன் யாரென்றெ தெரியாத பசங்க...
அதை விட உஷாரா இருப்பாங்க...//
என் நண்பர், திரு. கஃபூர் குவைதில் டாக்ஸி ஓட்டுபவர் இதையே விருந்தாளிக்கு பிறந்தவனுங்க என்று கூறுவார்.<<<<
நண்பரே...மன்னிக்கவும்.
தங்கள் கூறிய கருத்து பிழையானது.
தங்கள் நண்பர் கூறுவது விஸ்வரூப வசனத்துக்கு பொருந்தாது.
‘விருந்தாளிக்கு பொறந்தவன்’ என்ற சொல்லாடல்... விருந்தாளியுடன் ஒரு பெண் சம்மதித்து கள்ள உறவு வைத்ததனால் பொறந்தவன் எனபதே சரியான அர்த்தம்.
இந்திய அமைதிப்படை, தமிழச்சியை கற்பழித்து பிறந்த
தமிழ் மகனை ‘விருந்தாளிக்கு பிறந்தவன்’எனச்சொல்ல முடியாது.
விஸ்வரூபம், பல முறை பார்த்து...புரியாததை புரிந்து கொள்ள வேண்டும்.
ReplyDeleteபுரிந்தவர்களிடம் விவாதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அல்லது புரிந்தது போல் நடித்து ‘மூடிக்கொண்டு’ இருக்க வேண்டும்.
பதிவெழுதி மாட்டிக்கொள்ளக்கூடாது.
இந்த லட்சணத்தில்,
திருட்டு வீடீயோவில் மட்டும் படம் பார்த்து ஒரு பதிவர்
பதிவெழுதுகிறார்.
விஸ்வரூபப்பதிவுகள் பின்னால் இருக்கும் அரசியல் விளங்கவில்லை.
நானும் அந்த பதிவை பார்த்தேன்.. என்ன வென்று சொல்வது... கமல் என்ற ஒரு படைப்பாளி, தான் வியந்து பார்க்கும் விஷயத்தை தன் மக்களும் பர்க்கவேன்றும் என்று நினைப்பது குற்றமா!! என்னை பொறுத்தவரை இதில் உள்ள அறிவியலை தான் பார்க்கிறேன். எப்படி தசாவதாரத்தில் சோடியம் குளோரைடு என்ற சாதாரண கெமிக்கல் பெரிய ஆக்க சக்தியை தடுத்ததோ அது போல இதில் பாரடே பிலிம்... பாமர மக்களுக்கு இது என்ன சப்புனு முடிஞ்சுதுன்னு நினைப்பான். ஆனால் அதில் உள்ள அறிவியல் அவனுக்கு புரிய வாய்ப்பில்லை...
ReplyDeleteமுழு படத்தையும் உள்வாங்கிக்கொள்ளமலே (அந்த) தமிழன் அவர்கள் எழுதி இருக்கிறார்...நன்றாக புரிந்து கொண்டு பிடிக்கவில்லை என்று சொல்வது வேறு .... ஒன்றும் புரியவில்லை அதனால் பிடிக்கவில்லை என்று சொல்வது வேறு. இதில் அவர் இரண்டாம் பட்சம்...
அமெரிக்காவில் வாழும் அத்துணை அவர்களும் கோழி சாப்பிடுகிறார்கள் என்று உங்களுக்கு ஏன் தெரியவில்லை. .. வெளி நாடுகளில் மாமிசம் இல்லாமல் உயிர் வாழ முடியாது...
உங்களின் சீன் by சீன் விமர்சனத்தை எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன்.
Kesavan.
வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி நணபரே.
Deleteஇரண்டாம் பாகம் வரட்டும்.
சேர்த்து எழுதி விடுகிறேன்.
perect and awesome review
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி நண்பரே.
Delete//“ அமெரிக்கர்கள் பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்” ...
ReplyDeleteஎன்ற வசனம் நிறைய பேரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல...
முதலில் நம்மிடம் நம்பிக்கையை விதைப்பார்கள்...
செயல்பாட்டின் மூலமாக தகர்த்தெறிவார்கள்...///
தலைவணங்குகிறேன் சார்!!!....
நன்றி நண்பரே.
Deleteவசூல் சாதனைகளை பற்றிய பதிவுகளை உங்களிடம் எதிர் பார்க்கிறேன்.
கமல் அமெரிக்க அடிவருடியா?! விஸ்வரூபம் அமெரிக்காவுக்கு கமல் அடித்த ஜால்ராவா? ஆம் எனில் இதை படிக்கவும் goo.gl/fb/4IA5f :)))
ReplyDeleteநன்றி.
Deleteஅப்பதிவை படித்து விட்டேன்.
மிகவும் அங்கதச்சுவையுடன் எழுதப்பட்டுள்ளது.
அருமையான பதிவு - மரியாதைகள்
ReplyDeleteஇந்த படத்தை பொறுத்த வரை - சாமார்த்தியமான நேர்மையான ஒரு படைப்பு.
கமல் என்ற படைப்பாளி தன் மக்களின் (ரசிகர்களின் ) மீதி பெரும் நம்பிக்கை வைத்து நீண்ட நாட்களாக போராடி வருகிறார். அவர் தம் முயற்சிகள் பலன் கொடுக்க தொடங்கி விட்டன.
நன்றி நண்பரே.
Deleteதானும் வளர்ந்து...
தான் சார்ந்திருக்கும் துறையை வளர்த்த...
ரசிகர்களின் ரசனையையும் மேம்படுத்த...
90 கோடி ரிஸ்க்கில் எடுக்கப்பட்ட படம் விஸ்வரூபம்.
இப்படத்தின் வெற்றி இன்னும் ரிஸ்க் எடுக்க அவரை ஊக்கப்படுத்தும்.
எனக்கு மிகப் பிடித்த காட்சி:
ReplyDeleteதன் இலக்கு எனத் தெளிவாக தெரிந்த சிறுவன், கமல் அவனை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்ட எத்தனிக்கும் போது, "I am not a child " என சொல்லி விட்டு நகர்வதும், சகதாலிபன்களால் மூளைச் சலவை செய்யபட்ட இளைஞன் தானாக ஊஞ்சலில் அமர்ந்து கமலை ஆட்ட சொல்வதும், அற்புதம்!
#அழகிய முரண்!!!
ஹாலிவுட் ஆக்ஷன் படங்களில் இத்தகைய காட்சிகள் இருக்காது.
Deleteஐரோப்பிய கலைப்படங்களில்தான் இத்தகைய காட்சிகள் இருக்கும்.
தமிழ் படத்தில் கமல் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்.
மற்றவர்கள் தொடர வேண்டும்.
Fantastic post!! This is a big nose cut for the guy who wrote a dumb review about Viswaroopam in the Savukku webside
ReplyDeleteநன்றி.
DeleteGood One.. whoever criticizes Kamal sir without understanding the story, they must read this article. Especially BS Thamilan..
ReplyDeleteGood One.. whoever criticizes Kamal sir without understanding the story, they must read this article. Especially BS Thamilan..
ReplyDeleteGood article and nice explanations about the movie for those who just writes articles /criticizes kamal without understanding the story.
ReplyDeleteBS thamilan must read.
1st wknd Chennai BO Collections
ReplyDeleteEndhiran - Rs.2,02,38,075 (894 shows)
Vishwaroopam - Rs.3,06,40,101 (891 Shows)
தகவலுக்கு நன்றி நண்பரே.
Deleteமிக மிக அருமையான விமர்சனம்//‘கமல் அமெரிக்க அடிவருடி’ என்ற குற்றச்சாட்டுக்கு வருவோம்.
ReplyDeleteஆரம்பக்காட்சியில் அமெரிக்க கொடியை காட்டும் போது,
‘டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட் வைத்திருப்பார்.
காமிரா ‘செமி டாப் ஆங்கிளில்’ இருக்கும்.
அமெரிக்க கொடி கீழே இருக்கும்.
அமெரிக்க இயக்குனர்கள் பிற நாட்டுக்கொடியை,
இதே முறையில் ஷாட் வைத்து அவமானப்படுத்துவார்கள்.
பதிலடி கொடுத்து கமல் ஷாட் வைத்துள்ளார்.
இதெல்லாம் விளங்கி விடுமா ‘உண்மைத்தமிழனுக்கு’.// சூப்பரு
நான் ரசித்தவை சில
எப்.பி.யை பூஜாகுமாரிடம் அல்லாவா உன் கடவுள்?
இல்லை இல்லை அது என் ஹஸ்பண்ட்ட கடவுள்
அப்ப உன் கடவுள்
(5 செக்கன் சிந்தனையின் பின் (காரணம் இந்து சமயத்தில் கோடிக்கணக்கான கடவுள் இருக்கு திடீர்ன்னு உன் கடவுள் யார்ன்னு கேட்ட யாரை சொல்ல-கமலின் கடி)என் கடவுளுக்கு 4 கை இருக்கு
அப்படின்னா உன் கடவுளை எப்படி சிலுவையில் அறைவீங்க?
நான்க அறைய மாட்டம் "கடல்ல கரைச்சிடுவம்"( நச் என்றிருந்தது)
கமல் ஓமரின் மகனிடம் யூ வோன்ற் ரு பிகம் ஏ வோரியர் நோ ஐ வோன்ற் ரு பிகம் ஏ டொக்ரர்... அந்த பதிலை சொன்ன அந்த சிறுவனை ஊஞ்சலில் இருத்தி ஊஞ்சலை ஆட்ட முயற்சிக்க அவன் ஐ ஆம் நொட் ஏ சைல்ட் என்று கத்தி விட்டு இறங்கி ஓடிவிடுகிறான் ஆனால் அவனை விட வயது கூடிய அடுத்த நாள் தற்கொலையாளியாக இறக்கவேண்டிய ஒரு ஜிகாத் போராளி ஓடி வந்து ஊஞ்சலில் ஏறி அமர்ந்துகொண்டு ஊஞ்சலை தள்ளிவிட சொல்கின்றான்
பில்லேடனை கொன்றதை ஒபாமா கூறிக்கொண்டிருக்கும் வீடியோவில் கீழே பெற்றோல் இங்கிறீஸ் 3% என்று போடப்பட்டிருக்கும்...
ஓமர் தன் மகன் ஏதாவது பிழைசெய்தால்(ஏது கொண்டே காலை வெட்டிடுவானோ என்று பயந்துகொண்டு பார்க்கவேண்டி இருந்தது ) சிறியவயதில் கையை துப்பாக்கிபோல் பாவித்து சுடுவதைப்போல் சுடுவார்(மகனாயிற்றே)...அப்படி ஒரு தடவை சுட அருகில் இருந்த கமல் மகனின் கையை துப்பாக்கிபோல் பிடித்து ஓமரை சுடுவார்(சூப்பரப்பு)
ஒரு கடையில் தராசில் துப்பாக்கிக்குண்டுகள் கொட்டப்பட்டிருகும் கடையினுள்ளே சிறுவன் விளையாடிக்கொண்டிருப்பான்
முதல் பைட் சீனின் போது கிருஸ்ணா என்று கத்துவார் கமல் ### கிருஸ்ணா எண்டா கத்துரா? வேணும்னா அல்லான்னு கத்துறேன் அல்லாகூ அக்பர்.
நாசர் அரபிக்கில் பேசுவது கமலுக்கு புரியல உடனே குர்ரானை இங்கிலீஸ்லயா வாசிக்கிறாய் என்று கேட்க? இல்லை...அப்படின்னா புரியும் என்னுறார் கமல்..குர்ரானில் அரபிக்கை தமிழ்வேர்ஸனில் போட்டிருப்பார்கள்..அதைத்தான் கமல் படித்திருக்கின்றார்..இருந்தும் கமலுக்கு அராபிக் புரியல
அதோட குர்ரான் வசனங்களோட கழுத்தறுக்கிற சீன் யாழ்ப்பாணத்தில் கட் எனக்கு ஏன்னு புரியல... இனஸன்ஸ் ஒப் முஸ்லீமை இந்தியாவில் இருந்து யாரும் பார்க்கமுடியாது காரணம் இந்தியா தடை செய்துவிட்டது ஆனால் இலங்கையில் இருந்து இப்பொழுதும் பார்க்கமுடியும்..அதோடு உண்மையாகவே வைபிரேட்டர் கத்தியினால் கழுத்தை அறுக்கும் காட்சிகள் யூ டியூப்பில் தாரளமாகவே உள்ளன...
ஓமரே ஒரு கட்டத்தில் மகனை நினைத்துஅழுவது...அதை நிறுத்த கமல் ஜிகாத்தைபயன்படுத்தியது..
படத்தை அணு அணுவாக புரிந்து ரசித்து உள்ளீர்கள்.
Deleteபாராட்டி வாழ்த்துகிறேன்.
பிரமிக்க வைக்கிறது...
ReplyDeleteநம்மை பிரமிக்க வைத்தது கமலே.
Deleteவிஸ்வரூபம் எனும் காவியத்தை நல்லவன்/கேட்டவன், படித்தவன்/படிக்காதவன், அறிவுள்ளவன்/அறிவில்லாதவன், ஏழை/ பணக்காரன், ஆண்/பெண், புரிந்தவன்/ புரியாதவன், வெந்தவன்/வேகாதவன் என அனைவருக்கும் கொன்டுச்சென்ற விளம்பர தூதர்கள் அம்மா,அரசு, 144தடை உத்தரவு, நீதிமன்றம், உயர் நீதிமன்றம், 31 மாவாட்டற. ஆட்சியர்கள், 24 புளிக்(கொட்டையெடுத்த)கேசி அமைப்புகள், வன்டுமுருகன்(நவ்நித் கிருஸ்நன்), இரவு 11.30மனி மற்றும் கிளைமேக்ஸ் டிவிஸ்டா வந்து விஸ்வரூபம் வேளிவரச்செய்த கலைஞர் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பாக கோடானகேடி நன்றிகள்
ReplyDeleteவிஸ்வரூபம் வெளியாக...எவ்வளவு இடைஞ்சல்கள்.
Deleteஇதையே ஒரு படமாக்கலாம்.
ஹே ராம் போன்றே விஸ்வரூபத்திற்கும் நீங்கள் ஒரு அலசல் தொடர் எழுதவேண்டும் என்பது அடியேனின் விருப்பம். விஸ்வரூபம் அதிகளவு குறியீட்டு மொழியில் எடுக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.(நான் இன்னும் பார்க்கவில்லை.)
ReplyDeleteநண்பரே...இரண்டாம் பாகம் வந்ததும் மொத்தமாக எழுதுகிறேன்.
Deleteஅமெரிக்காக்காரன் பெண்கள்/குழந்தைகளைக் கொல்ல மாட்டான் எனும் வசனம் வருவதாகச் சொல்கிறார்களே? அதுதானே முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது. அதுபற்றி...?
ReplyDeleteஇந்தக்குற்றச்சாட்டை மறுத்து இப்பதிவிலேயே எழுதியுள்ளேனே!
Deleteஅது படத்தில் வரும் ஒரு காட்சியில் ஓமர் கூறவது போன்ற ஒரு வசனம்.. அடுத்த காட்சியிலயே அது உண்மையான கூற்றல்ல என்பதை உணர்த்த அமெரிக்க ராணுவம் பெண்களும் குழந்தைகளும் உள்ள வீட்டை சுடுவது போல ஒரு ஷாட் வைத்திருப்பார்கள்.
Deletehttp://www.dailytimes.com.pk/default.asp?page=2012\12\17\story_17-12-2012_pg9_10
ReplyDeleteலிங்க் கொடுத்தமைக்கு நன்றி.
Delete>>ஒரு இஸ்லாமியர் ஒரு புறாவை பிடிப்பார்.
ReplyDelete>>அடுத்த ஷாட்டில் பறக்க விடுவார்.
>>புறா அமெரிக்க கொடியை நோக்கி பறக்கும்.
படத்தில் புறாக்களின் மூலமாகத்தான் அந்த டர்ட்டி பாம்ப் இருக்குமிடத்தை அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடிக்காமலிருக்க அல்கொய்தா தீவிரவாதிகள் பயன்படுத்துவார்கள். அப்படி அவர்கள் செய்யப்போவதை சிம்பாலிக்காக காட்டியது தான் சார் படத்தின் ஆரம்பத்தில் வரும் இந்த ஷாட். மற்றபடி இது அமெரிக்காவை கேவலப்படுத்த அவர் வைத்த ஷாட் அல்ல.
அமெரிக்க கொடியை... லோ ஆங்கிளில் காமிராவை வைத்து காட்டி இருந்தால் அக்கொடியை பெருமைப்படுத்தும் விதமாக ஷாட் வைத்திருக்கிறார் கமல் எனக்கூற முடியும்.
Deleteமாறாக...எதிர்மறையாக செமி டாப் ஆங்கிளில் காமிராவை வைத்து அமெரிக்கக்கொடியை படம் பிடித்திருக்கிறார்.
நீங்கள் ஒரு கொடியை சல்யூட் வைக்க கீழே நிற்பீர்களா ?
கொடியை விட உயரமான இடத்திற்கு போய் சல்யூட் வைப்பீர்களா ?
டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியுவில் அந்த ஷாட் வைக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் டைரக்டர் கமல்தானே ?
ஹே ராம் இப்பொழுது வந்து இருந்தால் ஒரு வேளை வர்த்தக ரீதியாக வெற்றி பெற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ReplyDeleteகலைப்படங்கள் வர்த்தக வெற்றி குறிஞ்சிப்பூ போல அபூர்வமானது.
Deleteஉ.ம்.உதிரி பூக்கள்,முதல் மரியாதை.
\\ஹே ராம் போன்றே விஸ்வரூபத்திற்கும் நீங்கள் ஒரு அலசல் தொடர் எழுதவேண்டும் என்பது அடியேனின் விருப்பம்\\
ReplyDeleteநானும் வழிமொழிகிறேன்.
அசத்தல் பதிவு நண்பரே.
பாராட்டுக்கு நன்றி நண்பரே !
Deleteநீங்கள் திருந்துவதற்கு அதிக அளவு வாய்ப்புகள் கொடுத்தும் நீங்கள் திருந்துவதாகவே தெரியவில்லை. நீங்கள் தூக்கும் கமல் சொம்பு மிகவும் எளிதாய் இருப்பது இதிலிருந்து புலப்படுகிறது. நீங்கள் தூக்கும் அளவிற்கு தூக்குங்கள். ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் மனசாட்சி என்ற ஒன்று வேண்டும். புண்ணாக்கு, பொய்த் தமிழர்கள் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அனாவசியம். உங்களுக்கு தூக்க வேண்டும் என்று தோன்றினால் தாராளமாய் சொம்பு தூக்குங்கள். தவறே இல்லை. ஐநூறு ரூபாய் செலவழித்து படம் பார்த்தவன் தான் உணர்ந்ததை எழுதினால் உங்களுக்கு ஏன் இவ்வளவு காண்டு? உங்கள்; சினிமா அறிவு யாருக்கும் வராது. குறிப்பாய் கமல் படத்திற்கு நீங்கள் எழுதும் விமர்சன அறிவு உலகில் யாருக்குமே வராது. ஆனால் விமர்சனம் எழுதும் மற்றவனை திட்டும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது? கமலா? வயதில் மூத்த நீங்கள் அறிவுரை சொல்ல வேண்டும். நெட்டித் தள்ளக்கூடாது......
ReplyDeleteஇந்த பின்னூட்டம் பதில் சொல்ல...தகுதியில்லாதது.
Deleteஇப்பொழுதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். படித்தேன்.. நன்றிகள்..!
ReplyDeleteவருகைக்கும்...நன்றிகளுக்கும் நன்றி.
Deleteஐயா! எல்லோரும் இயக்குனர் கமலின் நுட்பங்களை அலசிக்கொண்டிருக்கிறீர்கள்! அடியேன் நானும் ஒரு விடயத்தை அவதானிக்க கூடியதாக இருந்தது! ஆரம்பத்தில் கமலை கடத்திக்கொண்டு சென்று ‘பரூக்’ போட்டோ எடுக்க முற்படும் போது முதல் சந்தர்ப்பத்தில் கமல் தன் தலையால் அவன் கையை ஓங்கிதட்டுவார்! அந்த சீனில் இருந்து பரூக் கை வலியால் அவதிப்பட்டவாறே இருப்பான்! இறுதியாக கமலை தொழுகை செய்ய விட்டுவிட்டு பாண்டேஜ் எடுத்து வருமாறு சத்தம் போடுவான்! அதன் பின் கமல் எழுந்து எல்லோரையும் துவம்சம் செய்யும் போது இருமுறை அவன்(பரூக்) துப்பாக்கி முழங்கும் ஆனால் அது குறி தவறிவிடும்! ”ஒருத்தன் துப்பாக்கியோட இருந்தும் கமல் எப்டி தப்பிக்கமுடியும்!? பம்மாத்து” என்று பார்வையாளர்கள் எண்ணாமலே கமல் அப்படி பரூக்’ன் கை உடைந்த்து போல சாமர்த்தியமாக காட்டியுள்ளார் என்பது என் எண்ணம்!
ReplyDeleteமுதலில் தன்னை படமெடுக்காதவாறு மொபைல் போனை தட்டி விடுவார்.
Deleteஅது உளவாளியின் நடவடிக்கையாக...
சண்டைக்காட்சிக்கு பின்னால் நம்மால் உணர முடியும்.
ஃபாரூக் முகத்தில் குத்தும் போது பற்களினால் தாக்கப்படுகிறான்.
அப்போதுதான் வலி தாங்க முடியாமல் கையை உதறிக்கொண்டே இருப்பான்.
பாண்டேஜ் கொண்டு வர ஆணை பிறப்பிப்பான்.
அதன் பின்னால் அவனால் துப்பாக்கியால் சரி வர சுட முடியவில்லை என லாஜிக் பண்ணியுள்ளார் படைப்பாளி கமல்.
தங்களின் மிகக்கூர்மையான அவதானிப்புக்கு...
எனது பாராட்டுக்கள்.
உங்களைப்போன்ற ரசிகர்களுக்குத்தான் கமல் இவ்வளவு மெனெக்கட்டு படமெடுக்கிறார்.
உங்கள் அவதானிப்பை கமல் படித்தால் சந்தோஷப்படுவார்....
ஆஸ்கார் பரிசை விட உயர்ந்ததாக கொண்டாடுவார்.
நன்றி.
I don't like some ppl making hateful comments against individuals.
ReplyDeleteComment on how ( good\bad ) the movie is made, but not "what" is made. If you don't like "what" ( Substance\Story ) the movie is made about then your not fit to comment on the movie itself.
Some of my likes on this film. http://teashoptalks.blogspot.in/2013/02/my-best-scenes-in-viswaroopam.html
நண்பர் ரவி அவர்களே...
ReplyDeleteதங்கள் கருத்துக்கும்...
விஸ்வரூபம் பற்றிய பதிவின் இணைப்பின் முகவரிக்கும்...
நன்றி.
இங்கே ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.. அமெரிக்கர்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்பது போன்ற எண்ணத்தில் சிலர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.. ஆப்கனுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளை அங்குள்ள மக்களும் விரும்பவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
ReplyDeleteஅமெர்க்க அரசு மோசமாகவும், அமெரிக்கர்கள் நல்லவர்களாகவும் இருப்பது வியட்நாம் போரிலேயே விளங்கி விட்டது.
Deleteஆனால்,
தொடர்ந்து அமெரிக்க அரசு செய்யும் அராஜகங்கள்...
அந்நாட்டின் மீது வெறுப்புணர்வு வளர்ந்து வருகின்றது.
செரியான விமர்சனம்.இயக்குனர் வசந்த் கூறுவது போல இங்கே சினிமாவுக்கான நல்ல விமர்சகர்களோ,நடுநிலயாலர்களோ மிகக் குறைவு.விஸ்வரூபம் பற்றிய ஆனந்த விகடனின் விமர்சனத்தின் மீது எனக்கு உடன்பாடு இல்லை.ஒரு படத்தில் இருக்கும் நல்ல காட்சியமைப்புகளை ஒரு சாமானிய சினிமா ரசிகனுக்கு விழக்கிக் கூறுவது ஒரு விமர்சகனின் கடமை.அப்போது தான் சினிமா மீது ஒரு தெளிவான பார்வையே வரும்.விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வந்தால் தான் ஒரு தெளிவான விமர்சனமே எழுதமுடியும்.
ReplyDeleteசரியாகச்சொன்னீர்கள் நண்பரே !
Delete'ஹேராம்' தொடர் போல இதையும் ஒரு தொடராக எழுதினால் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteஇரண்டாம் பாகம் வரட்டும் நண்பரே!
Deleteதங்களுடைய விஸ்வரூபம் படவிமர்சனம் படித்தேன். மற்றும் படத்தையும் பார்த்தேன். எனக்கு ஆப்கனிஸ்தான் காட்சிகள் மிகவும் உண்மையைப்போல இருந்தாலும் ஓர் DOCUMENTARY FILM பார்ப்பது போலத்தான் தோன்றியது. அது பற்றி உங்கள் கருத்து எதுவும் இல்லையே? .... மற்றபடி உங்களுடைய விமர்சனம் அருமை...
ReplyDeleteநன்றி................
கலைப்படமும்...சிறந்த ஆவணப்படமும் ஒன்றே.
Deleteஆப்கானிஸ்தான் காட்சிகள்...
ஆவணப்படம் போல் காட்சியளிப்பதால்தான்...
விஸ்வரூபம் ஒரு கலைப்படைப்பு என கலையுணர்வு மிக்க மனிதர்கள் சொல்கிறார்கள்.
கலையுணர்வே இல்லாத...
சினிமாவின் மொழி புரியாத...
மனுஷ்யபுத்திரன் ‘குப்பை’ என்கிறார்.
படம் பார்த்த நம்மை...முட்டாள்கள் என விளிக்கிறார் இந்த அறிவாளி.
சென்னையில் அவ்வளவா வெயில் அடிக்கிறது ?
இது துளியூண்டு விமர்சனம் இல்லை. .
ReplyDeleteதாளிக்கும் விமர்சனம்.இயக்குனர் தன படைப்பை காணும் ரசிகனுக்கு புதிர் போட்டு பின் விடை சொல்வதை உலக படங்களில் மட்டுமே பார்த்திருந்த நமக்கு அதை இங்கேயே செய்து நானும் சலைதவனல்ல என்று கமல் நிரூபித்தார் . . நான் கவனக்குறைவில் விட்டு போன சில நுணுக்கமான விஷயங்களையும் பட்டியலிட்டமைக்கு மிகுதியான நன்றி. .
பாராட்டுக்கு நன்றி நண்பரே.
DeleteI had expressed to my son that one can write a thesis for a Ph. D. Your review and analyis has just done that. Great feeling after going through your views. Congrats....
ReplyDeleteநன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.
Deleteஇந்த படம் முடியும் போதே இரண்டாம் பகாம் trailer போடுகிறார்கள் . இந்தியாவில் இது போன்று வேறு எந்த படத்திலாவது செய்திருக்கிறார்கள்கல் ?
ReplyDeleteஇரண்டாம் பாகத்தின் காட்சிகளை காட்டியது...
Deleteஇரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்த...
ஏனைய படங்களின் செய்திருக்கிறார்களா எனக்கும் தெரியவில்லை.
பாலா, மிக மிக அருமையான விமர்சனப் பார்வை உங்களுடையது. உங்களின் கரங்களுக்கு எளியோனின் முத்தம் ஒன்று. உண்மைத் தமிழனின் அவன்-இவன் படம் விமர்சனத்துக்குப் பின், அவர் மேலான திறன் நம்பிக்கை பூஜ்யத்துக்கு போனதால், அவருடைய எந்த விமர்சனங்களையும் படிப்பதேயில்லை. அவருக்கெல்லாம் பதிலளிப்பது போன்ற நேர விரயப் பத்திகளைத் தவிர்த்துவிட்டு, தொடர்ந்து இதுபோல எழுதுங்கள். நன்றி.
ReplyDeleteநண்பரே எனது பெயர் பாலா அல்ல.
Deleteதங்கள் கருத்தை இனி கவனத்தில் கொள்கிறேன்.
பாராட்டுக்கு நன்றி.
அருமை. தொடருங்கள். வாழ்த்துக்கள்,
ReplyDeleteAfterread your review I understood so many thinks in the movie. I felt the movie is worth for one time seeing. But I have to watch one more time. Bcoz of your review. Proud to be Kamal Fan
ReplyDeleteExcellent review ji! Particularly serves as an answer to the b.s. review from anandha vikatan where they mentioned `அமெரிக்க ஜால்ரா'. All those idiots saying Kamalhaasan is an american stooge, please read this review!
ReplyDelete