நண்பர்களே...
நேற்று இரண்டாம் முறையாக ‘மூடர் கூடம்’ பார்த்தேன்.
இன்னும் நுட்பமாக என்னால் படத்தை அணுகி பார்க்க முடிந்தது.
அதில் ஒன்றுதான்... ‘கலைஞர் காரெக்டர்’.
படத்தில் வரும் ‘புரபஷனல் திருடனை’ ‘கலைஞர் கருணாநிதியோடு’ ஒப்பிட்டு பார்க்க முடிந்தது.
[ 1 ] ‘புரபஷனல் திருடன்’ தோற்றம் கலைஞரின் இளமைக்கால தோற்றத்தை அப்படியே பிரதிபலித்தது.
கலைஞரின் சுருள் முடியும்...நடு மண்டையில் எடுக்கப்பட்ட ‘நேர் உச்சியும்’ அப்படியே ‘புரபஷனல் திருடனுக்கு’ பொருந்தி வருகிறது.
[2] ‘புரபஷனல் திருடன்’ ஆடையில் ‘கருப்பு - சிவப்பு’ வண்ணம் மட்டுமே இருக்கிறது.
[ 3 ] ‘கலைஞர்’ மூச்சுக்கு மூச்சு, ‘கொள்கை...கொள்கை’ என கொடி பிடிப்பார்.
‘புரபஷனல் திருடனும்’ ‘எத்திக்ஸ்...எத்திக்ஸ்’ என எடுத்து...
‘அடிச்சு விடுவான்’.
மூடர் கூடத்தில் ‘கிரிக்கட் மட்டை’ அதிகாரத்தின் குறியீடாக காட்டப்பட்டு உள்ளது.
‘கிரிக்கெட் மட்டை’ யார் கைக்கு போகிறதோ அவர்கள் 'பவர் சென்டராக' மாறி செயல்படுவதை காண முடியும்.
‘புதிய சட்ட சபை’ - ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’...
‘மருத்துவ மனைகளாக’ மாற்றம் பெற ஆணை பிறப்பித்ததையும்...
‘அனைவரையும் தலைகீழாக நிற்க சொல்வதையும்’ பொருத்தி பார்க்க தோன்றுகிறது.
‘ஹேப்பி லைப்’ [ HAPPY LIFE ] என எழுதப்பட்ட பொம்மையும் ஒரு குறியீடே.
அதை விளக்க முற்பட்டால் தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்து விடும் அபாயம் இருக்கிறது.
படத்தின் கிளைமாக்ஸ், ‘ப்யூச்சர் பாஸிட்டிவ்’ தன்மையில் முடிந்து இருக்கிறது.
இயக்குனர் நவீன் மீது ‘நம்பிக்கை’ வைத்து கேட்கிறேன்.
உலகசினிமா தரத்தில் ஒரு திரைப்படத்தை தமிழ் சினிமாவுக்கு தரவேண்டும்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
அடேங்கப்ப்ப்ப்பா... என்ன ஒரு ஒப்பீடு...!
ReplyDeleteஉடன் பிறப்புகளின் உருட்டு கட்டை வருவதற்குள்...
Deleteவிரைந்து வந்து விட்டீர்கள். நன்றி நண்பரே.
இவன எங்கேயோ பாத்த மாதிரியே இருக்கேன்னு படம் பாக்கும் போது தோணிச்சு... நீங்க நச்சுன்னு அடிச்சு விட்டுட்டீங்க...!!
Deleteகமர்சியலுக்காக சில சமரசங்கள் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
Deleteஅவற்றால் படம் கொஞ்சம் தடுமாறுகிறது.
இல்லையென்றால், ‘குறையொன்றும் இல்லை...மறை மூர்த்தி கண்ணா’ என இயக்குனர் நவீனை இன்னும் கொண்டாடி இருப்பேன்.
படம் பார்க்கனும்ங்கிற ஆவல் அதிகரிக்குது...
ReplyDeleteநேற்று ‘அலைபேசியில்’ கூப்பிட்டேன்.
Deleteஅப்புறம்...எஸ்.எம்.எஸ் அனுப்பினேன்.
ஏன் வரலை? பிசியா?
me too
Deleteஇந்த வாரத்துக்குள் பார்த்து விடுங்கள்.
Deleteநீங்கள் சொல்வதைப் பார்த்தால் மூடர் கூடம் என்றால் திருடர்கள் கூடம் போல் தெரிகிறது ......படம் அரசியல் நையாண்டி படம் என்று சொல்லி.....யாராவது படத்துக்கு தடையும் வடையும் வாங்கிவிடப் போகிறார்கள்...நண்பரே
ReplyDeleteநண்பரே...நெறைய தியேட்டகளில் படத்தை இந்த வாரமே தூக்கி விட்டார்கள்.
Deleteஇப்போது போய் யார் தடை கேட்பார்கள்?
கண்டிப்பா நவீனிடம் நல்ல படைப்புகளை எதிர் பார்கலாம்
ReplyDeleteஇந்தப்படத்தில் பெற்ற புகழை தக்க வைப்பார் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.
Deleteதைரியம் ஜாஸ்தி தான்
ReplyDeleteஇயக்குனர் நவீனுக்கு...நிச்சயம் தைரியம் ஜாஸ்திதான்.
Delete[ எஸ்கேப்...]
//‘புதிய சட்ட சபை’ - ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’...
ReplyDelete‘மருத்துவ மனைகளாக’ மாற்றம் பெற ஆணை பிறப்பித்ததையும்...
‘அனைவரையும் தலைகீழாக நிற்க சொல்வதையும்’ பொருத்தி பார்க்க தோன்றுகிறது///
இது மட்டும் புரியல சார்.. இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லலாம்.. :):)
யார் கையில அதிகாரம் கிடைச்சாலும்....செய்யுற முதல் வேலை...ஏற்கெனவே இருந்ததை தலைகீழாக மாற்றுவார்கள்.
ReplyDeleteகலைஞர் கட்டிய சட்டசபை மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை...
ஜெயலலிதா பதவிக்கு வந்ததும்...
இவைகளை மருத்துவமனைகளாக மாற்ற ஆணை பிறப்பித்தார்.
‘மூடர் கூடம்’ படத்தின் இறுதிக்காட்சியில், வேலைக்காரன் கையில் ‘கிரிக்கெட் மட்டை’ கிடைத்ததும்...அனைவரையும் தலைகீழாக நிற்க ஆணையிடுவான்.
அதிகாரம் கையில் கிடைத்ததும் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றும் போக்கை இக்காட்சியின் மூலம் இயக்குனர் சித்தரிக்கிறார்.
இயக்குனர் நவீன் ‘சிவப்பு சிந்தனை’ உள்ளவராக இருக்க வேண்டும்.
இருந்தால்தான் இப்படிப்பட்ட காட்சி சித்தரிப்புகள் படத்தில் இருக்கும்.
சிவப்பு சிந்தனை உள்ள இயக்குனர்கள் பொது மேடையில் தங்கள் கொள்கைகளை சொல்ல மாட்டார்கள்.
சொன்னால் அடுத்த படம் கிடைக்காது.
உங்களால் மட்டும்தான் இப்படி யோசிக்க முடியும் சார்..... இதை படிக்கும்போது ஒரு டயலாக் யாபகம் வருகிறது "பத்த வைச்சுட்டியே பரட்டை" !!
ReplyDeleteநான் மட்டுமல்ல...கலைஞரின் இளமைக்கால படங்களை பார்த்தவர்கள் அனைவருமே எளிதில் புரிந்து கொள்வார்கள்.
Deleteஇன்றைய தலைமுறைக்கு புரிவதற்காக...‘பத்த வச்சது’ உண்மைதான்.
‘ஹேப்பி லைப்’ [ HAPPY LIFE ] என எழுதப்பட்ட பொம்மையும் ஒரு குறியீடே.
ReplyDeleteஅதை விளக்க முற்பட்டால் தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்து விடும் அபாயம் இருக்கிறது.
Please explain