மணிரத்னம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தி பிடித்த வித்தகன்.
ஆர்ப்பரித்து அலறாமல்....அமைதியாக அவரது படைப்புகளை முன் வைக்கும் பாங்கை ...அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய உதாரணம்.
காப்பி...காப்பி...என்று நமது பதிவுலகில் தொடர்ந்து முழங்கி வருகிறார்கள் பலர்.
நானும் அவர்களை பின் தொடர முடிவு செய்து விட்டேன்.
காப்பியடிப்பவர்களை பிடிப்பதில்...தமிழ்நாடு போலிசுக்கு இணையாக செயல் பட்டு வருகிறார் எனது நண்பர்... ‘கருந்தேள்’ ராஜேஷ்.
அவருக்கு , ‘ஹாலிவுட்’... ‘கொழந்த’....மனசு.
நம்ம பிள்ளையை... அடிச்சு வளர்த்தா போதும்னு நினைக்கிறாரு.
அவர் வழியில்... நானும் காப்பியடிக்கும் கனவான்களை காட்டி கொடுக்க முடிவு செய்து விட்டேன்.
ஆனால் ‘என் வழி தனி வழி’.
நான் ஹாலிவுட் ‘காப்பியர்களை’ காட்டி கொடுக்க முடிவு செய்து விட்டேன்.
ஏற்கெனவே சுஜாதா கதையை காப்பியடித்த ‘அன் நோன்’
[Un Known]திரைப்படத்தை ‘வெளுத்தெடுத்த’ அனுபவம் இருக்கிறது.
நம்ம மணிரத்னம் ‘தில் சே’ - 1998 [ ஹிந்தி ] எடுத்து தமிழில் 'உயிரே'ன்னு டப் செய்து வெளியிட்டார்.
வட கிழக்கிந்திய மாநிலங்களில் இன்று வரை நிகழும் ‘சிவில் யுத்தத்தை’
மெல்லிய இழையாக்கி..காதலை முதன்மையாக்கி எடுத்திருந்தார்.
ஷாருக்கான் ‘சைய்யா...சைய்யா’ன்னு குதிச்சுகிட்டு...டிரெய்ன் மேல
ஆடுவாரு.
கூடவே மலாக்கான்னு ஒரு அக்கா இடுப்பை வெட்டுவாங்க...
‘அகிலா’ன்னு ஒரு கிரேன் புதுசா வந்த நேரம்.
அந்த கிரேன் 150 அடி உயரம் மேலே போவும்.
‘அகிலாவுக்கு’...அந்த பாட்டுதான் ‘டெமோ’.
இண்ணைக்கு வரைக்கும் ‘ஒரு பய’ டிரெய்ன்ல பாட்டு ஷூட் பண்ண முடியாது.
அந்த பாட்டை ஒவர்டேக் பண்ணவே முடியாது.
அந்த பாட்டு உலகமெல்லாம் ஹிட்டடித்து ரஹ்மானுக்கு மிகப்பெரிய பிரேக். ஒரு வெள்ளைக்காரன் ரஹ்மான்கிட்ட ‘ரைட்ஸ்’ வாங்கி... ‘இன்சைட் மேன்’ [Inside Man] என்ற ஹாலிவுட் படத்தில் அந்த பாட்டை பயன்படுத்தினான்.
இந்தப்படத்தின் கதையை Tigmansha Dhulisa , Maniratnam, Sujatha மூணு பேரும் சேர்ந்து உருவாக்கியிருக்காங்க.
மனிஷா கொய்ராலா... மலை வாழ் மகள்.
ஷாருக்கை காதலிச்சு..தீடிர்னு காணாம போயிருவா.
அந்த துக்கத்தை மறக்க, ‘பிரித்தி ஜிந்தான்னு’ ஒரு ஜாங்கிரியை கல்யாணம் பண்ற நேரம்...
திரும்ப மனிஷா ‘எண்ட்ரி’.
ஷாருக்கை குழப்பி...நம்மையும் குழப்பி...
மனிஷா... ஒரு ‘மனித வெடிகுண்டு’ன்னு முடிச்சிருப்பாங்க.
இந்தக்கதையை பட்டி பார்த்து ' Luc Besson ' என்ற ஜாம்பவான்... காசு பாத்திட்டாரு.
அவன் தயாரிப்பில்... ‘ஜான் டிரோவோல்டோவை’ நடிக்க வச்சு.. ‘ஃப்ரம் பாரிஸ் வித லவ்’-2010 \ ஆங்கிலம் என்ற படத்தை எடுத்து ஹிட்டாக்கி கல்லா கட்டிட்டான்.
ஆனா...மணிரத்னம் கிளைமாக்ஸ் சூப்பீரியரா இருந்துச்சு.
இந்திய கலாச்சாரப்படி, காதலை விட்டுக்கொடுக்காத காதலனும்...கொள்கையை விட்டுக்கொடுக்காத காதலியும் இணைந்து உயிரை விடுவார்கள்.
ஹாலிவுட் படத்தில்...கொள்கைக்காக காதலியை மட்டும் சாகடிச்சு...காதலனை தப்பிக்க வச்சிருப்பாங்க.
இப்படி மசாலா கிளைமாக்ஸ் வச்சா... நல்லா கல்லா கட்டலாம்.
‘மலை வாழ் மகளை’ ‘முஸ்லீம்னு ’ ஒரு ‘சேஞ்சு’ கொடுத்தான்...
‘சேஞ்சை’ அள்ளிட்டான்.
டெரரிஸ்ட்னா... முஸ்லீம்தான்னு ஹாலிவுட்காரன் தொடர்ந்து ரூல் எழுதிகிட்டு இருக்கான்.
‘பிர்பால பதிவருன்னு’ நக்கலடிக்கும் ‘நல்லவர்கள்’ இதப்பத்தி மூச்சே வுட மாட்டாங்க...
ஆனா ‘கமல்ஹாசன்’ முஸ்லீம் இன விரோதின்னு சொல்லிட்டுதான் டெய்லி ‘மூச்சா’ போவாங்க.
உதாரணத்துக்கு ‘தசாவதாரம்’ன்னு ஒரு சாதா மசால் தோசை படம். அதுல..பத்து அவதாரத்துல ஒண்ணா... உயரமா ‘பீம்பாய்’ கேரக்டர் ஒண்ணு படைச்சிருப்பார் கமல்.
உயரத்துக்கேத்த மாதிரியே மிக உயர்வா படைச்சிருப்பாரு.
அவ்வளவு வெள்ளந்தியா அந்த கேரக்டர் இருக்கும்.
அந்த காரெக்டர், உலகத்தில் உள்ள அனைவரையும் நல்லவங்களா பாக்கும். அந்த காரெக்டருக்கு கெட்டதே தெரியாது. எப்பேர்பட்ட உயர் படைப்பு !.
‘தசாவதாரம்’ நாயுடு காரெக்டர் ஒரு சீன்ல சொல்வாரு...
“எல்லோரும் முஸ்லீம்களா...
அப்ப எல்லோரும் டெர்ரரிஸ்ட்தான்....
அவ்வளவு பேரையும் அரஸ்ட் பண்ணுங்க ”
முஸ்லீம் இன மக்கள் எல்லோரையும் தீவிரவாதிகள்தான் எனப்பார்க்கும் பொது புத்தியை நக்கலடித்தவர் கமல்.
நானும், ‘காது... கேட்காது’ எனத்தெரிந்தே... தொடர்ந்து சங்கு ஊதுகிறேன்.
கண் மூடிய பூனைகள்... இருட்டென்றே புலம்பட்டும்.
அடுத்த பதிவில்... நம்ம ரஜினி படத்தை காப்பியடிச்ச காப்பியரை...
காட்டி கொடுப்பேன்.
காத்திருங்கள்.
உயிரே படப்பாடலை காணொளியில் காண்க...
ஆட்டம் இப்போதான் சூடு பிடிச்சிருக்கு :-)
ReplyDeleteஇப்படி சொல்லி தப்பிச்சிட்டா எப்படி!
Deleteஅடி ரொம்ப விழுந்துச்சின்னா...ஒடி வந்து காப்பாத்துங்க.
தப்பிச்சு போய்ட்டேனா! இப்படி சொன்னா எப்படி? தலைவரே, உங்க பின்னாடியே தான் நின்னுகிட்டு இருக்கேன்... தொடர்ந்து அடிங்க, யாரையும் விடாதீங்க :-)
Deleteசொல்லிடீங்கல்ல...கொள்ளையடிக்கும் எந்த ஒரு வெள்ளைக்காரனையும் விட மாட்டேன்.
Deleteகாப்பி..காப்பி...காப்பி...இந்த வார்த்தையை கேட்டு ரொம்பவே போர் அடிச்சு போச்சு சார்....
ReplyDeleteஎல்லா படத்திலும் கண்டிப்பாய் வேறு ஒரு படத்தின் சாயல்,inspiration கண்டிப்பாய் இருக்கும்....
பதிவுலகத்தில் தனது மேதாவி தனத்தை காட்ட தமிழ்படத்தை அங்கிருந்து சுட்டுட்டாங்க..இங்கிருந்து சுட்டாங்க என்று நிறைய பேர் ஜல்லி அடிப்பதை பார்த்து இருக்கேன்.. அதை பார்க்கும் போது எனக்கு செம கடுப்பு தான் வரும்.
எனக்கு காப்பி அடித்து படம் எடுப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது....படம் நன்றாக் இருந்தால் காசு செலவு செய்து பார்ப்பேன். எனக்கு தேவை நல்ல திரைப்படங்கள், அது எங்கிறந்து வந்தது, அதன்னுடிய முலம் என்ன என்பதை பற்றி கவலை பட மாட்டேன்...
நீங்க சொல்லுற உயிரே, ப்ரம் பாரிஸ் வித லவ்’-2010 படத்திற்கும் அதே கருத்து தான்...உயிரே எனக்கு பிடிக்க வில்லை From Paris With Love படம் நல்லா இருந்தா அதையும் ரசிப்பேன்..
உங்க பதிவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கருத்து:
அப்புறம் வேலாயுதம் படம் வந்தப்ப அது Assassin's Creed வீடியோ கேம் காப்பி -Ubisoft கம்பெனி கிட்ட சொல்லிட்டோம், எல்லாத்தையும் மாத்த போறோம்ன்னு வேற சொல்லி இருந்தாங்க..
Ubisoft வேலாயுதம் பட கம்பெனி மேல கேஸ் போட போறாங்கன்னு வேற படிச்சேன்.... அந்த பதிவுல விஜய் ரசிகர்களுக்கும் வேற ஒரு குரூப்க்கும் செம சண்டை நடந்துகிட்டு இருந்தது...பார்க்க எனக்கு சிரிப்பு தான் வந்திச்சு...அந்த கேஸ் என்ன ஆச்சுன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியல....இது எல்லாம் சும்மா பப்ளிசிட்டிக்கு தான்..
ராஜ்...தமிழ் படங்களை காப்பியடித்த ஹாலிவுட் படங்களை மட்டும் எழுத நினைத்துள்ளேன்.
Deleteவரவேற்பை பொறுத்து...உலகின் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட திரைக்காவியங்களை எந்த உரிமையும் பெறாமல் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களை எழுதுவேன்.
உயிரே படம் திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை.
படத்தின் அடிநாதமான ‘மலை வாழ் மக்களின் உள் நாட்டுப்போரை’ மிக மேலோட்டமாக தொட்டிருந்தார் மணி.
எனவேதான் உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என நினைக்கிறேன்.
@ ராஜ்: தல, disappoint ஆகாதீங்க. வேலாயுதம் வந்து பல மாசம் ஆகிப்போச்சுல்ல அதான் அந்தப் படத்த விட்டுட்டு அடுத்த ஆராய்ச்சில பிஸி ஆகிட்டாங்க... மாற்றான் வந்ததும் 'Stuck On You'விற்கு எழுதி போட்டோம், விஸ்வரூபம் வந்ததும் 'True Lies' குழுவுக்கு எழுதி போட்டோம்னு, கோச்சடையான் வந்ததும் 'Troy'க்கு எழுதிபோட்டோம்னு சொல்லிக்கிட்டு வருவாங்க பாருங்க :-)
Deleteவேலாயுதம் ஒரு டம்மி பீஸ். அதுக்கு Ubisoft காரங்க அதுமேல கேஸ் போடப்போறேன்னு எழுதினது நிஜம். அது official நியூஸ் தான். எதுவும் தெரியாம உளறக்கூடாது :-) .. Ubisoft FB பக்கத்துலயே இந்த info இருக்கு. அப்பால, மானரோஷம் இல்லாம காப்பியடிக்கிற இந்த தமிழ் டைரக்டர்களை அப்புடித்தான் கேள்வி கேப்போம். அட்லீஸ்ட் எங்களால முடிஞ்சுது அது. அதைப்பத்தி போஸ்ட்டாவது போடுறோம். உங்களுக்கு என்ன பிரச்னை அதுல :-) .. இதுல பொலம்பல் வேற ..இதை நான் சொல்றது பேபி ஆனந்தன் என்ற பீசுக்கு தான். தம்பி...உனக்கு பிரச்னை பண்ணனும்னா நேரடியா வந்து என்னோட ப்லாக்ல கமென்ட் போடு. அங்க வெச்சிக்கலாமா கச்சேரிய? :-) சும்மா பயன்துக்கினு இப்புடி வேற வேற இடத்துல கமென்ட் போட்டுக்கினு அப்பால வந்து கிளிச்சப்புறம் அழக்கூடாது ஆம்மா :-) .. இதுக்கு பதில் போடு தம்பி.. இங்கயே வர்ரேன்... ஆரம்பிக்கலாம் . நான் ரெடி :-)
Deleteஆ...அண்ணே, என் கண்ண தொறந்துட்டீங்க. உங்க மேல எனக்கு பயங்கரமா பயம் வந்துருச்சு... உங்க பவர் தெரியாம ஒளறிட்டேன். உங்க பக்கமே இனி நான் வரல, உங்க சொற்பொழிவையும் இனி நான் கேக்கல, இது சத்தியம். என்ன தயவு செஞ்சு மன்னிச்சு உட்டுடுங்க... நான் ரொம்ப பாவம். ப்ளீஸ், நீங்க கிழிக்கிற கிழில நிச்சயம் நான் அழுதுருவேன். பாஸ்கரன் சார், இதுக்கு நீங்க தான் சாட்சி. எதையோ மறந்துட்டேன்?!?! ஆங்...smiley, இதோ அதையும் ஒண்ணுக்கு ரெண்டா போட்டுடுறேன் :-) :-) பெரிய பீஸ் தேளண்ணன் வாழ்க!
Deleteபுலவர்களே...சாந்தமாக உரையாட வேண்டாம்.
Deleteஇது பாண்டிய மன்னன் சபையில்லை.
எதற்கும் கவலை வேண்டாம்.
வெள்ளைக்கொடி நெறைய தைச்சு வச்சிருக்கேன்.
சபாஷ் அண்ணே. என்னுடைய சிறிய பங்களிப்பு.
ReplyDeleteகமல் 1994 இல் நெஞ்சு நெகிழ சொன்ன மகாநதி கதையில, தன் மகளை கொல்கத்தாவுல விபச்சார விடுதி இருக்கும் இடத்துக்கு போய் மீட்டு வரும் பகுதியை தான் மசாலா தடவி ஆங்கிலத்துல, லியம் நீசன் நடித்து 2008 ல வந்த Taken படத்துல முழுசா எடுத்து இருப்பாங்க.
நான் சொல்றது சரியா?
‘டேக்கன்’ எனக்கு மிகவும் பிடித்த படம்.
Delete‘வுமன் டிராபிக்கை’ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
அந்தப்படத்தை விருதகிரியாக்கியதாக படித்திருக்கிறேன்.
எனக்கு விருதகிரி பார்க்கும் பாக்கியம் கிட்டவில்லை.
மகாநதியை...‘டேக்கன்’ ஆக்கியிருப்பதாக எனக்கு படவில்லை.
மீண்டும் இரண்டு படத்தையும் பார்க்க வேண்டும்.
நன்றி கோபி.எடுத்து கொடுத்ததற்கு...
////நான் ஹாலிவுட் ‘காப்பியர்களை’ காட்டி கொடுக்க முடிவு செய்து விட்டேன்.///
ReplyDeleteஆக மொத்தத்தில் இங்க இன்னொரு களோபரம் ஆகப்போவது உறுதி!
நண்பரே...
Deleteஇந்த பிரச்சனையில யாரும் சண்டைக்கு வரமாட்டாங்க.
முடிஞ்சா பாராட்டுவாங்க...
வெளிப்படையா பாராட்டவில்லையென்றாலும்...மனசார பாராட்டுவாங்க.
எல்லோரும் தமிழர்கள்தானே...
மிக அவசியமான பதிவு. ஹாலிவுட் ஆட்கள் தான் உலகத்திலயே சிறப்பாக படமெடுப்பவர்கள் என்று நினைக்கும் ஆட்கள் நெறைய உண்டு. அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு சம்மட்டி அடி.
ReplyDeleteஅதேமாதிரி வியட்நாம் காலனி என்ற படத்தின் கதையும் அவதாரின் கதையும் ஒன்றாகவே இருப்பதை கவனித்தீர்களா ??
ஆனால், From paris with love படத்தின் டைரக்டர் Luc besson இல்லியே...அவர் கோ ரைட்டர்னு மட்டுமே IMDB எல்லாத்திலும் போட்டிருக்கு.
நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும், அவதார் படம் காப்பி தான் தல. inspirationனு டீசன்டா வச்சிக்கலாமா? இல்ல ஒரே மாதிரி சிந்திச்சிட்டாங்கனு ஃப்ரீயா உட்ரலாம். இத பத்தி நான் ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கேன்...
Deletehttp://babyanandan.blogspot.in/2010/01/v-t-r.html
//மிக அவசியமான பதிவு. ஹாலிவுட் ஆட்கள் தான் உலகத்திலயே சிறப்பாக படமெடுப்பவர்கள் என்று நினைக்கும் ஆட்கள் நெறைய உண்டு. அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு சம்மட்டி அடி.//
Deleteநன்றி கொழந்த.
///அதேமாதிரி வியட்நாம் காலனி என்ற படத்தின் கதையும் அவதாரின் கதையும் ஒன்றாகவே இருப்பதை கவனித்தீர்களா ?? ///
[இது அக்மாக்... கொழந்த உள்குத்து.]
அவதார் படம்...கெவின் காஸ்ட்னர் இயக்கத்தில் வந்த 'Dances With Wolves '
படத்தை காப்பியடிக்கப்பட்டது என்றே இது வரை நினைத்திருந்தேன்.
தங்களின் பின்னூட்டம் மூலம் நான் திருத்தி கொள்கிறேன்.
//ஆனால், From paris with love படத்தின் டைரக்டர் Luc besson இல்லியே...அவர் கோ ரைட்டர்னு மட்டுமே IMDB எல்லாத்திலும் போட்டிருக்கு.//
டைரக்டர் என்று அவரை நானும் குறிப்பிட வில்லையே!
ஆனால் தயாரிப்பு மற்றும் எழுத்தாளர் பெயர்களில் அவரது பெயரும் இருக்கிறது.
இந்த கமல்னு ஒரு பீசு வெக்கமே இல்லாம காப்பியடிச்சதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க :-)
Deleteஅவர் காப்பியடிக்கிறதை கண்டிக்கிறதுக்கு நீங்க ஒருத்தர் போதாதா?
Deleteநெறைய பதிவுகள்...தமிழ் படங்கள் மட்டுமே காப்பி என்ற வகையில் வந்து கொண்டிருக்கின்றன.
ஹாலிவுட் படங்கள் யோக்கியமானவை என்ற கருத்துருவாக்கம் மறைமுகமாக உருவாகி விட்டது.
அந்த பிம்பத்தை உடைக்க முயற்சிக்கிறேன்.
காப்பியடித்த ஹாலிவுட் படங்களை நீங்களும் தோலுரிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
நான் உயிரே மற்றும் ஃபிரம் பாரிஸ் வித் லவ் ஆகிய படங்களை பார்த்தவன் தான், ஆனால் நீங்கள் சொல்வது போல் அந்தளவு ஒற்றுமை இருப்பதாக தோணவில்லை, அல்லது கொப்பியடிக்கப்பட்டுள்ளதாக ஒரு உணர்வு வரவில்லை. இந்த இரண்டு படங்களையும் நான் பார்த்தது பெரிய இடைவெளிகளில் என்பதால் , அப்படி ஒரு எண்ணம் வரவில்லையோ என்னமோ? எதுக்கும் மறுபடி பார்க்கிறேன்.
ReplyDeleteமறுபடியும் பாருங்கள் கிஷோகர்.
Deleteநிச்சயம் தோன்றும்.
ஆகா.. இப்படி உல்டாவா ஒரு போரா.. இது என்னவோ சன் டி.வியில 'திரை வானம்'னு ஒரு ஷோ போட்டுக்கிட்டிருந்தாங்களே, அது மாதிரி படுது... ஒரே பதிவில் ரெண்டு படம் பத்தி அறிஞ்சுக்கலாம்! நன்றி!
ReplyDeleteநண்பரே...நம்ம ஆளுங்க அடிக்கிற காப்பியை மறுக்க முடியாது.
Deleteஆனால் உலகத்தில் எவனுமே காப்பியடிக்கவில்லை.
நாம் மட்டுமே அத்திருப்பணியை செய்து வருவதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகிறார்கள்.
அத்தாழ்வு மனப்பான்மைக்கு என்னால் முடிந்த மருந்து.
திரைப்படம் மட்டுமல்ல..இலக்கியம்,ஒவியம் எல்லாவற்றிலும் வெளிநாட்டுக்காரன்தான் உசத்தி.
நம்மவர்கள் காப்பிதான் என ஒரு கூட்டமே ஜல்லியடித்து வருகிறது.
இதை மறுக்க என்னிடம் அறிவு கிடையாது.
ஆனால் சினிமா என் ஏரியா.
தைரியமாக விளையாடுவேன்.
நன்றி நண்பரே!
வணக்கம் ரசிகரே ... நானும் காப்பியை எதிர்ப்பவன் தான். சினிமா என்றால் அதில் ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கணும். ஒரு ஹாலிவுட் படத்தை ரீமேக்காக தமிழில் பார்ப்பதற்கு பேசாமல் அதை தமிழில் டப் பண்ணிவிட்டே பார்த்துவிடலாமே? ஏன் வீணாக காசைக் கரியாக்கணும்.
ReplyDeleteஆங்கிலப் படங்கள் பற்றி எனது அறிவு 100க்கு 1 வீதம் கூட இல்லாதபடியால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால் சில வெற்றிபெற்ற ஆங்கிலப் படங்கள் மற்றைய உலகசினிமாக்களின் தாக்கத்தில் உருவானவை என்று தெரியும்.
உலகசினிமாவில் இருந்து காப்பியடிக்கப் பட்ட ஆங்கிலப் படங்களைப் பற்றியும் எழுதுங்கள். அடுத்த பதிவை எதிர்ப்பார்த்திருக்கிறேன்.
வருக...வருக...ஹாலிவுட் ரசிகரே.
Deleteஉலகசினிமாக்களில் இருந்து காப்பியடிக்கப்பட்ட படங்களை முடிந்தவரை எழுதுகிறேன்.
தமிழ் சினிமாவை காப்பியடித்த படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து எழுதுவேன்.
உங்க கண்ல ஏதாச்சும் தட்டுப்பட்டா...சொல்லுங்க.
எல்லோரும் சேர்ந்துதான் தேரை இழுக்கணும்.
நன்றி நண்பரே!
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல விவரிச்சு இருக்கீங்க, இன்னும் நிறைய copy செய்ய பட்ட ஹாலி வூட் திரைப்படங்களை தெரிய படுத்தவும்.
ReplyDeleteஹாலி வூட் காரன்களும் copy பண்ணி இருகாங்க என்பதை நிறைய பேர் ஏற்றுகொள்ள மாற்றார்கள்......
ஆதரவிற்கு நன்றி நண்பரே...
Delete///ஹாலி வூட் காரன்களும் copy பண்ணி இருகாங்க என்பதை நிறைய பேர் ஏற்றுகொள்ள மாற்றார்கள்......///
ஆதாரத்துடன் எடுத்துரைத்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.
சார் நீங்க என்னதான் சொல்லுக... செவப்பா இருக்கறவன் பொய் சொல்லமாட்டடான், காப்பியும் அடிக்க மாட்டான் :)
ReplyDeleteடேக்கன் படத்தில் விபச்சார விடுதி காட்சிகள் மட்டும் மகாநதி படத்தில் வரும் காட்சிகள் மாதிரி இருக்கும்.
டேக்கன் படம்...மகாநதியை காப்பியடித்தது என்று நீங்களும் சொல்லுகிறீர்கள்.
Deleteஇரண்டு படத்தையும் மீண்டும் பார்த்து விடுகிறேன்.
தில் சே படத்தை காப்பியடித்த 'Luc Besson'.... டேக்கன் படத்துக்கும் கதை எழுதி தயாரித்து உள்ளார் என்ற செய்தி தங்கள் கருத்துக்கு மேலும் வலுவூட்டுகிறது.
வருகைக்கும்...கருத்துக்கும்... நன்றி நண்பரே.
History of violence(Basha)
ReplyDeleteபாஷாதான்... ‘ஹிஸ்டரி ஆப் வயலன்சாக’ காப்பியடிக்கப்பட்டிருக்கிறது.
Deleteநெறைய பதிவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.
ஆனால் எழுத மாட்டார்கள்.
நாம் நிறைய விஷயங்களில் வெள்ளைக்காரனை நம்புகிறோம்....
தொடர்ந்து நம்ப வைக்கப்படுகிறோம்.
அண்ணே, ஆளவந்தானை பார்த்து inspire ஆகி தான் கிராபிக்ஸ் காட்சிகளை கில் பில் படத்தில் வைத்தேன் அப்படீன்னு அதன் இயக்குனர் Quentin Tarantino சொன்னதையும் நீங்க சேர்த்துக்கலாம்.
ReplyDeleteஆனா சில ஜெலுசில் பார்ட்டிங்க, திருடனுக்கு 'கருந்தேள்' கொட்டினா மாதிரி 'அதெல்லாம் ஒன்னும் கிடையாது. சும்மா கப்சா' அப்படீன்னு முனகுனாங்க. இது நம்ம தமிழ் மீடியாவுல வந்த செய்தி இல்லை. NDTV காரன் சொன்னது. இங்கிலீஷ்ல பேசறவங்க பொய் சொல்ல மாட்டாங்கன்னு நம்புறவங்க தான நாம. கேபிள் கூட அப்பவே இதை அவர் பதிவுல போட்டார்.
http://movies.ndtv.com/movie_story.aspx?Section=Movies&ID=ENTEN20120209540&subcatg=MOVIESINDIA&keyword=bollywood&nid=243976
So far we've always thought of Indian cinema as being a derivative of its western counterparts.
So to hear that one of American cinema's most influential directors, Quentin Tarantino, director of movies like Pulp Fiction and Inglorious Basterds, has admitted in a conversation with one of our own directors, Anurag Kashyap, that a whole sequence in one of his films is inspired by an Indian film, came as a huge and a welcome surprise.
Apparently Tarantino admitted in a private conversation with Anurag that the celebrated animation-action sequence in Kill Bill was inspired from 2001 Hindi-Tamil film, Kamal Haasan starrer, Abhay.
When contacted, Anurag Kashyap says, "Yes, Sight and Sound critic Naman Ramchandran first told me this. So when I met Quentin in Venice I asked him whether the Manga sequence in Kill Bill was inspired from an Indian film and he excitedly remarked, 'Yes, I saw this Indian serial-killer film which showed violence as animated.'"
Quentin Tarantino ஆளவந்தானை பற்றி நேரடியா ஒன்னும் சொல்லலையே அப்படீன்னு சொல்ற ஜெலுசில் பார்டிங்க, இதை வார்த்தைக்கு வார்த்தை கவனமா படிங்க.
The director explains, "There is only one Indian serial-killer film which was made before Kill Bill where violence was animated, and that was Abhay."
இவங்களுக்காக Quentin Tarantino வே இங்க வந்து இவங்க வீட்டு கதவை தட்டி சொல்லிட்டு போனாலொழிய இவங்க ஏத்துக்க போறதில்லை.
ஜெலுசில் பார்டிங்களுக்கு கமலுடைய தாழ்மையான வேண்டுக்கோள் தான் அவருடைய கடைசி வரி.
Kamal Haasan, who starred in Abhay, has his own take on the compliment. "When I did the animation action sequence 12 years ago it was seen as self-indulgent and odd by a lot of people. Now that it has been endorsed by a filmmaker of such brilliance, critics will be kinder to some of the things I attempt in my films."
இப்போ பாருங்க ஜெலுசில் பார்டிங்க, எதை பத்தி பேசுறோமோ அதை விட்டுட்டு "அதனால தான் தாணு தெருவுக்கு வந்து வேர்கடலை விக்கிற நிலைமைக்கு வந்துட்டாரு" அப்படீன்னு பழைய புளிச்சுப்போன டப்பா சோறை எடுத்துக்கிட்டு பந்திக்கு வருவாங்க பாருங்க.
சபாஷ்...சரியான பின்னூட்டம்.
Deleteநல்ல பதிவு.
ReplyDeleteநகலெடுப்பது பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஒரு நாளைக்கு நான் அடிக்கிற program ல பாதி google ல இருந்து copy தான்.
அவங்க அவங்க தேவைக்கு ஏற்ப copy இருந்து கிட்டு தான் இருக்கு.
அடியேனின் கருத்து, படம் பார்க்க நல்ல இருந்தா சரி. அதனுடைய மூலத்தை பற்றி ரொம்ப ஆராய்ச்சி பண்ணனும்கிற தேவை இல்லை.
நண்பரே!
Delete///நகலெடுப்பது பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஒரு நாளைக்கு நான் அடிக்கிற program ல பாதி google ல இருந்து copy தான்.///
நண்பரே!
நாம் எடுப்பதற்கே...கூகிள் கொடுப்பதற்கே...
///அடியேனின் கருத்து, படம் பார்க்க நல்ல இருந்தா சரி. அதனுடைய மூலத்தை பற்றி ரொம்ப ஆராய்ச்சி பண்ணனும்கிற தேவை இல்லை.///
உங்கள் கருத்துக்கு கீழே அடியேனும் கையொப்பமிட்டுள்ளேன்.
நன்றி...நண்பரே!
வருகைக்கும்...ஆதரவிற்கும்...
தாங்கள் ரஜினியின் பாட்சாவை பற்றி சொல்லி இருப்பது உண்மை இல்லை. ரஜினியின் பல படங்கள் அமிதாப் பச்சன் படங்களின் காப்பி. பாட்சா கூட ஹம் என்ற அமிதாப்பின் ஹிந்தி பட காப்பிதான்.மற்றபடி வெள்ளைக்காரன் மணிரத்தினத்தை பார்த்து காப்பி அடித்தான் என்பதெல்லாம் எங்க நாடுதான் பெருசு என்பது போன்ற பீலாக்கள்.நீங்கள் போன பதிவின் போது சண்டை போட்டதன் தொடர்ச்சியாக இப்படி திடீரென்று வெள்ளைக்காரன் காப்பி என்று ஆரம்பித்து விட்டீர்களோ?
ReplyDeleteதிரு மு.மு.அவர்களே...ரஜினியின் படங்கள்... முறைப்படி உரிமை வாங்கி எடுக்கப்பட்டது.
ReplyDeleteஹம் பற்றி எனக்கும் தெரியும்.
பாட்ஷா பற்றிய பதிவில் அது பற்றி சொல்கிறேன்.
எனக்கு எங்கநாடு பெருசுதான்.
அதற்காக பீலா அது இது என்று...மட்ட ரகமாக உரையாட இங்கு இடமில்லை.
குட்பை.
தமிழ் படத்தை காப்பி அடித்து தமிழ் படம் எடுப்போரை கண்டால்தான் இப்போதெல்லாம் கடுப்பு வருகிறது. அக்னி நட்சத்திரம், தில்லு முள்ளு, இன்று போய் நாளை வா, ஆண் பாவம். என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் ஒரிஜினலை நெருங்கவே முடியாது.
ReplyDeleteபழைய படங்களை ரீமேக் செய்யும் கலாச்சாரம்...ஹாலிவுட்டிலிருந்து வந்ததுதான்.
Delete/// என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் ஒரிஜினலை நெருங்கவே முடியாது.///
நிஜம்தான் நண்பரே...
எத்தனை கோடி செலவழித்தாலும் தஞ்சை கோயிலை...பிரதியெடுக்க முடியாது
மாற்றான் படத்தை சுட்டு 'ஸ்டக் ஆன் யூ' படம் எடுத்த வெள்ளைக்காரனை கண்டு கே.வி.ஆனந்த் கேவி அழுதாராமே...வாட் எ பிட்டி!!
ReplyDeleteமாற்றான் படம் வரட்டும்...கே.வியை அழ விடலாம்.
Deleteஅங்கினாதபடி எங்கும் சுட்டு...ஒரு பக்கா கமர்சியல் படம் கொடுப்பார் கேவி.
டோக்ரி மாதிரி ஏமாத்த மாட்டார்.
ரசிகர்களை... ‘கொடுத்த காசு வேஸ்டாப்போச்சே’ என அழ வைக்க மாட்டார்.
இப்பதான் உங்க ப்ளாக் கலைகட்டுது தலைவா......ம்ம்ம்ம்ம்ம் ஆரம்பிங்க
ReplyDeleteஅப்படியா தொண்டரே!!!!!!!!!!!!!
Deletehttp://geethappriyan.blogspot.in/2009/06/blog-post_02.html
ReplyDeleteதலைவரே இது முந்தைய பதிவு,இதில் இசைப்புயலின் வேறு சில படங்களும் ஹாலிவுட்டில் வந்தது இருக்கும்.பதிவுகள் படிக்கிறேன்,கருத்திட முடியவில்லை.தவறாக எண்ண வேண்டாம்.
வருகைக்கு நன்றி நண்பரே!
Deleteதங்கள் வேலைப்பளுவை நான் அறிவேன் நண்பரே!
தீடிரென்று நிகழும் சமூக அவலங்களை காணும்போது...தங்களை நினைத்து கொள்வேன்.
கீதப்பிரியன் எழுத்தில் இந்தக்கொடுமைகள் தோலுரிக்கப்பட வேண்டும்...என்ற எண்ணம் அடிக்கடி வரும்.
வலைத்தளத்தில் தங்கள் வருகைக்காக காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன்.
விரைந்து வாருங்கள்.
ஒரு ஊர்க்காரவுக அடிச்சிக்கிடுவிக.. சேர்ந்துக்கிடுவீக... நாங்க இப்பிடிக்கா ஓரமா ஒக்காந்து வேடிக்கை பாக்கோம் :-) #கமல் ரசிகன்
ReplyDelete