காட்பாதர்-இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே ஒரு பவர் தெறிக்கும்.
கேபிடலிசம் தான் உயிர் வாழ, யாரையும் பழி வாங்கும்....
போட்டுத்தள்ளும்...
நம் ஊரிலேயே மிகச்சரியான உதாரணம்....
சோனியா காந்தி.
1669ல் மரியோ புஸோவால் நாவலாக எழுதப்பட்டு 1972ல் பிரான்ஸிஸ் போர்டு கொப்பல்லாவால் படமாக்கப்பட்டது.
நாவலும் சரி..படமும் சரி..
இரண்டுமே உலகைக்கலக்கியது.
ஹாலிவுட்டில் சிட்டிசன்கேனை பின்னுக்கு தள்ளிவிட்டு தரத்தில் முதலிடத்தில் இன்றளவும் காட்பாதரை கொண்டாடுகிறார்கள்.
சினிமா பேச ஆரம்பித்த பிறகு அதன் அர்த்தத்தை ...வலிமையை முழுமையாக உணர்த்திய படம் காட்பாதர்.
வண்ணப்படங்களிலேயே அதன் வீர்யத்தை அற்புதமாக போர்ட்ரெய்ட் செய்த படம் காட்பாதர்.
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை காட்பாதரை பார்ப்பதை வழமையாககொண்டிருக்கிறேன்
.இன்று பார்க்கும்போது கூட படம் புத்தம் புதிதாய் தோற்றமளித்தது.
திரைப்படத்தின் அத்தனை உள்ளடக்கங்களையும் சரியாகப்பயன்படுத்தியபடம் காட்பாதர்.
ஒரு கதை எவ்வாறு திரைக்கதை அமைக்கப்படவேண்டும் என்பதற்க்கு மிகச்சரியான உதாரணம் காட்பாதர்.
முதலில் மரியோபுஸோதான் திரைக்கதையை அமைத்தார்.
சரியாக வரவில்லை.
பிறகு கொப்பல்லோ அமைத்தார்.
மொதத நாவலைப்படித்து விட்டு அதன் மூலக்கூறை பிடித்து விட்டார்.
பேமிலி V/S பிசினஸ்.
இந்த தளத்தில்தான் இக்கதை இயங்குகிறது என்றசூத்திரத்தை கண்டுபிடித்தவர் கொப்பல்லோ.
அவராலும் ஒருகட்டத்தில் திரைக்கதையை நகர்த்த முடியவில்லை.
இதற்க்கென்றே ஹாலிவுட்டில் ஸ்கிரிப்ட் டாகடர் என்ற பிரிவு உண்டு.
அதில் ஜீனியஸான ராபர்ட் டுவென் உதவி செய்தார்.
இவர்தான் திரைமேதை ரோமன் பொலான்ஸ்கி இயக்கத்தில் வெளிவந்த
சைனா டவுண் திரைப்படத்தின் திரைக்கதையை அமைத்தவர்.
எத்தனை ஜீனியஸ்கள் சேர்ந்து ஒரு திரைப்படத்தை காவியமாக்குகிறார்கள்!!!!!!!!!!
.நம்ம ஊரிலே கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்....என ஒரே ஒரு பெயரைப்போட்டு கைதட்டல் வாங்கும் அயோக்கியத்தனம் இன்றும் தொடர்கிறது
உலகில் எந்தெந்த மொழிகளில் திரைப்படம் எடுக்கப்படுகிறதோ அத்தனை மொழிகளிலும் இப்படம் காப்பியடிக்கப்பட்டோ...சிதைக்கப்பட்டோ...மறு உருவாக்கம் செய்யப்பட்டோ வந்துள்ளது.
காட்பாதரை.... தமிழில்....
சிதைக்கப்பட்டு வந்த படம் அமரன்.
காப்பியடிக்கப்பட்டு வந்த படம் நாயகன்.
அற்புதமாக மறு உருவாக்கம் செய்யப்பட்ட படம் தேவர் மகன்.
அதனால்தான் கமல் தைரியமாக தேவர்மகனை ஆஸ்கார் அனுப்பினார்.
“உன் காட்பாதரை என் மதுரை மண்ணில் உயிர்த்தெழ வைத்துள்ளேன்” என்று வெள்ளைக்காரனுக்கு சேதி சொல்லியதாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு திரைப்படம் எப்படி தொடங்கப்பட வேண்டும் என்பதற்க்கு இலக்கணம் காட்பாதர்.
குளோசப்பில் ஒரு முகம் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை விளக்கும்.
உதவி கேட்கும்.
கவுண்டர் ஷாட்டில் மார்லன் பிராண்டோ மடியில் பூனைக்குட்டியை விரல்களால் கொஞ்சியபடிகேட்டுக்கொண்டு இருப்பார்.
ஒளிப்பதிவில்.... லைட்&ஷேட் என்ற உத்தி மிகுந்த நேர்த்தியுடன் கையாளப்பட்டிருக்கும்.
இருண்ட உலகத்தின் மாமனிதன் மார்லன் பிரண்டோ என்பதை ஒளிப்பதிவு சொல்லும்.
ஏன்? ஆர்ட் டைரக்டரும் அவர் பாணியில் சொல்லியிருப்பார்.
.இருட்டை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் காட்சியிலிருந்து அப்படியே ஜம்ப்...
அடுத்தக்காட்சி .
வெளிச்சம் வெள்ளமாக தெறிக்கும் திருமணக்காட்சி.
அத்தனை முதன்மை பாத்திரங்களும் இங்கே ஆஜராகியிருப்பார்கள்.
அவர்களது குணாதிசயங்களை இந்தக்காட்சியிலேயே சொல்லி விடுவார் கொப்பல்லோ.
கொப்பல்லோவின் ஆளுமைக்கு இதோ ஒரு சாம்பிள்.....
இன்னொரு டான் காட்பாதரை பார்த்து பேச வேண்டும்.
அந்த நடிகரால் மார்லன் பிராண்டோவை பார்த்து வசனமே பேச முடியவில்லை.
'வசனத்தை திருப்பி திருப்பி சொல்லி மனப்பாடம் பண்ணு' என்று சொல்லி விட்டு அந்த நடிகர் அவ்வாறு பிராக்டிஸ் பண்ணுவதை அவர் அறியாதவாறு சூட் செய்து படத்தில் வெகு நேர்த்தியாக இணைத்துவிட்டார்.
படத்தில் காட்பாதரை பார்க்கப்போகும்முன்னால் எப்படி பேசவேண்டும் என்பதை ஒரு மனிதன் தனியாக ஒத்திகை பார்ப்பதுபோல் இக்காட்சி ரசிகர்களுக்கு பதிவாகும்.
கொப்பல்லொ இப்படம் எடுக்க பட்ட பாட்டை தனியே ஒரு படம் பண்ணலாம்.
அவ்வளவு பாடு.
தயாரிப்பாளரான பாரமவுண்ட் கொடுத்த நெருக்கடி சொல்லி மாளாது.
மார்லன் பிராண்டோவும் இயக்குனரை வாட்டி வதைப்பதில் பிஹெச்டி வாங்கியவர்.
ஒரு கட்டத்தில் கதவை சாத்தி விட்டு கொப்பல்லோ தனிமையில் கதறி அழுதிருக்கிறார்.
அதன் பிறகு பிராண்டோ தனது சேட்டைகளை மூட்டை கட்டி விட்டு படம் முழுமையாக வர முழு மனதோடு ஒத்துழைத்தது வரலாறு.
அல்பசினோ இப்படத்தின் ஆடிசனுக்கே ஒத்துழையாமையை நல்கினார்.
அப்போது அவர் திரை உலகில் சாதாரணன்.
ஆனால் நாடக உலகில் சூப்பர் ஸ்டார்.
இவரைப்போட பாரமவுண்ட் கொடுத்த கட்டையை நீக்க கொப்பல்லோ படாத பாடுபட்டார்.
அல்பசினோ என்ற மகத்தான நடிகன் வெளிப்பட்டது காட்பாதரில்தான்.
ஆரம்பக்காட்சிகளில் அல்பசினோ முகம் பச்சிளம்பாலகனாக காட்சியளிக்கும்.
கிளைமாக்சில் நரியின் தந்திரத்தையையும், ஒநாயின் கொடூரத்தையும் கண்களில் தேக்கி பாவங்களை வெளிப்படுத்துவார் பாருங்கள்.
வர்ணிக்க வார்த்தைகளை புதிதாக உருவாக்க வேண்டும்.
இது வரை இப்படத்தை பார்க்கவில்லை என்றால் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேஸ்ட்.
இனிமேலும் பார்க்கபோவதில்லை என்றால் டோட்டல் வேஸ்ட்.
இப்படத்தை முப்பதாண்டுகளாக ஆய்வு செய்து வரும் எனது நண்பர் இயக்குனர் திரு .ஆனந்தன் கொடுத்த தகவல்கள்தான் இப்பதிவில் நிரம்பி உள்ளன.
அவருக்கு நன்றி.

அருமையான படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார்.
ReplyDelete-----I'm gonna make him an offer he can't refuse -----
ReplyDelete------ A lawyer with his briefcase can steal more than a hundred men with guns ------
------- Never hate your enemies. It clouds your judgement ------
எப்பா.................என்ன படம்..................என்ன நடிப்பு........................என்ன வசனங்கள்...........................
The Wild One(செம
ReplyDeletebike) - A Streetcar named desire - Godfathr - Viva zapata - Apocalypse now, இதெல்லாத்தையும் தொடர்ந்து பாத்தா - பிராண்டோவின் முழு பரிமாணமும் வெளிப்படும் என்பது என் கருத்து. குறிப்பா, Apocalypseல அவர் வருவது மொத்தமே 20 நிமிடங்கள் கிட்டதான் வருவார்..ஆனா அவரின் வர்ணிக்க வார்த்தைகள் இல்ல......கைய தடவுவதும் மொட்டை தலையை ஆடுவதும் என்று அதகளப்படுத்தியிருப்பார்..
சிவாஜி - பிராண்டோ அளவுக்கு...ஏன் அவரை விஞ்சும் அளவுக்கு திறமை இருந்தவர்...........இத நா சொல்ல வேண்டியதில.
ஒரு ஸ்டேஜ்ல தனக்குத்தானே போட்டுகிட்ட வட்டத்தவிட்டு அவரால வெளிய வரமுடியாம போயிருச்சோன்னு தோணுது.அந்த வருத்தம் எப்பவும் எனக்கு உண்டு.........
மார்லன் பிராண்டோவின் கண்கள் அநேகமாக இருளாக (ஷேடாக) இருக்குமாறே படமாக்கப்பட்டிருக்கும் - உணர்ச்சிகளை நேரடியாக விளங்கிக்கொள்ள முடியாமல் பார்வையாளர் ஊகிக்கும் வண்ணம்!
ReplyDeleteநாயகன் படம் பற்றி தெரியும்!
தேவர் மகன் பற்றி நேற்று நானும் நண்பனும் பேசிக்கொண்டிருந்தோம் - மிக அருமையான படம் என்று! - அதுவும்? - திரும்பப் பார்க்கவேண்டும்!
பார்த்துவிட்டேனா?பத்து முறை இது வரையில்.இது படமல்ல வாழ்கை.சாரு போன்ற அரைவேக்காடுங்க இதை அஞ்சி முமிஷம் பார்க்க முடியலைன்னு சொல்லலாம்.அதனால் இந்த படம் சிறந்ததல்ல என்றாகிவிடாது
ReplyDeleteஆனந்துக்கும் நன்றி கருத்தை பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் நன்றி...
ReplyDelete@செங்கோவி
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே.
@கொழந்த
ReplyDeleteகாட்பாதரின் சூப்பர் டயலாக்குகளில் சில சாம்பிள்களை தூவி உள்ளீர்கள்.
அந்த வசனங்களை அப்படியே உள் வாங்க முடியாத இயலாமை..வருத்தம் ஒவ்வொரு முறை பார்க்கும் போது ஏற்ப்படும்.
@கொழந்த
ReplyDelete//சிவாஜி - பிராண்டோ அளவுக்கு...ஏன் அவரை விஞ்சும் அளவுக்கு திறமை இருந்தவர்......//
நூற்றுக்கு நூறு உண்மை.சிவாஜி ஒருவர்தான் க்ம்பீரமாக கர்ஜிப்பார்.கோழையாக வந்தால் அதற்க்குறிய பாடி லாங்குவேஜில் அசத்துவார்.நேச்சுரல் ஆக்டிங்,மெதட் ஆக்டிங் இரண்டிலும் கொடி கட்டியவர்.
பார்க்க துடிக்கேறேன்
ReplyDelete@ஜீ
ReplyDelete//மார்லன் பிராண்டோவின் கண்கள் அநேகமாக இருளாக (ஷேடாக) இருக்குமாறே படமாக்கப்பட்டிருக்கும் -//
ஒளிப்பதிவில் ஒருவரது காரெக்டரை வெளிப்படுத்தியது கொப்பல்லோவின் தனித்தன்மை . விட்டோரியோ ஸ்டெரராவுக்கு [லாஸ்ட் எம்பரர் காமராமேன்]இணையான ஒளிப்பதிவாளர் கோர்டன் வில்லிஸ்.
@vikki
ReplyDelete//பார்த்துவிட்டேனா?பத்து முறை இது வரையில்.இது படமல்ல வாழ்கை.சாரு போன்ற அரைவேக்காடுங்க இதை அஞ்சி முமிஷம் பார்க்க முடியலைன்னு சொல்லலாம்.அதனால் இந்த படம் சிறந்ததல்ல என்றாகிவிடாது//
நண்பரே கை கொடுங்கள்.நான் நான்கு முறை மட்டும்தான் பார்த்திருக்கிறேன்.
நீங்கள் இந்த விசயத்தில் எனக்கு சீனியர்.
சாரு மட்டுமல்ல...காட்பாதர் பிடிக்காதவர்கள் நெறைய பேர்.
ஆனால் அவர்கள் மைனாரிட்டி.
நாமதான் மெஜாரிட்டி.
மாப்ள பல விஷயங்கள் புத்திதாய் தெரிந்து கொண்டேன்....நல்ல விளக்கமா சொல்லி இருக்கீங்கய்யா நன்றி!
ReplyDeleteசார்.............நா 13 தடவை பார்த்துள்ளேன் என்பதை இங்கு - இத்தருணத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்...........(என் வயசு 26 என்பதையும் சேர்த்து கொள்ளவும்)
ReplyDeleteபாஸ் என் வலைப்பதிவின் சில தடங்கல் காரணமாக உங்களுக்கு கருத்து இட முடியவில்லை,
ReplyDeleteமன்னிக்கவும் இப்போது சரி ஆகிவிட்டது ,
இனி தொடர்ந்து வருவோம் இல்ல
உங்கள் விமர்சனம் படம் பாக்கும் ஆசையை தூண்டி விட்டது
ReplyDeleteநல்ல விமர்சனம் பாஸ்
parkka muyarchikkiran...
ReplyDeleteungka pathivin viyukam nallayirukku...
valththukkal..
அருமையான படம் பற்றிய தகவலை தந்துள்ளீர்கள்
ReplyDeleteஇப்பொழுதே பார்த்துவிடவேண்டும்போல் உள்ளதே
சிறந்த ஒரு பட அறிமுகம் எனக்குய்..அருமையான விமர்சனம் கூட!!
ReplyDelete@பிரணவன்
ReplyDelete@கவி அழகன்
@விக்கி உலகம்
@கற்றது தமிழ் துஷ்யந்தன்
@விடிவெள்ளி
@மதுரன்
@மைந்தன் சிவா
நண்பர்களே... வருகைக்கும்,கனிவான கருத்துக்கும் நன்றி.
@கொழந்த
ReplyDelete//நா 13 தடவை பார்த்துள்ளேன் என்பதை இங்கு - இத்தருணத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்...........(என் வயசு 26 என்பதையும் சேர்த்து கொள்ளவும்)//
போச்சுரா...இன்னொரு சீனியரா!!!!!!!!!
26 வயசுல 13 தடவையா!!!!!!!!!!
இந்த ரேட்டிங்ல போனா நீங்க கொப்பல்லோவை ஒவர்டேக் பண்ணிருவீங்க...
வாழ்த்துக்கள்.
இந்த படம் பாக்க பொறுமை இருக்குமான்னு தெரியலையே தலைவா
ReplyDelete@லக்கி லிமட்
ReplyDelete//இந்த படம் பாக்க பொறுமை இருக்குமான்னு தெரியலையே தலைவா//
நண்பரே...நாயகன்,தேவர்மகன் ரசித்திருப்பீர்கள்...அல்லவா...
காட்பாதர் இப்படங்களின் தாய்...
ஆனால் இங்கே தாய் 16 அடி பாய்ந்துள்ளது.
குட்டிகள் எட்டடி கூட அல்ல...நாலு அடி மட்டுமே பாய்ந்துள்ளது.
வணக்கம் சகோ, ஆங்கிலப் படம் பற்றிய விமர்சனத்திற்கு உங்களுக்கு நிகர் நீங்களே தான்!
ReplyDeleteஉங்கள் நண்பரின் ஆய்வுத் தகவல்களோடு, பல காலங்களுக்கு முன்னர் வந்த படம் என்றாலும், இப்போதும் ரசனை குன்றாதிருக்கிறது என்பதற்குச் சான்றாக விமர்சனத்தினையும் வழங்கி இப் படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டியிருக்கிறீங்க.
நன்றி ஐயா. நன்றி,
>>>இது வரை இப்படத்தை பார்க்கவில்லை என்றால் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேஸ்ட்.
ReplyDeleteஇனிமேலும் பார்க்கபோவதில்லை என்றால் டோட்டல் வேஸ்ட்.
ஹா ஹா ம் ம் பயமுறுத்தறீங்களே?
மறக்கவே முடியாத படம்..., வெரும் சண்டை படங்களாகவே பார்த்து கொண்டிருந்த என்னுடைய ஹிரைப்பட தேடல் முறையயே மாற்றி அமைத்த படம்... எங்கோ படித்தது "The Only film which deserves the prefix THE"
ReplyDelete@நிரூபன்
ReplyDelete//ஆங்கிலப் படம் பற்றிய விமர்சனத்திற்கு உங்களுக்கு நிகர் நீங்களே தான்!//
வணக்கம் நிரூபன்...உங்கள் பாராட்டை என் நண்பர் ஆனந்தனுக்கு பார்வேர்டு செய்கிறேன்.
காட்பாதர் பற்றிய அவரது ஆராய்ச்சி அளப்பரியது.
ஷாட் பை ஷாட்...சீன் பை சீன் அவர் ஆராய்ந்து சொன்ன விடயங்கள் எழுத வேண்டுமென்றால் இது போல் நூறு பதிவுகள் வேண்டும்.
அவர் சொன்னது ராமாயணம்..
நான் எழுதியது திருக்குறள்.
//என் வயசு 26 என்பதையும் சேர்த்து கொள்ளவும் // எனக்கு இதுல ரொம்ப நாளா டவுட் இருக்கு :)
ReplyDelete>>>இது வரை இப்படத்தை பார்க்கவில்லை என்றால் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேஸ்ட்.
ReplyDeleteஇனிமேலும் பார்க்கபோவதில்லை என்றால் டோட்டல் வேஸ்ட்.
ஹா ஹா ம் ம் பயமுறுத்தறீங்களே?
வணக்கம் சிபி....
பயமுறுத்தவில்லை.
இன்றைய அரசியல் சூழலில் நாம் அனைவரும் என்றாவது ஒரு காட்பாதரை சந்திக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம்.
அப்போது இப்படம் பார்த்த அனுபவம் ...
கோனார் நோட்ஸ் மாதிரி உதவி செய்யும்.
@ஆனந்த்
ReplyDelete//மறக்கவே முடியாத படம்..., வெரும் சண்டை படங்களாகவே பார்த்து கொண்டிருந்த என்னுடைய ஹிரைப்பட தேடல் முறையயே மாற்றி அமைத்த படம்... எங்கோ படித்தது "The Only film which deserves the prefix THE"//
உலகம் முழுக்க நெறைய பேர் ரசனையை மாற்றி அமைத்த படம்....
உங்களை புரட்டிப்போட்டதில் ஆச்சரியமில்லை.
கொழந்த>>>
ReplyDelete//என் வயசு 26 என்பதையும் சேர்த்து கொள்ளவும் //
ஆனந்த்>>>
//எனக்கு இதுல ரொம்ப நாளா டவுட் இருக்கு :)//
எனக்கும் இந்த டவுட் உண்டு...
ஆனால் எதுக்காக இந்த கொழந்த தன் வயச கூட்டி சொல்லுது?????????!!!!!!!!!!!!!!!!
கூட்டியா .... எனக்கென்னமோ 76 - ஐ 26 -ன்னு சொல்லுறாப்ல ஃபீலிங்..
ReplyDelete@ஆனந்த்
ReplyDelete//கூட்டியா .... எனக்கென்னமோ 76 - ஐ 26 -ன்னு சொல்லுறாப்ல ஃபீலிங்..//
ஏங்க இந்த பேட் பீலிங்...
பாவம்...பச்ச மண்ணுங்க...நம்ம கொழந்த...
இன்னும் ஒரு கல்யாணம் கூட ஆகல...[கல்யாணம் மட்டும்தான் ஆகல}
நல்ல சினிமா ரசிகன்தான் நீங்கள்
ReplyDelete// எதுக்காக இந்த கொழந்த தன் வயச கூட்டி சொல்லுது ??
ReplyDeleteஎன்ன பண்றது சார்................அப்பத்தான் நம்மள மதிக்கிறாங்க.....
// நம்ம கொழந்த...
இன்னும் ஒரு கல்யாணம் கூட ஆகல...[கல்யாணம் மட்டும்தான் ஆகல} //
oh....god..............me ???.............me like a child.............
@கூடல் பாலா
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.
அய்யய்யோ ..அப்போ நான் வேஸ்டா ...ஹி..ஹி..ஹி.. இன்னும் நான் படத்த பார்க்கல .உங்க கிட்ட இருக்கா டிவிடி ..?வந்து வாங்கணும் ...
ReplyDelete1972 ல வெளியான படத்த இப்போ விமர்சனம் பண்ணியிருக்கீங்க..இனிமேல் தானே பார்க்கணும் ....
ReplyDeleteஇது வரை இப்படத்தை பார்க்கவில்லை என்றால் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேஸ்ட்.
ReplyDeleteஇனிமேலும் பார்க்கபோவதில்லை என்றால் டோட்டல் வேஸ்ட்.
மாப்பிள எங்களை இப்படி பயமுறுத்தினா நாங்க தேடிப்போய் படம் பார்போம்ன்னு நினைக்கிறீங்க உந்த பாச்சா எங்களிட்ட பலிக்காது நாங்கள்லாம் உந்த படத்த தமிழ்ல பாத்துட்டோம்..இயக்குனர் பெயர் ம வில தொடங்கிம்ம் ம் வில் முடியும் பட கதாநாயகன் உலக மகா நடிகன்னு சொல்லிக்கொள்கிறவர் அவர் பெயர் க வில் தொடங்கி ன் இல் முடியும் படம் பெயர் நா வில் தொடங்கி ந் இல் முடியும்
நாங்களும் கிசு கிசு எழுத தொடங்கீட்டோம்ல்ல..!
@கோவை நேரம்
ReplyDelete//அய்யய்யோ ..அப்போ நான் வேஸ்டா ...ஹி..ஹி..ஹி.. இன்னும் நான் படத்த பார்க்கல .உங்க கிட்ட இருக்கா டிவிடி ..?வந்து வாங்கணும் ..//
வாங்க...வாங்க...
காட்பாதர் டிவிடி வாங்க... வாங்க
@காட்டான்
ReplyDelete>>>>இது வரை இப்படத்தை பார்க்கவில்லை என்றால் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேஸ்ட்.
இனிமேலும் பார்க்கபோவதில்லை என்றால் டோட்டல் வேஸ்ட்>>>>>>>>
//மாப்பிள எங்களை இப்படி பயமுறுத்தினா நாங்க தேடிப்போய் படம் பார்போம்ன்னு நினைக்கிறீங்க உந்த பாச்சா எங்களிட்ட பலிக்காது நாங்கள்லாம் உந்த படத்த தமிழ்ல பாத்துட்டோம்..இயக்குனர் பெயர் ம வில தொடங்கிம்ம் ம் வில் முடியும் பட கதாநாயகன் உலக மகா நடிகன்னு சொல்லிக்கொள்கிறவர் அவர் பெயர் க வில் தொடங்கி ன் இல் முடியும் படம் பெயர் நா வில் தொடங்கி ந் இல் முடியும்
நாங்களும் கிசு கிசு எழுத தொடங்கீட்டோம்ல்ல..!//
இவ்வளவு கஷ்டமா கிசுகிசு எழுதுனா என் மாதிரி சிற்றறிவு ஆசாமிக்கு புரியாது மாப்ள...
@காட்டான்
ReplyDelete// இயக்குனர் பெயர் ம வில தொடங்கிம்ம் ம் வில் முடியும் //
ஹைய்யா...கண்டு பிடிச்சுட்டேன்...
இயக்குனர் பெயர் மணி வாசகம்.
கரெக்டா?
அடபாவி காட்டானுக்கே கடுக்காய் கொடுக்கிறாய் ...!?
ReplyDelete//நம்ம ஊரிலே கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்....என ஒரே ஒரு பெயரைப்போட்டு கைதட்டல் வாங்கும் அயோக்கியத்தனம் இன்றும் தொடர்கிறது// - உண்மைதான்.
ReplyDelete//இன்று பார்க்கும்போது கூட படம் புத்தம் புதிதாய் தோற்றமளித்தது.//-உண்மைதான், நான் இன்று மீண்டும் பார்க்கப் போகிறேன்.
விமர்சனம் என்பது அந்தப்படத்தை பார்க்க தூண்டுவதாக இருந்தால் போதுமானது. கதையைச் சொல்லுவது அல்ல விமர்சனம், ஆனால் நம்ம ஊரில்?
அந்த பயத்திலேயே விமர்சனங்களை படிப்பதில்லை நான்.
உங்களின் விமர்சனம் மிகச் சரியானது. நன்றி நண்பரே. மற்ற படங்களையும் படிக்கிறேன்.
இந்தப்படத்திற்கு பிறகு 'கார்ஃபாதர் லைட்டிங்' என்று ஒரு புதிய ஒளியமைப்பு உருவாகியது. இன்றும் அது வழக்கத்தில் இருக்கிறது.
ReplyDelete@ விஜய் ஆர்ம்ஸ்டாராங்க்
ReplyDelete//உங்களின் விமர்சனம் மிகச் சரியானது. நன்றி நண்பரே. மற்ற படங்களையும் படிக்கிறேன்.//
உங்கள் பாராட்டு எனது மானசீக குரு சுஜாதாவையே சேரும்.அவரை காப்பியடித்துதான் எழுதி கொண்டிருக்கிறேன்
@விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்க்
ReplyDelete//இந்தப்படத்திற்கு பிறகு 'கார்ஃபாதர் லைட்டிங்' என்று ஒரு புதிய ஒளியமைப்பு உருவாகியது. இன்றும் அது வழக்கத்தில் இருக்கிறது.//
தகவலுக்கு நன்றி.
நான் எடுத்த ஒரு விளம்பரப்படத்தில் இது போன்ற ஒளியமைப்பை
நண்பர் ஏ.ரமேஷ் குமார்[ஊமை விழிகள் ஒளிப்பதிவாளர்}உருவாக்கி எடுத்தார்.
//நான் எடுத்த ஒரு விளம்பரப்படத்தில் இது போன்ற ஒளியமைப்பை நண்பர் ஏ.ரமேஷ் குமார்[ஊமை விழிகள் ஒளிப்பதிவாளர்}உருவாக்கி எடுத்தார்.//
ReplyDeleteமுடிந்தால் அந்த விளம்பரப்படத்தை பார்க்க உதவவும்.