Jul 6, 2011

நாஞ்சில் நாடன் V/S நடிகர் சிவக்குமார்... தேசிய விருது பெற்ற ஜீவா பாராட்டு விழாவில்...



எனது இனிய நண்பர் ஒவியர் ஜீவா அவர்களுக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.
அவர் ஒரே ஒரு புத்தகம்தான் எழுதி உள்ளார்.
அதன் பெயர் திரைச்சீலை.
முதல் நூலுக்கே தேசிய விருது கிடைத்து விட்டது.
தமிழில் அறந்தை நாராயணன் 1982ம் வருடம் ‘தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலுக்கு தேசியவிருது பெற்று அற்புதம் நிகழ்த்தினார்.
29 வருடம் கழித்து இந்த அதிசயத்தை முதன் நூலிலேயே நிகழ்த்தி காட்டி உள்ளார் ஜீவா.

உள்ளூர் சினிமா முதல் உலகசினிமா வரை அவர் பார்த்து வியந்த படங்களை ஒரு ரசிகனின் கண்ணோட்டமாக அற்புதமாக வரைந்திருக்கிறார்.
ஒவியர் அல்லவா!
மனிதர் நேரில் பேசும்போது கிண்டலும் கேலியும் சரமாரி வெடிக்கும்.

நானும், அவரும்,இன்னொரு நண்பரும்... ஆக மூவர் ஒரு பெண்கள் கல்லூரிக்கு ஆவணப்பட போட்டிக்கு நடுவர்களாக போயிருந்தோம்.
மத்தியானம் செமப்பசி.
பசி சிறுகுடலை காலி பண்ணி பெருங்குடலுக்கு வரும்போது கிடச்சது செம விருந்து.
ஆளுக்கொரு சப்பாத்தி...
அதைப்பறிமாற அழகான மூணு பேரு....
பசி மயக்கத்துல அந்தப்பொண்ணுங்களை கொஞ்சம் சாப்பிட்டேன்..
ஒரேஒரு சப்பாத்தியை புயல் வேகத்தில் சாப்பிட்டு முடிக்க... அதை விட வேகமாக அந்த தேவலோக கன்னிகள் மறைந்து விட்டனர்.
நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் பேசிக்கொண்டோம்..
                                             “பெருசா ஏதாவது வரும்...”
காத்திருந்து தோற்று கை கழுவப்போனோம்...

இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி எங்களை அனுப்பி பழிதீர்த்தவர் கோணங்கள் பிலிம் சொசைட்டி தலைவர் பொன் சந்திரன்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் செல்போனில்.... சந்திரன் சாருக்கு சின்னதா ஒரு அர்ச்சனை செய்தேன்.
அவர் ஜீவாவுக்கு போன் போட்டு '' மூணே மூணு சப்பாத்தி மூணு பேருக்கும்
போட்டாங்களாமே..வெரி சாரி...''என்றிருக்கிறார்.
ஜீவா உடனே..
''பாஸ்கரன் பொய் சொல்லி யிருக்கார்...
அந்த மாதிரியெல்லாம் நடக்கல...
மிகைப்படுத்தியிருக்கிறார்...
இரண்டே இரண்டு சப்பாத்தியை மூணு பேருக்கும் போட்டு நல்லா கவனிச்சாங்க ....''என்று குரலில் பெருமை வழிய சொல்லியிருக்கிறார்.

மனுசன் எழுதும் போதும் இந்தப்பகடியை அப்படியே கடைப்பிடித்திருக்கிறார்.
எக்காலத்திலும் ரசிக்கப்படும் ‘குட் பேட் அக்ளி’படத்தின் விமர்சனத்துக்கு ஜீவா கொடுத்த தலைப்பு ‘மண்டையோட்டில் டாலர் தேடிய மகாமுனி’
இந்த ஒரு தலைப்பு போதும்....
தலைப்பின் சிறப்பை படம் பார்த்தவர்கள் உடனடியாக உணர்வார்கள்.

நானும் ஜீவாவும் ஒரே ஜாதிதான் என்பதை புத்தகம் படிக்கும் போது தெரிந்து கொண்டேன்.
சங்கமோ...கொடியோ...கட்சியோ இல்லாத எங்க ஜாதிக்குப்பெயர் சினிமா கிறுக்கு.

இன்றும் என்னை வசீகரிக்கும் என் சிவாஜிக்கு ஒரு அத்தியாயம் ஒதுக்கி இருக்கிறார் ஜீவா.
இப்புத்தகம் படிக்கும் ஒவ்வொரு வாசகனும் ஜீவாவை கண்ணீருடன் நன்றி பாராட்டுவர்.
என்றும் நம் இதயங்களில் வாழும் அந்த மகா கலைஞனுக்கு ஜீவாவின் வைரவரி...
 ‘விருதுகள் கிடைக்காவிட்டாலும் தமிழ்மக்கள் மனதில் நடிப்பு என்ற வார்த்தைக்கு ஒரே அர்த்தம் சிவாஜிகணேசன் என்றுதான் இருக்கிறது.’

கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய 'யவனிகா' பற்றி எழுதி முடிக்கையில்....
 ‘யவனிகா 22 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் தயாரிக்கப்படுவதாக ஒரு செய்தி மகிழ்ச்சியும் பீதியும் ஒரு சேரக்கிளப்புகிறது’என நல்ல மலையாளக்காவியங்கள் தமிழில் காயடிக்கப்படுவதை நக்கலடித்துள்ளார்.

ஹிந்தியை முதல் மொழியாகப்பயின்று...
ஆங்கில வழிக்கல்வியில் பள்ளி,கல்லூரி,சட்டம் வரை பயின்ற மாணவன்... தமிழில் இந்த புத்தகத்தை எழுதியது தாய் தமிழுக்கு கிடைத்த வரம்.

திரைச்சீலை
விலை-ரூ110.00
வெளியீடு:திரிசக்தி பதிப்பகம்
சென்னை.
தொடர்புக்கு:044-4297 0800, 2446 2220, 2446 4440

பாராட்டு விழாவில் கவிஞர் புவியரசு,மரபின் மைந்தன் முத்தையா,
நாஞ்சில் நாடன்.நடிகர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டினார்கள்.
நாஞ்சிலாரும்,திரை உலக மார்க்கண்டேயரும் மோதிய விவகாரம்...செமக்காரம்.
விபரம் அடுத்த பதிவில்...
[நாங்களும் சஸ்பென்ஸ் வைப்போமில்ல...]

11 comments:

  1. பெரிய விஷ்யமால்ல இருக்கு!

    ReplyDelete
  2. நல்லதொரு பதிவு

    ReplyDelete
  3. மனமார்ந்த பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. @விக்கியுலகம்
    @ரத்னவேல்
    @மதுரன்
    @கருந்தேள்
    வருகை புரிந்து பின்னூட்டமிட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி...நன்றி...நன்றி.

    ReplyDelete
  5. அருமை.. ...///பசி மயக்கத்துல அந்தப்பொண்ணுங்களை கொஞ்சம் சாப்பிட்டேன்/// ..
    செவிக்கு உணவில்லா போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்...உங்களுக்கு கண்ணுக்கு ....அப்புறம் அந்த தேவலோக கன்னிகள் வரவே இல்லியா...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்........(இது நடுவரா போனதுக்கு).........

    நன்றி.....புத்தகத்த அறிமுகம் செஞ்சதுக்கு....நிச்சயமா வாங்கி படிச்சிறேன்

    ReplyDelete
  7. ithaiyellaam oru message pannaa ennavaam? naan tirupur thane, boss? :-)

    ReplyDelete
  8. @கோவை நேரம்
    அலோ...அவங்களை ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன்.
    கண்ணில சிக்குனா கொலைதான்.

    ReplyDelete
  9. @கொழந்த...

    //வாழ்த்துக்கள்...
    (இது நடுவரா போனதுக்கு).........//
    இனி இப்படி ஒரு வாய்ப்பு வந்தா உங்களையும் சேத்துக்கிறேன்.
    அப்பத்தான் தெரியும் இது வரமா?
    சாபமான்னு....

    ReplyDelete
  10. @முரளிகுமார் பத்மநாபன்
    ஸாரி...பாஸ்...
    அடுத்த முறை இந்த மாதிரி நல்ல நிகழ்சிக்கு கட்டாயம் அழைக்கிறேன்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.