நண்பர்களே...
வீரப்பன் வரலாறு என்று பார்வையாளர்களிடம் ‘ரீல்’ ஓட்டியிருக்கிறார்கள்.
வீரப்பன் வரலாறை, ஒரு பகுதியை கர்நாடக போலிசின் பார்வையில் படமாக்கி உள்ளார்கள்.
எஞ்சிய பகுதி,தமிழக போலிஸ் பார்வையில் படமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒன்று...வீரப்பன் பார்வையில் இப்படம் படமாக்கப்பட்டிருந்தால் சென்சாரால் முடக்கப்பட்டிருக்கும்.
இயக்குனர் ரமேஷ் முதல் காட்சியிலேயே சொல்லி விடுகிறார்...
இது போலிசார் எழுதிய வீரப்பன் வரலாறு என்று.
அயோத்தியா குப்பம் வீரமணியை, டி.ஜி.பி.விஜயகுமார் என்கவுண்டரில் போட்டுத்தள்ளும் காட்சியை முதல் காட்சியாக வைத்ததே இதற்கு சான்று.
நாடெங்கிலும் புகழ் பெற்ற ஒருவரது வாழ்க்கையை திரைக்கதையாக்குவது மிகவும் கடினமான ஒன்று.
அதுவும் நம்ம ஊரில் மத அமைப்புக்கள்,ஜாதிச்சங்கம், பிராணிகள் வதை தடுப்புச்சட்டம்,குடி,பீடின்னு...
எல்லா எழவையும் கணக்கிலெடுத்து திரைக்கதை அமைப்பதற்கு...
தூக்கில் தொங்குவது சுகமாக இருக்கும்.
பாட்டி வடை சுட்ட கதையை...
திரைக்கதை அமைப்பதற்கே நடுக்கம் வருகிறது.
படத்தின் திரைக்கதை துண்டு துண்டாக நிற்கிறது.
இதற்கு ஏ.ஆர்.ஆர். ரமேசை குற்றம் சொல்ல முடியாது.
சட்டத்தின் துணையோடு வீரப்பன் மனைவி திரைக்கதையின் முதல் பாதியை குதறியிருக்கிறார்.
இரண்டாம் பாகத்திலிருக்கும் திரைக்கதையின் நேர்த்தியை வைத்து,
முதல் பாகத்திலிருக்கும் குளறுபடியை மன்னிக்கலாம்.
டி.ஜி.பி.விஜயகுமாரின் பாத்திரம்தான் படத்தின் ஹீரோ...
வீரப்பன்தான் வில்லன்...
இப்படி அமைக்கப்பட்டதிரைக்கதையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு,
படம் பிடிக்கும்.
ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எரியும்.
வீரப்பனாக கிஷோர்...
டி.ஜி.பி.விஜயகுமாராக அர்ஜுன்...
எட்டப்பனாக வா.மு.ச.ஜெயபாலன்...
என காஸ்டிங் கச்சிதம்.
வீரப்பன் தமிழ் தேசியப்போராளியாக உரு மாறிய வரலாற்றை திரைக்கதையில் மறைத்த வேலை... படு கச்சிதம்.
இடைவேளைக்குப்பிறகு டி.ஜி.பி. விஜயகுமாரின் ஆப்பரேஷன் திட்டங்கள் சூப்பர்ப்.
இது போன்ற திட்டங்களை நீங்கள் எந்த ஹாலிவுட் படத்திலும்
பார்த்திருக்க முடியாது.
படத்தைப்பாருங்கள்.
பொய்யையும்... நிஜத்தையும்...கண்டுணருங்கள்.
வீரப்பன் வரலாற்றில் நிறைய திரைக்கதைகள் இருக்கிறது.
நேர்மையான படைப்பாளிகளுக்காக அவைகள் காத்திருக்கிறது.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
அந்த அப்பாவி கிராமத்து மக்களுக்கு போலிஸ் செய்த கொடுமைகளை நேரில் , தினமும் பார்த்தவர்கள் நாங்கள்.நல்ல உடல்கட்டுள்ள கிராமத்து பெண்கள் கைது செய்யப்பட்டு வருவார்கள் ஒரு வாரத்தில் அத்தனை போல்சாரின் உடல்பசிக்கு விருந்தாகி நைந்த செளையாகி நடக்க கூட முடியாத நிலை வந்தவுடன் கிராமத்தில் கொண்டுபோய் தூக்கி வீசிஎரியப்படுவார்கள்.வீரப்பன் செய்த கொலைகள் கண்டிப்பாக தவறுதான்.ஆனால் போலிஸ் செய்த அராஜகம் ?
ReplyDeleteஅப்பாவிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை திரைக்கதை அமைக்க ஒரு படைப்பாளி நிச்சயம் வருவான்.
Deleteநடந்ததை நடந்தது போலவே காட்டும் தைரியம் நம் இயக்குனர்களுக்கு வரும் நாள் தொலைவில் இல்லை..
ReplyDeleteநண்பரே...
Deleteதைரியத்துக்கு குறைச்சலில்லை நம் இயக்குனர்களிடம்.
அதை விட ஒரு படத்தை முடக்கும் தைரியம் நிறைய பேருக்கு வந்து விட்டது.
thala Waiting for your Viswaroopam review..........
ReplyDeleteGood Review.
ReplyDeleteநண்பர் உலக சினிமா ரசிகன் அவர்களுக்கு
ReplyDeleteஉங்களுடைய வனயுத்தம் விமர்சனம் மற்றும் விஸ்வரூபம் விமர்சனம் படித்தேன். புரிந்தது ஒன்றுதான் வயிற்று வலியும் தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது தான் உண்மை.
விரப்பனை தவறாக சித்தரிப்பதை உங்களால் எற்க முடியவில்லை
விரப்பன் பக்க நியாயங்கள் காட்டபட வில்லை என நிங்கள் சொல்கிறீர்
அதே சமயம் ஆப்கன் போராளிகள் தவறாக சித்தரிக்க படுவது உங்களுக்கு புரியவில்லை அவர்களின் நியாயங்கள் காட்டப்படாதது புரியவில்லை
அமெரிக்க சிறைகளில் அவர்கள் படும் துன்பம் புரியவில்லை
உங்கள் விமர்சனத்தின் நடுநிலையை உணருங்கள்
வாழ்க வளமுடன்...