வணக்கம்.
கடலில் நீச்சலும் தெரியாமல்...ஆழமும் தெரியாமல் இறங்கி உள்ளீர்கள்.
சுஜாதா என்ற மாலுமியில்லாமல்...
ஜெயமோகன் என்ற ‘டம்மி பீஸை’ நம்பி கடலில் பயணப்பட்டதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
நாங்களும் மூச்சு திணறி அவஸ்தைப்பட்டோம்.
ஜெயமோகன் மிகச்சிறந்த இலக்கிய படைப்பாளி.
அவரது ‘ஏழாம் உலகம்’ ஒன்று போதும்...
ஆயிரம் ஆண்டுகள் பேசும் காவியம் அது.
ஆனால் சினிமா என்பது வேறு.
அது இலக்கியத்தை காட்டிலும் உயர்ந்தது.
அதில் அவர் மாஸ்டர் கிடையாது.
முதலில் ஜெயமோகனுக்கு,
சினிமாவின் மீது மதிப்பும்...ஆர்வமும் அறவே கிடையாது.
அவரது எழுத்துக்கள் அனைத்தையும் படித்தவர்களுக்கு இது தெரியும்.
நான் அவரிடம் நேரிடையாக மதுரையில் சந்தித்து பேசும் போது
நேரடி அனுபவமாக இதை உணர்ந்திருக்கிறேன்.
சினிமாவில் ஜெயமோகன் நுழைந்ததற்கு ஒரே காரணம், பணம்....பணம்...பணம்.
இனி யாரும் ஜெயமோகனிடம் சிக்கி சீரழியாமல் எச்சரிக்கவே இப்பதிவு.
கடல் படத்தின் கதையும் அவரது சொந்த சரக்கல்ல.
திரை மேதை லூயி புனுவலின் ‘நஸ்ரின்’ கதையை சுட்டு...
காதல் என்ற கத்தரிக்காயை சேர்த்து ‘கந்தர்கோலமாக்கி’ விட்டார்.
திரைக்கதை குப்பையாகிப்போனால்...எப்பேற்பட்ட இயக்குனரும் மண்ணைக்கவ்வுவர்.
இப்படத்தில், தாங்கள் அறிந்தோ அறியாமலோ அழிந்திருக்கிறீர்கள்.
ஜெயமோகன் உங்களை மோசடி செய்திருக்கிறார்.
கடற்கரை கிராம மக்கள் மேரி மாதா,இயேசுவுக்கு அப்புறம் பாதிரையாரைத்தான் வாழும் தெய்வமாக வழி படுவர்.
அரவிந்த சாமி பாதிரியாராக முதன் முதலாக ஊருக்குள் நுழையும் போது
தமிழகத்தில் எந்த கடற்கரை கிராமமும் இப்படி வரவேற்காது.
தேவாலயமும் இப்படி சீரழிந்து கிடக்காது.
நஸ்ரின் படத்தில் வரும் கிராமத்தை அப்படியே தமிழ்நாட்டுக்கு
இடம் பெயற்ததால் வந்த கோளாறு இது.
ஐந்தே வயது மூளை வளர்ச்சியுள்ள பெண்ணின் ‘கிளிவேஜ்ஜை’ ...
‘டெல்லி கற்பழிப்பான்’ ரசிப்பான்.
கலா ரசிகன், காறித்துப்புவான்.
எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி படமாக்கியுள்ளீர்கள்.
நல்ல வேளை டிரைலரில் இருந்த ‘லிப் லாக்’ கிஸ்ஸை தூக்கி விட்டீர்கள்.
அக்காட்சியை படத்தில் இடம் பெற்றிருந்தால் நீங்கள் படமாக்கிய மணப்பாடு கிராமப்பெண்களே ‘வாரியலை’ தூக்கி கொண்டு வந்திருப்பார்கள்.
ஏ.ஆர். ரகுமானுக்கும் ஒரு வார்த்தை...
இப்படத்திற்கு இசை அமைப்பதற்கு முன்னால்...
அலைகள் ஓய்வதில்லை,கடலோரக்கவிதைகள் இரண்டையும் பார்த்திருக்க வேண்டும்.
டைட்டில் சாங் ஒன்று போதும்.
இவ்வளவு அபத்தமாக ஹாரிஸ் ஜெயராஜ் கூட போட்டதில்லை.
ஆடியோவில் கேட்கும் போது உருக வைத்த ஜீவனுள்ள ‘நெஞ்சுக்குள்ளே’ பாடல் படத்தில் செத்து விட்டது.
‘ஏலேய் கிச்சா’ பாடலில் பிருந்தாவின் நடன அமைப்பும்,
பாம்பே டான்சர்களின் தோற்றமும்...ஆட்டமும்...
எனக்கு வாந்தியே வந்து விட்டது.
கிளைமாக்ஸ் காட்சியில் விஷுவல் எபக்ட்ஸ்சும்,பின்னணி இசை அபாரமாக இருந்தும்...
அர்ஜூனை ‘டிப் டீ’ போல கடலுக்குள் முக்கி எடுத்து காலி பண்ணி விட்டார்கள்.
‘நாயகன்’ மணிரத்னம் இனி பிறக்க முடியாதுதான்.
எனவே, அலைபாயுதே மணிரத்னத்தையாவது உயிர்த்தெழச்செய்யுங்கள்.
எல்லாப்படங்களிலும் அழுது வடிந்த ஷாலினியை...
துறுதுறு சுட்டிப்பெண்ணாக்கிய மந்திரவாதி மணிரத்னத்தை இன்றும் காதலிக்கிறோம்.
‘கோலிவுட் கர்த்தருக்கு’ ஸ்தோத்திரம்.
நஸரின் படத்தை அறிமுகம் செய்து நான் எழுதிய பதிவைக்காண்க...
ReplyDeleteநன்றி உங்கள் கடல் திரைப்பட ஆய்வு கட்டுரைக்கு.
ஜெய மோகனின் மாடன் மோட்சம் என்னை மிகவும் கவர்ந்தது.
நண்பரே...இது கடல் திரைப்பட ஆய்வுக்கட்டுரை அல்ல.
Deleteநான் மிகவும் நேசிக்கும் மணிரத்னம் தொடர்ந்து ஏமாற்றி வருவதால் எழுந்த ஆதங்க கட்டுரை.
அப்ப இதுவும் தேறாதா!...................இவிங்க எப்பவுமே இப்படிதான் பாஸ்!............மணிரத்னம் அடுத்து என்ன பாடம் எடுப்பார் ?
ReplyDeleteஜெயமோகனை தலை முழுகினால் நிச்சயமாக நல்ல படம் கொடுப்பார்.
Deleteமீண்டும் அதே புள்ளியில் நிற்கின்றீர்கள்.
Deleteராவணன் படத்துக்கு ஜெமோ தான் கதை வசனமா????
அங்காடி தெரு படத்துக்கு என்ன குறை
அடடா யாரையும் நம்ப முடியவில்லை..
ReplyDeleteமணிரத்னம் நம்மை எத்தனை படத்தில் மகிழ்வித்தார்.
Deleteஅவர் முழுக்க நம்பிய ஜெமோதான் கவுத்து விட்டார்.
ஜெமோ நினைத்தால் இன்னும் பல இலக்கியங்கள் படைக்க முடியும்.
தலைகீழாக நின்றாலும் உருப்படியாக ஒரு திரைக்கதை அமைக்க முடியாது.
நான் 'கடல்'லுக்குதான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன் :( நேற்று பார்த்த 'டேவிட்'டை விட மோசமாக இருக்காது என்று நம்புகிறேன் :((( தமிழ் சினிமா செத்து பல வருடம் ஆகிறது...
ReplyDeleteநான் இன்று டேவிட் போகிறேன்.
Deleteவிதி வலியது.
/// தமிழ் சினிமா செத்து பல வருடம் ஆகிறது...///
நான் இதை பணிவுடன் மறுக்கிறேன்.
வழக்கு எண் ஒன்று போதுமே...
விஸ்வரூபம் இந்த வருடத்தின் மாபெரும் படைப்பு.
அவசரத்தில் மறந்து விட்டீர்களா!
வேணாங்க, ரிஸ்க் எடுக்காதீங்க..!
Deleteஎல்லாம் சரி சார்,
Delete//நல்ல வேளை டிரைலரில் இருந்த ‘லிப் லாக்’ கிஸ்ஸை தூக்கி விட்டீர்கள்.//
ன்னு போட்டுட்டு அந்த போட்டோவ மக்கள் பார்வைக்கு போட்டீங்க பாருங்க, அங்க நிக்கறீங்க நீங்க..
170+ படங்கள் ஒரு வருடத்திற்கு வருகிறது. அதில் தேறும் 4, 5 கூட மறந்து விடுகிறது :( இன்று சாகும் என்று நினைத்தது இன்னும் ஒரு 10 நாளாவது தாங்கும் என்ற நம்பிக்கை தருவது தான் வழ்க்கு எண், விஸ்வரூபம் படங்கள். ஆனால் அவற்றிலும் நம்மாட்கள் ஒன்று நல்ல படங்களைக் ஓடவிடமாட்டார்கள், அல்லது வெளிவரவே விடமாட்டார்கள். என்ன செய்வது...
Deleteஉங்களுடைய கருத்தில் முழுமையான உடன்பாடு இல்லை.
ReplyDeleteபடம் மொக்கை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்க்கு ஜெமோ காரணம் அல்ல.
மணியிடம் சரக்கு வற்றி விட்டது. ஜெமோ தான் காரணமாக இருந்தால் ராவணன் படத்துக்கு என்ன நடந்தது.
நான் கடவுள் திரைப்படம் ஜெமோவின் கதைதான் (வசனமும் அவர்தான்)
அது மட்டுமல்ல அங்காடி தெரு படத்துக்கு வசனம் ஜெமோ தான் (அந்த படத்துக்கு என்ன குறை )
ஜெயமோகன் கதையான ஏழாம் அறிவையும்,காசி அகோரிகளின் வாழ்க்கையையும் ஒருங்கிணைத்து பாலாவின் திரைக்கதை அமைந்தது.
Deleteமுழுக்க அது பாலாவின் படைப்பு.
கடலில் மணிரத்னம் முழுக்க ஜெமோவை நம்பினார் கதை,திரைக்கதைக்கு...
ஏனென்றால் மணிக்கு நேட்டிவிட்டி சப்ஜக்ட் வராது.
அங்காடித்தெருவில் திரைக்கதை வசந்தபாலன்.
திரைக்கதைதான் சினிமாவின் அடித்தளம்...நண்பரே.
வசனம் ஜெயமோகனிடம் கொடுக்கலாம்.
பட்டையை கிளப்பி விடுவார்.
திரைக்கதை அறிவு அவருக்கு பூஜ்யம்.
//எல்லாம் சரி சார்,
ReplyDelete//நல்ல வேளை டிரைலரில் இருந்த ‘லிப் லாக்’ கிஸ்ஸை தூக்கி விட்டீர்கள்.//
ன்னு போட்டுட்டு அந்த போட்டோவ மக்கள் பார்வைக்கு போட்டீங்க பாருங்க, அங்க நிக்கறீங்க நீங்க..//
இது பன்ச்!!
படத்தில் பிரச்சனை இருப்பது உண்மை தான். ஆனால் உங்களுக்கு ஜெமோ மீது உள்ள பிரச்சனை தான் உங்கள் பதிவில் தெரிகிறது.
ஜெமோவின் எழுத்துக்கு இன்றும் நான் அடிமை.
Deleteஏழாம் உலகம்...ஒரு இதிகாசம் எனச்சொல்வேன்.
ஆனால் அவருக்கு திரைப்படமொழி தெரியாது.
அதைக்கற்றுக்கொள்ளும் ஆர்வமும் கிடையாது.
இயக்குனர் லோகிதாஸ் பற்றி எழுதிய கட்டுரையிலேயே இது அப்பட்டமாக விளங்கும்.
ஈழத்தமிழர் விவகாரத்தில் அவரது நிலைப்பாட்டிற்கு நான் நேரெதிர்.
"வசனம் ஜெயமோகனிடம் கொடுக்கலாம்.
ReplyDeleteபட்டையை கிளப்பி விடுவார்.
திரைக்கதை அறிவு அவருக்கு பூஜ்யம்."
நூற்றுக்கு நூறு உண்மை!