Feb 9, 2013

VISWAROOPAM \ 2013 \ விஸ்வரூபம் நீக்கப்பட்ட கருத்துக்கள்.


நண்பர்களே...
விஸ்வரூபம் கேரளாவில் மூன்று முறையும்...
தமிழ்நாட்டில் இரண்டு முறையும் பார்த்து விட்டேன்.
எனவே நீக்கப்பட்ட வசனங்களை என்னால் எளிதில் நினைவு கூற முடியும்.
காட்சிகளில் கமல் ஒரு பிரேம் கூட நீக்கவில்லை.
ஆனால் நீக்கப்பட்டுள்ள வசனத்தில் பொதிந்திருக்கும் கருத்தை,
இனி படம் பார்ப்பவர்கள் உணர முடியாது.


படத்தில் ஆப்கன் இஸ்லாமியப்போராளியான ஒமர் குரேஷியிடம்
[ ராகுல் போஸ் ],
சக ஆப்கன் இஸ்லாமியப்போராளியான சலீம்...
ஒரு போஸ்டரை காட்டுவான்.
அதில் விஸாம் அகமத் காஷ்மீரி [ கமல்ஹாசன் ] என்ற தீவிரவாதிக்கு,
இந்திய ராணுவம் ஐந்து லட்சம் விலை வைத்திருக்கும் போஸ்டரைக்காட்டுவான்.
அப்போது ஒமர், “ ஐந்து லட்சம் எப்போ வேணும்னாலும் கிடைக்கும்.
ஆனா தமிழ் பேசும் ஜிகாதி கிடைக்கிறது கஷ்டம்” என்பான்.
 “தமிழ் பேசும் ஜிகாதி கிடைக்கிறது கஷ்டம்” என்ற வசனத்தை மட்டும் இப்போது நீக்கி விட்டார் கமல்.

நீக்கப்பட்ட வசனத்தில் இருக்கும் உட்கருத்து...
தமிழ்நாட்டில் ஜிகாதிகள் கிடைப்பது அபூர்வம்.
ஏனென்றால் தமிழ்நாட்டில் ஜிகாதிகள் இல்லை.
ஏன் ஜிகாதிகள் உருவாகவில்லை?.
 மத நல்லிணக்க பூங்காவாகத்திகழும் தமிழ்நாட்டில், 
ஜிகாதிகள் உருவாகும் சூழல் இல்லவே இல்லை.
இந்த அருமையான உட்கருத்து பொதிந்த வசனம் நீக்கப்பட்டது
மத நல்லிணக்க வாதிகளுக்கு நஷ்டமே.


நீக்கப்பட்ட மற்றொரு வசனம்...
ஒமரும், விஸாமும் முதன் முதலாக நேரடியாக சந்திக்கும் காட்சி...

விஸாம் : நீங்க எப்படி தமிழ் கத்துகிட்டீங்க ?
ஒமர் : ஒரு வருஷம் தலைமறைவா இருந்தேன்.
கோயமுத்தூர்ல...மதுரைல...

“ கோயமுத்தூர்ல...மதுரைல”...என்ற வசனம் இப்போது நீக்கப்பட்டு விட்டது.
“தமிழ் பேசும் ஜிகாதி கிடைக்கிறது கஷ்டம்”... 
என்ற வசனத்தை ஒமர் பேசியது...
தமிழ்நாட்டில் கோவையிலும், மதுரையிலும் தலைமறைவாக இருந்த அனுபவத்தில் பேசுவதாக படைப்பாளி கமல் அமைத்திருக்கிறார்.
ஒரு வருடம் தமிழ்நாட்டில் இருந்த போதும், 
ஒமரால் தமிழ்நாட்டில் ஜிகாதிகளை உருவாக்க முடியவில்லை  என்பதே ஒமர் பேசும் வசனத்தில் இருக்கும் உட்கருத்து.

 “ கோயமுத்தூர்ல...மதுரைல”...என்ற வசனம் நீக்கப்பட்டதால்,
ஒமர் தமிழ் பேசுவதற்கான லாஜிக்கும் அடிபட்டு விட்டது.

ஏனைய நீக்கங்கள், எந்த உட்கருத்தும் இல்லாதது.
எனவே அது பற்றி விவாதிக்க வேண்டியதில்லை.

விஸ்வரூபத்தில் ஒரு படைப்பாளியாக கமல்,
இஸ்லாமியர்களை பெருமைப்படுத்திய தருணங்களை...
அடுத்தப்பதிவில் காண்போம்.

21 comments:

  1. வணக்கம்...படம் பார்த்துவிட்டேன்..சென்ட்ரலில்...
    படம் செமையா இருக்கு....கொஞ்சம் கூட முஸ்லிம்களை காயப்படுத்தவில்லை...அது பற்றி யோசிக்க கூட படம் விடவில்லை...அவ்ளோ விறுவிறுப்பாக செல்கிறது.....

    ReplyDelete
    Replies
    1. விஸ்வரூபம் = விறுவிறுப்பு...கருத்துக்கு நன்றி.

      Delete
  2. பயணக்கைதிகயை கழுத்து அறுத்து கொல்லப்படும் போது குரான் புத்தகமும், பின்னால் பேனரில் குரான் வாசகம் அரபியில் இருக்கும் அது நீக்கப்பட்டுள்ளது,நிறைய இடங்களில் பாங்கு ஓதும் சத்தம் ஹம்மிங்கில் வரும் அதை நீக்கிவிட்டு சும்மா ஹம்மிங் மட்டும் இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...இந்த நீக்கங்கள் சரிதான்.

      Delete
  3. உங்களின் பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிந்து விட்டதே...

    ReplyDelete
    Replies
    1. விஸ்வரூப உழைப்பிற்கு... எனது சிறு அர்ப்பணிப்பு.

      Delete
  4. நான் கேரளாவில் இரண்டு முறையும்,தமிழகத்தில் இரண்டு முறையும் பார்த்தேன் ஆகையால் தப்பித்தேன்.........தமிழ் நாட்டில் சாதுர்யமாக சட்ட ஒழுங்கை காப்பாற்றிய தமிழக அரசை பாராட்டி ஒரு கட்டுரை எழுதுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. வெற்றியை பல மடங்காக்க, இலவச விளம்பரம் இந்தியா முழுமைக்கும் செய்த தமிழக அரசை வர்ணிக்க வார்த்தை ஏது?

      Delete
  5. உலக சினிமா ரசிகருக்கு இந்த விமர்சனத்தை படிக்கவும். ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது,.
    http://mathimaran.wordpress.com/2013/02/07/613/

    ReplyDelete
    Replies
    1. படித்தேன்...மதி இல்லா மதிவாணன் எடுத்த வாந்தியே...அப்பதிவு.

      Delete
  6. இடைவேளைக்கு அலுப்பு தட்டுகிறதே

    ReplyDelete
    Replies
    1. குறைந்தது ஐந்து தடவை பாருங்கள்.அலுப்பு தீர்ந்து பரவசமாகி விடுவீர்கள்.

      Delete
  7. படித்தீர்களா? நம்மை உலுக்கி எழுப்பும் உலகநாயகனின் விஸ்வரூபம்! http://thirandhamanam.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. படித்தேன்.ஒரு படி தேன் குடித்தது போல் இருந்தது.
      நன்றி.வாழ்த்துக்கள்.

      Delete
  8. appadiyae... Kamal.. America karan.. kolanthiga... Pombalaigalai kolla mattanu enn sonnarunu sollidunga....

    appadiaye... US army man.. enn pombalaya suttu thalaya attinananu sollidunga...

    why dont tell the reason why kamal tried to lick american ass ??
    please dont try to justify what kamal tires to tell.. everyone understands him well... from a movie like Anbe Sivam.. he has come to Viswaroopam.. a shame... he is such a talented artist.. begging for oscar... we shld be proud of Janaki for saying she wont accept pathma pushan...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அறியாமையால் எழும் கேள்விகளுக்கு...
      இனி வரும் பதிவுகளில் விடை இருக்கும்.

      காத்திருங்கள் ராஜாவே!

      Delete
  9. Please Vishvaroopam Box office collectiion

    ReplyDelete
  10. உங்க பதிவுக்கு தான் காத்திருக்கிறேன். என்னுடைய நண்பன் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இருக்கிறான். தீவிர ரஜினி ரசிகன். அவனுடைய மேலதிகாரியும் தீவிர ரஜினி ரசிகராம். நேற்று படம் பார்த்து விட்டு FB யில் அவன் இட்ட பதிவு...

    //We thoroughly enjoyed the movie it was excellent . No Indian producer or director or actor will have guts to take a such a movie. Hats off to Kamal. I will watch this movie couple more times. Even my boss and his wife they also thoroughly enjoyed.

    ...we the saw the movie without intermission . To me movie run without any slag from start to finish and the characters were portraited well. I was very impressed with Afganitan shoot what a brilliant Kamal.//

    ReplyDelete
  11. அண்ணே என் நண்பன் ஒரு தீவிர ரஜினி ரசிகன். சிட்னியில் இருக்கிறான். அவனுடைய மேலதிகாரியும் தீவிர ரஜினி ரசிகராம். நேற்று அவன் படம் பார்த்துவிட்டு FB யில் போட்ட பதிவு.....

    //We thoroughly enjoyed the movie it was excellent . No Indian producer or director or actor will have guts to take a such a movie. Hats off to Kamal. I will watch this movie couple more times. Even my boss and his wife they also thoroughly enjoyed.

    ... Absolutely Gopi we the saw the movie without intermission . To me movie run without any slag from start to finish and the characters were portraited well. I was very impressed with Afganitan shoot what a brilliant Kamal//

    ReplyDelete
  12. “தமிழ் பேசும் ஜிகாதி கிடைக்கிறது கஷ்டம்” // யாழ்ப்பாணத்தில் இது நீக்கப்படவில்லை ஆனால் குர்ரான் வசனப்பின்ணனியில் கழுத்தறுக்கபப்ட்டது நீக்கப்பட்டிருந்தது....கொடுமை என்னவெனில் இனஸன்ஸ் ஒப் முஸ்லீமை இலங்கையில் இன்னும் தடைசெய்யவில்லை

    ReplyDelete
  13. appadiyae... Kamal.. America karan.. kolanthiga... Pombalaigalai kolla mattanu enn sonnarunu sollidunga....

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.