Dec 13, 2012

ஹாலிவுட் பாலாவின் ‘விஸ்வரூபம்’

நண்பர்களே...
நேற்று ஹாலிவுட் பாலாவின் பதிவை பார்த்து வியந்து விட்டேன்.
கமலின் ‘டிடிஎச்’ ஒளிபரப்பு முயற்சிக்கு வலுவூட்டும் விதத்தில் மிகச்சிறந்த பதிவை எழுதி கர்ஜித்திருக்கிறார்.


பாலாவின் பதிவை நிறைய பேரைச்சென்றடைய வேண்டும் என்ற ஆவலில் அவரிடம் அனுமதி வேண்டி தொடர்பு கொண்டேன்.
இன்னும் பதில் வராத நிலையில்,
‘அவசர நிலை’ கருதி இப்பதிவை வெளியிடுகிறேன்.
காரணம் ஹாலிவுட் பாலாவின் பதிவு,
யாருக்கு போய்ச்சேர வேண்டுமோ அவர்களுக்குப்போய் சேர வேண்டும்.


இன்று காலை தினத்தந்தியில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சங்கத்தை சேர்ந்த காயல் இளவரசு கமலுக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.
டிடிஎச்சில் ஒளிபரப்பினால், அதை வீடீயோ புரொஜக்டரில் இணைத்து தமிழ்நாடெங்கும் பட்டி தொட்டியில் இலவசமாக பொதுமக்களுக்கு திரையிடுவோம் என மிரட்டி இருக்கிறார்.
அப்பட்டமான  ‘சட்ட மீறலை’ எச்சரிக்கையாக விடுத்திருக்கிறார்.

காயல் இளவரசு  ‘உஷார் பார்ட்டி’.
கேபிள் டிவியில் ஒளிபரப்புவோம் என எச்சரிக்கவில்லை.
கேபிள் டிவி உரிமை  ‘ஜெயா டிவிக்கு’ விற்கப்பட்டது அவருக்கு தெரியும்.

கிராமத்தில் பெரியவங்க சொல்வாங்க...
நரிக்கு நாட்டாமை கொடுத்தா,  ‘கிடைக்கு’ இரண்டு ஆடு கேக்குமாம்.
[கிடை = ஆடுகளை மொத்தமாக அடைத்து வைக்கும் இடம்.]

விஸ்வரூபம் படத்துக்கு தினமும் புதிது புதிதாக நாட்டாமைகள் முளைத்துக்கொண்டே வருகின்றனர்.
ஆனால்  ‘அம்மாவிடமிருந்து’ ஒரு அறிக்கை வந்தால் எல்லா நாட்டாமைகளும் பம்மி  ‘டம்மியாகி’ விடும்.
 ‘தமிழ்நாட்டில் அனைத்து தியேட்டர்களும் அரசுடமையாக்கப்படும்’

ஹாலிவுட் பாலா பதிவைப்படிக்க இங்கே செல்லவும்.

கமலின் டிடிஎச் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் மற்றொரு இணையக்கட்டுரை.
அடுத்த பதிவில் சந்திப்போம்.

8 comments:

  1. அண்ணே ஏன்டா, கமல் மேல தேளுக்கு இந்த காண்டுன்னு நினைச்சுகிட்டு இருந்தோம்ல. இன்னொரு பூனையும் வெளிய வந்துடிச்சு. அண்ணன் ரஜினி வெறியர். ரஜினி பிறந்த நாளுக்கு பெங்களூர் லாவண்யா தியேட்டர் முன்னால இவரு டான்ஸ் ஆடினதை Status update ல போட்டு புளங்காகிதம் அடைஞ்சு இருக்காரு. அதான் என்னடா இந்த நடு நிலை நாயகம் ஒரு நாளும் ரஜினியை பத்தி 'நடு நிலை விமர்சனம்' செய்ய மாட்டேங்குதேன்னு பார்த்தேன். இதுல கூட கமல் மேல வெளிப்படுற வன்மும், வக்கிர சந்தோஷமும் பாருங்க, கமல் பிறந்த நாள் அன்னைக்கு வெளிய மயான அமைதியாம். இவரு, காந்தி, லூஸ் மோகன் பிறந்த நாளுக்கு கூட ஆடுவாராம். ரஜினி, தெரசா, பெரியார் போல தன்னலமற்ற சமூக சேவகர் பாருங்க, அதான் இவரை, காந்தியையும், ரஜினியையும் (கூட லூஸ் மோகனையும்) ஒண்ணா வச்சு கொண்டாட தோணுது. கமல் ரசிகர்கள் மட்டும் நடு நிலையோடு இருக்கனுமாம். கமலை எதிர்க்கறவங்க எல்லாம் ஒரு சார்போட இருந்துக்கிட்டு 'நடு நிலைன்னு' பேசறது காமெடி. ஏன்னே இவ்வளவு அல்ப்பமா இருக்காங்க? இவரு எல்லாம் உலக படத்தை பத்தி பேசுறது முரன். கமல் மேல இவருக்கு இருக்குறது விமர்சனம் இல்லை, ரஜினி சார்பு வன்மம். அசிங்கம்னே! இவர் மேல இருந்த மரியாதையே போச்சு.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      நீங்கள் குறிப்பிட்ட நபரைப்பற்றி இனி விவாதிக்கவோ,விமர்சிக்கவோ ஏன் பெயரைக்கூட உச்சரிக்கக்கூடாது என முடிவெடுத்து விட்டேன்.

      ஒத்துழைப்பு நல்குங்கள்.ப்ளீஸ்.

      Delete
  2. புதிய தொழில் நுட்பம் ஒரு தரப்பிற்கு வரம் மற்றோருக்கு சாபம்.

    Cinema News

    ReplyDelete
  3. ரசிகன்!ஹாலிவுட் பாலாவை தேடிக்கொண்டிருந்தேன்.தொடுப்பு கொடுத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  4. கமலின் டிடிஹெச் முயற்சி பற்றி என் கட்டுரை, உலக சினிமா ரசிகன் அவர்களே, முடிந்தால் இந்த பதிவை அனுமதிக்கவும்!

    http://www.twitlonger.com/show/kasbuc

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவை வாசித்தேன்... அருமையாக இருக்கின்றது உண்மையான நியாயமான பல விடயங்களை எழுதி இருக்கின்றீர்கள். நன்றி
      முடிந்தால் தட்ஸ் தமிழ் கமல் பற்றிய லின்க் ஐ தரவும்

      Delete
  5. vanakkam aiya.naan kamal in rasigan than.ovvoru thuriyilum technology merugetrapada vendum than.anaal athu erknave athai nambi irukkum theatre nadathubavargalin vazvadarathai bathithal athayum neengal erkireergala.tamil nadu vil ethaniyo theatre gal moodapattalum.cinema vin mel ullla patrla 60 aandugalaga evvalvu nasta pattalum.naangal athai ndathi varugirom.engali pondravarkaluku kamal haasn ennum thirai ulga genious tharum parisu theatre ke varamal.makkali veetile irundu pdam parka vikkum technology thana.

    ReplyDelete
  6. vanakkam aiya.naan kamal in rsigan than ungali pola ve her ram pdathai anu anu vaga rasithen.ella turiyilum technolgy update vasiyam than.anaal athu erknave antha tural il irukkum oru saraarin vazzvadarati badithal athai erkireergala.naabgal 60 aandugalaga theatre nadathi vrugirom itu varal evalavo nashtam parthirundhalum.cinema vin mel ulla ptral inrum atahi moodamal nathi varugirom.intha nilayil dth vandhal theatre ku varum kona nanja maakalum vara maatargal.dth release enbadhu ingu ulla maligai kadaigali moodi vittu walmart ai thirapathu pol aagum.engal ponra.siriya alvil ana theatre owner galuku.kamal haasan ennum cinemma genious tharum parisu intha dth release thana.itarkum neengale pathi sollunagal.mudinthal kamal haasan idam naagan theatre ndathlam illai atahi kalyanam mndpam aaki vidalama endru kettu sollungal.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.