நண்பர்களே...
துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட கமர்சியல் ரச வாத குண்டுகளால்
தமிழ் நாடே மயங்கி கிறங்கி கிடக்கும் வேளையில் 'நீர்ப்பறவை' வெளியாகி இருக்கிறது.
‘திரை மாமேதை’ பாலு மகேந்திரா,
எனது மகன்கள் பாலா,சீனு ராமசாமி,வெற்றி மாறன் என அடையாளம் காட்டி இருக்கிறார்.
இந்த பெருமை மிகு அடையாளத்தை தக்க வைத்திருப்பாரா சீ.ரா என்ற எதிர்பார்ப்புடன்தான் சென்றேன்.
எனது எதிர் பார்ப்பை தகர்த்து விடாமல் உழைத்திருக்கிறார் சீ.ரா.
அசலான ஒரு மீனவ கிராமத்தில் வாழ வைத்து அனுப்பியிருக்கிறார்.
தமிழ் நாட்டின் தீர்க்கப்பட வேண்டிய இரண்டு முக்கியமான பிரச்சனைகளில் நீந்தியிருக்கிறது நீர்ப்பறவை.
ஒன்று, சிங்கள ஓநாய்களால் வேட்டையாடப்படும் தமிழக மீனவர்கள்.
இரண்டு, மதுவினால் மயங்கி கிடக்கும் ஒட்டு மொத்த தமிழகம்.
இரண்டு பிரச்சைனைகளையும்,
முளைக்க விட்டும்...
வளர விட்டும்...
வேடிக்கை பார்த்த கலைஞர் குடும்பத்திலிருந்து...
இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இருந்தாலும், நீர்ப்பறவை இந்த இரண்டு வலுவானப்பிரச்சனைகளையும் மேம்போக்காக சொல்லவில்லை.
நீர்ப்பறவை,இந்த பிரச்சனையை...
தனது திரைக்கதையில் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லியிருக்கிறது.
இயக்குனரின் பரிவாரங்கள் சீ.ராவோடு தோள் கொடுத்து உழைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெமும்,
வசனம் எழுதிய ஜெயமோகனும்.
படத்தில் குறைகள் உள்ளன.
இருந்தாலும் குறைகளை வெளிச்சம் போட்டு பிரச்சாரம் செய்வதை தவிற்பதே அறிவார்ந்த செயலாகும்.
தமிழ் சினிமா நிலத்தில் உலக சினிமா விருட்சமாக வேர் விட,
அடி உரமாக இது போன்ற படங்கள் வெற்றிகரமாக்கப்பட வேண்டும்.
தமிழ் சினிமா ரசிகர்களே !
நீர்ப்பறவையை ஓட விடக்கூடாது...
வெற்றி மகா சமுத்திரத்தில் நீந்த விடுங்கள்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
பட விமர்சனத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு எமாற்றத்தை கொடுத்திருக்கிறீர்கள் ! :)
ReplyDeleteபடத்தை விமர்சனம் செய்யவில்லை.
Deleteஇப்படத்தை வெற்றியடையச்செய்யுங்கள் என வேண்டுகோள்
விடுத்திருக்கிறேன்...நண்பரே.
அருமை சார். உங்கள் விமர்சனத்தை வாழ்த்துக்கள் தான் மிக முக்கியம் .
ReplyDeleteஇது போன்ற படங்கள் போட்ட முதலுக்கு பங்கம் வராமல் வெற்றி பெற வேண்டும்.
Deleteஅப்போதுதான், இன்னும் ஒரு படி மேலே உயர இயக்குனர்கள் துணிவார்கள்.
நீர்ப்பறவையை ஓட விடக் கூடாது,,,பறக்க செய்வோம்....அப்படியே விமர்சனம் எழுதி இருக்கலாம்.....
ReplyDeleteஇப்படத்திற்கு இப்போது விமர்சனம் தேவையில்லை.
Deleteமீனவ சமுதாயத்தை பின்னணியாகவும்,
அவர்களது பிரச்சனைகளையும் பேசியதற்காகவுமே
இப்படம் பாராட்ட வேண்டிய தகுதியில் இருக்கிறது.
விமர்சனம் அல்லாது படத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தாங்களது இந்த பதிவுக்கு மிகுந்த நன்றிகள்..அண்ணா
ReplyDeleteவிமர்சனம் சீக்கிரம் போடுங்களேன்..
ReplyDeletehttp://kumaran-filmthoughts.blogspot.com/2012/11/color-of-paradise-1999.html
This comment has been removed by the author.
Deleteஇப்படத்திற்கு ஆதரவு கோஷம் எழுப்பி உள்ளதற்கு காரணம் உள்ளது.
Deleteபல வருடங்களாகவே கிருத்துவ,இஸ்லாமிய மதப்பின்னணியில் கதாநாயக,நாயகியை ஏனோ தமிழ் சினிமா தவிர்த்து வந்தது.
அத்தாகத்தை தணித்து விட்டது இப்படம்.
அதற்காகவே இப்படம் என்னை ஸ்பெஷலாக கவர்ந்தது.
படம் நன்றாக இருக்கிறது என்பதை சில விமர்சனங்களில் படித்தேன் கண்டிப்பாக பார்க்கணும். நன்றி
ReplyDeleteசீக்கிரம் பார்த்து விடுங்கள் மேடம்.
Deleteநடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்னு சொல்லியிருக்காங்க.
அதைத்தேட இன்றிரவு போகிறேன்.
சமீபகாலமாக பேசப்படும் இருபடங்கள், நீர்ப்பறவை, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.
ReplyDeleteஆனால் ஹீரோயிசத்தில் மயங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு இதெல்லாம் பிடிக்குமா தெரியாது, அவர்களுக்கு வேண்டியது, குத்து டான்ஸ், தொப்புள் கறி, தொடை குருமா................
தமிழ் ரசிகர்கள் வெஜிடேரியன் சுவையாக இருந்தால் வெய்ட்டாக கவனித்து விடுவார்கள்.
Deleteதங்கத் தலைவி சுனைனா பத்தி ஒரு வார்த்தை கூட போடலையா??
ReplyDeleteதப்புத்தான்.
Deleteஉங்கத்தங்கத்தலைவி இப்படத்தில் கருப்புத்தங்கமாக ஜொலிக்கிறார்.