Mar 28, 2013

‘எரியும் பனிக்காடை’ ஏன் படமாக்கவில்லை ?


நண்பர்களே...
1969ல்  ‘ரெட் டீ’ என்ற நாவலை பி.எச்.டேனியல் உருவாக்கினார்.
அதை 38 ஆண்டுகள் கழித்து தமிழில் ‘எரியும் பனிக்காடு’ என்ற தலைப்பில் மொழி பெயர்த்தார் இரா.முருகவேள்.
இத்தனை ஆண்டுகள் இக்கதை திரைப்படமாக்கவில்லை.
ஏன் முருகவேளோ...அல்லது அவர் சார்ந்துள்ள இயக்கமோ கூட அதைச்செய்யவில்லை.
இத்தனை நாள் குறட்டை விட்டுக்கொண்டிருந்த முருகவேள் இப்போது பாலாவின் பரதேசியை பார்த்து ‘தாம் தூம்’ என குதிக்கிறார்.
இயக்கிய பாலாவுக்கும், கதை-வசனம் எழுதிய நாஞ்சில் நாடனுக்கும் ஜாதீய வர்ணம் பூசுகிறார்.
இன்று கொதிக்கும் முருகவேள் இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்தது ஏன் ?
அட்லீஸ்ட்...ஒரு குறும்படம் கூட எடுக்கவில்லையே முருகவேள் !

கம்யூனிஸ்ட் இயக்கத்தோழர்கள் முயற்சியால் ‘தேநீர்’ என்றொரு படம் உருவாகி வெளியானது.
கம்யூனிஸ்ட்காரர்கள் கூட அந்த படத்தை பார்க்கவில்லை.
அப்படி ஒரு தரத்தில், படத்தை படுத்தி எடுத்திருந்தார்கள்.
தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் வரலாற்று  அவதிக்கு இணையாக... திரைப்படத்தை காண வந்தவர்கள் வதை பட்டார்கள்.
இந்த வெளக்குமாறுக்கு, கே.பாக்யராஜ் என்ற பட்டுக்குஞ்சலம் கதை-வசனம்.

‘ரெட் டீ’ என்ற நாவல்  மறைந்த ‘விடியல் பதிப்பகம்’ சிவா இல்லையென்றால் தமிழில் எவனும் படித்திருக்க முடியாது.
‘முருகவேள்’ மொழி பெயர்த்து முழி பிதுங்கி அவரே படித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.



தமிழ்நாட்டில்  ‘எரியும் பனிக்காடு’ மூவாயிரம் புத்தகம் கூட இன்று வரை விற்பனை ஆகவில்லை.
அப்படிப்பட்ட ஒரு நாவலை படமாக்க எவனுக்கு துணிச்சல் வரும் ?
பாலாவுக்கு வரும்.

 ‘ரெட் டீ’யை உருவாக்கிய பி.எச்.டேனியல் ஒரு கிருத்துவர்.
தேயிலைத்தோட்டத்தொழிலாளிகள் கிருத்துவ மதத்திற்கு மாற்றப்பட்ட வரலாற்றை மறைத்து நாவலை உருவாக்கி உள்ளார்.
‘ரெட் டீயை’ முனுசாமியோ கந்தசாமியோ உருவாக்கி இருந்தால் அந்த வரலாறு தேயிலைத்தோட்டத்தொழிலாளியின் துயர வரலாற்றோடு சேர்த்தே பதிவு செய்யப்பட்டிருக்கும்.
டேனியல் தூய கிருத்துவர்.
அவரால் எப்படி அந்த வரலாறு எழுத முடியும்.
ஒவ்வொரு வரலாறும்... எழுதுபவன் வரலாறு,சிந்தனை, கொள்கை. கோட்பாடுகள் கட்டாயம் இணைந்தே இருக்கும்.

‘எரியும் பனிக்காட்டில்’ மறைக்கப்பட்டிருந்த வரலாற்றையும் சேர்த்து பாலா படமாக்கி உள்ளார்.
இதில் என்ன தவறு ?
ஆயிரக்கணக்கானோர் அறிந்த தேயிலைத்தோட்ட தொழிலாளர் வரலாற்றை கோடிக்கணக்கான தமிழர்கள் அறியும்படியாக ‘பரதேசியை’
பாலா படைத்தது குற்றமா ?

இன்று பாலாவை குறை சொல்லும் இலக்கிய வியாதி கோஷ்டிகள் டேனியல் வாழ்க்கை வரலாற்றை படமாக்குங்களேன் !.
யார் உங்கள் கையை பிடித்து தடுக்கிறார்கள்?
இந்த நாட்டில் கிருத்துவர்கள் எப்படி தோன்றி வளர்ந்தார்கள் என்பதை பதிவு செய்யுங்கள்.
தென் தமிழகத்தில் கடற்கரையோர மீனவக்கிராமங்கள் ஒட்டு மொத்தமாக கிருத்துவர்களாக மாறிய வரலாற்றை படமாக்குங்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத், மெஞ்ஞானபுரம் என கிருத்துவ நாடார்கள்
வசிக்கும் ஊரின் வரலாற்றை தோண்டுங்கள்.
ஆயிரம் திரைக்கதைகள் அங்கே கிடைக்கும்.
குறை சொல்லி காலம் ஓட்டாதீர்கள் ‘இலக்கிய வியாதிகளே’.

1969ல் உருவாக்கப்பட்ட ரெட் டீயை 2012ல் படமாக்கிய பாலாவை போற்ற வேண்டாம்.
குறை  சொல்லாதீர்கள்  ‘கோட்டிக்காரர்களே’.
கோட்டிக்காரர்கள் = மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

16 comments:

  1. இவங்க சொல்ல சொல்ல அது படத்துக்கு பப்லிஸிடீ தான். விடுங்க, சொல்லீட்டு போகட்டும்..

    ReplyDelete
    Replies
    1. இந்த முருகவேள் கோயமுத்தூர்க்காரர்தான்.
      இவரை சந்திப்பதாக இருந்தேன்.
      இவரது வண்டவாளம்... ‘சாரு’ என்ற தண்டவாளத்தில் ஏறி விட்டது.

      Delete
  2. எழுத்தாளனையும்,நல்ல புத்தகங்களையும் மதிக்காத சமூகம் நாசமாத்தான் போகும்.'எரியும் பனிக்காடு ' மூவாயிரம் பிரதிகள் கூட விற்கவில்லை என்ற செய்தி வேதனை தருகிறது.'5 point someone ' புத்தகம் ஒரே மாதத்தில் 30,000 பிரதிகள் விற்றுத்தீர்த்து சாதனை படைத்த புத்தகம்.அதனை விது வினோத் சோப்ரா படமாக எடுக்க துணிந்ததில் ஆச்சர்யமேதுமில்லை.ஆனால் பாலா நிகழ்த்தியிருப்பது தான் ஆசாத்தியமான சாதனை.இங்கே Chetan Bhagat பெற்ற வெளிச்சம் எஸ்.ரா,தமிழ் செல்வன்,டி.செல்வராஜ்,அசோகமித்திரன் போன்ற படைப்பாளிகள் பெற முடியவில்லை.அவ்வளவு ஏன் ராஜ் முருகனின் "வட்டியும் முதலும்" கட்டுரை தொகுப்புக்கு முன் Chetan Bhagat படைத்த அத்துணை படைப்புகளும் நிராயுத பாணிதான்.ஆங்கில புத்தகத்தின் மீதுள்ள அளப்பரிய மோகம் தான் பல வாசகர்களின் வாசிப்பு தளத்தை மட்டுப்படுத்தியது.இதெல்லாம் எங்க போய் முடியுமோ சார்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நாட்டில் நல்ல புத்தகங்கள் ஆயிரக்கணக்கில்தான் விற்பனை ஆகிறது.
      சில புத்தகங்கள் மட்டுமே லட்சக்கணக்கில் விற்பனை ஆகி உள்ளது.
      அதில் ஒன்று நீயா நானா கோபிநாத்தின் ‘இந்த புத்தகத்தை படிக்காதீர்கள்’.

      Delete
  3. இனிய தோழருக்கு, தங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை. திரு.பி.எச்.டேனியல் மீதும் திரு. இரா.முருகவேள் மீதும் நீங்கள் உங்கள் மொத்த வெறுப்பையும் உமிழ்ந்திருகிறிர்கள். (தமிழ்நாட்டில் ‘எரியும் பனிக்காடு’ மூவாயிரம் புத்தகம் கூட இன்று வரை விற்பனை ஆகவில்லை) என்ன சார் இது.... தமிழில் இன்று கொண்டாடி கொண்டிருக்கும் படங்கள் எல்லாம் அந்த அந்த காலத்தில் அது வெளி ஆகும்போது வெகு ஜன மக்களால் கொண்டாப்பட படங்கள் தானா? தங்களுக்கு எடுத்துகாட்டுகள் தேவை இல்லை என்று நினைக்கிறேன. மலத்தை தின்று பழத்தை தின்ன மறந்து போனது.... பழத்துக்கு ஒன்றும் இழப்பு இல்லை.
    ( ரெட் டீ’யை உருவாக்கிய பி.எச்.டேனியல் ஒரு கிருத்துவர்.தேயிலைத்தோட்டத்தொழிலாளிகள் கிருத்துவ மதத்திற்கு மாற்றப்பட்ட வரலாற்றை மறைத்து நாவலை உருவாக்கி உள்ளார் ) இந்துக்கள் என்று கூறப்படுகிறவர்கள் (?) யாரும் விரும்பி மதம் மாறவில்லை. இங்கு இருந்து துரத்த பட்டார்கள் என்பதே உண்மை. அதை ஏன் பாலா படமாகவில்லை என்று கேட்பது எப்படி குழந்தை தனமாக இருக்கிறதோ. அப்படி தான் இருக்கிறது நீங்கள் கூறுவதும். ஒரு சினிமா ரசிகனாக எனக்கு தெரியும் ஒரு 2 மணி நேரத்தில் ஒவொன்றுக்குமான இணைப்புகளை கூறுவது சாத்தியம் இல்லாதது என்று. நான் காமராஜரும் காந்தியும் நல்லவர் என்று கூறி கொண்டிருக்கும்போது நீங்கள் அவர் சார்ந்த ஜாதியில் எவ்வளவு தீமை செய்து இருக்கிறார்கள் தெரியுமா என்று கூறுவது போல் உள்ளது.
    (இன்று கொதிக்கும் முருகவேள் இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்தது ஏன் ?அட்லீஸ்ட்...ஒரு குறும்படம் கூட எடுக்கவில்லையே முருகவேள் !) உங்களுடைய இந்த வரிகள் இது வரை எழுதிய அத்தனை எழுத்தாளர்களையும் அவமான படுத்துவது போல் உள்ளது. எப்பொழுது எல்லாம் நாம் ஒரு திரை படத்தை விமர்சிக்கிரமோ அப்பொழுது எல்லாம் ஒரு தரப்பு, நீங்கள் விமர்சனம் இல்லாத அளவுக்கு ஒரு படம் எடுத்து விட்டு வந்து விமர்சியுங்கள் என்று கூறும்... அதற்க்கும் இதற்கும் என்ன வித்தியாசம்.
    பாலாவின் முயற்சியையும், அவரது உழைப்பையும் யாரும் எந்த விதத்திலும் யாரும் எடுத்து கொள்ள முடியாது. இதையே தான் நான் ஏற்கனவே உங்களுக்கு எழுதிய பின்னூட்டத்திலும் குறிப்பிட்டிருந்தேன் (தங்களின் விமர்சனம் படிதேன். புத்தகத்தில் இருப்பதை காட்சி படுத்தவது எந்த அளவிற்கு சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எரியும் பனிக்காடு ஏற்படுத்திய தாக்கம் எனக்கு திரையில் ஒரு 10% ஏற்படவில்லை. ஒருவேளை புத்தகத்தை படிக்காமல் இந்த படத்தை பார்த்து இருந்தால் எனக்கு ஏற்பட்டிருக்குமோ என்னவோ ? அனால் 'நான் கடவுளி'ல் இது சாத்தியமாயிற்று (ஆர்யா காட்சிகளை தவிர்த்து). பின்னணி இசை ஒரு திரை படத்தின் எந்த அளவிற்கு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் பரதேசி யில் முக்கியமாக ஏமாற்றியது அது தான். அதிலும் தன்ஷிகா இறந்திருக்கும் போது காட்சியை விட இசை கொடுத்திருக்க வேண்டிய வலி நமக்கு அதிகமாக இருந்திருக்க வேண்டும். அது கொஞ்சம் கூட ஏற்பட வில்லை. இது பாராட்ட பட வேண்டிய படம் எனபதில் எந்த வித மாற்று கருதும் இல்லை. ஆனால்.......? Murali )

    உங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அந்தக் கருத்தை நீங்கள் சொல்கிற உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன் - ரூஸோவின் மேற்க்கோளோடு முரளி

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      நான் பரதேசி பார்த்த பின்தான் புத்தகம் படித்தேன்.
      இலக்கிய நாவல்களை திரைப்படமாக்குவதே அரிது.
      பாலா இப்போது தொடர்ந்து அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
      முருகவேளின் கட்டுரையில் பாலா ஏதோ டேனியல் பேமிலியை ஏமாற்றி உரிமை வாங்கியது போல் குறிப்பிட்டு இருந்தார்.
      பாலாவையும் நாஞ்சில் நாடனையும் பெர்சனலாக தாக்கி இருந்தார்.

      நான் புத்தகத்தை படித்து விட்டுத்தான் பாலாவின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து எழுதி வருகிறேன்.

      Delete
  4. Hay your are boring now-a-days..
    write something new na.......

    ReplyDelete
    Replies
    1. பரதேசியை பற்றி எழுதினால் போரடிக்கிறதா !
      சரி...என்ன எழுதினால் தங்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படும்?

      Delete
  5. நல்லதொரு படத்திற்கு எதிர்ப்புக்கள் வரவே செய்கிறது! பப்ளிசிட்டிக்கு அலைபவர்கள் வேலை இது! நடக்கட்டும்! நாம் பாலாவின் துணிச்சலை பாராட்டுவோம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

      Delete
  6. I liked the movie, since it was made based on real life incidents and helped me to know about our history. Negative Criticism for this movie can be grouped as two category... one is about movie making style with regular Bala's cliches and other group complaint about the failure to capture the political & social scenario of that period... In my personal view, Bala wants to create an impact on the audience by showing the happiness of the people in the first half & in second half how it was taken from them.... But the real political scenario behind the migration was not only drought as said in the movie (but not shown), it was oppression against these people based on casteism, if he wants to criticize about the Conversion then he should have brought in the caste based discrimination which should be major point in the plot, which he didn't portray clearly...

    But Bala should be appreciated for bringing such unknown faces & history in front of us.. But definitely, he has to change his movie making approach in upcoming movies...

    ReplyDelete
    Replies
    1. விரிவாக பின்னூட்டமிட்டு...தங்கள் கருத்தை தெளிவாக வைத்து உள்ளீர்கள்.
      நன்றி நண்பரே.

      Delete
  7. முருகவேள் எழுதியது ஒரு கடுமையான கடிதம் அதே போல் உங்களின் எதிர்வினையும் கடுமையானதாக இருக்கின்றது.

    நியாயம் இருவருக்கும் இடையில் தான் இருக்கின்றது.

    முருகவேள் சொன்ன முக்கியமான கருத்தை முன்வைக்க விரும்புகின்றேன்
    "நாவலை அப்படியே படமெடுக்க முடியுமா? ஒரு படைப்பாளியான இயக்குனருக்கு மாறுதல்கள் செய்ய உரிமை இல்லையா என்ற கேள்வி எழலாம்.சிலப்பதிகாரத்தை படமெடுக்கும் போது சிலம்பைத்திருடியது இளங்கோவடிகள்தான் என்ற மாறுதலைச் செய்ய கட்டாயம் இயக்குனருக்கு உரிமை இல்லை.தவிர நாவலைத் தண்டிச் சென்ற நாவலை விட அற்புதமான படைப்பாக நின்ற பல படங்களை சொல்ல முடியும்."

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...

      டாக்டர் பரிசுத்தம் காரெக்டரை... ‘ரெட் டீயை’ எழுதிய பி.எச்.டேனியல்தான் என ஸ்தாபிக்க பார்க்கிறார்கள் பாலாவை எதிர்ப்பவர்கள்.
      இங்கேதான் கோளாறு வருகிறது.
      இன்னொரு கோஷ்டி டாக்டர் பரிசுத்தத்தை அம்பேக்கர் என ஜல்லியடிக்கிறது.
      தலைப்பா கட்டினவன்லாம் பாரதியா ?

      ஒரு வேளை... சென்சார் பிரச்சனை இல்லாதிருந்தால்...
      டாக்டர் பரிசுத்தம்...டாக்டர் பரிசுத்த நாடாராக ஆகி இருப்பாரோ என்னமோ !
      ஆளாளுக்கு குழப்புவதற்கு முக்கிய காரணமே சென்சார்தான்.

      Delete
  8. //‘எரியும் பனிக்காட்டில்’ மறைக்கப்பட்டிருந்த வரலாற்றையும் சேர்த்து பாலா படமாக்கி உள்ளார்.
    இதில் என்ன தவறு ?//

    U r correct. Nothing s wrong with that. But Bala should acknowledge in the titles that I HAVE ADAPTED THE NOVEL RED TEA FOR THIS FILM.

    ADAPT means making some slight changes.

    Bala didnt say that. The titles say, The film is based on the novel Rea Tea.

    So, we believe that the conversion scenes etc are from the novel itself.

    Should a director like Bala cheat his viewers like that?

    Tell us pl.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...சினிமா மொழி வேறு.
      அந்த மொழி தெரிந்தவர்கள் இலக்கியத்தை திரையில் மொழி பெயர்க்கும் போது அவர்கள் செய்யும் விந்தையை அந்த இலக்கியத்தை படைத்தவனால் செய்ய முடியாது.

      உ.ம் காட்பாதர்.
      காட்பாதரை திரைக்கதையாக்கும் போது கொப்பல்லோதான் கண்டு பிடித்தார்.
      காட்பாதரில் இயங்குவது பேமிலி V\S பிசினஸ் என்று.
      மரியோ புசோ இந்த சூத்திரத்தை கண்டு பிடிக்கத்தவறியதால் அவர் படைத்த காட்பாதர் நாவலை திரைக்கதையாக்க முடியாமல் திணறினார்.
      எனவே சரியாக திரைக்கதை அமைத்த கொப்பல்லோவை மரியோ புசோ பாராட்டினார்.

      இன்று பி.எச்.டேனியல் இருந்திருந்தால் பாலாவை பாராட்டி இருப்பார்.
      முருகவேள் சாதாரண மொழி பெயர்ப்பாளர்தானே!
      இன்று கூகிள் செய்யும் வேலையை... முருகவேள் செய்திருக்கிறார்.
      அவ்வளவுதான்.

      கதை- திரைக்கதை பாலா என தெளிவாக டைட்டிலில் போடுகிறார்.
      ரெட் டீ ஒன் லி இன்ஸ்பிரேஷன்தான்.

      Delete

Note: Only a member of this blog may post a comment.