Mar 15, 2013

பரதேசி = பாலாவின் பிரதேசம்


நண்பர்களே...
பாலாவின் பரதேசியை முதல் காட்சி பார்த்து விட்டேன்.
கதி கலங்கிப்போய் இருக்கிறேன்.
என்ன எழுதுவது ?
எதை எழுதுவது ?
இப்படி ஆரம்பித்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
எல்லோரும் சற்று விலகி நில்லுங்கள்.
பாலாவிடம் நான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.


அவன் இவன் பார்த்து விட்டு...கோபத்தில் ‘அவன் இவன் இயக்கியது எவன் ?என எக்காளமாக கேட்டவன் நான்.
‘வாடா வக்காளி’ என என்னை  ‘வதைத்து’ அனுப்பி விட்டார் பாலா.
 ‘பாலாவுக்கு கிரியேட்டிவ் இம்பொடன்ஸ் வந்து விட்டது’ என எழுதிய என்னை எட்டி உதைத்து  ‘என் கிரியேட்டிவிட்டியை பாரடா’ என பறையடித்து விட்டார்.
எனக்கே இப்படியென்றால்  ‘டீஸரை’ பார்த்து கொதித்த  ‘மனிதகுலமாணிக்கங்கள்’ கதி...

இது வரை வந்த தமிழ் சினிமாவின் குப்பைக்கோபுரங்கள்  அனைத்தையும் மண்ணோடு மண்ணாக்கி
அந்த களத்து மேட்டில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் பாலா.
தமிழ் சினிமாவின் போலி படைப்பாளிகளை குறைப்பிரசவமாக்கி
சவமாக்கி இருக்கிறார் பாலா.

நம் வாழ்வையும் வளத்தையும் சூறையாடிய வெள்ளைப்பேயை விலா எலும்பு முறிய வேப்பிலையால் விரட்டி விரட்டி அடித்து வெளுத்தெடுத்திருக்கிறார் பாலா.
மாரியின் பெயராலும்...
மேரியின் பெயராலும்...
பாட்டாளிகளை சுரண்டிய பாதகர்களின்  பட்டையை உரித்தெடுத்திருக்கிறார்.
கூட்டணி போட்ட ‘பாயையும்’ விடவில்லை பாலா.

‘பீல் குட் மூவி’ மட்டுமே பார்க்கும்  ‘பால் குடி ரசிகர்கள்’ பரதேசி ஓடும் தியேட்டர் இருக்கும் சாலையில் கூட செல்லாதீர்கள்.
நீலகிரி மலையில்...நீளமான வரிசையில் பாலா அடுக்கி வைத்திருக்கும் பிணங்களின் வாடையிலேயே மயக்கம் போட்டு விடுவீர்கள்.

தமிழ் ரசிகர்கள் ஒரு தடவையாவது இப்படத்தை தியேட்டரில் பார்த்து
பாலாவிற்கு மரியாதை செய்யுங்கள்.
இப்படம் தோற்றால் மீண்டும் பாலா ‘அவன் - இவன்’ எடுக்க வேண்டிய நெருக்கடி வரும்.
ஏற்க்கெனவே 14 கோடி நஷ்டத்தை சரிக்கட்டவே ‘அவன் - இவன்’ எடுத்தார் பாலா என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடம் சொன்னார்.


உலக சினிமா போல்...தமிழ் சினிமா ஒன்று கூட இல்லை என்று ‘பண்டிதர்கள்’
புளுத்தினால் அவர்கள் புடுக்கை அறுத்து பாலா கையில் கொடுங்கள்.
அதுவே பாலாவிற்கும்...
அவரது குழுவினருக்கும்...
மிகச்சிறந்த பாத காணிக்கை.

இப்படம் பார்த்தவர்கள்...
இனி டீ குடிக்கும் போது...டீயில் ‘பரதேசிகளின்’ இரத்தம் கலந்திருப்பதை கண்டால்...
கோப்பையின் கீழ் பாலா என பெயர் இருப்பதையும் காணலாம்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


34 comments:

  1. மிக காட்டமான பதிவு....பாலாவின் படத்தினை பார்க்க தூண்டுகிறது.கண்டிப்பாக இன்று இரவு செண்ட்ரல் தியேட்டரில்..

    ReplyDelete
    Replies
    1. \\\ மிக காட்டமான பதிவு \\\

      பாலா படம் பார்த்தால் இரத்தமும் சதையும் கொதிக்கும்.
      அப்போது பிறக்கும் தமிழ் சற்று சூடாகத்தான் இருக்கும்.

      Delete
  2. "உலக சினிமா போல்...தமிழ் சினிமா ஒன்று கூட இல்லை என்று ‘பண்டிதர்கள்’
    புளுத்தினால் அவர்கள் புடுக்கை அறுத்து பாலா கையில் கொடுங்கள். "


    நீங்க பாட்டுக்கு சொல்லிடுவீங்க . . .



    செஞ்சவன் கொலை கேசுல மாட்டுனா என்ன பண்றது . . .



    படத்தை பாராட்டுங்க . .



    அதுக்காக இப்டியா . . .

    ReplyDelete
    Replies
    1. பாலா படத்தை புகழும் போது... வன்முறை வந்து விடும்.
      சிந்தையில் வெறி கொடி கட்டி பறக்கும் போது ...
      நெறி கலந்த வார்த்தைகளை எதிர்பார்க்கக்கூடாது.

      மட்டன் ஹோட்டலில்...தயிர் சாதம் கிடைக்காது.

      Delete
  3. சுடச்சுட, உணர்ச்சிவசப்பட்ட விமர்சன வரிகள்...

    படம் பார்க்க வேண்டும் எனது ஆவலைத் தூண்டுகிறதென்பதோ உண்மை...

    ஞாயிறு அன்று தான் செல்ல முடியும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வன்முறைப்பிரதேசத்தில் இரண்டு மணி நேரம் வாழ்ந்து வந்தவனிடம்
      இரத்த வாடை வீசத்தான் செய்யும்.

      நன்றி நண்பரே.

      Delete
  4. படம் முடிஞ்சு வெளிய வந்தவுடன் தோன்றிய விஷயம் பாலா மட்டும் என் கண் முன்னால் நின்னுருந்தா அவர் காலில் விழ்ந்திருப்பேன்

    ReplyDelete
    Replies
    1. பாலாவை என் தோளில் தூக்கி ஆடிக்கொண்டிருக்கிறேன்.
      ஒரு வாரம் கழித்துதான் இறக்கி விடுவேன்.

      Delete
  5. விமர்சனமே, பயங்கரமா இருக்கே. நிச்சயமாக பார;
    க்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இருதயத்தை இரும்பாக்கிச்செல்லுங்கள் நண்பரே.

      இரக்கமற்ற எடுபிடிகளின் இரத்த வேட்டை இளகிய இதயத்தை
      நிறுத்தி விடும்.

      Delete
  6. அதிரடி விமர்சனம் சார்! படம் பார்க்க துடுகிறது

    ReplyDelete
  7. தல இதே உணர்வு தான் எனக்கும் இருந்தது, படம் முடிந்து வெளியே வரும்போது.
    பட்டாசு விமர்சனம் தல.
    எனது விமர்சனம் கீழே உள்ளது.
    சமயம் இருந்தால் பார்க்கவும்
    http://dohatalkies.blogspot.com/2013/03/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விமர்சனத்தை படித்து விட்டேன்.
      அட்டகாசமாக எழுதி உள்ளீர்கள்.

      நன்றி நண்பரே.

      Delete
  8. உச்சபட்ச கோபத்தையும் , உச்சபட்ச மகிழ்ச்சியையும் பாலா பாணியிலேயே வெளிப்படுத்தியுள்ளீர்கள் . நீர் உலக சினிமா ரசிகர் தான் .

    ReplyDelete
    Replies
    1. கோபத்திலும்.... மகிழ்ச்சியிலும்
      ஒரே மாதிரிதான்...
      கொந்தளிப்பேன்...குதிப்பேன்.

      பாராட்டுக்கு நன்றி நண்பரே.

      Delete
  9. விமர்சனம் அருமை
    - பின்னூட்டப் புலி

    ReplyDelete
    Replies
    1. இப்பதிவு விமர்சனம் இல்லை.
      படம் பார்த்து விட்டு வந்த ஒரு ரசிகனின் கொண்டாட்டமும்...
      கொதி நிலையுமே இப்பதிவு.

      Delete
  10. இரவுக்காட்சி கிளம்பிக்கொண்டிருக்கிறேன். படம் பார்த்த பின் உங்களை போனில் அழைத்துப் பேச நினைத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இரவு போனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுவேன்.
      காலையில் அழைக்கவும்.
      காத்திருக்கிறேன்.

      Delete
  11. படம் பார்த்துவிட்டு வந்து அதே சூட்டோடு சூடாக, காட்டமாக எழுதியுள்ளீர்கள். படிக்கும் போதே வெறி வருகிறது. கண்டிப்பாக நாளை படத்துக்கு செல்கிறேன் பாலா வெறியரே...!!!!!!! :)

    ReplyDelete
    Replies
    1. தியேட்டரில் பரதேசி பார்ப்பது...
      பாலாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.

      Delete
  12. முதல் பத்தாவது நிமிடத்தில் இதயத்தில் பரவும் இறுக்கம் கடைசி காட்சி வரை.. ஒரு கட்டத்தில் நாமும் பச்சை மலை எஸ்டேட்டில ஒரு குடிசையில் வாழ்வது போன்ற உணர்வு..

    ReplyDelete
    Replies
    1. ‘கெண்டைக்காலை முறிக்கணும்’ என்று என் கிராமத்தில் சொல்வதை சிறு வயதில் நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.
      அது ஏதோ வெண்டைக்காய் போல ஒன்று என நினைத்து...உண்மையான அர்த்தம் தெரியாமல் சிரித்து விட்டுப்போயிருக்கிறேன்.

      படத்தில் ‘அர்த்தம் தெரிந்ததும்’ நடுங்கி விட்டேன்.

      Delete
  13. But Do you know how we started to drink tea....
    Let me share some interesting facts about 'History of Tea in India'. When British ruled India, they were desperate to find & stay in place of cool weather, which they found in hill station & migrated there. But what will they do without any income, so they found the climate is suitable to cultivate tea & started planting it & migrated lots of people to work in the field. Now the product 'tea' is ready, but there isn't any consumer to buy it, because we drank 'Neeragaram', curd milk.
    British started tea shops in towns & villages distributed tea freely for people to drink for many years. British waited patiently for years and turned our people to get addicted to tea. After years, people by default, just woke up & directly went to tea shop. Later they started to charge very less amount & today our day starts with Tea...

    ReplyDelete
    Replies
    1. டீ இந்தியாவில் பரவிய வரலாறை சுருக்கமாக சுவைபடச்சொன்னதற்கு நன்றி.

      Delete
  14. சென்ற வருடம் வழக்கு எண் 18/9.இந்த வருடம் "பரதேசி".இப்படி வருடம் ஒரு படைப்பு வந்து தமிழ் சினிமாவை பெருமைப்பட செய்கின்றன.நானும் பலநாட்களாக பார்த்து வருகிறேன் பாலா ஒரு "sadist" என்று பலரும் கூறுகிறார்கள்.பாலா வைப்போன்ற உலக சினிமா எடுக்க முயற்சிக்கின்ற படைப்பாளிகள் அவ்வாறுதான் இருப்பார்கள்.'அது அவர்களுக்கான வேலி.இல்லை என்றால் நாம் மேய்ந்து விடுவோமே '.இதைப் புரிந்துகொள்ள மறுக்கும் ஆட்டு மந்தைகளுக்கு நடுவில் உலக சினிமா எடுக்கும் பாலா அவர்களை எப்படிப் பாராட்டுவது.வேண்டாம் பாராட்ட வேண்டாம்.ஏற்க்கனவே அங்கீகரிபினால் புறக்கணிக்கப்பட்ட ஒப்பற்ற கலைஞன் "இசை ஞானி" இளையராஜாவின் நிலை இயக்குனர் பாலாவிற்கு வேண்டாம்.அவருடைய படைப்புகளை நடுநிலையாக விமர்சித்து அதோடு நிறுத்திக்கொள்வது தமிழ் திரைத்துறைக்கு நல்லது.

    அப்படியே இதையும் படியுங்கள் சார். http://www.sramakrishnan.com/?p=3297

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடம் தமிழ் சினிமா ஆரம்பமே ‘விஸ்வரூபம்’.
      கமல் தொடக்க விழா.
      பாலா தொடர்ச்சி விழா.

      நடுவில் விழா எடுக்க அமீர் தவறி விட்டார்.

      எஸ்.ரா கட்டுரையை காலையில்தான் படித்தேன்.
      இன்று மாலை அவரோடு போனில் பேசப்போகிறேன்.

      Delete
    2. உங்களுக்கு சுஜாதா எப்படியோ அப்படியேதான் எனக்கு எஸ்.ரா.சார் நீங்கள் அறிவீர்கள் நான் அவருடைய தீவிர வாசகன் என்று.அவர் இங்கே கோவை வருகையில் ஒருவேளை உங்களை சந்திப்பாரானால் எனக்கும் அவரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தி தருவீர்களா ? எனது தாழ்மையான வேண்டுகோள்.

      Delete
    3. கட்டாயம் இருவரும் அவரை சந்திப்போம்.

      Delete
    4. மிக்க நன்றி சார்.

      Delete
    5. //கட்டாயம் இருவரும் அவரை சந்திப்போம்.//
      ஹலோ பாஸ் ...என்னையும் சேத்துக்குவீங்களா ?

      Delete
  15. beautiful film pain of human bala bala thaan

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.