நண்பர்களே...
பரதேசி படத்தை காவியம் என நாடே கொண்டாடிக்கொண்டிருக்க
‘போலி இலக்கியவாதி’ சாரு நிவேதிதா மட்டும் வழக்கம் போல் தனியாவர்த்தனம் வாசித்திருக்கிறார்.
இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
மலம் தின்னும் பன்றியின் வாயில் நரகல் வாடைதானே வீசும்.
பரதேசி படம் பாலாவின் படைப்புகளிலேயே உச்சம்.
இந்திய திரைப்படங்களின் உச்சம் எனக்கொண்டாடி இருக்கிறார் ‘இலக்கியகர்த்தா’ எஸ்.ராம கிருஷ்ணன்.
உலகசினிமா என்ற தொடரை ஆனந்த விகடனில் எழுதிய,
செழியனின் காமிரா கை வண்ணத்தில் பரதேசியை உலக சினிமாவாக்கி இருக்கிறார் பாலா.
அறிமுக கலை இயக்குனர் சி.எஸ்.பாலச்சந்தர் கை வண்ணத்தில் உருவான சாலூர் கிராமத்தில் செழியனின் ‘ஸ்டெடிகேம் காமிரா’...
கிராமம் முழுக்க சுற்றிப்பார்க்க ‘இடுவை’ வழியாக பயணிக்கிறது.
இடுவை = வீடுகளுக்கிடையேயான குறுகிய சந்து.
1930களில் ஒரு தெக்கத்தி கிராமத்தின் அதிகாலைப்பொழுதை அழகாக பதிவு செய்திருக்கிறார்.
திண்ணை வைத்த வீடும், தூங்கி கொண்டிருக்கும் ஒரு பரதேசியும் கவனமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கோடாலி தூக்கி ‘சோலிக்கு’ புறப்படுபவன்,
தெருவைப்பெருக்கி தண்ணி தெளிப்பவள்,
அம்மி அரைப்பவள் என மிக நுணுக்கமாக தெக்கத்தி கிராமம் ‘தினப்பொழுதுக்கு’ தயாராவதை செதுக்கி இருக்கிறார் பாலா.
இதைத்தான் ‘7 ஸ்டார் கிராமம்’ என கிண்டலடித்திருக்கிறது
‘இலக்கிய கூமுட்டை சாரு’.
‘ஆன் லைனில் பிச்சையெடுத்து’ தாய்லாந்துக்கு...
‘சோலி’ பாக்கப்போகும் ‘பரதேசிக்கு’ கிராமத்தை பற்றி என்ன தெரியும்?.
*********************************************************************************
சோலி = வேலை, உடலுறவு
இரு பொருளில் பயன்படுத்தப்படும் கிராமத்து சொல்லாடல்.
“ சோலி முடிஞ்சதும் வீட்டுக்கு வரணும்.
சாராயக்கடைக்கு போனீரு... விளக்குமாறு பிஞ்சுரும்”
“ அந்த பச்சை புள்ளய சோலி பாத்து வயத்துல லோடை ஏத்திட்டான்”
*********************************************************************************
கலப்பை ஏந்தி ஒருவன் கூட கிளம்பவில்லை என்பதை பாலா காட்சி படுத்தி இருப்பது ‘முண்டக்கலப்பை சாருவுக்கு’ தெரியுமா?
‘நுவான்ஸஸ்’ பரதேசியில் இல்லையென அங்கலாய்த்திருக்கிறது ‘நுனிப்புல்’சாரு.
ஒரு பானை சோத்துக்கு...இந்தா பிடி ஒரு சோறு.
மகளுக்கு கருப்பட்டியும் எள்ளும் போட்டு இடிப்பாள் கதாநாயகியின் தாய்.
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் தேதியை கணக்கிட்டு கிராமத்து தாய் செய்யும்
‘எள்ளுருண்டை’ அது.
மாத விடாய் அசவுகரியங்களை போக்கும் அருமருந்து அது.
உணவையே மருந்தாக்கிய எளிய கிராமத்து வழி முறை.
இப்படி மகளை கண்ணும் கருத்துமாய் கிராமத்து தாய் கண்காணித்து வளர்ப்பதால்தான்...
‘தேதி தப்பியதை’ வைத்து குழந்தை உருவானதை கணக்கிட முடிகிறது.
பொருளாதாரத்தால் தாழ்த்தப்பட்டவனாகிய ‘ஒட்டுப்பொறுக்கி’ வாரிசை வயிற்றில் சுமப்பதைக்கண்டு கொதித்து தூக்கிப்போட்டு மிதிக்கிறாள் தாய்.
நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் சேர்ந்து கூத்தடிச்ச ‘கூந்தல் பனை’ சாருவிற்கு
இது புரியுமா ?
கூந்தல் பனை = ஒரு பிரயோஜனம் இல்லாமல் ஆள் மட்டும் வளர்ந்து அறிவு வளராத ஜந்துக்களை கிராமத்தில் இந்த பெயரிட்டுதான் திட்டுவார்கள்.
எடிட்டர் கிஷோருடன் இணைந்து,
ரஷ்யத்திரை மேதை ஐஸன்ஸ்டைன் பாணியில் மாண்டேஜ் ஷாட்களை படைத்துள்ளார் பாலா.
சாலூர் கிராம மக்கள் பெரும்பாலோர் கங்காணி பேச்சை நம்பி ஊர்வலமாய் கிளம்பிப்போகும் காட்சி.
[1 ] சூரியன் அஸ்தமிப்பதை அண்மைக்காட்சியாக்கி ஒரு ஷாட்.
[ 2 ] அடுத்த ஷாட்... அனைவரும் வெட்ட வெளியில் உறங்கிக்கிடப்பார்கள்.
இந்த இரு ஷாட்டையும் இணைத்து பாருங்கள்.
[ 3 ] இவர்கள் வாழ்வு அஸ்தமித்து...
செத்து சுண்ணாம்பாகப்போகிறார்கள் என்ற காவிய அர்த்தம் உதயமாகவில்லையா ?
ஐஸ்ன்ஸ்டைன் மாண்டேஜ் தியரியை விளக்கி எழுதப்பட்ட ஹேராம் பதிவைக்காண்க...
ஹேராம் = 018 பதிவைக்காண்க.
உலகின் தலை சிற்ந்த பத்து இயக்குனர்களில் ஒருவர் மைக்கலேஞ்சலோ அண்டனியோனி.
LA AVENTURA \ 1960 \ ITALY \ DIRECTED BY MICHELANGELO ANTONIONI.
இவரது காவியங்களில் ஒன்றான ‘லா அவென்சுரா’ என்ற படத்தில் கதாநாயகன் தனது காதலியுடன் ஒரு தீவுக்கு பிக்னிக் போவான்.
காதலி காணாமல் போய் விடுவாள்.
காவலர், நண்பர்கள், பொது மக்கள் அனைவரும் பரபரப்பாக தேடுவார்கள்.
ஊடகம் முதற்கொண்டு அனைவரும் அதைப்பற்றியே பேசுவார்கள்.
அவள் கிடைக்கவே மாட்டாள்.
படத்தின் ஆரம்பக்காட்சிகளிலேயே இப்பரபரப்பு தோன்றி மறைந்து விடும்.
படத்தின் எஞ்சிய காட்சிகளில் அவளைப்பற்றிய பேச்சோ செய்தியோ இருக்காது.
சாரு போன்ற குறைமதியுள்ள ஒரு ரிப்போர்டர் அண்டனியோனியிடம் கேட்டான்.
“அவள் என்னவானாள் ?”
அண்டனியோனியின் பதில்...
“எனக்கும் தெரியாது”.
ஏன் இது போன்று ஒரு காட்சி அமைத்தார் அண்டனியோனி ?
ஒரு விஷயத்தை பரபரப்பாக பேசுவோம்.எழுதுவோம்.
அதை விட வேகமாக மறந்து போவோம்.
அதைக்கடந்து புதிய பரபரப்புக்கு தாவி விடுவோம்.
உ.ம் : 2ஜி ஊழல்.
பரதேசியில் இப்படி ஒரு காட்சி அமைத்திருக்கிறாரே பாலா.
கண்ணுக்கு புலப்படவில்லையா ?
கதாநாயகனின் பெரியப்பா மரணமடைய அவரது சடலத்தை மறைத்து அவரது மகள் திருமணத்தை ஊரே நடத்துகிறது.
பந்தி நடக்கிறது.
விருந்தாக ‘நெல்லுச்சோறு’ படைக்கப்படுகிறது.
படத்தில் பெரியப்பா சடலத்தின் இறுதிச்சடங்குகள் காட்டப்படவில்லை.
காட்டப்பட்டிருந்தால் அது சாதாப்படம்.
காட்டப்படாததால் ‘பரதேசி’ காவியப்படம்.
வாழைப்பழத்தை உரித்து வாயில் சவைத்து மென்று...
அதைத்தான் சாரு போன்ற மசாலா மண்டைகளுக்கு வாயில் ஊட்ட வேண்டும்.
பாலா போன்ற படைப்பாளிகளின் படம்...
சாரு போன்ற மர மண்டைகளுக்கு புரியாமல் கதறும் ரகசியம் இதுதான்.
‘பரதேசி’ கிளைமாக்சில் ‘ஒளிக்கீற்று’ இல்லையென புலம்பிய
‘கருத்துக்குருடன்’ சாருவுக்கு பதில் அடுத்தப்பதிவில்.
இலக்கியகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணனின் பரதேசி பற்றிய படைப்பைக்காண...
எஸ்.ராவின் பரதேசி பற்றிய பதிவு
//ஒரு விஷயத்தை பரபரப்பாக பேசுவோம்.எழுதுவோம்.
ReplyDeleteஅதை விட வேகமாக மறந்து போவோம்.
அதைக்கடந்து புதிய பரபரப்புக்கு தாவி விடுவோம்.//
உண்மை, நல்ல உதாரணம். நான் கடவுளில் கூட இந்த subtle jump இருக்கும் - உம். கோர்ட்டிலிருந்து ருத்ரன் வெளியே வருகிறான்...வெளியே வில்லன் காத்துக்கொண்டிருக்கிறான்....அடுத்த காட்சியில் அவர்கள் சண்டைக்கு தயாராக நின்று கொண்டிருக்கிறார்கள். நிறைய பேர் இதை எடிட்டிங் குறை என்று எழுதினார்கள்...இதற்கு பாலா ஒரு பேட்டியில் மிகவும் கடுப்பாக ஆனால் அருமையாக பதிலலித்தார்.."எப்பிடியும் அவங்க ரெண்டு பேரும் சண்டை போட போராங்க...இதுக்கு நடுவுல நடக்குறத எல்லாம் மக்கள் புரிஞ்சுப்பாங்கனு நெனச்சேன்'....
//மகளுக்கு கருப்பட்டியும் எள்ளும் போட்டு இடிப்பாள் கதாநாயகனின் தாய்.
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் தேதியை கணக்கிட்டு கிராமத்து தாய் செய்யும்
பலகாரம் அது.//
otherwise, உங்கள் விமர்சனமும், திரைப்படத்தை நுணுக்கமாக பார்க்கும் attitude-ம் ஆச்சர்யப்படுத்துகிறது!
-shoban
கமல்,பாலா போன்ற படைப்பாளிகள் ரசிகனை
Deleteமேதையாக கருதி காட்சியும் ஷாட்டும் வைக்கிறார்கள்.
அதை புரிய திராணி இல்லாத ‘வைக்கோல் போரைகள்’
படத்தை குப்பை என கூறி தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றன.
தங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.
Great ....very good ji
ReplyDeleteநன்றி.
Deleteஅந்தக் குடிசை , செட் குடிசை என்பது
ReplyDeleteமிக தெளிவாகத் தெரிகிறது நண்பரே.
அது போக அதரவா, வேதிகா பேசும் வசனங்களில் கிராமிய உச்சரிப்பு இல்லை ,
அதனால் தான் மனம் ஒன்ற வில்லை.
பருத்தி வீரனில், கிழக்குச் சீமையிலெயெஇல் இருந்த
இயற்கையான கிராமியம் இதில் என்னால் உணர முடிய வில்லை.
அதர்வா, வேதிகா கிராமத்து உச்சரிப்பு சரியாக இல்லையென்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்.
Deleteஅதர்வாவிடம் சிறப்பாக வேலை வாங்கி இருப்பார் பாலா.
இருந்தாலும் சூர்யா, கார்த்தி அளவுக்கு கிராமிய மணத்தை குரலில்
அதர்வா வழங்க முடியவில்லை.
கிழக்குச்சீமையில் கூட விஜயகுமார், ராதிகா உச்சரிப்பு அந்நியமாக இருக்கும்.
பருத்தி வீரன் பெர்பக்ஷன் உலகறிந்த விசயம்.
ஆனால் அது சமகாலச்சொல்லாடலில் நம்மை மதி மயங்கச்செய்தது.
பரதேசி தமிழ் நமக்கு அந்நியமாகத்தான் இருக்கும்.
எட்டி நின்றுதான் பார்க்க முடியும்.
அருமையான சவுக்கடி....
ReplyDeleteஒரு படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்று உங்க கிட்ட கிளாஸ் சேர்ந்து கத்துக்கணும் சார்.
எல்லாம் கமல்,மகேந்திரன்,பாலுமகேந்திரா,பாலச்சந்தர்,பாரதிராஜாவிடம் கற்றுதுதான்.
Deleteசினிமாவை அகமும் புறமும் நேசிக்க வேண்டும்.
சாரு கோஷ்டிகள் தமிழ் சினிமாவை வெறுப்பவர்கள்.
ஆதாயம் இருந்தால் ஆதரிப்பவர்கள்.
என் மேல் அன்பு கொண்டு பாராட்டும் தம்பி ராஜ் அவர்களுக்கு நன்றி.
மொதல்ல சாருவிற்கு நன்றி ...!
ReplyDeleteஆமாங்க இந்த மாதிரி அவர் எழுதப்போயி தானே நீங்க இவ்வளவு டீடேயிலா எழுதியிருக்கீங்க . இந்த மாதிரி ஒரு நுணுக்கமான பார்வை உள்ள விமர்சனங்கள் தான் என்னை போன்ற சாதாரண ரசிகனையும் உலக சினிமா ரசிகனாக மாற்றக்கூடும் . வழக்கமான விமர்சனங்களை படித்து சலிப்பு தட்டி போயிருந்த எனக்கு இந்த பதிவு ரெம்ப புதுசு . இதுபோன்ற கதை சொல்லாமல் காட்சிகளை லயித்து , ரசித்து நிறைய பதிவுகளை எழுதுங்க பாஸ் .
சாரு எப்படியும் இப்படித்தான் எழுதுவார் என எதிர்பார்த்தேன்.
Deleteஅதிசயம் நிகழ்த்தவில்லை சாரு.
எனக்கிருக்கும் வேலைப்பளுவில் எழுத வைத்தது சாருவே.
// ‘நுவான்ஸஸ்’ பரதேசியில் இல்லை - சாரு..
ReplyDeleteஇவரு வேற நேரங்காலம் தெரியாம பவர்ஸ்டார் கணக்கா காமெடி பண்ணிக்கிட்டு..
சாருவை பவர்ஸ்டாரோடு ஒப்பிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.
Deletethalaivare,
ReplyDeletethanks for the review,totally agree with your writeup,expecting more from you for paradesi.
geethappriyan
கட்டாயம் எழுதுகிறேன் நண்பரே.
Deleteவருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி.
நாராயனா! எழுத்துலக பவர்ஸ்டார் செக்ஸ்செறு தொல்ல தாங்கமுடியல. மருந்தடிச்சி கொல்லுங்கடா.
ReplyDeleteநண்பரே...பவர்ஸ்டார் பட்டத்தை இந்த செக்ஸ் காமெடி எழுத்தாளருக்கு கொடுக்க வேண்டம்.
DeleteDevil in the details :)
ReplyDeleteThe “Greatest Trick” the “Devil” ever pulled was convincing the “World” he didn’t exist.
Delete“Devil= No Mithran Please ?”=To Bala=”Biggest Hats Off’=for exposing the “Devil in details” in your wonderful “Paradesi”
உலக சினிமா ரசிகன் உங்கள் பெயர் தெரியல.
ReplyDeleteபட்டய கிளப்பிட்டிங்க நான் பாலா அண்ணணோட மிகப்பெரிய ரசிகன்.
ரொம்ப பெருமையா இருக்கு.
உங்க பதிவுக்கு நான் தலை வணங்குகிறேன்.....
உங்கள் பாராட்டை பணிவன்போடு ஏற்றுக்கொள்கிறான் பாஸ்கரன்.
Deleteநெத்தியடி
ReplyDeleteஇன்னும் இருக்கு.
Deleteஎல்லாம் சரி. தேவயில்லாம நாவலிலிருந்து மாறுபட்ட டாக்டா் பாத்திரம் எதற்கு. படைப்பு சுதந்திரம்! பாலாவிடம் ஜாக்கிரதை.
ReplyDeleteநண்பரே...இப்போதுதான் எரியும் பனிக்காடு நாவலை படித்துக்கொண்டு இருக்கிறேன்.
Deleteஇது குறித்து தனிப்பதிவாக எழுதுகிறேன்.
பொறுத்திருக்கவும்.
சார், தங்களின் இந்த பதிவுக்கு மிக்க நன்றி,
ReplyDeleteவருகைக்கு நன்றி மனோஜ்.
Deleteசாருவெல்லாம் ஒரு ஆளுன்னு பதில் சொல்றீங்களே ! ஊரெல்லாம் உடுத்தியிருக்கும் போது நாள் பேர் அப்ப்வாச்சும் பாக்கட்டுமேன்னு அவர் அம்மணமா போவாரு . உங்களின் நுணுக்கமான கருத்துக்கள் படத்தை நீங்கள் எந்த அளவு உள் வாங்கியிருக்கிறீர்கள் என்று காட்டுகிறது .
ReplyDeleteசாருவை போட்டு சாத்துவது போல் பாலாவின் அருமை பெருமைகளை விளக்கி உள்ளேன்.
Deleteபாராட்டுக்கு நன்றி அனந்து.
சாரு என்ன கமெண்ட் அடித்தார் என்பது தெரியாது.... ஆனால் உங்கள் எழுத்தால் படத்தை இன்னொரு முறை கொஞ்சமாகினும் ரீவைண்ட் செய்து பார்க்க முடிந்தது சந்தோசம்...
ReplyDeleteசாரு வழக்கு எண்ணிற்கு என்ன கமெண்டோ போட்டாரோ அதேதான் பரதேசிக்கும்.
Deleteநன்றி மேடம்.
தங்களின் விமர்சனம் படிதேன். புத்தகத்தில் இருப்பதை காட்சி படுத்தவது எந்த அளவிற்கு சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எரியும் பனிக்காடு ஏற்படுத்திய தாக்கம் எனக்கு திரையில் ஒரு 10% ஏற்படவில்லை. ஒருவேளை புத்தகத்தை படிக்காமல் இந்த படத்தை பார்த்து இருந்தால் எனக்கு ஏற்பட்டிருக்குமோ என்னவோ ? அனால் 'நான் கடவுளி'ல் இது சாத்தியமாயிற்று (ஆர்யா காட்சிகளை தவிர்த்து). பின்னணி இசை ஒரு திரை படத்தின் எந்த அளவிற்கு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் பரதேசி யில் முக்கியமாக ஏமாற்றியது அது தான். அதிலும் தன்ஷிகா இருந்திருக்கும் போது காட்சியை விட இசை கொடுத்திருக்க வேண்டிய வலி நமக்கு அதிகமாக இருந்திருக்க வேண்டும். அது கொஞ்சம் கூட ஏற்பட வில்லை. இது பாராட்ட பட வேண்டிய படம் எனபதில் எந்த வித மாற்று கருதும் இல்லை. ஆனால்.......? Murali
ReplyDeleteபுத்தகம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சினிமாவை உருவாக்கும்.
Deleteஎனவே பாலா உருவாக்கிய படத்தில் முழுமையாக உங்களால் ஒன்ற முடியாமல் போயிருக்கலாம்.
பின்னணி இசை...ராஜா இல்லாத குறையை பாலா உணர்ந்திருப்பார்.
குறைகள் இல்லாமல் எந்த படைப்பும் இது வரை உருவாகவில்லை.
‘நுவான்ஸஸ்’ பரதேசியில் இல்லை--’சாரு. என்ன! இளநீர்ல தண்ணி வரலையா?
ReplyDeleteசாருவுக்கு நாம் கொடுத்த ‘கொடை’போதும்.
Deleteஉங்களது விமர்சனங்களை தவறாமல் வாசிப்பவன் நான்.திரைப்படங்களில் ஒவ்வொரு விடயத்தையும் கூர்ந்து அவதானிக்கும் திறனும் பரந்து பட்ட சினிமா அறிவும் என்னை பிரமிக்க வைக்கிறன
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி நண்பரே.
Deleteநான் இப்பொழுதுதான் படம் பார்த்துவிட்டு வந்தேன், ஏறக்குறைய உங்களுடைய கருத்தே என்னுடைய கருத்தும்.
ReplyDeleteஉங்களது விரிவான அலசல் வியக்க வைக்கிறது.
உங்களது விமர்சனம் தவறாமல் படிப்பேன்.
Deleteபரதேசியை உங்கள் பார்வையில்... படிக்க விரும்புகிறேன்.
இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,.
ReplyDeleteபரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.
நண்பரே...புலம் பெயர்ந்து அல்லலுறும் அனைவரது வரலாறையும் ‘பரதேசி’பிரதிபலிக்கும்.
Deleteஇப்படம் இன்றும் கார்ப்பரேட் கங்காணிகளால் அல்லறும் சாப்ட்வேர் தொழிலாளியின் துயரத்தை ஒப்பிட்டு பார்ப்பதற்கு அருமையான தளத்தை தேர்ந்துடுத்து உள்ளது.
படம் பாருங்கள்.
இப்படத்தில் காட்டப்பட்ட கொடுமைகள் வெவ்வேறு வடிவங்களில் இன்றும் தொடர்வதை நீங்கள் ஒப்பிட முடியும்.
வருகைக்கும் கருத்துரைத்ததற்கும் நன்றி.
I have not read Charu's blog. So, no comments about his views. Even if I had read, I wd not severely criticise him as u have. You have forgotten a fundamental fact:
ReplyDeleteA FILM IS A COMMON ENTERTAINMENT.
That is, it is for each one to watch and enjoy in his or her own way. If Charu doesn't like the film, and u do, what s ur problem with him? Why don't u allow people freedom of expression at least in film reviews?
Do u think every one should watch and comment about the film in the same way as u do? Shouldn't people have their independent opinions?
I watched the film. My view is that the village shown in the first part of the film is very unrealistic as one commenter has said here. Everything is almost neat and clean. A village of poor people wont be like that. The scenes are repetitive - so much so I got bored with many scenes and the music is harsh. Songs are propaganda and there is no sweet music in it.
The film has many many holes (defects). It requires many pages for me to detail them. My general view is that the film is just a good attempt by Bala. It is not the theme for him. A better director wd have done better.
As one has pointed out here that we don't get the impression of seeing a villagers lives.
Forget about Charu. You watch the film again and come up with your considered views.
Before replying to me, read this: உங்கள் பின்னுட்டங்கள் தரமாகவும்,காரமாகவும் இருந்து என்னை இயக்கட்டும்.