நாய்களும்...ஆண்களும் உள்ளே வரக்கூடாது....
என வாசலில் ஒரு சிதிலமடைந்த போர்டு தொங்கும் வீட்டின் உரிமையாளர் சையநோரா என்ரிக்கா.
பேரிளம் பெண்.
கை விட்ட கணவனிடமிருந்து...கைப்பற்றிய வீட்டை, படிக்கும் பெண்களுக்கு வாடகைக்கு விட்டு வாழ்கிறாள்.
வீட்டில் ஆண்களை அனுமதிக்காத என்ரிக்கா... எகின் என்ற துருக்கி தேசத்து டீனேஜ் பையனை... இரண்டு மடங்கு வாடகைக்காக....அனுமதிக்கிறாள்.
எரின் வீட்டிற்க்குள் வந்ததும் அம்மண தரிசனம் கிடைக்கிறது.
நிலைக்கண்ணாடியில் ஒரு பெண்ணின் முழு நிர்வாண பிம்பம் தெரிகிறது.
நிர்வாண போஸ் கொடுத்து அசத்தியவள் வேலண்டினா.
கண்டதும் காதல் வந்து தொலைக்கிறது பையனுக்கு.
ஐ லவ் யூ... என இத்தாலியில் சொல்வதற்க்கு தீவிரமாக இத்தாலி கற்க ஆசைப்படுகிறான்.
என்ரிக்கா இத்தாலி கற்றுத்தர முன் வருகிறாள்.
என்ரிக்கா இத்தாலி மட்டுமா கற்றுத்தருகிறாள்?
பேரிளம் என்ரிக்காவுக்கும்... டீனேஜ் எரிக்குக்கும்... இடையே ஒரு புதிய உறவு பூக்கிறது.
அது நட்பா?பாசமா? காதலா?
படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களை விட என்னை மிகவும் கவர்ந்தது ஒரு ஒயின் பாட்டில்.
உலகின் டாப் 10 இயக்குனர்களில் ஒருவரான பெலினி...என்ரிக்காவுக்கு பரிசாக கொடுத்த ஒயின் பாட்டிலை... ஒரு கதாபாத்திரமாக திரையில் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர் Ali Ilhom.
அந்த ஒயின் பாட்டிலை எரிக் ஒப்பன் பண்ணி பருகுவதும்...
என்ரிக்கா.... துருக்கி சாராயத்தை... எரிக் டிப்ஸ்படி மிக்ஸ் பண்ணி குடிப்பதும் படத்தின் எடிட்டிங் கவிதை.
அவள் அப்படித்தான்... என்ற படத்தில்,
இளையராஜாவின் பியோனோ இசையில் பூத்த புதுக்கவிதையாக வரும்....
உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் புதுக்கதை...
ஒரு கதை... இன்று முடியலாம்...
முடிவிலும்... ஒன்று தொடரலாம்...
இனியெல்லாம்... சுகமே....
என்ற பாடலுக்கு...இப்படத்தின் காட்சிகளை தொகுத்தால் அழகிய காவியம் ரெடி.
விருதுகள் பற்றிய தகவல் உபயம்: IMDB
Antalya Golden Orange Film Festival | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
---|---|---|---|
2010 | Won | Golden Orange | Best Actress Claudia Cardinale |
Special Jury Award | Best Film Elvan Albayrak | ||
அருமையாக தொகுத்து இருக்கீங்க விமர்சனம்.இருந்தாலும் உங்க விமர்சன நடையில் ஒண்ணு மிஸ்ஸிங்...படம் வாங்கின விருதுகள் பத்தி...
ReplyDeleteவிருதுகள் பற்றிய தகவல்கள் விக்கிபீடீயாவில் கிடைக்கவில்லை....நண்பரே!
Deleteசுருக்கமாக ஒரு கவிதை மாதிரி விமர்சனம்..படம் கண்டிப்பாக பார்க்கிறேன்..பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteதம்பி குமரா...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
அந்த ஒயின் பாட்டிலின் நடிப்பை பார்ப்பதற்காகவாவது படத்தை பார்க்கனும்..
ReplyDeleteஒரு பாடலையே படத்துக்கு சிம்பாலிக்காக்கி அசத்தியிருக்கிறீர்கள்.. அறிமுகத்துக்கு மிக்க நன்றி!
வருக நண்பரே!
Deleteஒயின் பாட்டிலின் நகைச்சுவை நடிப்பிற்க்காகவே இப்படத்தை விரும்புவீர்கள்.
ஆனால் இறுதிக்காட்சியில் நம்மை கண் கலங்க வைத்து விடுவார் மிஸ்டர்.ஒயின் பாட்டில்.
விருதுகள் பற்றி IMDBயில் சொல்லியிருக்காங்க. இம்முறை பதிவில் காணாததால் சொன்னேன்.
ReplyDeletehttp://www.imdb.com/title/tt1615840/awards
இந்தப் படத்தைப் பார்க்கும் சூழலும், பொறுமையும் இல்லை. இப்போதைக்கு Cinema Paradiso மட்டும் நோட் பண்ணி வைத்திருக்கிறேன். மற்றவை கொஞ்சம் நேரம் செல்லட்டும்.
நண்பரே!
Deleteவிருதுகள் பற்றி தகவல் தந்தமைக்கு நன்றி.
பதிவிலும் இணைத்து விட்டேன்.
சினிமா பாரடைசோ கட்டாயம் முதலில் பார்த்து விடுங்கள்.
முடிந்தால் இதையும் பார்த்து விடுங்கள்.
உலகத்தரத்தில் ஒரு நகைச்சுவை காவியம் பார்த்த திருப்தி கிடைக்கும்.
வணக்கம் நண்பா.
ReplyDeleteஅருமையான துருக்கிய சினிமா விமர்சனத்தை காதல் மொழி நடை கலந்து பகிர்ந்திருக்கிறீங்க.
நேரம் கிடைக்கும் போது டவுண்லோட் பண்ணிப் பார்க்க முயற்சிக்கிறேன்.
பகிர்விற்கு நன்றி.
அருமையான விமர்சனம்ய்யா மாப்ள!
ReplyDelete