May 20, 2012

ஹேராம்-[Hey Ram-2000=002] பதிலுக்கு பதில்.

ஹே ராம் வெளியான போது எவ்வளவு எதிர்ப்பலைகள் கிளம்பியது என்பதை நீங்கள் விக்கிப்பீடீயா சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
காங்கிரஸ்காரர்கள் காந்தி பேரைச்சொல்லி வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள்.
படம் பார்க்காதவர்கள்,படத்தை புரியாதவர்கள்தான் அந்த வெறியர்களாக இருந்திருக்க முடியும்.

ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இப்படத்தை கொண்டாடுகிறார்கள் என ஒரு குற்றச்சாட்டை எனது நண்பர் கருந்தேள் வைக்கிறார்.
அவர்கள் கொண்டாடக்கூடிய தகுதி ஹேராமிற்க்கு நிச்சயமாக இல்லை.
இந்தப்படம் தொடக்கம்முதல் இறுதி வரை இந்துத்வாவிற்க்கு எதிராக முழங்கியிருக்கிறது....
ஆனால் பெர்க்மன் பாணியில் சொல்லப்பட்டிருக்கிறது.

இன்னொரு நண்பர் இப்படம் முஸ்லீம்களுக்கு எதிராக இயங்குகிறது என ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்.
இந்தப்படத்தில் நிச்சயமாக அப்படி இல்லை.
மகாத்மா காந்தி ரேஞ்சுக்கு இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி இருக்கிறார் இப்படத்தில்.
சாகேத் ராமை விட.... அம்ஜத்கானை உயர்ந்த படைப்பாக காட்டியிருக்கிறார்.
அம்ஜத்கான்... என்று தனது நண்பர் பெயரை கமல் சூட்டியதற்க்கே மாலை போட்டு வாழ்த்த வேண்டும்.
திரையில் வில்லனாக...நிஜ வாழ்க்கையில் மிக நல்லவராக வாழ்ந்து மறைந்த அந்த உத்தம நடிகனின் பெயரை சூட்டிய கமலின் மேல் கல்லெறியாதீர்கள்.

ஒரு சின்ன ப்ளாஷ் பேக்.
பசி என்ற படத்தை எடுத்த இயக்குனர் துரை என்னிடம் கூறியது.
பசி படத்தை இந்தியில் எடுத்தபோது... தமிழில் பசி நாராயணன் செய்த காரெக்டருக்கு அம்ஜத்கானை ஒப்பந்தம் செய்யப்போயிருக்கிறார்.
லட்சக்கணக்கான சம்பளம் வாங்கி அம்ஜத்கான் உச்சத்தில் இருந்த நேரம்.
பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல... ஒரு லட்சத்து ஒரு ரூபாயை ஒரு தட்டில் பூ...பழங்களொடு வைத்து எடுத்துக்கொண்டு பார்க்கப்போயிருக்கிறார்.
'நான் இப்படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்...
எனக்கு இந்த சம்பளம் போதும்' என ஒரே ஒரு ரூபாயையும்...பழங்களையும் எடுத்துக்கொண்ட பரமாத்மா அம்ஜத்கான்.

அம்ஜத்கான் என்றால் கப்பர்சிங்தான் ஞாபகத்துக்கு வருகிறது என  வாதிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
ஆரோக்கியமாக விவாதிக்க வாருங்கள்....கமலை பற்றியோ...
அவரது மற்ற படங்களை பற்றியோ விவாதிக்க நான் தயாரில்லை.
ஹேராம் என்ற படத்திற்க்குள் மட்டுமே நின்று விவாத்திக்க வரவேற்க்கிறேன்.

மகாதேவன் என்கிர வக்கிரம் பிடித்த ஒநாய்... போனமாதம் ஹேராம் பற்றி பதிவு போட்டுள்ளது.
நேற்றுதான் அதைப்படித்தேன்.
அந்த ஒநாய் கமல் பற்றியும்,கமல் மகளை பற்றியும் கேவலமாக கமெண்ட் அடித்திருக்கிறது.
கமல் தனது மகளிடம்....
'நீ யாரிடம் வேண்டுமானாலும் போ...காண்டம் போட மறக்காதே...
என சொல்வாரா?'
என அக்கிரமத்தனமாக கேட்டிருக்கிறான் மகாதேவன் எனப்பெயரிடப்பட்ட ராட்சஷன்.

அது மட்டுமல்ல...விமர்சனம் என்ற பெயரில் கேணத்தனமாக எழுதியிருக்கிறான்.
அதாவது நான் ஹேராம் திரைக்கதையை இப்படி அமைத்திருப்பேன்...
அப்படி வைத்திருப்பேன்.... என லூசுத்தனமாக எழுதியிருக்கிறான்.
அவனது கிளைமாக்ஸ் எப்படியென்றால்....என் கதையில் காந்தியைக் கொல்வதற்கான நியாயங்களை சாகேத் ராமுக்கு அபயங்கர் விலாவாரியாக எடுத்துச் சொல்வதைக் காட்டுவேன். சாகேத் ராமின் எளிய மனம் அதை எவ்வளவோ மறுத்துப் பேசியபடியேதான் வரும். கடைசியாகத்தான் கொல்லத் தயாராவார். அதன் பிறகு காந்தியை அவருடைய ஆஸ்ரமத்தில் தனியாகச் சென்று கொல்ல முயற்சி செய்வார். காந்தி தன் ஆஸ்ரமத்தில் திறந்தே கிடக்கும் அறையில் ராட்டையில் நூற்றுக் கொண்டிருப்பார். அப்போது ஒரு கறுத்த நிழலாக துப்பாக்கியுடன் சாகேத் ராம் நுழைவார். அவரைப் பார்த்த பிறகும் காந்தி சிறிதும் சலனப்படாமல், ராட்டையை நூற்றுக் கொண்டிருப்பார். மிஸ்டர் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி உங்களை நான் கொல்லப் போகிறேன் என்று சாகேத்ராம் கர்ஜிப்பார்.எந்த காந்தியைக் கொல்லப் போகிறாய்… இந்துவும் முஸ்லீமும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று சொல்லும் காந்தியைக் கொல்லப் போகிறாயா… தாழ்த்தப்பட்ட சாதியினருக்குச் செய்த கொடுமைகளுக்கு மேல் சாதி இந்துக்களே பிராயச் சித்தம் செய்ய வேண்டும் என்று சொன்ன காந்தியைக் கொல்லப் போகிறாயா… கிராம ராஜ்ஜியத்தை முன் வைக்கும் காந்தியைக் கொல்லப் போகிறாயா? சொல் உன் துப்பாக்கியில் இருக்கும் தோட்டா உருவான இடத்தைச் சொல். என் ஒருவனைக் கொல்வதன் மூலம் உன் பிரச்னைகள் தீரும் என்றால் என்னை ஓராயிரம் குண்டுகளால் துளைத்துப் போடு… என்று நெஞ்சு நிமிர்த்தி காந்தி சொல்கிறார். அந்த நேரம் பார்த்து காந்தியைப் பார்க்க யாரோ வருகிறார்கள். சாகேத் ராம் ஓடி ஒளிந்து கொள்கிறார். வந்தவர் போன பிறகு காந்தி ராமை அழைத்து பேசுகிறார். ஓரிரு மாதங்கள் தன்னுடன் இருக்கும்படியும் அதன் பிறகும் தன்னைக் கொல்ல வேண்டும் என்று தோன்றினால் தானே அதற்கு இடம் குறித்துத் தருவதாகவும் சொல்கிறார்.


அடேய்...ஒரு திரைப்படத்தில் ஒரு பிரேமை நீக்கவோ...சேர்க்கவோ படத்தின் தயாரிப்பாளருக்கே உரிமையில்லை.
விமர்சகனுக்கு எப்படி இருக்க முடியும்?

அந்தப்பேய் காதல்,அங்காடித்தெரு,வழக்கு எண்ணை கூட கேவலமாக விமர்சித்திருக்கிறது.

உலகசினிமாக்களை மட்டுமே சிலாகிப்பது...உள்ளூர் சினிமாக்களை மட்டம் தட்டுவது என ஒரு வியாதி நிறைய பேரை பிடித்தாட்டுகிறது.
ஐரோப்பிய குசுவை சந்தணமாக மோந்து திரியும் இலக்கியவியாதி கோஷ்டிகள் நிறைய இருக்கிரது.
அந்த கோஷ்டிக்கே தலைவன் இந்த செந்நாய் மகாதேவன்.
உனக்கு என் நெல்லை நரகல் நடையில் சிலவார்த்தைகள்...
செத்த மூதி....
பேதியில போவான்....
இடி வுழுவான்....
வாலே...பாத்துருவோம்....

அப்பாடா...இறக்கி வைத்து விட்டேன்.
இனி ஹேராம் பற்றி தொடர் பதிவுகள் தொடரும்.

24 comments:

  1. நண்பரே..ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பது நன்றாகத்தான் இருக்கிறது.. ஹா..ஹா..ஹா..

    இந்த பதிவே இப்படத்தைப்பற்றிய உங்கள் எண்ணத்தை சொல்லிவிட்டது..

    ReplyDelete
    Replies
    1. நண்பரே!
      அவனது பதிவை படித்தால் சினிமாவை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் கொதித்து விடுவார்கள்.
      அத்தனையும் குப்பை.
      குற்றம் கண்டு பிடிக்கும் புலவர்களில் அவன்தான் மாஸ்டர்.
      இவனது எழுத்து புத்தகமாக வேறு வந்து தொலைத்திருக்கிறது.
      இவன் பாரதிராஜா,மணிரத்னம் ஒருத்தரையும் விடாமல் தாக்கியிருக்கிறான்.

      அவன் நிச்சயம் படம் எடுப்பான்.
      அப்போது தெரிந்து விடும்....அவனது வண்டவாளம்.

      Delete
  2. யப்பா .... என்ன நண்பரே இப்படி பொங்கிட்டீங்க? பதிவில் செம காரமா இருக்கே?

    //உலகசினிமாக்களை மட்டுமே சிலாகிப்பது...உள்ளூர் சினிமாக்களை மட்டம் தட்டுவது//

    வரும் படங்களில் 80 வீதமானவை மகா மட்டமாக இருந்தால் என்ன செய்வது ரசிகரே? ஆனால் தமிழில் அபூர்வமாக வரும் சில நல்ல முயற்சிகளையும் குறை சொல்லி முடக்குவது தான் பிடிக்காத விடயம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே!
      கமலை அறவே பிடிக்காத... எனது நண்பர் கருந்தேள் கூட அவனது பதிவைப்படித்தால் பொங்கி விடுவார்.
      அத்தனை கேவலமான பதிவு.
      ஆனால் அவனை திருத்த எமனால் மட்டுமே முடியும்.

      Delete
    2. //தமிழில் அபூர்வமாக வரும் சில நல்ல முயற்சிகளையும் குறை சொல்லி முடக்குவது தான் பிடிக்காத விடயம்.//

      எனது ஆதங்கமும் அதுவே...

      Delete
  3. தங்களின் பதிகளையும் அது தரும் சினிமா பற்றிய அனுபவத்தையும் தொடர்ந்து வாசித்து வருபவன் என்றமுறையில் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் மேல் எனக்கு தனி மரியாதை உண்டு ஆனால் சமீபகாலமாக நீங்கள் மற்றவறைப் பற்றி எழுதும்போது வெளிப்படுத்தும் வார்த்தைகள் நாகரீகமானதாக இல்லையே ஏன்? இது எனக்குள் உங்கள் மீதான மதிப்பை மறுபரிசீலனை செய்யத்தூண்டுகிறது. தயவுசெய்து நாகரீகமான வார்த்தைகளில் கடுமையான விமர்சனத்தை தொடருங்கள். சொல்வதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...தங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன்.
      இனி அப்படி எழுத மாட்டேன்.

      Delete
    2. நல்ல பதிவு...
      நிச்சயமாக தேவர்மகன்,ஹேராம்,விருமாண்டி போன்றவை கமலின் மாஸ்டர்பீஸ்.
      அதை தொடர்பதிவாக போடும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
      நல்ல சினிமாவை ரசிப்பவன் என்ற வகையில் நானும் வரவேற்கிறேன்.

      Delete
    3. நண்பரே...
      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  4. //கமலை அறவே பிடிக்காத... எனது நண்பர் கருந்தேள் கூட // - இங்கே நான் வேறுபடுகிறேன். எனக்கு கமலை பிடிக்கும். எல்லாரையுமே. ஆனால், அவர்கள் வைக்கும் வாதங்கள் மட்டுமே எனக்குப் பிடிக்காது. மனிதர்களை நான் என்றுமே வெறுத்ததில்லை. எண்ணங்களின் மேல் தான் வெறுப்பு. நீங்கள் ஹே ராமில் ஹிந்துத்துவ வாடை இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் நான் அதனை ஒத்துக்கொள்ளமாட்டேன். ஹே ராம் மட்டுமல்ல. உன்னைப்போல் ஒருவன் படத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான கமலின் கருத்துகளை பார்க்க முடியும். உதாரணம்: படத்தில் ஒரு வில்லன் கதாபாத்திரம், ஒரு முஸ்லிமை நோக்கி இப்படி சொல்கிறது : 'உனக்கென்ன? ஒரு பொண்டாட்டி செத்தா இன்னும் ரெண்டு மூணு இருக்கில்ல?'.. இதெல்லாம் அந்த கதாபாத்திரத்தின் கோப வெளிப்பாடு என்றெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. அதேபோல், இது வசனகர்த்தாவின் வேலை என்றும் சொல்லிவிட முடியாது. அப்படியென்றால், படத்தில் என்ன எழுதப்பட்டாலும் கமல் அதனை அப்படியே வசனமாகப் பேசிவிடுவாரா?

    அதேபோல், அப்படத்தில், குண்டுவைக்கும் முஸ்லிம் தீவிரவாதி சொல்லும் நியாயம் என்ன? 'பெஸ்ட் பாக்கரி நிகழ்ச்சிதான் நான் கோவையில் குண்டுவைப்பதற்குக் காரணம்' என்று அதில் தீவிரவாதி சொல்லுவான். ஆனால், கோவை குண்டுவெடிப்பிற்குப் பிறகே பேஸ்ட் பாக்கரி சம்பவம் நடந்தது என்பது குஞ்சு குளுவானுக்குக் கூட தெரியும். ஆக, எதையோ ஒன்றைச் சொல்லி ஒரு முஸ்லிமை தீவிரவாதி ஆக்கிவிடுவது என்பதே கமலின் கருத்தாக எனக்குத் தெரிகிறது.

    இப்போது ஹேராமுக்கு வருவோம். படத்தில் சாகேத்ராம் என்ற அய்யங்கார், எப்போது துப்பாக்கியைத் தூக்குகிறார்? அவரது மனைவியை கழுத்தை அறுத்து ஒரு முஸ்லிம் கொல்வதால். அந்த சம்பவம் விலாவாரியாக, ஷாட் பை ஷாட்டாக இயக்குநர் கமலால் வைக்கப்பட்டிருக்கிறது. 'அய்யா... அந்த சமயத்தில் அப்படித்தான் நடந்தது' என்று கமல் சமாதானம் சொல்லலாம். ஆனால், கல்கத்தா கலவரத்தில் முஸ்லிம்கள் மட்டுமா வெறி கொண்டு அலைந்தனர்? அதற்கு சரிசமமாக ஹிந்துக்களுமே கொலைவெறியோடு அல்லவா திரிந்தனர்? அப்படி ஹிந்து வெறியர்களின் பிரதிநிதியாக வெளிப்படும் 'அப்யங்கர்' என்பவன், இந்த கொலைகளை ஏதோ புனித வேள்வியாக அல்லவா முன்வைக்கிறான்? சாகேத்ராமை அவன் சந்திக்கும் நேரத்தில் ஒரு மந்திரம் சொல்லுவான் நினைவிருக்கிறதா? அதனை, அய்யங்கார்கள் மற்றும் அய்யர்கள், 'அபிவாதம்' என்று சொல்வார்கள். 'இன்ன கோத்ரத்தையும் இன்ன குலத்தையும் சேர்ந்த அடியேன், உங்கள் முன் பணிகிறேன்' என்பதே அதற்கு அர்த்தம்.

    ஆக, ஹிந்துவின் குசு மணக்கும். அதே சமயம் முஸ்லிமின் குசு மட்டும் நாறும். இதுதான் கமல் ஹேராமில் முன்வைக்கும் வாதம்.

    ஒரு விஷயத்தை திரையில் அப்படியே காட்டிவிட முடியாது. ஜஸ்டிபிகேஷன் என்பது அவசியம் தேவை என்பது கமலுக்கும் தெரியும். ஆனால், அவர் வைக்கும் ஜஸ்டிபிகேஷன் எப்போதுமே முஸ்லிம்களுக்கு எதிராக அல்லவா இருக்கிறது? நண்பனாக ஒரு முஸ்லிமைக் காட்டுவதன் மூலம் இதனை நீர்த்துப்போக வைத்துவிட முடியாது என்றுதான் நான் சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே..தங்கள் வாதம் என்னை ஊக்கப்படுத்துகிறது.
      எனது பொறுப்பை அதிகப்படுத்துகிறது.

      நான் பிளாக் எழுத ஆரம்பிக்கும்போது...
      எனக்கு பிடித்த பத்து தமிழ் படத்தில் ஹேராமை நான் சேர்க்கவேயில்லை.
      இப்போது பார்க்கும் போதுதான் அதன் அகலம் தெரிகிறது.

      //ஒரு விஷயத்தை திரையில் அப்படியே காட்டிவிட முடியாது. ஜஸ்டிபிகேஷன் என்பது அவசியம் தேவை என்பது கமலுக்கும் தெரியும். ஆனால், அவர் வைக்கும் ஜஸ்டிபிகேஷன் எப்போதுமே முஸ்லிம்களுக்கு எதிராக அல்லவா இருக்கிறது? நண்பனாக ஒரு முஸ்லிமைக் காட்டுவதன் மூலம் இதனை நீர்த்துப்போக வைத்துவிட முடியாது என்றுதான் நான் சொல்கிறேன்.//

      இந்த வாதத்துக்கு பதிலளிக்க வாய்தா வேண்டும்.
      இனி வருகின்ற இரண்டாவது பதிவில் பதிலளிக்கிறேன்.

      Delete
  5. மஹாதேவக்கு என்ன.. வந்தா மலை..போனா மயிறு:-)

    ReplyDelete
    Replies
    1. மணி ஜீ...இங்க போட்ட போடு அவன் ஜென்மத்துக்கும் போதும்.

      Delete
  6. போன பதிவு வாசிக்கும் போதே அடுத்த பதிவு இதை விட தூக்கலாக எப்படி இருக்க முடியும்னு யோசித்திருந்தேன்..
    அமர்க்களப் படுத்தி விட்டீர்கள்!
    நான் வாசித்ததிலேயே சுவாரசியமான தொடர்களில் இது முக்கியமானதொன்றாக இருக்கப்போகிறதாக தோணுது..
    விவாதங்கள் தொடரட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே!
      இப்பதிவை சூடும்...சுவையுமாக நகர்த்தப்போவது நானில்லை.
      கருந்தேள்...கணேசன் என இன்னும் நண்பர்கள் வருவார்கள்.
      அவர்கள் எத்தனை பவுண்சர்கள் போட்டாலும்...கமல் என்ற பேட்டால் சிக்ஸராக்கி விடுவேன்.
      ஹேராம் என்ற விக்கட் விழவே விழாது.

      Delete
  7. நண்பரே! கருந்தேள் ஏற்கனவே ஹே ராமில் இருந்த முஸ்லிம் வெறுப்பை சுட்டிக் காட்டி விட்டதால் அவர் வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நான் உன்னைப் போல் ஒருவன் படத்திலுள்ள சில முஸ்லிம் விரோத விஷயங்களை முன்வைக்க ஆசைப்படுகிறேன்......
    ஏ வேட்னேஸ் டே படத்தில் வரும் ஒரு காட்சியையும் உன்னைப் போல் ஒருவன் படத்தில் வரும் அதே காட்சியையும் ஒப்பிடுவோம். போலிஸ் கமிஷனர், நஸ்ருதீன் ஷாவிடம் நீ ஏன் அவர்களைக் கொன்றாய்? உனக்கும் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் என்ன பகை? என்று கேட்கிறார். அதற்கு ஷா சொல்லும் பதில், " நான் தினமும் மின்சார ரயிலில்தான் வேலைக்கு செல்வேன். தினமும் அதே ரயிலில் என்னோடு ஒரு இளைஞனும் பயணம் செய்வான். நாங்கள் இருவரும் தினமும் புன்னகை செய்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம். ஒரு வார்த்தை கூட பேசிக் கொண்டதில்லை. மின்சார ரயிலில் குண்டு வெடிப்பதற்கு முதல் நாள் அவன் தன விரல்களில் இருந்த மோதிரத்தைக் காட்டி தனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது என்று சைகையிலேயே சொன்னான். நான் மகிழ்ச்சியோடு தலையாட்டினேன். அதற்கு மறுநாள் நான் வழக்கமாய் செல்லும் ரயிலை தவறவிட்டுவிட்டேன். அன்றுதான் குண்டு வெடித்தது. அந்த இளைஞனும் குண்டுவெடிப்பில் இறந்து விட்டான். இதையே நீங்கள் என் தனிப்பட்ட விரோதமாக எடுத்துக் கொள்ளலாம்" என்று சொல்வார். இதே காட்சி தமிழில் எப்படி இருக்கும் தெரியுமா? கமல் அந்த கேள்விக்கு சொல்லும் பதிலை என்னால் தட்டச்சு செய்யக் கூட கடினமாக இருக்கிறது.அதாவது," குஜராத்தில் கலவரம் செய்து கர்ப்பினித்தாயின் பிறப்பு உறுப்பினுள் கைநுழைத்து குழந்தையைக் கொன்ற அவர்களுக்கு இந்த தண்டனை அவசியம்தான்" என்கிற ரீதியில் ஒரு பதில் சொல்வார். நான் முழுதாக அந்த வசனத்தை கேட்காமால் என் காதுகளை பொத்திக் கொண்டதால் என்னால் அதை சரிவர எழுத முடியவில்லை. . அதற்கு பதிலாக இந்த வசனங்கள்தான் கிடைத்ததா? இதை யும் நீங்கள் சொல்லப் போகும் பதிலில் சேர்த்துக் கொள்ளுங்கள் நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. கணேசன்...இந்த பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.
      மற்ற படங்களை விவாதிக்க வேண்டாம்.
      ஹேராமில்... கமல் இஸ்லாமியருக்கு எதிராக இயங்கினார்... என்பதற்க்கு தெளிவான எடுத்துக்காட்டுகள் தருக...

      இஸ்லாமியருக்கு ஆதரவாக ஒரு கணேசனும்,ராஜேசும்
      களம் இறங்கியிருக்கிறீர்கள்.
      ஹேராமில்... கமல் வசனத்தில்...
      சொல்வதென்றால் நீங்கள் எல்லாம் மகாத்மாக்கள்.

      Delete
    2. நான் சொல்ல வந்தது என்னவென்றால், இது ஒரு தொடர்கதை என்பதுதான். தசாவதாரமும் இதற்கு விதிவிலக்கல்ல. என் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது போல இது ராஜேஷின் கருத்துகளுக்கு வலு சேர்க்கவே! மற்றபடி உங்கள் பதில் வந்த பின் நான் ஹே ராமில் கமலின் கொலைவெறியைப் பற்றி குறிப்பிடுகிறேன்.....நன்றி..

      Delete
    3. அடுத்தப்பதிவு வரை காத்திருங்கள்...நண்பரே!

      Delete
  8. andha post link kidaikuma

    ReplyDelete
    Replies
    1. http://www.tamilpaper.net/?tag=%E0%AE%B9%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

      அந்த போஸ்டின் யூஆரெல் இதுதான்.
      சென்று பாருங்கள்...மிஸ்டர்...அனானி.

      Delete
  9. மகாதேவன் நிஜமாகவே கடுப்படித்து விட்டார். அவர் எழுதுவது சினிமா விமர்சனமோ சினிமாவை பற்றிய அலசல் கட்டுரையாக இல்லை. தான் சினிமா எடுக்க துஊண்டும் ஆசைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்.
    - ஜெகன், கோவை

    ReplyDelete
  10. தமிழ் சினிமா... மகாதேவன் வரவில்லையென்று ஒப்பாரி வைத்து கொண்டிருக்கிறது.

    வருகைக்கு நன்றி ஜெகன்..

    ReplyDelete
  11. மே ஐ கமின்? எனக்கென்னவோ வீணாப்போன, மட்டமான மஹாதேவன பத்தி பேசி அவன பெரிய ஆளா ஆக்க வேணாம்னு தோணுது. ஜஸ்ட் இக்னோர் ஹிம். ராக்கெட் விட்டவன பத்தி பேசி அந்த விஞ்சானி-ய தெரிஞ்சுகிட்டா எல்லோருக்கும் யூஸ் இருக்கு. நாத்தம் புடிச்ச கு.... விட்டவன பத்தி நாம ஏன் பேசணும்? அவன நெனச்சாலே டென்ஷன் ஆகுது..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.