'சத்தியம் வெல்ல நிறைய முதலுதவி தேவை' என எழுதி ...
கமல் கையெழுத்து போட்டு கொடுத்த ஹேராம் திரைக்கதை புத்தகம் என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது.
அதிலிருந்து காப்பியடித்து...வசதிக்கேற்ப்ப தருகிறேன்.
முற்றிலும் புதிய பாணியில் வார்த்தைகளை கோர்த்து அசர வைப்பதில் வித்தகன் கமல்.
ஹேராம் திரைக்கதையை... புத்தக வ்டிவில் பட வெளியீட்டீன் போதே வெளியிட்டார்.
அதன் முன்னுரையில் கொஞ்சம் உங்களுக்கு தருகிறேன்.
“திரைக்கதையை முழுமையாக எழுதி,பின் சினிமா எடுப்பது,
என்ற ஆரம்ப பாதுகாப்புக்கூட இல்லாமல்... முதலை குளத்தில் குதிக்கும்... குளந்தெரியாத,ஊருக்கு புதியவன் போல்தான்... இன்றைய வர்த்தக சினிமா இயங்குகிறது.
இந்தச்சுகாதாரமற்ற பாதையை... தற்காலிக வெற்றிகள்... பெற்ற சிலர் ஸ்தாபித்து விடுவோர்களோ... என்ற பயம்... எனக்கு உள்ளது.
உனக்கென்ன இத்தனை கவலை?கரிசனை? எனக்கேட்டால்...
நான் சினிமாவின் குழந்தை.
என் சினிமாவிற்க்கு... ஏதாவது ஆனால்,நான் அனாதை.
மூன்று வயதில் யதேச்சையாக வந்து சேர்ந்த... இந்த ஒரு தொழிலே..
பின்... என் உலகமாகும் என்று... அன்றே தெரிந்திருந்தால் இன்னும் கற்றிருப்பேன்”.
இந்த அடக்கம்....உழைப்பு....கற்றால் நீங்களும்... கமலே.
சாகேத்ராம் முகம்... மார்பிங்கில் மண்டையோடாக மாறி...
கடந்தகாலத்தில் பிரவேசிக்கிறது படம்.
இங்கே... கடந்த காலத்தை வண்ணத்தில் காண்பிக்கிறார்.
ஏன்?எதற்கு?எப்படி?
மூன்றுக்கும் விடை.... இந்தப்பதிவில்...
நிகழ்காலத்தை கலர்லெஸ்ஸாக்கி ...கடந்தகாலத்தை...கலர் புல்லாக்கி...
5000 வருடத்திற்க்கு முன்பே...கலை,கலாச்சாரம்,வாழ்வியல் அனைத்திலும் மேம்பட்டு இருந்தோம் என்பதை நமது ஆழ் மனதிற்க்குள் ஏத்துகிறார்.
குறிப்பாக...ஆம்பர்டோன் வண்ணத்தில்... காட்சிகளை அமைத்திருப்பதால்... கடந்த காலத்துக்குள் பார்வையாளன் சுலபமாக பயணிக்க முடிகிறது.
ஆம்பர்டோன் கலரையே... சற்று தூக்கலாக...வார்ம் டோனில் இருப்பது... வன்முறை காட்சிகளுக்கு... பார்வையாளரை தயார்படுத்தும் உத்தி.
வன்முறை தூக்கலாக இருக்கும்... வெஸ்டர்ண் கிளாசிக் திரைப்படங்களில்[குட், பேட் &அக்ளி] இந்த கலர் டோனை பார்க்கலாம்.
வீலர்: சாகேத்....சாகேத்....மிஸ்டர் சாகேத்!
ராம்: யெஸ் மிஸ்டர் வீலர்?
வீலர்: வீ ஹாவ் பீன் ஆர்டர் ட்டூ லீவ் திஸ் சைட்
ராம்: அண்ட் வொய் மே ஆஸ்க் சர்.
வீலர்: ஹிண்டு,முஸ்லீம் ரயட்ஸ் சர்.நீட் ஐ சே மோர்.
ராம்: வாட் இஸ் இட்,திஸ் டைம் சர்.
வீலர்: வீ ...டோண்ட் நோ த டீட்டெய்ல்...பட், ப்ராட்லி பாகிஸ்தான்
ராம்: ஓ! ஆல் ரைட் மிஸ்டர் வீலர்.
[அம்ஜத்தை நெருங்கி]
டேய்,அம்ஜத்-போறும் விடு.வீ ஹேவ் டூ லீவ்.
அம்ஜத்: ஏன்?
ராம்: ‘கம்யூனல் ரயட்ஸ்’பெரிசா வரும்னு எதிர்பார்க்கிறாளாம்.
வீ ஹேவ் டூ கோ டூ கராச்சி.
அம்ஜத்: நோ...நோ..நோ வே...
நோ ரயட்ஸ் ஈஸ் கோயிங் டூ மேக் மீ லீவ் மை கிரேவ்.
இந்தக்காட்சியில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் உரையாடுகின்றன.
சாகேத்ராம்,அம்ஜத்,வீலர்...
மூவரும் வேறு கலாச்சாரப்பின்னணி உடையவர்கள்.
மூவரில் வீலர்தான் அதிகார வர்க்கம்.
வீலரோடு உரையாடும் சாகேத்ராமின் சொல்லாடல்,உடல் மொழி
ஷூ நக்கிகளை பிரதிபடுத்தும்.
இதற்க்காகவே கமல்... தனக்கு வசதியாக சாகேத்ராமை... அய்யங்காராக்கி விட்டார்.
அம்ஜத்தை ஏன்?எதற்க்கு?எப்படி எனக்கேள்வி கேட்கும் சித்தாந்தவாதியாக்கி விட்டார்.
’வாட் ஈஸ் இட்... திஸ் டைம்... சர்?’...என்ற கேள்வியின் மூலமாக
இந்து-முஸ்லீம் பிரச்சனை தொடர்ந்து காலகாலமாக இயங்கி வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறார்.
சமூக அக்கறை உள்ள படைப்பாளிகளின் படைப்பில் இக்கேள்விகள்...
தார்மீக கவலையுடன் வெளிப்படும்.
மொகஞ்சோதராவின் 5000 வருடப்பராம்பரியத்தை வசனத்திலும் ஏற்றி
டபுள் இம்பாக்ட் கொடுக்கிறார்.
அம்ஜத்: கிரைஸ்ட் பொறக்குறதுக்கு பல 1000 வருஷம் முன்னாலே...
'சீவேஜ் சிஸ்டம்' வேணும்னு நெனச்ச ‘சிவிலைசேஷன்’.
கொழந்தைக்கு வெளையாட பொம்மை வேணும்னு நெனச்ச சிவிலைசேஷன்.
நம்மள மாதிரி பெரியவங்க வெளயாட ஆளுக்கொரு சாமி வேணும்னு நெனக்கிற சிவிலைசேஷன் இல்லே...
சீவேஜ் சிஸ்டம்...கட்டுமானப்பணியில் நம் முப்பாட்டன் அட்வான்சாக இருந்ததை சொல்கிறது.
குழந்தைகளுக்கு விளையாட பொம்மை கொடுத்ததில் என்ன சிறப்பு?
குழந்தைகள் என்றால் வருங்காலம்.
அவர்களை சிறப்பாக எப்படி உருவாக்குவது?... என சைக்காலாஜி முறைப்படி அவர்களை அணுகியிருக்கிறான் நம் முப்பாட்டன்.
அன்று...புற வாழ்க்கை நாகரீகம் ,அக வாழ்க்கை நாகரீகம் இரண்டிலுமே நமது முன்னோர்கள் சிறந்திருந்தார்கள்.
இன்று...?
அதைத்தான் கலர் லெஸ்ஸாக்கி காண்பித்து விட்டாரே!
**********************************************************************************
நேயர்களே!
இந்த ஹேராம் தொடரை காட்சிக்கு காட்சி அதன் சிறப்பம்சங்களை...குறைந்தது எழுபது பதிவுகளில்... விளக்கவா?
கோடார்டு மாதிரி... ஜம்ப்கட் பார்முலாவில் இத்தொடரை இரண்டே பதிவுகளில் முடிக்கவா?
முதலாவதை தேர்ந்தெடுத்தால் என் அறிவுக்கு நல்லது..
திரைக்கலை நுட்பங்கள் பற்றிய நூல்களை படிப்பது...
[எல்லாமே பைபிள் சைசில் ஒல்லியாக இருக்கிறது]
டிஸ்கஸ் செய்வது என தேடல் அதிகரிக்கிறது.
இரண்டாவதை நீங்கள் தேர்ந்தெடுத்தால் எனது ஆரோக்கியத்துக்கு நல்லது....தூங்க முடியவில்லை.
இதே ரீதியில் போனால் குணாவாகி விடுவேன்.
உங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன்.
**********************************************************************************
உங்கள் அறிவையும் அதிகரித்துக்கொண்டு, எங்கள் அறிவையும் வளர்க்கவும்.
ReplyDeleteதொடர்களை படிக்க மாட்டேன்.
Deleteஅது புத்தகமாக வெளி வந்ததும்
வாங்கி படித்து விடுவேன்.
என்னை தொடர் எழுதப்பணிக்கிறீர்கள்.
வரமாக ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றி நண்பரே!
தயவு செஞ்சி விளக்குங்க நண்பா.. இது போன்ற அறிவுபூர்வமான தகவல்களை கேட்பதும், படிப்பதும் ஒருவித ஆனந்தம். அதுவும் சினிமா குறித்த தகவல்கள் என்பதால் இன்னும் சந்தோஷம்.. ப்ளீஸ் தயதுசெய்து தொடருங்கள்..
ReplyDeleteநிறுத்துடா...என்றுதான் பின்னூட்டங்கள் வரும் எனக்காத்திருந்தேன்.
Deleteமங்களம் பாட ரெடியாக இருந்தேன்.
ஆனால் பின்னூட்டங்கள் என்னை ஏமாற்றினாலும்....ஒரு விதத்தில் களிப்பூட்டுகிறது.
எழுபதையும் எழுத பதினேழு வயது ஆற்றலை தருகிறது உங்கள் பின்னூட்டம்.
நன்றி...நாவிலிருந்து வந்தது அல்ல...ஆன்மாவிலிருந்து வந்தது.
ஹேராம் படம் மறுபடி முழுசாக பார்த்தேன்.. நன்றி நண்பா!
ReplyDeleteபடம் பிடித்திருந்தது.. முன்னரை விட சிறிதளவு அதிகமாகவும் விளங்கிக்கொள்ள முடிகிறது.
உங்கள் ஆரோக்கியம் கருதி குறைந்தளவு பதிவுகளில் முடிப்பதே நன்று.. (70 பதிவு போட்டாலும் வாசிக்க நாங்க ரெடி! ஹி..ஹி..)
ஆனால் எனக்காக சாகேத்ராம்-அம்ஜத்துக்கிடையான ரெண்டாவது பாதியில் வரும் உரையாடலையும் (படத்துல என்னை மிகவும் கவர்ந்த சீன் இது!..), க்ளைமேக்ஸையும், கமல்- வசுந்தராதாஸ் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள புரிந்துணர்வையும் அலச வேண்டுகிறேன்!..
படம் பார்த்து விட்டீர்களா!
Deleteஅப்பாடா...எனக்கு கிடைத்த மிகப்பெரிய காம்ப்ளிமெண்ட்.
என் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டியதில் மிக நெருக்கமான நண்பனாகி விட்டாய்.
இனி உனக்கு நன்றி சொல்ல மாட்டேன்.
எழுபதையும் எழுதுவதே நன்றி.
mudhalavadhu vazhiyai thervu seidhu engal arivu pasiayum cinema pasiyaum pokkungal.ungal arokkiyathirkaga naan andavanai vendi kolgiraen
ReplyDeleteஎனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறீர்களே!
Deleteநீங்கள்தான் கடவுளுக்கு பிரியமானவர்.
பிரியமானவரின்... பிரார்த்தனைக்குத்தான் கடவுள் முன்னுரிமை கொடுப்பார்.
கடவுளுக்கு பிரியமானவரின்... பிரியத்தை நிறைவேற்றுவது எனது கடமையல்லவா.
anyone please give some working links for heyram download.
ReplyDeleteநண்பர்கள்...ஹேராம் டவுண்லோட் லிங்க் தந்து உதவுமாறு நானும் கேட்டுக்கொள்கிறேன்.
Deleteடவுண்லோடு வித்தகர்கள்...உதவவும்
Deleteஅறிவும் முக்கியம் ஆரோக்கியமும் முக்கியம்...
ReplyDeleteபல நல்ல படங்களை தேடி எழுதுங்கள்
எழுத்துக்கும் வாசிப்பிற்கும் ஓய்வா இருக்கிறது?
தங்கள் ஆலோசனை புத்துணர்ச்சியளிக்கிறது.நன்றி.
Deleteplease follow the first route i am ready to read even it crosses 100 episodes ,and also i recommend if needed you can publish this as a separate THIRAN AIYU book ,please do
ReplyDeletesir
Vijai
dear sir please follow the first route ,i am ready to follow even it crosses 100 episodes and also you can publish it as a seperate book as THIRAN AIYU ,pls do
ReplyDeleteThankYou
Vijai
விஜய்...உங்கள் அன்பும் ஆதரவும் என்னை எழுத வைக்கிறது...
Deleteதொடர்ந்து எரிபொருள் தாருங்கள்.
எனது எழுத்தை பிரசுரிக்க வெளிநாட்டு...உள்நாட்டு பதிப்பகங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நச்சரிக்கின்றன...பார்க்கலாம்.
[பில் கட்டாம டெலிபோன் கட்டானது...விஜய்க்கு தெரியவா...போவுது]
" ஹே ராம் " திரைப்படத்தின் திரைக்கதை - புத்தக வடிவின் - பதிப்பகம் (எங்கு கிடைக்கும்) போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?
ReplyDeleteவெகு நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன்.
பாமா பதிப்பகம்,
ReplyDelete5 சிவஞானம் சாலை,
தி.நகர்,
சென்னை-17
நண்பரே...எனது பதிப்பக நண்பர்கள் மூலமாக மேற்க்கொண்டு விபரம் சேகரித்து வருகிறேன்.
எனது அலை பேசி எண்:90039 17667
தொடர்பு கொள்ளுங்கள்.
புத்தகம் கிடைக்கவில்லையென்றால் ஜெராக்ஸ் எடுத்து தருகிறேன்.
இப்பணியை பாக்கியமாக கருதுவேன்.
எனது பதிப்பக நண்பர்கள் பாமா பதிப்பகத்தை தேடினார்கள்.
Deleteபாமா பதிப்பகம் நஷ்டத்தில் மூடப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.
என்னிடமும்...கமலின் நண்பர் கொடுத்த ஜெராக்ஸ் காப்பிதான் உள்ளது.
நிறைய எழுதவும் நிறைய வருடம் ஆரோக்கியமாக வாழவும் வேண்டுகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி ஜனா...
Deleteஆரோக்கியம் மனித வாழ்வுக்கு அவசியம் அண்ணா..நீங்க நலமா இருந்தீங்கனா எத்தனையோ பதிவுகள் எழுதலாம்..நீங்க எவ்வளவு எழுதுனாலும் இங்க ஒருத்தன் இருக்கேன்..எங்க இருந்தாலும் ஓடி வந்து படிச்சுருவேன்...டைம் எடுத்தாலும் பரவாயில்லை..உடம்பை கவனித்துக்கொண்டு தொடருங்க.பகிர்வுகளுக்கு எனது மனமார்ந்த நன்றி.
ReplyDeleteகுமரன் என்ற தம்பியுடையதால்... எந்த படைக்கும் அஞ்சாத சிங்கமாகி விட்டேனடா...
Deleteஹேராமுக்கு நூறு பதிவுகள் கூட ஈசியாகப்போட்டு விடுவேன்.
நீங்கள் போடும் பின்னுட்டங்கள்தான் அசல் காயகல்பம்.
ungalai yappadi koopidrathunu theriala yappadium ungaluku en appa vayasu irukumnu ninaikiran... unga bloga na konja naaladan padikiran neega eluthura ella visayamum en manathuku miga niraiva iruku... director agnumnu en kanava tholachatu engineering padichutu oru satharanamana allu nan ungalai pondravargalidam dan niraya kathuka mudium athanal thayavu senju heyram padatha pathi ungaluku enna enna theriumo athanuim post pannuga appudia unga udal arokiathium paarthukonga....
ReplyDeleteதம்பி....நான் 52 வயது மாணவன்தான்
ReplyDeleteஎனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.
நான் தொடரில் குறிப்பிடும் இணைய தொடர்புகள், புத்தகங்கள்,திரைப்படங்கள்
ஆகியவற்றை தொடர்ந்து...உங்கள் தேடலை விரிவாக்குங்கள்.
நம்மை ஒன்று சேர்த்த சினிமா ஜாதிக்கு நன்றி.
sir, please go with option 1.But take care of your health too......suvarillamal sithiram illae. let Annai velankanni be with you
ReplyDeleteMurugan
bangalore
sir, please go with option 1.but take care of your health too......suvarillamal sithiram illai.Let annai velankanni be with you.....
ReplyDeleteMurugan
Bangalore
முதலும் வேண்டாம் இரண்டும் வேண்டாம் மூன்றாவதாக சுருக்கமும் இல்லாமல் விரிவும் இல்லாமல் ஒரு ஆராய்ச்சி கட்டுரை போல இன்னும் நிறைய செய்திகளை தொகுக்கவும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருக...வருக...கோவை கவிதாயினியே!
ReplyDeleteதங்கள் ஆலோசனையை கருத்தில் கொள்கிறேன்.
உங்களை அறிமுகப்படுத்திய... நமது கோவை பதிவர் குழுமத்துக்கும் நன்றி.
விரிவாகவே எழுதுங்கள் . உங்கள் உடல் நலத்தையும் கவனித்து கொள்ளுங்கள். சினிமா குறித்து அதை நன்கு புரிந்தவர் எழுதி படிக்க நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம். மீண்டும் ஒருமுறை ஹே ராம், தனிமையில் அமைதியா பார்க்க தோன்றுகிறது.
ReplyDelete- ஜெகன், கோவை
எத்தனை முறை ஹேராமை பார்த்தாலும்...அதிலிருந்து புதிய செய்தி கிடைத்து கொண்டே இருக்கும்.
ReplyDeleteதங்கள் கனிவுக்கு நன்றி ஜெகன்.