மே 20ம் தேதி ஒரு சிறு அறுவை சிகிச்சை.கழுத்தில் ஒரு கட்டியை டென்னிஸ் பால் சைசுக்கு செல்லமாக வளர்த்து வந்தேன்.என்னை மயக்கமடைய வைத்து எனக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக எடுத்து விட்டார் டாக்டர்.இப்போது பயாப்ஸி ரிப்போர்ட்டும் வந்து விட்டது.
எல்லாம் நார்மல்.
வீட்டுக்கு வந்ததும் என் மனைவி ஒரே ஒரு கண்டிசன் போட்டாள்.
“கம்ப்யூட்டர் பக்கம் போகக்கூடாது”
‘எப்போ போலாம்?’
‘10 நாள் அது கிட்டேயே போககூடாது’
‘சரி..தாயே...’
இந்த விடுமுறையில் தினமும் இரண்டு படம் பார்த்தேன்.
கொஞ்சம் தெம்பு வந்ததும் நண்பர்கள் வலைப்பக்கங்களை மேய்ந்து கமெண்ட் போட்டேன்.
இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக தேறி பார்த்து ரசித்த படங்களை பதிவிடுகிறேன்.
ஆப்பரேசன் தியேட்டருக்கு என்னை ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லும் போது ஒரு கேள்வி பிறந்தது.
அல்பசினோவை ஒரு படத்தில் முதல் காட்சியிலேயே ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்வார்கள். [பிரையன் டி பால்மா இயக்கத்தில் வந்தது]
அது என்ன படம்?
தெரிந்தால் சொல்லுங்கள்!
எல்லாம் நார்மல்.
வீட்டுக்கு வந்ததும் என் மனைவி ஒரே ஒரு கண்டிசன் போட்டாள்.
“கம்ப்யூட்டர் பக்கம் போகக்கூடாது”
‘எப்போ போலாம்?’
‘10 நாள் அது கிட்டேயே போககூடாது’
‘சரி..தாயே...’
இந்த விடுமுறையில் தினமும் இரண்டு படம் பார்த்தேன்.
கொஞ்சம் தெம்பு வந்ததும் நண்பர்கள் வலைப்பக்கங்களை மேய்ந்து கமெண்ட் போட்டேன்.
இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக தேறி பார்த்து ரசித்த படங்களை பதிவிடுகிறேன்.
ஆப்பரேசன் தியேட்டருக்கு என்னை ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லும் போது ஒரு கேள்வி பிறந்தது.
அல்பசினோவை ஒரு படத்தில் முதல் காட்சியிலேயே ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்வார்கள். [பிரையன் டி பால்மா இயக்கத்தில் வந்தது]
அது என்ன படம்?
தெரிந்தால் சொல்லுங்கள்!
Serpico
ReplyDeleteஎன்ன இது இதுமாதிரி சின்ன கேள்வியெல்லாம் கேட்டுட்டு....
// டாக்டர்.இப்போது பயாப்ஸி ரிப்போர்ட்டும் வந்து விட்டது //
ReplyDeleteஇத கேக்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு...சீக்கிரம் எழுத வாங்க.....பாசக்கார நண்பர்கள் என்ற படத்திலிருந்து உங்கள் விமர்சங்களை தொடங்குங்கள்...
செர்பிகோ படம் இல்லை கொழந்த..இந்தப்படம் வேறு.
ReplyDeleteபாசமலர் என்ற படத்திலிருந்து துவங்க இருக்கிறேன்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
இது Carlito's way மாதிரி இருக்குதே :-) . . சீக்கிரம் தேறி வர வாழ்த்துகள்.
ReplyDeleteCarlitos way
ReplyDeleteSerpicoவும் இது மாதிரி இருந்ததுனால கன்ஃபூஸ்..
Brain de palma கவனிக்கல...
தலைவரே வணக்கம்
ReplyDeleteகழுத்தில் எவ்வளவு பெரிய கட்டியுடனும் கூட நீங்கள் உலகசினிமாக்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வந்த பாங்கு அருமை,உங்கள் சேவை மேலும் சிறக்கட்டும்.
அல்பாச்சினோவின் அந்தப்படம் கார்லிட்டோஸ் வே[Carlito's Way]அதில் தானே முதல் காட்சியிலேயே ஸ்ட்ரெட்சரில் ஏற்றப்படுவார்.இதே இயக்குனர் தான் ஸ்கார்ஃபேஸும் எடுத்தார்.
ஸ்ட்ரெச்சரில் ஏறிப்படுத்ததும் இந்த ஷாட்தான் ஞாபகத்துக்கு வந்தது.படம் பெயர் மறந்தது மூளையின் விசித்திர விளையாட்டு.பெரும்பாலும் எனக்கு படம் பெயர் மறக்காது.ஆபரேசன் தியேட்டருக்குள் நுழைந்ததும் முதன் முதலில் பயம் அடிவயிற்றில் திரள்வதை உணர்ந்தேன்.அதிலிருந்து தப்பிக்க மீண்டும் “அது என்ன படம்?” என்று யோசிக்க ஆரம்பித்தேன்.அதற்க்கு சரியான விடையை நண்பர்கள் சொல்லி விட்டீர்கள்.
ReplyDeleteநன்றி கொழந்த,ராஜேஷ்,கீதப்பிரியன்
நண்பர் கீதப்பிரியன் ஏதாவது எழுதியிருப்பார் என தினமும் எதிர்பார்த்து ஏமாந்தேன்.வேலைப்பளு அதிகமா நண்பரே?
ReplyDelete//Brain de palma கவனிக்கல... //
ReplyDeleteஅவரு எப்புடிங்க கவனிப்பாரு? கொஞ்சம் பிஸியா இருந்துட்டாரு போல. . அவரை மன்னிச்சிருங்க
Get well and Get ready soon !!! :-) !!!
ReplyDeleteதலைவரே
ReplyDeleteஇரண்டு சினிமா பற்றி எழுதினேனே?
ஃப்லாஷ்பேக்ஸ் ஆஃப் த ஃபூல்
த மெசெஞ்சர்
அதன் பின்னர் எழுத நிறைய படங்கள் உண்டு, ஆனால் வீட்டில் இணைய இணைப்பு சதிசெய்கிறது
குழந்தையை கலாய்க்கிறதுல தேளுக்கு அலாதி சுகம்.
ReplyDeleteநன்றி நண்பர் ப்ரவீண்
ReplyDeleteஎன் டாஷ்போர்டில் நீங்கள் எழுதியது அப்டேட் ஆகவில்லை.இப்பவே உங்கள் பிளாக்கிற்க்கு வருகிறேன் கீதப்பிரியன்.
ReplyDelete//ஆப்பரேசன் தியேட்டருக்கு என்னை ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லும் போது ஒரு கேள்வி பிறந்தது.
ReplyDeleteஅல்பசினோவை ஒரு படத்தில் முதல் காட்சியிலேயே ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்வார்கள். [பிரையன் டி பால்மா இயக்கத்தில் வந்தது]
அது என்ன படம்?
தெரிந்தால் சொல்லுங்கள்//
அங்கே செல்லும் போது கூடவா ? BTW இப்போ நலம் தானே,உங்கள் தளத்திற்கு முதல் முறையாக வருகின்றேன்.
//குழந்தையை கலாய்க்கிறதுல தேளுக்கு அலாதி சுகம்//
ReplyDeleteகுழந்தையவாவது கலாய்க்கராதவது அவரு ரொம்ப பெரிய ஆளு,அவரு நம்மள கலாய்க்காம இருந்தா சேரி
வருகைக்கு நன்றி மோகன்.தொடர்ந்து வருகை தாருங்கள்.ஒரு வாரத்தில் 100%ரெடியாகி விடுவேன்.
ReplyDeleteகலாய்ப்பதில் குழந்தைக்குதான் பி.ஹெச்.டி .ஒத்து கொள்கிறேன்.