Jun 16, 2011

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க...மயிறானுங்க....

படமா எடுக்கிறானுங்க...மயிறானுங்க.... எனக்காறித்துப்பியபடி தியேட்டரிலிருந்து வெளியே வரும் சாபம் எனக்கு இடப்பட்டிருந்தது.
அந்த சாபத்தை நிவர்த்தியாக்கி என்னை நிறைந்த மனசோடு தியேட்டரில் இருந்து வெளியே அனுப்பிய இயக்குனருக்கு நன்றி.

விளிம்பு நிலை மக்களின் வாழ்வை இத்தனை யதார்த்த்தோடு படைத்த
குமார ராஜா...
இத்தனை நாள் எங்கிருந்தாய்?
நல்லா இருய்யா....

இனி தமிழ்சினிமா இந்தப்பாதையில் பயணிப்பது நல்லது.ஆனால் இந்தப்படத்தை வெற்றி படமாக்கினால்தான் இது சாத்தியமாகும்.
தியேட்டரில் நிறைந்திருக்கும் காலி இருக்கைகள் நம்பிக்கை இழக்க வைக்கிறது.
இந்தப்படத்தை தியேட்டரில் பார்க்கச்சொல்லி எஸ்.எம்.எஸ் அனுப்பப்போகிறேன்.
என்னிடம் இருக்கும் பணத்தில் இப்படத்தை பார்க்கச்சொல்லி தினத்தந்தி பேப்பரில் விளம்பரமே கொடுப்பேன்.தேதி 15 கடந்தும் வாடகை கிடைக்காத
ஹவுஸ் ஓணர் துப்பாக்கியோடு வந்து விடுவார்.

இந்தப்படம் பார்க்கும் முன்னர் எந்த ஒரு விமர்சனத்தையும் படிக்காமல் போவது நல்லது.

இந்தப்படத்தை பாராட்ட அகிரா குரோசுவா வார்த்தையை கடன் வாங்கி சொல்கிறேன்...
காலை சூரிய உதயத்தை பார்க்காமலிருப்பது எவ்வளவு குற்றமோ அவ்வளவு குற்றம் ஆரண்யகாண்டம் பார்க்காமலிருப்பது.

இனி எவனாவது.... “ நான் தமிழ்படம் பார்ப்பதில்லை....
ஒண்லி வேர்ல்டு சினிமாதான் பார்ப்பேன்...
மெலினால்லாம் என்னா படங்க....”
 என ஜல்லியடிப்பவனிடம்
ஒங்கி ஒரு அப்பு விட்டு...., நாயே...ஆரண்யகாண்டம் பார் என ஒங்கிச்சொல்லுங்கள்.
இங்கே எனக்கு கேக்க வேண்டும்.

35 comments:

  1. வெரிகுட். உங்களுக்குப் படம் பிடிக்கலேன்னாத்தான் ஆச்சரியம்னு தெரியும். இருந்தாலும் பதிவு தலைப்பைப் பார்த்துபுட்டு, என்னாடா தலிவரு எதுனா வெவகாரமா எழுதி கிளுதிப்புட்டாரோன்னு சந்தேகப்பட்டு வந்தேன் :-) . . அப்புறந்தான் புரிஞ்சது :-) . . இந்த மாதிரி வருசத்துக்கு ஒரு படம் போதும். கட்டாயம் தமிழ் சினிமா உருப்படும். படத்தை, இப்ப இருக்குற எல்லா இயக்குனர்களும் பார்த்து வயிறு எரியப்போறது நிச்சயம் :-)

    ReplyDelete
  2. தமிழ் படங்கள அபூர்வமாகத்தான் தியேட்டரில் பார்ப்பது வழக்கம்.. ஏன்னா நிதிகள நஷ்டப்படுத்தனும் என்பதற்காகவே டிவிடில பாப்பது..ஆனா இது போன்ற படங்கள தியேட்டரில் மட்டுமே பாப்பது என்று கொள்கை வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. கருந்தேள், நீங்கள் இன்னும் பலர் இந்தப் படத்தைப் பாராட்டும் போது நல்ல படம் வந்திருக்கிறதே என்று சந்தொஷமாக இருக்கறது.

    நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் என் சந்தேகம் இது எந்த உலக சினிமாவின் காப்பியும் இல்லையே. ஏனென்றால் இப்படித்தான் முன்னால் நந்தலாலா விஷயத்தில் நடந்தது. இதை யாராவது உறுதிப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  4. @கருந்தேள்
    //வெரிகுட். உங்களுக்குப் படம் பிடிக்கலேன்னாத்தான் ஆச்சரியம்னு தெரியும். இருந்தாலும் பதிவு தலைப்பைப் பார்த்துபுட்டு, என்னாடா தலிவரு எதுனா வெவகாரமா எழுதி கிளுதிப்புட்டாரோன்னு சந்தேகப்பட்டு வந்தேன் :-) . . அப்புறந்தான் புரிஞ்சது :-) . .//
    நண்பரே தலைப்பில் வேண்டும் என்றெ நெகட்டிவாக வைத்தேன்.

    //இந்த மாதிரி வருசத்துக்கு ஒரு படம் போதும்.//
    இந்த விசயத்தில் நான் மாறுபடுகிறேன்
    எனக்கு பேராசை.
    வருடம் 12 படமாவது வரவேண்டும்.

    //இப்ப இருக்குற எல்லா இயக்குனர்களும் பார்த்து வயிறு எரியப்போறது நிச்சயம்//

    எனக்கே சற்று பொறாமையாக இருக்கிறது.இனி வரும் இயக்குனர்கள் குமாரராஜா உயரத்தை தாண்டினால்தான் கவனிக்கப்படுவார்கள்.

    ReplyDelete
  5. @கொழந்த
    //தமிழ் படங்கள அபூர்வமாகத்தான் தியேட்டரில் பார்ப்பது வழக்கம்.. ஏன்னா நிதிகள நஷ்டப்படுத்தனும் என்பதற்காகவே டிவிடில பாப்பது..ஆனா இது போன்ற படங்கள தியேட்டரில் மட்டுமே பாப்பது என்று கொள்கை வைத்திருக்கிறேன்.//

    குழந்த படத்தை பத்தி ஒண்ணும் சொல்லல...
    இந்தப்படத்துக்கு நீங்களும் பதிவெழுதுங்கள்.

    ReplyDelete
  6. @ஜெகதீஷ்குமார்
    //நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் என் சந்தேகம் இது எந்த உலக சினிமாவின் காப்பியும் இல்லையே. ஏனென்றால் இப்படித்தான் முன்னால் நந்தலாலா விஷயத்தில் நடந்தது. இதை யாராவது உறுதிப்படுத்தினால் நன்றாக இருக்கும்.//

    படம் பார்த்து விட்டு வரும் போது இந்தப்பயம் என்னுள் எழுந்தது.அப்படி ஒரு கதி இந்தப்படத்துக்கு வராமல் இருக்க ஆண்டவன் காப்பாற்றட்டும்.

    ReplyDelete
  7. இன்னும் நான் பார்க்கலிங்க பாத்திட்டு வரட்டுமா ?

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)

    ReplyDelete
  8. சகோதரம், ஏனைய பதிவர்களின் வலையிற்கு வந்து பதிவினைப் பற்றி ஏதும் சொல்லாது உங்களது பதிவு பற்றிய லிங்கினை மட்டும் விளம்பரப்படுத்துகிறீர்களே?
    இது எவ்வகையில் நியாயம்?
    பின்னூட்டப் பெட்டி திறந்திருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவீங்களா?
    அது என் தவறு, இனிமேல் அலேட்டாக இருக்கிறேன்.

    ReplyDelete
  9. @மதி சுதா
    கட்டாயம் சீக்கிரம் பாருங்கள்.படத்தை பற்றி நீங்களும் உங்கள் பார்வையில் எழுதி குமார ராஜாவுக்கு பெருமை சேருங்கள்.

    ReplyDelete
  10. @நிருபன்
    நான் உங்கள் பதிவை விரும்பி படிப்பவன்.எனது பதிவுக்கு உங்களை விரும்பி அழைத்தே அப்படி செய்தேன்.எனது பதிவில் கூட நிறைய அன்பர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
    இருந்தாலும் எனது செயலை அத்துமீறலாக நீங்கள் கருதுவதால்...பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.

    ReplyDelete
  11. Sako, It's ok. I had been notifying you don't say any thing about the post. So that's why I got upset.

    ReplyDelete
  12. Nice review, I think we can save some money through your aranyakandam movie review. Because we don't have to go to theat. Ha...ha..lol. Sorry for typed in English.

    ReplyDelete
  13. வயித்துல புளிய கரைச்சுடீங்க..உங்க தலைப்ப பார்த்து ஏமாந்துட்டேன் ..வரவேற்கிறேன் ...

    ReplyDelete
  14. நல்லதுக்கா இருந்தாலும் நல்ல வார்த்தையை மட்டும் உபயோகிக்கவும்....கண்டிப்பாக நீங்கள் சொன்னதற்காக இந்த படத்தை பார்ப்பேன்..நன்றி

    ReplyDelete
  15. @நிருபன்
    //Sako, It's ok. I had been notifying you don't say any thing about the post. So that's why I got upset.//
    நண்பரே...நான் மிகவும் நேசித்த பதிவர் தாக்கியதால் மிகவும் காயப்பட்டேன்.புண் பட்ட மனதுக்கு புனுகு பூசி விட்டீர்கள்.மிக்க நன்றி.உங்கள் ஈழத்தமிழ் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது.

    ReplyDelete
  16. @நிருபன்
    //Nice review, I think we can save some money through your aranyakandam movie review. Because we don't have to go to theat. Ha...ha..lol. Sorry for typed in English.//

    நண்பரே தங்கள் பதிவில் இப்படத்துக்கு ஆதரவு தெரிவிக்கவும்.
    நல்ல சினிமாவும்,நல்ல அரசியலும் நல்ல சமூகத்தை உருவாக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவன்.

    ReplyDelete
  17. @கோவைநேரம்
    //வயித்துல புளிய கரைச்சுடீங்க..உங்க தலைப்ப பார்த்து ஏமாந்துட்டேன் ..வரவேற்கிறேன் ...//
    இந்த ஸ்டைல் என் வாத்தியார் சுஜாதா கற்றுக்கொடுத்தது.
    “முதல் வரியிலேயே வாசகனை உள்ளே இழுத்து போட வேண்டும்” என்பார்.

    ReplyDelete
  18. @புரட்சிமணி
    //நல்லதுக்கா இருந்தாலும் நல்ல வார்த்தையை மட்டும் உபயோகிக்கவும்....கண்டிப்பாக நீங்கள் சொன்னதற்காக இந்த படத்தை பார்ப்பேன்..நன்றி//

    படத்தை உடனே பார்த்து நாலு பேரிடம் சொல்லவும்.
    ‘மயிரு’என்ற வார்த்தை பிரயோகித்ததை படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்.
    நல்ல விசயத்துக்காக இது போல் தடாலடிக்கலாம்.

    ReplyDelete
  19. நண்பரே.. நலம்தானே???

    பழைய ப்ளாக் தொலைஞ்சு போய்டுச்சு..
    புதுசா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேன்.
    அதுக்கு நீங்க வரணும்னு கேட்டுக்குறேன்.

    வராதவங்களுக்கு செய்வினை வைக்கப்படும்னு சொல்லிக்கிறேன். ஜாஆஆஆக்கிரதை....

    --------- இந்திரா

    ReplyDelete
  20. தலைப்பை பார்த்து ஏதோ படம் உங்களுக்கு பிடிக்கலையோன்னு நினைச்சேன்... இதுகூட ஒரு மார்க்கெட்டிங் ஸ்டாட்ரஜியோ...? :))

    இங்க இன்னும் வரலை நண்பா...டிவிடி க்காக வெயிட்டிங்கு....

    ReplyDelete
  21. @இந்திரா
    //பழைய ப்ளாக் தொலைஞ்சு போய்டுச்சு..
    புதுசா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேன்.
    அதுக்கு நீங்க வரணும்னு கேட்டுக்குறேன்.

    வராதவங்களுக்கு செய்வினை வைக்கப்படும்னு சொல்லிக்கிறேன். ஜாஆஆஆக்கிரதை....//

    செய்வினை..செயப்பாட்டு வினைக்கெல்லாம் பயப்படாத ஆளு நான்...
    எதுக்கு வம்பு...இப்பவே வர்றேன்.

    ReplyDelete
  22. @நாஞ்சில் பிரதாப்
    //தலைப்பை பார்த்து ஏதோ படம் உங்களுக்கு பிடிக்கலையோன்னு நினைச்சேன்... இதுகூட ஒரு மார்க்கெட்டிங் ஸ்டாட்ரஜியோ...? :))

    இங்க இன்னும் வரலை நண்பா...டிவிடி க்காக வெயிட்டிங்கு...//
    நண்பரே...இந்தப்படம் பார்க்கும் போது நான் கொடுத்த தலைப்பு உங்களுக்கு ஞாபகம் வரும்.
    இப்படத்தின் வசூல் நிலவரம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
    கோடம்பாக்க மசாலா மன்னர்கள் இப்படத்தின் தோல்விக்கு ப்ரத்யங்கரா யாகம் செய்வதாக கேள்வி.

    ReplyDelete
  23. ஏதோ உங்களை நம்பி இந்த படத்தை பாக்க போறேன் ....

    ReplyDelete
  24. @koodal bala
    //ஏதோ உங்களை நம்பி இந்த படத்தை பாக்க போறேன் ....//
    நம்பிப்போங்கள்...
    குமாரராஜாவை நம்பினோர் கை விடப்படார்.

    ReplyDelete
  25. @உலக சினிமா ரசிகன் said...
    நண்பரே...நான் மிகவும் நேசித்த பதிவர் தாக்கியதால் மிகவும் காயப்பட்டேன்.புண் பட்ட மனதுக்கு புனுகு பூசி விட்டீர்கள்.மிக்க நன்றி.உங்கள் ஈழத்தமிழ் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது.//

    மதிப்பிற்குரிய சகோதரா, ஒரு சில அன்பு உள்ளங்கள் என் வலைக்கு வந்து பதிவினைப் பற்றிச் சொல்லாது விளம்பர முயற்சிகளைச் செய்ததால் நான் கோபமடைந்தேன் சகோ, அதற்காக மன்னிக்கவும்,

    உங்களுடைய பதிவுகளைத் திரட்டிகளில் இணைத்தால் பல வாசகர்கள் உங்கலின் பதிவுகளைப் படிப்பதற்கேற்ற ஒரு வழியாக அமையும் தோழனே.

    http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html
    இவ் இணைப்பில் ஓட்டுப் பட்டைகளை உங்கள் வலையில் இணைப்பது தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ளலாம்.

    http://www.tamilmanam.net/login/register.php

    இது தமிழ் மணத்தில் உங்களைப் பதிவு செய்வதற்கான லிங்

    http://tamilmanam.net/user_blog_submission.php

    இது உங்கள் பதிவினை இணைப்பதற்கான லிங்..

    இதே போல தமிழ் 10, இண்ட்லி முதலியவற்றில் உள்ள Submit பட்டனை அழுத்தினால் அதில் புதிய மெம்பராக இணையச் சொல்லிக் கேட்பார்கள். சந்தேகம் இருப்பின் கேளுங்க.

    ReplyDelete
  26. @நிரூபன்
    நண்பரே இணைய தொழில்நுட்ப விசயங்களில் நான் மிகவும் வீக்.
    கலங்கரைவிளக்கமாக வழிகாட்டியுள்ளீர்கள்.மிக்க நன்றி.

    ReplyDelete
  27. ஹா ஹா பதிவு செம.. ஆனா டைட்டில்ல ஏன் இந்த கொலை வெறி ? ஹா ஹா

    ReplyDelete
  28. அருமையான ஒரு முன்னோட்டம்.. விமரசனம் இல்லாமலேயே படம் பார்க்க தூண்டிவிட்டீர்கள்

    ReplyDelete
  29. @மதுரன்
    //அருமையான ஒரு முன்னோட்டம்.. விமரசனம் இல்லாமலேயே படம் பார்க்க தூண்டிவிட்டீர்கள்//

    நண்பரே!
    இப்படத்துக்குள்... நான் பார்த்த உட்கூறுகள்... இது வரை தமிழ் படத்தில்...
    நான் தரிசிக்காததை தரிசித்து வியந்தேன் .
    அவற்றை முதல் பதிவில் விளக்காமல் தவிர்த்தேன்.
    ஒரு நல்லசினிமாவை நூறு பேர் பார்த்தால்...
    நூறு பேர் மனதிலும் நூறு விதமாக பதியும்.
    அந்த புளகாகிதத்தை சிதைக்க நான் விரும்பவில்லை.

    ReplyDelete
  30. @சி.பி.செந்தில்குமார்
    //ஹா ஹா பதிவு செம.. ஆனா டைட்டில்ல ஏன் இந்த கொலை வெறி ? ஹா ஹா//

    நண்பரே...
    டைட்டில் நான் மிகவும் எதிர்பார்த்து போன படங்கள்...
    என்னை ஏமாற்றிய கோபத்தில் உதிர்த்த வார்த்தைகள்.[உ.ம் கற்றது தமிழ்,காஞ்சிவரம்,அவள் பெயர் தமிழரசி...இன்னும் பெயர் மறந்து போன பல படங்கள்]

    ReplyDelete
  31. தலைப்ப பார்த்துவிட்டு , எதற்கு உள்ளே படிக்க வேண்டும் என்று தான் முதலில் நினைத்தேன். முதலில் தலைப்பை மாத்துங்க சார். நல்ல படத்துக்குப் போயி....

    ReplyDelete
  32. @சிவகுமாரன்
    //தலைப்ப பார்த்துவிட்டு , எதற்கு உள்ளே படிக்க வேண்டும் என்று தான் முதலில் நினைத்தேன். முதலில் தலைப்பை மாத்துங்க சார். நல்ல படத்துக்குப் போயி....//
    நண்பரே இந்த தலைப்பு ஏதோ ஒரு விதத்தில் பாதித்தது அல்லவா...இந்த தலைப்புதான் உங்களை குழப்பி என் வலைப்பக்கத்துக்கு இழுத்து வந்தது.

    ReplyDelete
  33. படம் பார்த்து விட்டு உங்கள் ரசனை எப்படிப்பட்டது என்று பிறகு சொல்கிறேன்

    ReplyDelete
  34. @nivisugi
    //படம் பார்த்து விட்டு உங்கள் ரசனை எப்படிப்பட்டது என்று பிறகு சொல்கிறேன்//
    தயவுசெய்து சொல்லுங்கள்.

    ReplyDelete
  35. நான் இன்னும் இந்த படத்தை பார்க்கல. ஆனா பதிவுலக நண்பர்கள் பலரும் (உங்களையும் சேர்த்துதான்) தமிழில் வந்த 'உலக படம்' இதுன்னு சொல்றாங்க.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.